பாலிவுட் நடிகர் 'பின்னாடி' கடித்த ரசிகை!

Emran Hashmi S Fan Bites His Butt
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மியின் தீவிர ரசிகை ஒருவர் அவரது பின்புறத்தில் கடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி படங்களில் முத்தக் காட்சி இல்லாமல் இருக்காது. சாதாரண முத்தம் அல்ல லிப் டூ லிப் காட்சிகள். அவர் தற்போது நடித்துள்ள ஷாங்காய் பட விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் வந்திருந்தார்.

ஒரு ஷாப்பிங் மாலில் அவர், அந்த படத்தில் அவருடன் நடித்த அபய் தியோல், கல்கி கொச்லின் ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ஒரு ரசிகை அத்தனை பாதுகாவலர்களையும் தாண்டி வந்து யாரும் எதிர்பாராவிதமாக இம்ரான் ஹஷ்மியின் பின்புறத்தில் கடித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இம்ரான் ஆடிப்போய் விட்டார். இருக்காதா பின்னே...

படங்களில் முத்தக் காட்சி மூலம் ரசிகர்களை கலங்கவைக்கும் அவரை ஒரு ரசிகை கதிகலங்கவி்ட்டுவிட்டார். முன்பு ஒரு முறை ஜன்னத் 2 ஷூட்டிங்கிற்காக டெல்லி சென்றபோது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இம்ரான் ஹஷ்மியை பார்க்க முந்தியடித்ததால் படக்குழுவினர் படாதபாடு பட்டனர்.

ஒரு முறை வெர்ஜீனியா என்பவர் இம்ரானை பார்க்க ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்திருந்தார் என்றால் அவருக்கு இருக்கும் ரசிகைகளைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 

டோரன்டோ இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்

Iifa Awards Announced Aid0091  
டோரன்டோ: இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.

சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.

ரோபோட்டுக்கு 3 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.

சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.
 

தனுஷ் மனைவி மீது எனக்கு சந்தேகம் இருந்தது.. ஸ்ருதி ஹாசன்

I Had Doubt About Aishwarya Danush Shruti Hassan   
3 படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது எனக்கு ஐஸ்வர்யா தனுஷ் மீது சந்தேகம் இருந்தது. இவர் இயக்கும் முதல் படமாச்சே, எப்படி எடுப்பாரோ என்று சந்தேகப்பட்டேன். பின்னர் அது நீங்கியது, ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.

3 படம் வெளியாகி, ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்து முடிந்து ஓய்ந்து விட்டது. சில சர்ச்சைகள் ஸ்ருதியை முன்வைத்தும் ஓடிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் 3 படம் குறித்தும், ஐஸ்வர்யா குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி.

அவர் கூறுகையில், 3 படத்தில் பணியாற்றும்போது தனுஷ், ஐஸ்வர்யா, நான் மூவருமே ஒருவரையொருவர் தொழில் ரீதியாக அணுகுவது என்ற முடிவு செய்துகொண்டோம். இதனால் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரவில்லை.

தொடக்க காலத்தில் ஐஸ்வர்யா மீது எனக்கு சந்தேகம் இருந்தது. அவர் இயக்கும் முதல் படம். எப்படி கையாளப்போகிறாரோ என்று எண்ணினேன். முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் பணியாற்றியதை பார்த்தபிறகு அவர் மீதான சந்தேகம் தீர்ந்தது. ஒரு படைப்பாளியாக அவரை ஏற்றுக்கொண்டேன்.

இப்படத்தில் பள்ளி மாணவி, மனைவி, விதவை என 3 விதமான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. நடிப்புக்கு வாய்ப்பு இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் காதல் வலையில் விழுந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கேற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தால் அதை முதலில் எனது தந்தையிடம் சொல்வேன். இப்போதைக்கு காதல் செய்ய நேரமில்லை என்றார் ஸ்ருதி.

 

அருண் விஜய்யின் 'மானப் பிரச்சனை'-பிராச்சி தேசாய்க்கு நோட்டீஸ்!!

Arun Vijay Sends Legal Notice Prachi Aid0136
பிராச்சி தேசாய் விவகாரம் கிட்டத்தட்ட மானப் பிரச்சினையாகிவிட்டது நடிகர் அருண் விஜய்க்கு.

'அதிலும் அருண் விஜய் 'ராசி' காரணமாகத்தான் பிய்ச்சிக்கிட்டு ஓடிட்டார்' என மீடியாவில் செய்தி பரவ, உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அருண்.

தடையற தாக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த அவர் ஒருநாள் தங்கி இருந்தார். மறுநாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு மும்பை பறந்து விட்டாராம்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பலதடவை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. நேரில் சென்றும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து பிராச்சி தேசாய்க்கு அருண்விஜய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

படத்தில் நடிக்காததற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அருண்விஜய் கூறும்போது, பிராச்சி தேசாயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போட்ட செட்களை எல்லாம் கலைத்தோம் (வேறு நடிகையை வைத்து எடுப்பதுதானே... இதற்காக ஏன் செட்களைக் கலைத்தார்?!). இதர நடிகர், நடிகைகளின் கால்ஷீட்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நஷ்டத்துக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்," என்றார்.
 

இந்திக்கு போகும் அபியும், நானும்: அப்போ த்ரிஷா?

Prakash Raj Turns Director Aamir Khan
பிரகாஷ் ராஜ் தயாரித்து நடித்த படம் அபியும், நானும் இந்திக்கு போகிறது. அங்கு பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தி்ல் ஆமீர் கான் நடிக்கிறார்.

பிரகாஷ் ராஜ் தயாரி்த்து நடித்த படம் அபியும்,நானும். ராதா மோகன் இயக்கிய இப்படத்தில் த்ரிஷா பிரகாஷ் ராஜின் மகளாக நடித்திருந்தார். தமிழில் படம் வெற்றி பெற்றதயைடுத்து கன்னடத்திலும் எடுத்தனர். அங்கு த்ரிஷா நடிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் மீது பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு ஆர்வம் வந்துள்ளது.

இந்தியில் இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்குகிறாராம். தமிழில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் அங்கு ஆமீர் கான் நடிக்கிறார். பிரகாஷ் ராஜூம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அபியாக த்ரிஷாவை ஆமீர் நடிக்க வைப்பாரா அல்லது பாலிவுட் நடிகைகளில் யாராவது ஒருவரை தேர்வு செய்வாரா என்பது தான் கேள்வி.

இந்தியில் அபியும், நானும் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அவர் ஏற்கனவே விஜயின் போக்கிரி பட இந்தி ரீமேக்கான சல்மான் கானின் வாண்டட் படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சான்டல்வுட்டை ஆக்கிரமிக்கும் கேரள ஹீரோயின்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோலிவுட்டை தொடர்ந்து சான்டல்வுட்டில் (கன்னட திரையுலகம்) மலையாள நடிகைகள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், பாவனா, இனியா, அனன்யா, பாமா, பத்ம ப்ரியா என கோலிவுட்டில் மலையாள நடிகைகளின் பிரவேசம் அதிகரித்து வந்தது. இவர்களில் அசின், நயன் தாரா, மீரா ஜாஸ்மின் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். இந்த வரிசையில் கார்த்திகா, ரிமா கல்லிங்கல் என மலையாள ஹீரோயின்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தடாலடியாக கன்னட படவுலகையும் மலையாள ஹீரோயின்கள் ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளனர். 'சூப்பர்' என்ற படம் மூலம் கன்னடத்தில் என்ட்ரி ஆனார் நயன்தாரா.

இப்படம் வெற்றி பெற்றது. புதிய படங்களில் நடிக்க அவரிடம் கன்னட தயாரிப்பாளர்கள் கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் அதை ஏற்க முடியவில்லை. 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழில் அறிமுகமான பாவனாவுக்கு ஒரு சில படங்களுக்கு பிறகு வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் 'ஒன்லி விஷ்ணுவர்த்தனா' படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். இதையடுத்து 'ரோமியோ', 'தொப்பிவாலா', 'பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'அழகிய தீயே' படம் மூலம் தமிழில் அறிமுகமான நவ்யா நாயர் கன்னடத்தில் 'நம் யஜமானரு' படம் மூலம் அறிமுகமானார்.

தற்போது 'பாக்யதா பலேகாரா', 'பாஸ்' ஆகிய கன்னட படங்களில் நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து 'எல்லாம் அவன் செயல்' படம் மூலம் தமிழில் அறிமுகமான பாமா கன்னடத்தில் 'மொடலாசல', 'ஷைலு'  போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து 'அம்பாரா', 'குரு' படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே நடித்து முடித்துள்ள 'ஒன்டு ஷனாதல்லி', 'அப்பயா' விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் 'டிராமா' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் இல்லாததால் மறுத்துவிட்டார். அந்த வேடத்தில் தற்போது ராதிகா பண்டிட் நடிக்கிறார். கேரளா நடிகைகளின் திடீர் சான்டல்வுட் ஆக்கிரமிப்பால் திவ்யா ஹரிப்பிரியா உள்ளிட்ட கன்னட நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.


 

மோகன்லால் போதை போஸ்டருக்கு தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிகரெட் பிடிப்பதுபோல ஒட்டப்பட்ட விஜய் பட போஸ்டருக்கு தடை விதித்ததுபோல் மோகன்லால் போஸ்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் 'துப்பாக்கி'. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டன. அதில் விஜய் சிகரெட் புகைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை வாலிபர் ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த போஸ்டர்கள் நீக்கப்பட்டது.

மோகன்லால் நடித்துள்ள படம் 'ஸ்பிரிட்'. ரஞ்சித் இயக்குகிறார். இதில் மோகன்லால் எப்போதும் குடிபோதையில் இருப்பதுபோன்று மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்திற்கான போஸ்டர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது. ஒரு கையில் மது பாட்டிலும், மறு கையில் சிகரெட்டுமாக போஸ் கொடுத்தபடி மோகன்லால் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அத்தகைய போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


 

பிரியாணியில் கார்த்தி ஜோடி சமந்தா!

Samantha Share Biriyani With Karthi    | சமந்தா  
சமந்தாவுக்கு தமிழில் அப்படி ஒரு மவுசு. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள் சமந்தா கால்ஷீட் இருந்தா நல்லாருக்குமே என்று கேட்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.

இத்தனைக்கும் தமிழில் ஒரு படம் கூட பெரிதாக ஓடவில்லை. இனி வெளியாகி ஓடினால்தான் உண்டு. தாறுமாறான அதிருஷ்டம் என்பது இதுதான் போலிருக்கிறது.

இருக்கட்டும்... இப்போது அவர் கார்த்திக்கின் விருப்ப நாயகியாகியுள்ளார். கார்த்தி நடிக்கும் அடுத்த படமான பிரியாணியில் சமந்தாதான் ஜோடி.

வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரன் ஹீரோவுக்கு சமமான வேடத்தில் நடிக்கிறார்.

வழக்கம் போல யுவன் சங்கர் ராஜா இசையைக் கவனிக்க, சக்தி சரவணன் கேமிரா பிடிக்கிறார்.

படத்தின் ஸ்க்ரிப்டுக்கு இறுதி வடிவம் கொடுக்க, சோனாவின் பார்ட்டியைக் கூட தியாகம் செய்துவிட்டு சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டனவாம். விரைவில் பூஜை அறிவிப்பு வரவிருக்கிறது!

 

எனக்கு யாரும் போட்டியில்லை... - அசின்

I M Not Competitor Anyone Says Asin   
எனக்கு யாரும் போட்டியில்லை. நானும் யாருக்கும் போட்டியில்லை என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

இந்திப் பட உலகில் அசினுக்கு ஒரு இடம் கிடைத்துவிட்டது. தொடர்ந்து அவரது இரு படங்கள் நன்றாக ஓடியுள்ளன.

அடுத்து அக்ஷய்குமார் ஜோடியாக ‘கில்லாடி 786' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘2 ஸ்டேட்ஸ்' படமும் கைவசம் உள்ளது.

அசினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அங்குள்ள நடிகைகளை கடுப்பேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது வாய்ப்புகளைப் பறிக்கவும் முயற்சிக்கிறார்களாம்.

இதுகுறித்துக் கேட்டால், "சினிமாவில் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் அவ்வளவுதான். நான் எந்த நடிகைக்கும் போட்டியாக இல்லை. எனக்கும் யாரும் போட்டியாக வரமுடியாது. இந்தியில் நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.

இப்போதுதான் எனக்கென ஒரு நல்ல இடம் அங்கு கிடைத்துள்ளது.

மற்ற நடிகைகளைவிட நான் திறமையான நடிகை என்று நிரூபிப்பது என் நோக்கமல்ல," என்றார் அசின்.

 

என் படம் கமர்ஷியல்தான்... ரீமேக்தான்... அதுக்கென்ன இப்போ! - பிரபு தேவா காட்டம்

Prabhu Deva Slammed Critics
பொதுவாகவே இந்திப் பட உலகில் தென்னிந்திய மொழி இயக்குநர்களின் படங்களை உடனே ஒப்புக் கொள்வதில்லை. படம் நன்றாக ஓடினாலும் கூட விமர்சனம் என்ற பெயரில் நக்கலடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

மணிரத்னம், ப்ரியதர்ஷன் உள்ளிட்டோருக்கும் இதே நிலைதான். முருகதாஸ் தப்பித்துவிட்டார்.

இப்போது பிரபுதேவா முறை. அவர் இயக்கியுள்ள இரண்டாவது இந்திப் படம் ரவுடி ரத்தோர் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்தப் படம் குறித்து தாறுமாறான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்தி மீடியாவில்.

இது இயக்குநர் பிரபு தேவாவைக் கடுப்பேற்றியுள்ளது. இந்த விமர்சனங்கள் குறித்து அவர் கூறுகையில், "ரவுடி ரத்தோர்' இல்லாத படம் என விமர்சிக்கின்றனர். படம் சூப்பர் ஹிட், மக்கள் பாராட்டுகின்றனர். வசூலிலும் சாதனை படைக்கிறது. ஒரு வெற்றிப் படத்துக்கு வேறு என்ன வேண்டும்.

விமர்சனங்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ஆனால் விமர்சனங்களை எதிர்பார்த்து நான் படங்கள் எடுக்கவில்லை. ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன். தென் இந்திய மொழிகளில் தயாரான படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் எடுப்பவை வியாபாரப் படங்களைத்தான். அதுவும் ரீமேக்தான். அதுக்கென்ன இப்போ....

அதற்காக நான் பெருமைபடுகிறேன். ரவுடி ரத்தோர் படத்தை தெலுங்கில் இருந்து ரீமேக் செய்துள்ளேன். வாண்டட்டும் ரீமேக் படம்தான். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன. இனியும் இதைத் தொடர்வேன். விமர்சகர்களால் என் படம் ஓடுவதில்லை," என்றார்.

 

கிசு கிசு - ஹீரோ செய்த சிபாரிசு பறந்து போற இயக்கம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

த்ரி ஹீரோ சொந்தமா படம தயாரிக்கிறாராம்.... தயாரிக்கிறாராம்... இதுல பிரண்டு நடிகர் கார்திகேயன ஹீரோவா பிக்ஸ் பண்ணிருக்காராம். யாரை ஹீரோயினா போடலாம்ன்னு இயக்கம் ஐடியா கேட்டப்ப உடனே பிரியமான ஆனந்த நடிகை பேர சொன்னாராம். அவருக்கு ஏன் சிபாரிசு பண்றீங்கன்னு நடிகர்கிட்ட கேட்டா, 'நான் சிபாரிசு பண்ணல என்னோட அபிப்ராயத்ததான் சொன்னேன்'னு நழுவுறாராம்... நழுவுறாராம்...

பெல் ஹீரோயினுக்கு கோலிவுட்ல வாய்ப்பே இல்லாம புலம்பிட்டிருந்தாராம்... இருந்தாராம்... 'எப்ப கேட்டாலும் காட்டன் வீர கேரக்டர் மாதிரி எண்ணை வழியற கேரக்டருக்காகவே கேக்கறாங்க. ஒரே சாயல்ல நடிக்க முடியாது'னு மறுத்துட்டிருந்ததால ஒரேயடியா அவர இயக்கங்க ஒதுக்கிட்டாங்களாம். வருஷ கணக்குல மத்த மொழி படங்கள்ள நடிச்சிகிட்டிருந்தவருக்கு அபூர்வமா பாக்யமான இயக்குனர்கிட்ட உதவி இயக்கமா பணியாற்றியவர்கிட்டயிருந்து சான்ஸ் வந்துச்சாம். மறுபேச்சு பேசாம ஒத்துகிட்டா ராம். படம் மூணு மொழில எடுக் கிறதால கணிசமான சம்பளம் கேட்டிருக்காராம்... இருக்காராம்...

சூப்பர் ஸ்டாரின் கோச்ச படத்தோட ஷூட்டிங் முடிஞ்சி டெக்னிக்கல் ஒர்க் நடக்குதாம்.... நடக்குதாம்... இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்குன்னு 3 நாடுகள்ல வேல நடக்கறதால நிக்க நேரமில்லாம சவுந்தர்ய இயக்கம் நாடுவிட்டு நாடு பறந்துகிட்டிருக்காராம். என்னதா பறந்து பறந்து வேல பாத்தாலும் வேல முடிய இன்னும் பல மாசத்துக்கு மேல ஆகுமாம். அதால பட்டாசு தினத்துல படம் ரிலீஸாகுமான்றது சந்தேகமாவே இருக்காம்... இருக்காம்...


 

மனம் கொத்திப் பறவை தந்த மூன்று படங்கள்!

Director Ezhil Gets More Offers
சமீபத்தில் ரிலீஸ் ஆன மனம் கொத்திப் பறவை, இயக்குநர் எழிலை சந்தோஷத்தில் துள்ள வைத்திருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் என நல்ல படங்களைத் தந்தவர் இயக்குநர் எழில். சின்ன இடைவெளிக்குப் பிறகு அவர் தந்த படம் மனம் கொத்திப் பறவை. சிவகார்த்திகேயன்தான் இதில் ஹீரோ.

சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, நல்ல விளம்பரம். பாஸிடிவான செய்திகள் தொடர்ந்து வெளியானதால், ஓரளவு திருப்தியான ஓபனிங் கிடைத்தது.

முதல் வார வசூல் திருப்தியாக இருந்ததால், படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், எழிலுக்கு மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

மனம் கொத்திப் பறவை மூலம் இயக்குநர் எழில் பணம் கொத்திப் பறவை ஆகிவிட்டாரேப்பா என நண்பர்கள் கமெண்ட் அடித்துக் கலாய்க்கும் அளவுக்கு எழில் பிஸியாகிவிட்டாராம்!

 

நான் அரசியல்வாதியாக இருந்தால் சாலை விதிகளை மீறுவோருக்கு எக்கச்சக்கமா அபராதம் விதிப்பேன்! - நமீதா

சட்டங்கள், விதிகள் கடுமையாக இல்லாததால்தான் அதை மீண்டும் மீண்டும் மீறுகிறார்கள் மக்கள். குறிப்பாக சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் அபராதம் விதிக்க வேண்டும். நான் மட்டும் அரசியல்வாதியா இருந்தா சாலை விதியை மீறுவோருக்கு ரூ 5000, 10000 என அபராதம் விதிப்பேன் என்றார் நடிகை நமீதா.

சென்னை வர்த்தக மையத்தில் இந்தோ - மலேசிய தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் ஜெ செல்வகுமாரின் பிங் ஆட்ஸ் நிறுவனம் இணைந்து ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மோட்டோ ஷோ 2012 என்கிற ஆட்டோபொபைல் கண்காட்சியை நடத்துகின்றன.

if i were the ruler i will impose heavy fine road rules
Close
 

வாகனம் வாங்குதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கு ஆலோசனைகள் கிடைக்கும். போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லாமல் வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த கண்காட்சியின் நோக்கங்களுள் ஒன்று.

அதற்காக மோட்டோ ஷோ 2012 வுக்கு முன், ஜூன் 10ம் தேதி காலை சென்னை பெசன்ட் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறும் விழ்ப்புணர்வு நடை பயணம் நடக்கிறது.

'நாங்கள் சாலை விதிகளை மதிக்கிறோம்... நீங்களும் ஏன் மதிக்கக் கூடாது..?' என்கிற கேள்வியை எழுப்பி அனைவருக்கும் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நிகழ்ச்சியின் நோக்கம்.

நிகழ்ச்சி குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை நமீதா மற்றும் நடிகர் பரத் கலந்து கொண்டனர்.

நமீதா பேசுகையில், "சாலை விதிகளை கண்டிப்பா எல்லோரும் மதிக்கணும். ஏன்னா... நீங்க தப்பு செய்திருக்கமாட்டீங்க... ஆனா எதிரில் வரும் ஒருவர் செய்யும் தவறு, ஒரு குடும்பத்தையே பாதிக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஷோவுக்கு போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு ட்ரக் தவறான பாதையில் வந்து மோதி, பெரிய விபத்தை ஏற்படுத்தியது. நாங்கள் சரியான ரூட்டில் போனோம். ஆனாலும் பாதிப்பு எனக்குதான். அன்னிக்கு மட்டும் நான் சீட் பெல்ட் போடாம போயிருந்தா இங்கே உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பேனான்னு தெரியல...

சீட் பெல்ட்ஸ், ஹெல்மெட்ஸ் எல்லாமே நம்ம பாதுகாப்புக்காகத்தான். இதை மறந்துடக் கூடாது.

இந்த வெயில் காலத்தில் ஹெல்மெட் போடுவது கஷ்டமாத்தான் இருக்கும். நிறைய முடி இருக்கிறவங்க, ரொம்ப ஷார்ட்டா வெட்டிக்கிட்டா சரியாகிடும்.

போக்குவரத்து விதிகள் மீறுவதற்குத்தான் என்ற மன நிலை நம் நாட்டில் இருக்கிறது.. அது மாறவேண்டும். முதல் ஒரு வாரம் ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. அப்புறம் நாளாக ஆக அப்படியே கண்டுக்காம போறது வழக்கமா இருக்கு.

இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ள அரசே பப்ளிக் டாய்லெட்ஸ் கட்டியிருக்கு. ஆனா அதை பயன்படுத்தாம, பொது இடங்கள்ல அசிங்கம் பண்ணுவது, கண்ட இடத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பைகளைப் போடுதல் இப்போதும் அதிகமாக இருக்கு.

இது நம்ம சிட்டி, நம்ம நாடு. இதை சுத்தமாக வச்சிக்காதவங்களுக்கு இங்கே வசிக்க தகுதியில்ல.

வெளிநாடுகள்ல ரொம்ப கண்டிப்பா இருக்காங்க இந்த விஷயத்தில். நான் அரசியல் வாதியாக இருந்தால் அப்படிச் செய்பவர்களுக்கு 5000 ,10000 என்று மிகக்கடுமையான அபராதம் விதிப்பேன்.." என்றார்.

பரத்...

நிகழ்ச்சியில் பங்கேற்ற பரத் பேசுகையில், "நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால சொல்லல... உண்மையிலேயே நான் சாலை விதிகளை மிகவும் மதிப்பவன். என் டிரைவருக்கும் கூட இதைச் சொல்லி வைத்திருக்கிறேன். இரவு 12 மணியாக இருந்தாலும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று செல்லச் சொல்லியிருக்கிறேன்.

அதேபோல பொது இடங்களில் ஒரு முறை கூட, ஒரு சின்ன காகிதத்தைக் கூட நான் வீசியதில்லை. குப்பை கொட்டுவதற்காக உள்ள இடத்தைத் தேடிச் சென்று போடுவதுதான் என்வழக்கம்...

போக்குவரத்து விதிகளை ஒரு சிலர் மட்டும் பின்பற்றினால் போதாது... நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்...

இந்த மாதிரி விழிப்புணர்வு சம்பந்தமான விழாக்களுக்குக் கூப்பிடும் போது உடனே ஒத்துக் கொள்கிறேன்... அவர்களை பலமுறை அழைக்க வைத்து அலைக்கழிப்பதில்லை... போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது நமது கடமை!," என்றார்.

வெரிகுட்!

Posted by: Shankar
 

இறுக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம்.. கேப்டன் டிவியில் 'கில்மா' நிகழ்ச்சி!

Captain Tv Samayal Mandhiram
உணவு என்பது நம் உணர்வோடு தொடர்புடையது. சில உணவுகளை சாப்பிட்டால் அமைதியாக சாத்வீக குணத்தோடு செயல்படுவார்கள். சில உணவுகள் கோபத்தை ஏற்படுத்தும். சில உணவுகள் பாலுணர்வை தூண்டும். இதை அடிப்படையாக கொண்டு ஒரு சமையல் மந்திரம் என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சி கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

பொதுவாக சமையல் நிகழ்ச்சி என்றாலே மதியம் அல்லது மாலை நேரத்தில்தான் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த சமையல் மந்திரம் நிகழ்ச்சியோ இயற்கை உணவு மூலம் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கூறும் நிகழ்ச்சி என்பதால் நள்ளிரவு நேரத்தில் ஒளிபரப்புகின்றனர்.

சமையல் மந்திரம் நிகழ்ச்சி அந்தரங்கம், தீர்வு போன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்கம் நிகழ்ச்சியில் நேயர்களின் சந்தேகங்களை தொகுப்பாளர் நந்தினி கேட்க மருத்துவர் ஆஞ்சநேயன் பதிலளிக்கிறார்.

அதேபோல் பாலியல் பிரச்சினைக்கு தேவையான உணவு வகைகளை சுவையாகவும், சூப்பராகவும் செய்து அசத்துகிறார் மருத்துவர். அவர் செய்து காண்பிக்கும் உணவுகளை செய்து சாப்பிட்டால் தீர்வு ஏற்படும் என்றே தெரிகிறது ஏனெனில் சமையலில் அவர் சேர்க்கும் பொருட்கள் அப்படி இருக்கிறது.

‘மொச்சைக்குழம்பில் இச்சையை அதிகரிக்கலாம்' இறுக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம் இது போன்ற கில்மாவான பொருட்களை எல்லாம் செய்து நேயர்களின் உணர்வுகளை உற்சாகப்படுத்துகிறார் மருத்துவர். நைட்ல தூக்கம் வராதவங்க திங்கள் முதல் வெள்ளி வரை 11 மணிக்கு கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை கொஞ்சம் போட்டுப் பாருங்களேன்.

 

சின்னத்திரைக்கு வரும் சூப்பர் ஸ்டார் டைரக்டர்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
அண்ணாமலை, பாட்ஷா என்று ரஜினிக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும்  இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார். இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ஆஹா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான்.


 

செப்டம்பரில் தாண்டவம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், 'தாண்டவம்'. விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடர்ந்த 45 நாட்களாக நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களுக்கு லண்டனில் ஷூட்டிங் தொடரும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக் குழு கூறியுள்ளது. இந்த படம் முடிந்த பிறகு விக்ரம், ஷங்கர் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

இளைய தளபதி பிறந்தநாளில் "தல" படம் ரிலீஸ்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமீபகாலமாக தல-தளபதி பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தல-தளபதி பற்றி புதுதகவல் வெளியாகியுள்ளது. நம்ம இளைய தளபதி விஜய் பிறந்தநாளான ஜூன் 22ந் தேதி அன்று, 'தல' அஜீத்தின் 'பில்லா 2' வெளியாகப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக ஜூன் 11ந் தேதி 'பில்லா 2' தணிக்கைக் குழுவிற்கு செல்கிறது. அதன் பிறகே ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.



 

மீண்டும் ஜி.வி. - செல்வா கூட்டணி?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து செல்வராகவன் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷும் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் செல்வராகவன்- ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்தார். இந்நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியபோது, அதிலிருந்து யுவன் ஷங்கர் ராஜாவை நீக்கினார் செல்வராகவன். இனி சேர்ந்து படம் பண்ணுவதில்லை என இருவரும் முடிவு செய்தனர். இதற்கு, இருவருக்கும் இடையே பணப் பிரச்னை ஏற்பட்டதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். இனி தனது படங்களில் பிரகாஷ்தான் பணியாற்றுவார் என செல்வராகவன் தெரிவித்தார். தொடர்ந்து, 'மயக்கம் என்ன' படத்துக்கும் பிரகாஷ் இசையமைத்தார். இதையடுத்து ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படத்தை ஆரம்பித்தார் செல்வராகவன். இதிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது திடீரென பிரகாஷ் நீக்கப்பட்டு, ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனிடைய, 'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு, செல்வராகவன் தான் இயக்கும் அடுத்த படத்திற்கு, மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.


 

தனுஷ் திரைப்படத்திற்கு தலைப்பு "சொட்ட வாழக்குட்டி"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு தலைப்பு 'சொட்ட வாழக்குட்டி' என வைக்கப்பட்டிருப்பதாக புதுதகவல் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் சற்குணத்துடன் இந்த திரைப்படத்திற்காக தனுஷ் இணையவுள்ளாராம். எனினும் கதாநாயகி, தயாரிப்பாளர் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.  ரொமாண்டிக் காமடி ட்ரேக்கில் இந்த திரைப்படம் உருவாக போகிறதாம். கொஞ்சநாட்களுக்கு முன்னர் தான், தனுஷின் அடுத்த புராஜக்ட் -மறியான்- என்றார்கள். அதற்குள் அடுத்த தலைப்பு இந்த பெயரில் அடிபடுகிறது. தனுஷ் தயாரிப்பாளர் அவதாரம் முதல் திரைப்படத்திற்கு அண்மையில் 'எதிர் நீச்சல்' என தலைப்பிட்டிருந்தார்கள். 3 திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் நெருங்கிய தோஸ்தாக மாறிவிட்ட சிவ கார்த்திகேயன் தான் இப்படத்தில் ஹீரோ. ஹீரோயினுக்கு 180, வாமணம் திரைப்படங்களை பார்த்து தனுஷ் ரொம்பவே இம்பிரஷனாகிப்போன பிரியா ஆனந்த்தை பரிந்துரைத்திருக்கிறாராம்.


 

மும்பையில் அஜீத்-ஆர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா' ரீமேக்கிற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்-ஆர்யா நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. படத்தை ஏ.எம்.ரத்னம் வழங்கும் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார். நயன்தாரா, டாப்ஸி ஹீரோயின்கள். கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்தன் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.வினோத். இசை, யுவன்சங்கர்ராஜா. வசனம், சுபா. இதனையடுத்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பை நகரில் பரபரப்பாக நடந்து வருகிறது. 'தல' அஜீத் - ஆர்யா பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது.



 

மீண்டும் பூர்ணிமா பாக்யராஜ்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
கடந்த 28 ஆண்டுகளாக நடிப்புக்கு டாட்டா சொன்ன பூர்ணிமா பாக்யராஜ் மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குனர் சுசிந்தீரன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.



 

காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!

தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)?

இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.

super star rajini greatest indian after gandhi poll
Close
 

தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும்.

Posted by: Shankar
 

இசை எளிமையானது... அதை சிக்கலாக்கியது நாம்தான்! - இளையராஜா

Music Is Simple We Made It Complicated Ilayaraaja
சென்னை: இசை எளிமையான விஷயம்தான். ஆனால் அதைச் சிக்கலாக்கியது நாமே என்றார் இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் பால்நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழாவில், அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பேசி முடித்த பிறகு, இசைஞானி வழங்கிய ஏற்புரை:

"ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. சின்ன வயதில் வாத்தியார், ‘முட்டாளே... அறிவுகெட்டவனே...' என்றார். அது பிடித்ததோ பிடிக்கவில்லையோ ஏற்றுக்கொண்டேன். வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள், ‘கருவாயா, மடையா, அறிவிருக்கா உனக்கு?' என்று. ஏற்றுக்கொண்டேன். இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன. எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்.

ஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சண்டை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது.

அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர். 'அவனை புகழத் துவங்குங்கள். ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும். அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்' என்றார் கிருஷ்ண பரமாத்மா.

இதை ஏன் சொல்கிறேனென்றால், புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம். இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இங்கே பேசிய கவிஞர் முத்துலிங்கம் சாதாரணமான ஆள் இல்லை. ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு ‘அ.. ஆ...' எழுதிப் படித்த தலைமுறையின் கடைசி ஆள் அவர். ஒரு பாடலில் எப்போதும் கருத்தைப் பளிச் என்று சொல்ல வேண்டும். அப்படி சிறப்பாக எழுதுவதில், இங்கே பேசிய கவிஞர் மு. மேத்தாவும் சரி, கவிஞர் முத்துலிங்கமும் சரி, இருவருமே வல்லவர்கள். பல சிறப்பான பாடல்களை இருவருமே எழுதியுள்ளனர்.

மொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ‘கமல்ஹாசன்' என்று இருக்கும் பெயரை நீங்கள் தலைகீழாக படிக்க முடியுமா? அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? ஆனால் ‘ச.. ரி.. க.. ம' என்ற ஸ்வரத்தை ‘ம.. க.. ரி.. ச..' என்று பாடலாம். இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம். எதிர்காலத்துக்கும் போகலாம். மேலேயும் போகலாம். கீழேயும் போகலாம். இந்தப் பக்கமும் போகலாம். அந்தப் பக்கமும் போகலாம்.

எந்தப் பக்கமும் போகலாம்.. என்று ஆகிவிட்டது இசை. எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாம் ரெடியாக இருக்கிறது. சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது. அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை. தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ... அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது. ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா ஃபாஸ்ட் ஃபுட்'டில் இருக்கிறது? எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய். அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.

நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆனால் எது நம் மனதில் நிற்கிறது? அதுதான் உண்மையான விஷயம். 'இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்' என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர்.

ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. இசை எளிமையானது... அதை நாம்தான் சிக்கலாக்கிவிட்டோம்!

போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது. ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு 'பார்' மட்டுமே. அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று.

அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு ட்ராக்குகளில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 உதவியாளர்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கம்போஸர்கள். அவர்களுள் ஒரு பெண்மணி பிராட்வே மியூசிக்கில் கம்போஸ் செய்பவர். நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. "You made it very simple. Music is that much simple. They made it complicated. They wasted the whole day just for 8 Bars" என்றாள் அழுதுகொண்டே!

ஆக, இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது. எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம்? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா? அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா? 'என் பாடல்களைக் கேளுங்கள்' என்று நான் எப்போதாவது உங்களிடம் கேன்வாஸ் பண்ணி சொல்லியிருக்கிறேனா? வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

உங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை ஒரு 'தொடராக' எழுதுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன்.

இங்கே எனக்கு என் அம்மாவின் படத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். எந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதை வரைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நான் எடுத்த புகைப்படம். அதை வரைந்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனக்குச் சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாமல் போனதே கிடையாது. ஆனால் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நேரத்தில் எனக்குத் தலைவலி வந்துவிட்டது. முதல்முறையாக அந்தச் சின்னத் தலைவலிக்காக டாக்டர் வந்து வீட்டில் பார்த்துவிட்டுச் சென்றார். 'டாக்டர் வந்தார்' என்றவுடன் அம்மா பதறிவிட்டார்கள். 'ஏம்ப்பா.. உனக்குத் தலைவலியா?' என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள். 'ஏம்மா? இந்தச் சின்ன விஷயத்துக்கு அழுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை' என்று நான் அவர்களைச் சமாதானப்படுத்தி அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்து இங்கே எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தத் தாய் எதற்காக என்னை ஈன்றார்கள் என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய ஆசைகள் இருக்கும். படிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் படித்து என்ன செய்யப்போகிறேன், என்ன உத்தியோகத்துக்குப் போகப் போகிறேன் என்று தெரியாது. இசைகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது. நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. அதனால்தான் 'தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே' என்று நான் சொல்வதுண்டு.

ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே.. அது நன்றாய் இருக்கிறதே.. என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

'அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும். எங்களுக்குப் பணம் கொடுங்கள்' என்று அம்மாவிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள். அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய்?

ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை. இதுதானே கல்வி. இதை யார் கற்றுக் கொடுத்துவிட முடியும்? எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும்? அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை. அந்தப் பண்பு வரவில்லை. அம்மா.. என்பது அம்மாதான். ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள். அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது!

இதை எல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எதற்கென்றால், பிறந்த நாள் என்று சொல்லி என்னை அழைத்துவிட்டார்கள். இந்த நாளில் என்னைப் பெற்றவளை நினைக்காமல் நான் எப்படி இருக்க முடியும்?

கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நான் எழுதிய பாமரவெண்பா ஒன்றை அடிக்கடிக் குறிப்பிடுவார்...

'வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்
ஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்
ஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்
போதும் பொலம்பும் பொழப்பும்'

வெண்பா என்பது புலவர்களுக்குப் புலி. அதாவது புலி மாதிரி புலவர்களை அடித்துவிடுமாம் இந்த வெண்பா. நானும் எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். பின் மீண்டும் இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணி எழுதிப் பார்த்தேன். வந்துவிட்டது. அதுதான் இந்தப் புத்தகமாக வெளிவருகிறது.

இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது... எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து 'இங்கேயே கிட' என்று என்னைப் பணித்துவிட்டான். அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்?

இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள். இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. நாம் பாடவேண்டாம். ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது? 'தாலாட்ட வருவாளா'வாக இருக்கட்டும், 'தென்றல் வந்து தீண்டும்போது'வாக இருக்கட்டும், 'அம்மா என்றழைக்காத'வாக இருக்கட்டும், 'ஜனனி ஜனனி'யாக இருக்கட்டும்... பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா? அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா? அதுதான் தியானம்.

நீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும், ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா? நம் மனது நிற்பதில்லை. ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால், அதை என்னவென்று சொல்வது? இது எப்படி நடக்கிறது? நான் நடத்துகிறேனா? 'நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்' என்று நான் உங்களிடம் சொல்கிறேனா? அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது.

இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது. அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும். சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது. எது சுத்தம், எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது. அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை. ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூரத்தில் இருக்கவேண்டும்.

ஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால், 'இந்த ஆள் எதற்கு வந்தான்?' என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது? அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு. இதயம் என்பது ஒரு சீரான கதியில் துடிக்க வேண்டும். ஒருவருக்கு வேகமாக, ஒருவருக்கு மெதுவாக என ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகவும் அமைதியாக, மனதுக்கு நிறைவாக நடந்தது. என் நன்றிகள்," என்றார் இளையராஜா.

Posted by: Shankar
 

ரியாலிட்டி ஷோவா? ரீல் ஷோவா?: டிவிகளின் கட்டப்பஞ்சாயத்து-சில சந்தேகங்கள்!

Solvathellam Unmai
இப்பொழுதெல்லாம் டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டப்பஞ்சாயத்து பண்ணும் வேலையை ஆரம்பித்துவிட்டன. நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறேன். டிஆர்பி ரேட்டை அதிகரிக்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் ‘கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப கட்டப்பஞ்சாயத்து இன்றைக்கு ஜீ, பாலிமர், கேப்டன் என தொடர்கிறது. இந்த கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஆபத்பாந்தவன்கள் போலவும், ரட்சகர்கள் போலவும் பேசுவதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் லட்சுமியும் அழுது பிழிந்ததால் அந்த நிகழ்ச்சி வரவேற்பின்றி இழுத்து மூடப்பட்டது. அதன் அட்ட காப்பியாக கள்ளக்காதல், காதல் திருமணம், கணவன் மனைவி தகராறு என அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அரங்கத்தில் ஏற்றி அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியாக மாறிவருகின்றன இந்த நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நடத்தும் 'வணக்கம்' புகழ் நிர்மலா பெரியசாமி கொஞ்சம் தைரியமான பெண்மணிதான். படப்பிடிப்பு நடக்கும் போது கணவன் மனைவி, கள்ளக்காதலி என மூவரையும் உட்கார வைத்து பிரித்து மேய்கிறார். இவரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரான மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பெர்னாட்ஷான் என்பவர் தனது நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ஐகோர்ட்டில் தடை வாங்கினார்.

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட் குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஜீ டிவியில் ஒளிபரப்ப தடை விதித்தது.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், ஜீ டி.வி பொது மேலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து களேபரம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை போலீசார் வந்து அழைத்து சென்றது பெரிய நிகழ்ச்சியாகிப் போனது. ஆர்பாட்டம் எல்லாம் நடத்தி நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்தனர்.

இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த தந்தையை காட்டிக்கொடுத்த மகள் மூலம் நிகழ்ச்சியின் பரபரப்பு டாப் கியரில் எகிறியிருக்கிறது. இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் மூலம் கொலையை அம்பலப்படுத்திய கொலைகாரனின் மகளும், மனைவியும் முன்பே போலீசாரிடம் இதை கூறாமல் விட்டது ஏன் என்பதே அனைவரின் கேள்வி.

அதேபோல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து அதன் மூலம் பரபரப்பு தேடிய ஜீ தொலைக்காட்சி நிறுவனம் படப்பதிவின் போதே உண்மை தெரிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீசில் தகவல் தெரிவிக்காமல் விட்டது ஏன் என்பதும் அனைவரின் கேள்வியாக உள்ளது. அப்படி செய்திருந்தால் குற்றவாளியாக கருதப்படும் முருகனை ஈசியாக கைது செய்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் தெரிந்து கொண்டது என்னவெனில் பல மாதங்களாக பிரிந்து வாழும் ஜோடியைக் கூட்டி வந்து, ஸ்டுடியோவில் சண்டைபோட வைத்து, எபிசோடு முடியும் போது ரெண்டு பேருக்கும் ஒத்து வரலை பிரிஞ்சுடறது நல்லதுன்னு சொல்லிடறாங்க!. அதான் ஏற்கனவே அவங்க பிரிஞ்சுதானே இருக்காங்க? அப்புறம் நடுவுல இவங்க என்ன பஞ்சாயத்து என்று நேயர்கள் கேட்பது காதில் விழுகிறது.

ரியாலிட்டி என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அக்கப்போர் கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.