சன் டிவியில் இரவு பத்துமணிக்கு கார்த்திகை பெண்கள் என்ற புதிய நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை திரு பிக்சர்ஸ் திருமுருகன் தயாரித்துள்ளார். ஏற்கனவே ‘நாதஸ்வரம்' தொடரை தயாரித்து இயக்கி வரும் திருமுருகன் கிரியேட்டிவ் ஹெட் ஆக பொறுப்பேற்றுள்ளார். இந்த புதிய தொடரில் கதாநாயகியாக கல்கி திரைப்படப்புகழ் நடிகை ஸ்ருதி நடித்துள்ளார். கதாநாயகனாக பானுசந்தர் நடித்திருக்கிறார்.
கன்னட நடிகர் மகேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலான ஸ்ருதி சினிமாத்துறையை விட்டு விலகியிருந்தார். பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதனையடுத்து இப்போது சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்ருதி. கார்த்திகைப் பெண்கள் தொடர் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார்.
ஜூலை 30ம்தேதி முதல் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு இந்த புதிய தொடர் ஒளிபரப்பாகத்தொடங்கியுள்ளது.
கார்த்திகைப் பெண்கள் தொடர் நிச்சயம் அழுகைத்தொடராக இருக்காது என்று தொடர் தாயாரிப்பாளர்கள் உறுதியளித்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.