நான் சித்தார்த்தை காதலிக்கவில்லை, ஆனால்...: பிரியா ஆனந்த்

Priya Anand Denies Dating Her 180 Co Star Siddharth   

சென்னை: 180 ஹீரோ சித்தார்தை காதலிக்கவில்லை என்று நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த் தான் நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் 180 படத்தில் நடித்த சித்தார்த்தை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பிறரிடம் கேட்பதற்கு பதில் பிரியாவிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்து கேட்டபோது அவர் கூறுகையில்,

நானும், சித்தார்த்தும் சேர்ந்து 180 படத்தில் நடித்தோம். அவரைப் பார்த்தே மாதக் கணக்கில் ஆகிறது. ஆனால் அவர் என்னுடைய நல்ல நண்பர் என்றார்.

அந்த படத்திற்கு பிறகு பிரியாவும், சித்தார்த்தும் மீண்டும் ஜோடி சேரவில்லை. பிரியா நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அவர் மேலும் ஒரு இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர தமிழில் தனுஷ் தயாரிக்கும் எதிர் நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறார்.

சித்தார்த் தான் நடித்த மிட்நைட் சில்ட்ரன்ஸ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். சித்தார்த்தும், ஸ்ருதி ஹாசனும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருமணம் முடிந்து குழந்தையும் பெற்ற பின் ஹனிமூன் போன செல்வராகவன் - கீதாஞ்சலி!

Selva Geetanjali S Honeymoon Trip

திருமணம் முடிந்து குழந்தை பெற்று பெயரும் வைத்த பிறகுதான் ஹனிமூன் செல்ல நேரமே கிடைத்ததாம் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிகளுக்கு.

சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு, செல்வராகவன் காதலித்து கைப்பிடித்த பெண் கீதாஞ்சலி.

திருமணம் முடிந்த கையோடு தனது இரண்டாம் உலகம் படத்தில் மூழ்கிவிட்டார் செல்வராகவன், இந்தப் படத்துக்காக ஜார்ஜியாவிலெல்லாம் ஷூட்டிங் நடத்தினார்.

இப்படி பிஸியாக ஓடிக் கொண்டிருந்ததால் ஹனிமூனே போகவில்லையாம் இருவரும். இதற்கிடையே கீதாஞ்சலிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. அதற்கு லீலாவதி என பெயர் சூட்டியுள்ளனர்.

ஜார்ஜியாவில் நீண்ட நாள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய செல்வராகவன், "இப்ப போகலாம் ஹனிமூன்... இடத்தை மட்டும் நீ செலக்ட் பண்ணு' என்று கூற, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை தேர்வு செய்தாராம் கீதாஞ்சலி.

அப்புறமென்ன... ஜாலியாக ஒரு ட்ரிப் அடித்து, உதய்பூரின் பிரபல தாஜ் லேக் பேலஸில் தங்கியிருந்துவிட்டு உற்சாகமாகத் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து கீதாஞ்சலி கூறுகையில், "2010-ல் திருமணமாச்சு எங்களுக்கு. ஹனி மூன் போக 2 வருஷம் ஆகிடுச்சி. செல்வாதான் ஒரு பிரேக் வேணும்னு இப்போ போகலாம்னு சொன்னார். பரந்து விரிந்த ஏரிக்கு நடுவில் உள்ள அந்த அரண்மனை ஹோட்டலில் தங்கியிருந்ததே புது அனுபவமாக இருந்தது," என்றார்.

"தாஜ் பேலஸ் ஹோட்டலில் கிடைத்த உபசரிப்பும், இனிய அனுபவமும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் இது," என ட்விட்டரில் கூறியுள்ளார் செல்வராகவன்.

 

கவுரவம் பட நாயகி யாமி படப்பிடிப்பில் காயம்!

Yami Gautham Injured On Gouravam Sets

ராதாமோகன் இயக்கும் கவுரவம் படத்தின் நாயகி யாமி படப்பிடிப்பில் படுகாயமடைந்தார்.

பயணம் படத்துக்குப் பிறகு ராதா மோகன் இயக்கும் படம் கவுரவம். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை வழக்கம்போல பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக படக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றில் யாமி சைக்கிள் ஓட்டிக் கொண்டுபோவதுபோல படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார் யாமி. அவருக்கு பலத்த அடிபட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை ஓய்வெடுக்க டாக்டர் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து யாமி கூறுகையில், "ஸ்பாட்டில் டாக்டர் இருந்ததால் பெரிய பாதிப்பில்லாமல் தப்பித்தேன்," என்றார்.

 

கணவரை விவாகரத்து செய்கிறார் யுக்தா முகி!

Yukta Mukhi File Divorce

தன்னைத் தாக்கியதாக கணவன் மீது புகார் கூறிய பிரபல இந்தி நடிகை யுக்தா முகி, விவாகரத்துக்கு தயாராகிறார். இன்று அவர் விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் யுக்தா முகி. தமிழில் 'பூவெல்லாம் உன் வாசனம்' படத்தில் யுக்தா முகி யுக்தா முகி...என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர்.

இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கை, திடீரென சிக்கலுக்குள்ளானது.

கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக மும்பை போலீசில் சில தினங்களுக்கு முன் புகாரில் தெரிவித்திருந்தார். இதனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர்.

இப்போது கணவரிடமிருந்து முழுமையாகப் பிரிந்துவிட யுக்தாமுகி முடிவு செய்துள்ளார். முறைப்படி விவாகரத்து பெற இன்றோ நாளையோ மனுத் தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஜேம்ஸ் பாண்டை விட எனக்கு நிறைய 'கேர்ள் பிரண்ட்ஸ்'.. சொல்கிறார் ரோஜர் மூர்!

I Ve Had More Lovers Than 007 Says Moore

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு உள்ள கேர்ள் பிரண்ட்ஸை விட எனக்கு ரொம்ப ஜாஸ்தி பிரண்ட்ஸ் இருக்காங்க. எத்தனை பேருடன் நான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன் என்பதே எனக்கு நினைவில்லைன்னா பார்த்துக்கோங்க என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறுகிறார் ரோஜர் மூர்.

இந்த முன்னாள் ஜேம்ஸ் பாண்டுக்கு இப்போது வயது 84தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. என் பெயரை பேசாமல் ரோஜர் மூர் என்பதற்குப் பதில் ரோஜர் 'மோர்' என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று வெடிச் சிரிப்புடன் கூறுகிறார் இந்த காதல் மன்னன்.

இதுவரை வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மொத்தம் 22. அதில் 7 படங்களில் பாண்ட் வேடத்தில் நடித்தவர் ரோஜர் மூர். 12 வருடங்கள் அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.

22 ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் மொத்தம் 51 காதலிகள் பாண்ட் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விட நான் அதிகம் பேரை காதலித்திருக்கிறேன் என்றும் சிரித்தபடி கூறுகிறார் ரோஜர் மூர்.

இப்போது 84 வயதாகும் ரோஜர் மூர் தனது காதல் அனுபவங்கள் குறித்துக் கூறுகையில், ஜேம்ஸ் பாண்ட்டுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திரையில் நான் நடித்தது நிழல் என்றால் நிஜத்தில் நான் உண்மையான ஜேம்ஸ் பாண்ட். எனக்கும் பெண்களுக்கும் செம பொருத்தம். நான் பெண்களைத் தேடிச் சென்றதை விட என்னைத் தேடி வந்த பெண்கள்தான் அதிகம்.

என்னால் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் உடனே அவரை என் வசமாக்கி விட முடியும். அப்படி ஒரு கில்லாடி நான்.

சினிமாவில் நான் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் என்று வசனம் பேசுவேன். நிஜத்தில் 'மூர். ரோஜர் மோர்' என்றுதான் வசனம் பேசுவேன். எனது பெயரை அப்படித்தான் மாற்றி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு பெண்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.

நான் எத்தனை பேரை காதலித்தேன், எத்தனை பேருடன் இன்பம் அனுபவித்தன் என்பதைச் சொல்வது கஷ்டம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இதுவரை வந்த காதலிகளை விட அதிகம் பேரை நான் ரசித்துள்ளேன், ருசித்துள்ளேன். அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மேலும் நான் இன்பவம் அனுபவித்த பெண்கள் குறித்த லிஸ்ட்டெல்லாம் போட்டு வைத்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது என்றார் மூர்.

சரி ஏன் உங்களுக்கு இப்படி ஒரு பெண் மோகம் என்றால், நான் போவதில்லை. அவர்களாகவே வருகிறார்கள். என்னுடன் படுத்தால், ஜேம்ஸ் பாண்ட்டுடன் படுத்தது போல என்று அவர்கள் கூறுகிறார்கள். நானும் விட்டு விட்டேன் என்று கூறிச் சிரிக்கிறார் மூர்.

நான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி. என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை, பயங்கரமான பயந்தாங்கொள்ளி என்று கூறிச் சிரிக்கிறார் பாண்ட்.

கருப்பாயூரணி பாண்டி, நீதாம்ப்பா பொண்ணுங்களைக் காப்பாத்தனும்...!

 

துப்பாக்கி தலைப்புச் சண்டை... 21-ம் தேதி தீர்ப்பு!

Tuppakki Vs Kalla Tuppki Final Verdict   

சென்னை: ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது.

விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன்,

துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன்.

இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், இன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டார் நீதிபதி.

பின்னர் இறுதி தீர்ப்பு 21ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.

ஒரு வழியாக இத்தனை நாள் வாய்தாவுக்குப் பிறகு தீர்ப்பு வரவிருப்பது துப்பாக்கி குழுவை ஆசுவாசப்படுத்தியுள்ளது. இந்த முறை வாய்தா போட்டிருந்தால் நிச்சயம் தலைப்பை 'சரவெடி' என மாற்றத் திட்டமிட்டிருந்தனர் துப்பாக்கி குழுவினர் என்று பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது!

 

ஒரு கோடி கேட்ட நாயகி... காட்டமான இளம் ஹீரோ!

மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஓரளவு வென்றுவிட்ட நடிகர் அவர். வில்லன் பெயரில் தயாராகும் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க யார் யாரையோ பார்த்து பேசி ஒன்றும் சரிவராததால், இந்தியிலிருந்து தமிழுக்கு வந்து நான்கைந்து படங்களும் நடித்துவிட்ட, சாதிப் பெயரை கூடவே வைத்திருக்கும் அந்த நாயகியிடம் போனார்களாம்.

கதையைக் கேட்டதும், 'சூப்பர்.. இப்பவே டேட்ஸ் ரெடி' ( என்னவோ கைநிறைய படங்கள் வச்சிருக்கிற மாதிரி...!!) என்றவர், சம்பளமாகக் கேட்டது ஒரு கோடி ரூபாய். ஆடிப் போய்விட்டார்களாம். யம்மா தாயே.. படத்தோட பட்ஜெட்ல அஞ்சுல ஒரு பங்கு உனக்கே போயிட்டா நாங்க என்ன பண்றது... கொஞ்சம் பாத்து கேளும்மா என்றார்களாம்.

ம்ஹூம்.. கோடில ஒரு பைசா குறைக்க முடியாது என்று கறாராகக் கூறி அனுப்பி விட்டாராம் நாயகி. விஷயத்தைக் கேட்டு செ கடுப்பாகிவிட்டாராம் ஹீரோ.

'பார்க்க ஹீரோவுக்கு அக்கா, சித்தி மாதிரி இருந்தாலும், அவர் பெயரை வைத்து கொஞ்சம் படத்துக்கு வெயிட் ஏத்தலாம்னு பாத்தா ஒரேயடியா இப்படிக் கேக்குதே இந்தம்மா.. சரி, முத்தழகியைப் பார்ப்போமா' என்று இயக்குநரிடம் தயாரிப்பாளர் கேட்க, 'அய்யோ சாமி.. ஆள விடுங்க' என்றாராம்!

 

இனி ஓவியா கூட நடிக்கமாட்டேன் - விமல்

Vimal Decides Not Act With Oviya In Future   

தொடர்ந்து நானும் ஓவியாவும் சேர்ந்து நடிக்கிறதால, ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க. அதனால நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன், என்றார் நடிகர் விமல்.

எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. மற்றொரு நாயகியாக தீபாஷா நடிக்கிறார்.

இப்படத்தை ஆர்.ரவி லல்லின் இயக்குகிறார். இதில் ‘பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகர் விமலிடம், தொடர்ந்து ஓவியாவுடனே நடிக்கிறீர்களே என கேள்வி எழுப்ப, உடனே சடாரென்று, "இனி நான் ஓவியா கூட நடிக்க மாட்டேன். இதே முடிவை அவங்களும் எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்," என்றார்.

இதை கொஞ்சமும் எதிர்ப்பாராத ஓவியா, திடுக்கிட்டு விமலைப் பார்த்தார்.

பின்னர் நடிகை ஓவியா கூறுகையில், "சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து ‘மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன்.

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். ‘கலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.

‘கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்," என்றவர் கடைசிவரை விமல் பேசியதற்கு பதிலே சொல்லவில்லை!

 

கேலியும் கிண்டலும் நல்லதா?: நீயா நானா வில் கலகலப்பும், கண்ணீர் மழையும்!

Neeya Naana This Week Special Sense Of Humor

ஸ் ஸ் ஸ்.... அப்பா இப்பாவே கண்ணை கட்டுதே, தம்பி டீ இன்னும் வரலை, வடை போச்சே !! என்ன இது என்று பார்க்கிறீர்களா? இது வடிவேலுவின் வசனம் மட்டுமல்ல கல்லூரி மாணவர்களின் கலாய் பாஷையில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள்.

அதென்ன கலாய் பாஷை என்கிறீர்களா? கேலி, கிண்டல் என்ற வார்த்தைதான் இப்போது கலாய்த்தல் என்று மாறி இருக்கிறது. நண்பர்களுக்குள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்யவேண்டும் என்றால் குறிப்பிட்ட வார்த்தையை சொல்லாமல் சினிமா வசனத்தை குறிப்பிட்டு டைமிங்காக பேசுவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. இதை வைத்து இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சி நடத்தி போணி செய்தார் கோபிநாத்.

கலாய்ப்பதில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா என்று பார்த்த போது இருசாராரும் வெளுத்து வாங்கிவிட்டனர். "ஆமா இவ பெரிய நீயா நானா கோபிநாத்து வந்து கருத்து சொல்லிட்டா".... "கேக்கிறவன் கேனப்பயலா இருந்தா கோபிநாத் கோட் போடலைன்னு சொல்லுவாங்க." என்று சந்தடி சாக்கில் சிலர் கோபிநாத்தையும் வாரினார்கள்.

ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் வார்த்தைகளை உபயோகித்து பேசினர்.

"போன் வயறு பிஞ்சு ஒரு மணிநேரமாச்சு"

"அந்த போன்லதான் நீ ஒரு மணி நேரமா பேசிட்டு இருக்கே"

"துரை இங்கிலீஸ்லாம் பேசுது"

"நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரப்பட்டு வரமாட்டே"... என்று பேசிஆண்களை விட பெண்கள் கவுண்டராக கலாய்த்து அதிக மார்க் வாங்கினார்கள்.

இந்த கிண்டல் கேலி சிலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் கிண்டலடிக்கப்படுகிற நபரின் மனது எந்த அளவிற்கு ரணமாகிறது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பேசினார்கள். இது கலகலப்பாக சென்ற நிகழ்ச்சியை சற்றே கண்ணீர் மழையில் நனைய வைத்தது. இதுவரை கலாய்த்தல் பற்றி இளைஞர் பட்டாளம் கிண்டல் மூலம் மனதை காயப்படுத்திய சக நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

கேலி, கிண்டல், லந்து, கட்டையை கொடுத்தல் என கலாய்த்தல் பலவகை இருந்தாலும் ஒருவரை ஒருவர் அட்ராக்ட் செய்வதற்காக கிண்டல் செய்யப்படுகிறது என்றார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மனநல மருத்துவர். ஆணும், பெண்ணும் சேரவேண்டும் என்பதற்காகவே உருவானது இந்த கலாய்த்தல். சாதாரணமாக கிண்டல் செய்வது தவறில்லை. ஆக்ரோசமான கலாய்த்தல்தான் மனதை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

கிண்டல் கேலி இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லை என்றாலும் நம்முடைய கிண்டல் அடுத்தவரின் மனதை காயம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மனநல மருத்துவர் வலியுறுத்தினார்.

நிகழ்சியின் இறுதியில் தீர்ப்பு சொன்ன கோபிநாத், எளியவர்களை கலாய்தது யாரையும் பலிகடா ஆக்கிவிடாதீர்கள் சென்ஸ் ஆப் ஹியூமர் வேறு, அடுத்தவனை காயப்படுத்தும் நகைச்சுவை வேறு. மனிதர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட கலாத்தல் கவனமாக கையாளப்பட வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

ஸ்ஸ்ஸ் அப்பா, மாஞ்சா கீஞ்சு நூலு தூளாயிடுச்சு போ..!

 

மாற்றான், விஸ்வரூபம், சிவாஜி 3 டி... ஆண்டிறுதில் வெளியாகும் பிரமாண்ட படங்கள்!

Biggies Scheduled Year End Release    | மாற்றான்  

2012-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முடியப் போகிறது. கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் வெளியாகிவிட்டன.

ஆனால் பிரமாண்ட தயாரிப்புகள் இனிமேல்தான் வரவிருக்கின்றன.

விக்ரம் நடித்துள்ள தாண்டவம் இம்மாத இறுதியிலும், சூர்யா நடித்ததிலேயே அதிக பட்ஜெட் படமான மாற்றான் வரும் அக்டோபர் 12-ம் தேதியும் வெளியாகின்றன.

அடுத்து தீபாவளி ஸ்பெஷல்கள். விஜய் நடித்த துப்பாக்கி, கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் இரண்டும் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

தீபாவளி முடிந்த பிறகுதான் கமலின் விஸ்வரூபம் என்கிறார்கள். ஆனால் ஏனோ கமல் அசாதாரண மவுனம் காத்து வருகிறார் இந்தப் படம் குறித்து. டிசம்பரில் ரஜினியின் "சிவாஜி 3-டி' ரிலீஸ் ஆகப் போகிறதாம். மறுவெளியீட்டிலும் பெரிய பிரமாண்டம் காட்டுகிறது இந்தப் படம். கிட்டத்தட்ட ரூ 17 கோடி வரை செலவு செய்திருக்கிறார்களாம். 40 கலைஞர்களின் உழைப்பு இது.

இந்தப் படத்தின் பிரிமியர் சமீபத்தில்தான் ஜப்பானில் நடந்தது.

"தீபாவளி, பொங்கல் உள்பட 5 விசேஷ தினங்களில்தான் பெரிய ஹீரோக்கள் படம் வெளியாக வேண்டும் என்று முன்பு சட்டம் போட்டது எஸ்ஏ சந்திரசேகரன் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இப்போது அவர்களே அந்த சட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதனால் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் வெளியாவதற்கான சரியான கேப் கிடைக்காமல் நெருக்கடியில் உள்ளன.

 

ரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி?

Did Sun Tv Refuse Buy Rajinikanth Kochadaiyaan   

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் டிவி நிறுவனங்களுக்கு அல்வாவை அப்படியே சாப்பிடுவது போல. அவரது படங்களை வாங்க கடும் போரே நடக்கும். அந்தப் போரில் பெரும்பாலும் சன் டிவிதான் இது காலம் வரை வென்று வந்தது. ஆனால் தற்போது திரையுலகில் உலா வரும் ஒரு செய்தி வியப்பளிப்பதாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் மறுத்து விட்டதாக கூறப்படுவதே அந்த செய்தியாகும்.

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எந்தப் புதிய படம் எடுத்தாலும் அதை முதலில் சன் டிவிக்கு விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் பல தயாரிப்பாளர்கள். பலர் படத் தயாரிப்பின்போதே சன் பிக்சர்ஸிடம் விற்ற செய்திகளும் நிறைய வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. புதுப் படம் எதுவுமே சன்டிவிக்குப் போவதற்குத் தயங்குகிறதாம். காரணம் ஜெயா டிவி இப்போது பெரும் பணத்தைக் கொடுத்து புதுப் படங்களை வாங்கத் தயாராக இருப்பதால். அத்தோடு ஆட்சி வேறு ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாலும், தயாரிப்பாளர்கள் தரப்பு ஜெயா டிவிக்கே படங்களைக் கொடுக்க முன் வருகிறார்களாம்.

இதனால் சன் டிவிக்கு சமீப காலமாக புதுப் படங்கள் எதுவுமே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயா டிவியுடன் போட்டியிட விரும்பாததை ஒரு காரணமாகக் கூறினாலும், இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதாவது கோச்சடையான் ஒரு அனிமேஷன் படம் என்பதால்தான் சன் டிவி அதை வாங்கத் தயக்கம் காட்டியதாம்.

வழக்கமான ரஜினி படங்களுக்கும், இதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதை ரசிகர்கள் நிச்சயம் வேறுபட்ட படமாகத்தான் பார்ப்பார்கள். ஒரு முழு நீள ரஜினி படமாக இது இருக்க வாய்ப்பில்லை என்பது சன் டிவியின் கருத்தாம். இதனால்தான் கோச்சடையானை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.

முதலில் சன் டிவியைத்தான் கோச்சடையான் தயாரிப்புத் தரப்பு அணுகியதாம். ஆனால் அவர்கள்தான் விருப்பமில்லை என்று கூறி விட்டார்களாம். அதன் பிறகே ஜெயா டிவி வந்து கேட்டதாம். பெரும் விலை பேசி வியாபாராத்தை முடித்தார்களாம்.

எது உண்மையோ...?

 

நான் வேணுமா? விசில் வேணுமா?: உரிமையோடு அதட்டிய இளையராஜா!

Neethane En Pon Vasantham Cassette Release

ராஜா பாட ஆரம்பித்தாலே போதும் ரசிகர்களின் ஆரவாரத்தை கட்டுப்படுத்த முடியாது. ‘நீதானே என் பொன் வசந்தம்' பாடத்தின் பாடல் வெளியீட்டு விழா நாயகன் இளையராஜா ஆர்மோனியப் பெட்டியை வாசித்தபடி ஜனனி பாடலை பாட ஆரம்பித்த உடன் ரசிகர்கள் பக்கமிருந்து விசில் பறக்க ஆரம்பித்தது. ராஜாவால் அடுத்த அடி பாட முடியவில்லை. நீங்க விசிலடிச்சா என்னால பாட முடியாது என்று ரசிகர்களை அமைதிப்படுத்தினார். கூட்டம் அமைதி நிலைக்கு திரும்பியது. பின்னர்தான் பாடலை இயல்பாய் பாடி முடித்தார் ராஜா.

பாடல் வெளியீட்டு விழாவின் முழு பகுதியும் சிறப்பு நிகழ்சியாக ஜெயா டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பானது. திரைப்பட இயக்குநர் கவுதம் மேனன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு ராஜாவை பேட்டி கண்டு அவரின் பெர்சனல் பங்கங்களை திரும்பி பார்க்க வைத்தார்.

ராஜாவின் கையில் எப்பொழுதும் இருக்கும் ஆர்மோனியப் பெட்டியை பற்றி கேள்வி எழுப்பினார் கவுதம். அதற்கு பதிலளித்த ராஜா, "85 ரூபாய்க்கு வாங்கிய பெட்டி இது. நான் இதைத் தொட்டாலே அண்ணனிடம் பிரம்பால் அடி வாங்குவேன். பின்னர் கள்ளக்காதலியை சந்திக்கப் போகும் காதலனைப் போல இரவு நேரத்தில் ஆசையாய் இந்த ஆர்மோனிப் பெட்டியைத் தொட்டுப்பார்ப்பேன்" என்று கூறிவிட்டு சிரித்தார் ராஜா. இந்த பெட்டியை பாரதிராஜா கூட தூக்கிக் கொண்டு நடந்திருக்கிறார் என்று கூறி நண்பர்கள், சகோதரர்களுடனான இனிய நினைவுகளை அசைபோட்டார்.

கவுதம் தனக்கு பிடித்தமான பாடலை பாடச் சொல்லிக் கேட்டார். ‘பன்னீர் புஸ்பங்கள்' படத்தின் பாடலை பாடி முடித்த உடன் ரசிகர்கள் கை தட்டினர். விசில் அடிங்கப்பா என்று கவுதம் கேட்டவுடன் ரசிகர்கள் பக்கம் இருந்து விசில் பறந்தது. உடனே ராஜா, நான் சொன்னதை கடைசி வரைக்கும் காப்பாத்தணும். உங்களுக்கு விசில் வேணுமா? நான் வேணுமா? என்று செல்லமாக அதட்டினார். உடனே பதறிய கவுதம் எங்களுக்கு நீங்கதான் வேணும் என்றார். நான் எப்பவுமே இயக்குநர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன். எனக்கு எது சரி என்று படுவதை நான் செய்வேன். கவுதம் மேனனிடம் அதையே பின்பற்றினேன் என்றார் ராஜா.

‘நீதானே என் பொன் வசந்தம்' படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் பாடகர்கள் பாடும்போது கவுதம், அதை எப்படி படமாக்கியிருப்பார் என்ற கற்பனைக்கு நம்மை அறியாமல் சென்றது.

சாய்ந்து சாய்ந்து.... பாடல் கம்போசிங் எப்படி நடந்தது, அதற்கான பாடலை எப்படி கேட்டுப் பெற்றார் கவுதம் என்று ஒளிபரப்பினார்கள். அதற்கான டியூன் உருவானதில் இருந்து யுவன் சங்கர் ராஜா பாடியது வரை உருவான விதம் வரை ஒளிபரப்பியது அற்புதமாக இருந்தது. ரெக்கார்டிங்கில் அப்பா இல்லாமல் பாடிய யுவன் அதே பாடலை மேடையில் அப்பா முன்னிலையில் பாடி அசத்தினார்.

இது வெறும் இசைவெளியீட்டு விழா நிகழ்வாக மட்டுமல்லாமல் இனிமையான நினைவுகளை அசைபோடும் நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்ததுதான் சிறப்பம்சம். ராஜாவின் இசையை கேட்பதற்காகவே எண்ணற்றவர்கள் குவிந்திருந்தனர். ராஜாவுடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் அவர்களுக்குப் பிடித்தமான பாடலை பாடச் சொல்லி செவி குளிர கேட்டு மகிழ்ந்தனர். ராஜாவைப்பற்றி அவருடன் பணியாற்றியவர்கள் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் இரண்டரை மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலையை தாண்டி இரவு வரை நீண்டது. ராஜாவின் இசை ராஜாங்கத்தில் மயங்கியிருந்த பார்வையாளர்களுக்கு நேரம் காலம் போவது கூட தெரியுமா என்ன?

 

மாத்தி யோசிச்சா, நீங்கதாங்க உண்மையான லீடர்... ஹட்சன் சந்திரமோகன்

 

நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்தி படம் எடுத்தவர் ஆபாச பட இயக்குனர்!

வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படத்தை எடுத்தவரான ஆலன் ராப்ரட்ஸ் என்பவர் ஒரு ஆபாசப் பட இயக்குநர் என்ற புதிய தகவல் வெளியாகி இஸ்லாமியர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இந்த சர்ச்சைப் படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா பார் கிரைஸ்ட் என்ற கிறிஸ்தவ அமைப்புதான் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைத்தான் ராப்ரட்ஸ் இயக்கியுள்ளார்.

இஸ்லாம் மதத்தையும், இறுதி நபியான நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டு யூ டியூப்பில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் அந்நாட்டுக்கான அமெரிகக தூதர் உள்பட 4 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் இயக்குநர் ராப்ரட்ஸ் ஒரு ஆபாசப் பட இயக்குநர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் யங் சேட்டர்லி II மற்றும் கராத்தே காப் போன்ற ஆபாச படங்களை இயக்கியுள்ளார் என்று நியூஸ் 24 என்ற சேனல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை புளோரிடாவில் பொது இடத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் உள்ளிட்டோர் விளம்பரப்படுத்தியுள்ளதால் மேலும் கொதிப்பு கூடியுள்ளது.

படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியிருப்பது முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்க பள்ளிகள், வியாபார இடங்களை எரித்ததில் பலர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 நாள் ஷூட்டிங் நடத்த மீடியா பார் கிரைஸ்ட் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும், அவர்கள் டெசர்ட் வாரியர்ஸ் என்ற தலைப்பில் படம் எடுக்கத் தான் அனுமதி கேட்டனர் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் தலைவர் பால் ஆட்லி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியவர் தான் ஒரு எகிப்தியர் என்று அந்த படத்தில் நடித்தவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் ஒரு அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இஸ்ரேலிய அமெரிக்கர் என்பது முக்கியமானது.

 

முன்னாள் மந்திரியின் மருமகளை ரகசிய திருமணம் செய்த என்டிஆர் பேரன் நடிகர் தாரக் ரத்னா!

Ntr S Grandson Tarak Ratna Secretly

ஹைதராபாத்: முன்னாள் ஆந்திர அமைச்சர் மாதவ் ரெட்டியின் மருமகளும் டிசைனருமான அலெக்யா ரெட்டியை ரகசியமாக திருமணம் செய்தார் என்டி ராமராவின் பேரன் தாரக் ரத்னா.

என்டி ராமராவின் மகன் மோகன் கிருஷ்ணாவின் மகன்தான் இந்த தாரக் கரத்னா. இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய படம் நந்தீஸ்வருடு படத்தில் டிசைனராகப் பணியாற்றினார் அலெக்யா ரெட்டி. அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து, ஒரே வீட்டில் பார்ட்னர்களாக வசித்து வந்த இருவரும் சமீபத்தில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

அலெக்யா ரெட்டி விவாகரத்து பெற்றவர். ஆந்திராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மாதவ் ரெட்டியின் மகனை அவர் திருமணம் செய்தார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

தாரக் ரத்னா - அலெக்யா ரெட்டி திருமணம் ரகசியமாக நடந்தாலும், இருகுடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். என்டிஆர் குடும்பத்தில் ஒருசிலர் மட்டும் திருமணத்துக்கு வரவில்லை.

என்டிஆரின் ஏழு மகன்களில் மிகவும் பணக்காரர் தாரக் ரத்னாவின் அப்பாவான மோகன் கிருஷ்ணாதான். தன் மகனுக்கு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடத்த ஆசைப்பட்டாராம். ஆனால் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மகன் மணப்பதால், சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துவிட்டாராம்!

 

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தை ரீமேக் செய்கிறார் உதயநிதி!

Udayanidhi Remake Aanpaavam

சென்னை: இளையராஜா இசையில் பாண்டியராஜன் நடித்து இயக்கி பெரும் வெற்றி கண்ட ஆண்பாவம் படத்தின் ரீமேக் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இந்தப் படத்தை சந்தானமும் தானும் இணைந்து நடிக்க, ரீமேக் செய்ய உத்தேசித்துள்ளார்.

1985-ல் வெளியான படம் ஆண்பாவம். மறைந்த பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். சீதா, ரேவதி, விகே ராமசாமி, ஜனகராஜுடன் பாண்டியராஜன் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்தக் காட்சி, அந்தக் காட்சி என்றில்லாமல், படம் ஆரம்பித்து நன்றி கார்டு போடும் வரை சிரித்துக் கொண்டே பார்த்த படம் ஆண்பாவம்தான். தமிழ் சினிமாவின் ட்ரென்ட்செட் படங்களில் ஒன்று இது.

படத்தின் முக்கிய ஹீரோ இசைஞானி இளையராஜா. அத்தனைப் பாடல்களும் தாறுமாறு ஹிட்!

விகே ராமசாமியும் அவரது அம்மாவாக நடித்திருந்த கொல்லங்குடி கருப்பாயியும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிலைத்துவிட்டார்கள்.

இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்யும் முடிவில் இருக்கிறார் உதயநிதி. ஓகேஓகே வெற்றிக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உதயநிதிக்கு, ஆண்பாவம்தான் அதற்கேற்ற சரியான படம் என்று ஆலோசனை சொல்லப்பட்டதாம். அவரும் படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க, பாண்டியராஜன் பாத்திரத்தில் தானும், பாண்டியன் பாத்திரத்தில் சந்தானமும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்துள்ளாராம்.

படத்தை இயக்க மீண்டும் ராஜேஷையே கேட்டுக் கொண்டுள்ளாராம் உதயநிதி.

 

9 நாயகிகள் கதிகலங்க வைக்கும் கவர்ச்சியில் ‘இளமை ஊஞ்சல்’

9 Heroines Ilamai Oonjal 9   

9 ஹீரோயின்கள் நடிக்க ஒரு படம் தயாராகிறது. படத்துக்குப் பெயர் இளமை ஊஞ்சல்.

ஸ்ரீ ப்ரியம் கிரியேஷன்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மங்கை அரிராஜன் இயக்குகிறார்.

அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் திகில் படம் இது. திடுக்கிடும் சம்பவங்களும், கவர்ச்சி காட்சிகளும், மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும், சஸ்பென்ஸும் நிறைந்த இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி, ஷிவானி ஆகிய நடிகைகள் படம் முழுக்க திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறார்களாம்.

"இந்தப் படத்தின் கதைக்கு கட்டாயம் கவர்ச்சி தேவை என்பதால், இதில் நடித்திருக்கும் நடிகைகள் கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு, காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய், படம் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் அளவிற்கு தங்களின் உடலழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்," என்கிறார் இயக்குநர் அரிராஜன் தெரிவித்துள்ளார்.

ஒகனேக்கல், பெங்களூர், மைசூர், ஹைதராபாத், மூணாறு ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

கார்த்திக் பூபதிராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு : ஜே.ஜி கிருஷ்ணன்.

முடிவடையும் நிலையில் இருக்கும் இந்த இளமை ததும்பும் படத்தை பிரபல பட வினியோகஸ்தர் எஸ்.ஆர். மனோகரன் தயாரிக்கிறார். மங்கை அரிராஜன் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

"2012 ஆம் ஆண்டிலேயே இளம் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளப்போகும் படம் ‘இளமை ஊஞ்சல்' தான்" என்று கூறுகிறார்கள் இயக்குனர் மங்கை அரிராஜனும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். மனோகரனும்.

 

ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் வழக்கு எண் 18/9, ஏழாம் அறிவு!!

Vazhakku Enn 18 9 7aum Arivu Enter    | 7 ஆம் அறிவு  

சென்னை: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் இந்தியப் படங்களின் பட்டியல் வழக்கு எண் 18/9 மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரு படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய திரைப்பட சம்மேளனம் (FFI) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

உலக திரைப்பட விருதுகளில் மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது ஆஸ்கர் விருது. பலர் எனக்கு இந்த விருது மீது நம்பிக்கை இல்லை என்றெல்லாம் சொன்னாலும், அவர்களின் இறுதி இலக்கு, நமக்கு ஒரு ஆஸ்கர் கிடைத்துவிடாதா என்பதில்தான் இருக்கும்.

ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு படங்கள், சிறந்த வெளிநாட்டு மொழி பட பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு 10 படங்களை இந்திய திரைப்பட சம்மேளனம் தேர்வு செய்துள்ளது.

இவற்றில் வழக்கு எண் 18/9 மற்றும் 7 ஆம் அறிவு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 16 பேர் கொண்ட நடுவர் குழு இந்த தேர்வை அறிவித்துள்ளது.

வழக்கு எண் 18/9-ல் முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்தனர். லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்க, பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது இந்தப் படம்.

7-ஆம் அறிவு படத்தை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ். உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருந்தார். சூர்யா-ஸ்ருதிஹாஸன் நடித்திருந்தனர். நல்ல வசூல், தமிழரின் பெருமையை உணர்த்தியபடம் என்று சொல்லப்பட்டாலும், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து இந்தப் படம்.

இந்த இரு படங்கள் தவிர, இந்தியிலிருந்து கஹானி, கேங்ஸ் ஆப் வஸிப்பூர், பாங் சிங் டோமர், தி டர்ட்டி பிக்சர் மற்றும் பார்பி ஆகி படங்களும் தேர்வாகியுள்ளன.

 

தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த காஞ்சிபுரம் தியேட்டர் உரிமையாளர்கள்!

Producers Deep Shock Over Kanchipuram   

சென்னை: இனி புதிய படங்களுக்கு மினிமம் கேரண்டி எனும் முறையில் பெரும் தொகையை செலுத்த மாட்டோம் என காஞ்சிபுரம் நகர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் முகமூடி படத்தை இரண்டு நாட்கள் கழித்துதான் காஞ்சிபுரத்தில் படத்தைத் திரையிட்டனர்.

இது தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக பெரிய படங்களை வாங்கும்போது, அதை மினிமம் கேரண்டி முறையில் வெளியிடுவது வழக்கம். ரஜினி படங்களுக்கு ரூ 1 கோடி வரை இப்படித் தரப்படும். கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் படங்களுக்கும் குறித்த தொகை இப்படித் தரப்படும்.

ஆனால் சமீப காலமாக இப்படித் தரப்பட்ட தொகையை வசூலிக்க முடியாமல் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகள் திணறிக் கொண்டிருக்கின்றன. ஏழாம் அறிவு, பில்லா 2, சகுனி, வேலாயுதம், நண்பன் போன்ற படங்களுக்கு பெரும் தொகை தரப்பட்டதாம். ஆனால் அந்தப் படங்கள் மினிமம் கேரண்டி தொகையை வசூலிக்க முடியாமல் தியேட்டர் உரிமையாளர்களை ஏமாற்றிவிட்டன.

இதனால் இப்போது காஞ்சிபுரம் தியேட்டர்காரர்கள் அனைவரும் à®'ன்றிணைந்து à®'ரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இனி எக்காரணம் கொண்டும் எந்தப் படத்துக்கும் மினிமம் கியாரண்டி தொகை தரமுடியாது என்றும், சாதாரணமாக à®'ரு தொகையை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு படங்களைத் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த நிபந்தனைக்கு ஆரம்பத்தில் à®'ப்புக் கொள்ளாததால், முகமூடி படத்தைத் திரையிட காஞ்சிபுரம் திரையரங்குகள் மறுத்துவிட்டன. வேறு வழியின்றி ரூ 5 லட்சம் மட்டும் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை தயாரிப்பாளர் கொடுத்ததால், ஞாயிற்றுக் கிழமை திரையிட்டுள்ளனர்.

தியேட்டர்காரர்களின் இந்த à®'ற்றுமை தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.