மும்பை: தானும், தனது கணவர் சைப் அலி கானும் பிற சாதாரண தம்பதிகளைப் போன்று உள்ளவர்கள் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் தெரிவித்தார். ஷூட்டிங் இல்லை என்றால் எங்காவது விடுமுறையைக் கழிக்க சென்றுவிடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நானும், சைபும் பிற சாதாரண தம்பிதிகள் போன்றவர்கள். முகத்தில் பிளாஷ் லைட் அடிக்காமல் எங்களுக்கு பிடித்த உணவகத்தில் டின்னர் சாப்பிடுவது பிடிக்கும். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மீடியா எனக்கு அளித்த சுதந்திரத்தை பாராட்டுகிறேன். நான் என்ன உடை அணிய வேண்டும் என்று சைபிடம் கேட்பேன். அவரும் தனது கருத்தை கூறுவார்.
இருவரும் ஒரே துறையில் இருப்பதால் ஒரு நடிகருக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் புரிந்துகொள்கிறார். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு படத்திற்கு செல்வோம் அல்லது டின்னர் சாப்பிடுவோம் அல்லது எங்காவது விடுமுறையைக் கழிக்க செல்வோம். அவர் என்னை ஊக்குவிப்பதுடன், ஆதரவாக உள்ளார். அதற்காக நான் சைபுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.