ஒவராக மேக்அப் போட்டு திட்டு வாங்கும் வந்தனா!

Vandana S Over Makeup Lures Ire Women

வில்லத்தனம் செய்வதற்கும் தில் வேண்டும். அதிலும் தங்கம் தொடரில் அசால்டாக வில்லத்தனம் செய்யும் வந்தனா இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். சீரியலின் ஆரம்பத்தில் கலெக்டர் செல்வகண்ணனின் பி.ஏ.வாக வந்து ரம்யா கிருஷ்ணனை எதிர்த்து வில்லத்தனம் செய்தார். தான் யார் என்பதையே சஸ்பென்ஸ்சாக காப்பாற்றினார். இப்பொழுதுதான் அவர் ஐயா குடும்பத்தின் தம்பி மகள் என்பதும் அவரது குடும்பத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்பது தொலைக்காட்சி உலகம் அறிய தெரிந்து விட்டதே.

ஒல்லியாக உயரமான உடல்வாகு கொண்ட வந்தனா மேக்அப் ஓவராகபோட்டு காதில் மிகப்பெரிய வளையத்தையும் தொங்கவிட்டுக்கொள்கிறார். காரணம் கேட்டால் வில்லி கதாபாத்திரத்திரத்திற்கு மேக்அப் தூக்கலாக இருந்தால்தான் எடுபடும் என்கிறார். இதுவே எனக்கு அதிக வரவேற்பையும் திட்டு கிடைக்கவும் காரணமாக அமைகிறது என்று வேறு கூறுகிறார்.

இந்த வந்தனா விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 போட்டியில் ஜெயித்த மைக்கேலை திருமணம் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது கொசுறு செய்தி.

 

அன்று வில்லனுடன், இன்று காமெடியனுடன்... சோனியாவின் புதுப் பாதை

சென்னை: இதுவரை ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வந்த சோனியா அகர்வால், திருமண முறிவுக்குப் பின்னர் மீ்ண்டும் நடிக்க வந்த பிறகு முதல் முறையாக வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜுடன் ஜோடி போட்டார். இன்று சிரிப்பு நடிகர் விவேக்குடன் கை கோர்க்கிறார்.

sonia pair with comedian the first time   
Close
 
பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. இதில் நாயகனாக நடிப்பவர் விவேக். இவர் நாயகனாக நடித்தால் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினை வரும் என்பது கோலிவுட்டின் நம்பிக்கை. அதையும் மீறி மீண்டும் அவரை நாயகனாக்குகின்றனர். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

படத்தில் பிராமணப் பெண்ணாக வருகிறார் சோனியா. முன்பு தனுஷ், சிம்பு, ஸ்ரீகாந்த் என்று ஹீரோக்களுடன் நடித்து வந்தார் சோனியா. திருமணமான பின்னர் நடிப்பை விட்டார். அதன் பிறகு விவாகரத்து ஆன பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். வந்தவருக்கு ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரகாஷ்ராஜ்தான் கிடைத்தார். அவருடன் வானம் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில்தான் தற்போது விவேக்குடன் ஜோடி போடுகிறார். ஹீரோக்கள், வில்லன் என்று நடித்த சோனியா இப்போது காமெடியன் ஒருவருடன் கை கோர்க்கிறார்.

பாலக்காட்டு மாதவன் பாக்யராஜுக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த பெயராகும். இந்தப் பெயரில் இப்போது உருவாகும் இப்படம் விவேக்குக்குப் பெயர் வாங்கித் தருமா, சோனியாவுக்குப் புது வாழ்க்கை தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

'ஏங்க என்னங்க நடக்குது இங்கே?'

Thankar Bachan Irritates Media

தங்கர் பச்சான் வரவர தகராறு பச்சான் ஆகிவிட்டார். அவரது புலம்பல்கள் அவர் படத்தை விட அதிகம் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.

ஏற்கெனவே தான் எடுத்த களவாடிய பொழுதுகள் வெளிவராத கோபத்தில் உள்ள தங்கர், இப்போது சாந்தனு- இனியா ஜோடியாக நடிக்கும் படம் அம்மாவின் கைப்பேசி படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் வியாபாரமாகாத கோபத்தை சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் கொட்டித் (திட்டி) தீர்த்தார்.

எதற்கெடுத்தாலும், ஏங்க என்னங்க நடக்குது இங்கே என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்ததில் கடுப்பான நிருபர்கள், "ஏங்க என்னதாங்க ஆச்சி இந்த தங்கருக்கு?" என்று கேட்டபடி கலைந்து சென்றனர்.

தங்கரின் புலம்பலில் ஒரு பகுதி:

ஏங்க...என்னங்க நடக்குதிங்கே.. ஒருத்தனும் சரியில்ல... சினிமாவே சரியில்ல. படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. நாலைந்து தயாரிப்பாளர்கள்தான் இப்ப படங்கள் எடுத்துகிட்டு இருக்காங்க. அவர்களும் கடனை தீர்க்கத்தான் படம் தயாரிக்கிறாங்க. தொழில்னா லாபம் வரணும். சினிமாவும் தொழில்தான் நிறைய பேர் இங்கு நஷ்டம்தான் சந்திக்கிறார்கள்.

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படங்களை எடுத்தேன். நிறைய பேர் பாராட்டினார்கள். ஆனால் தொடர்ந்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. இதைவிட சமூகத்துக்கு பயன் தரக்கூடிய வகையில் நான் என்ன செய்ய முடியும்.

தயாரிப்பாளர்கள் அமைந்தாலும் கூட நடிகர்கள் கிடைக்கிறதில்லை. இங்க நடிகர்கள்ல எவனுமே நல்ல கதையில நடிக்க தயாராயில்லே. அதனாலதான் நானெல்லாம் நடிச்சித் தொலைக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் போராடத்தான் செய்கிறேன். மக்களுக்கு தேவையில்லாத படங்களுக்கு கோடி கோடியாய் கொட்டுகிறார்கள்.

ஒரு பாடலுக்கு ரூ. 6 கோடி செலவு செய்றாங்க. ஆனால் பாரதி படம் எடுத்ததற்கு மொத்த செலவே ரூ. 1.5 லட்சம்தான். நல்ல படங்கள் எடுப்பதற்கு நிறைய நெருக்கடி இருக்கு.

இங்க இசையமைப்பாளர்கள் யாரும் சரியில்லைங்க. காசு நிறைய கேக்குறாங்க. மியூசிக்கும் சரியிலீங்க. பாட்டுப்பாடறவங்க. குரல் இன்னும் கேவலம். பல சமயங்கள்ல பாடுறது ஆம்பளையா,பொம்பளையான்னு கூட தெரியலை.

என்னங்க நடக்குது இங்க?

 

துப்பாக்கியுடன் மோதுகிறது போடா போடி!

Poda Podi Joins Diwali Race   

சிம்பு - வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள போடா போடி படம் தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிறது.

சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு இதுதான் முதல்படம். மிக நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த பெருமை கொண்ட, இந்தப் படம் இப்போதுதான் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால் தீபாவளிக்கு விஜய் நடித்த துப்பாக்கி வெளியாகிறது. விஜய் படம் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகும் சூழலில், சிம்பு தன் படத்தையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து சிம்பு கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது படம் ஒன்று தீபாவளிக்கு வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவா கூறுகையில், "துப்பாக்கி மற்றும் போடா போடி இரண்டு படங்களின் தயாரிப்பாளருமே ஒருவர்தான். எனவே எங்களுக்குள் போட்டியில்லை. மக்கள் இரண்டையுமே விரும்பி ரசிப்பார்கள்," என்றார்.

 

ஐஸ்வர்யா ராயை இயக்குகிறாரா மணிரத்னம்? - மறுக்கும் சுஹாசினி

Suhasini Denies Manirathnam Aishwarya Rai Project   

சென்னை: தனது அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராயை இயக்குகிறார் மணிரத்னம் என்ற தகவலை மறுத்துள்ளார் சுஹாசினி.

பிரசவத்துக்குப் பிறகு உடலை கட்டுக்கோப்பாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், அடுத்து படம் நடிக்க தயாராகிறார்.

இந்த இரண்டாவது இன்னிங்கில் அவர் நடிக்கும் முதல் படத்தை மணி ரத்னம் இயக்குவார் என்றும், அது ஒரு ஆங்கில நாவலின் தழுவல் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயை மணிரத்னம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் மனைவி சுஹாசினி கூறியுள்ளார்.

இதுபற்றி சுஹாசினி கூறுகையில், "மணிரத்னம் தனது கடல் படத்தில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளார். எந்தப் படத்தையும் அவசர கதியில் உருவாக்குவதில்லை மணிரத்னம். ஒரு படத்தின் கதையை உருவாக்க அவருக்கு எட்டு மாதங்களுக்கு மேல் தேவை. எனவே அடுத்த படம் குறித்து இப்போதே வந்துள்ள தகவல் சரியானது இல்லை," என்றார்.

 

கரீனா - சயீப் அலிகான் திருமணம் - புதுப்பொலிவு பெறும் படோடி அரண்மனை!

Kareena Saif Marriage On Oct 17

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் - படோடி சமஸ்தான வாரிசும் நடிகருமான சயீப் அலிகான் திருமணம் வரும் 17-ம் தேதி நடக்கவிருப்பதால், படோடி அரண்மனை புதுப்பிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் விஷயமாகிவிட்டது சயீப் - கரீனா காதல் மற்றும் திருமண விவகாரம்.

ஒன்றாகவே வசிக்கும் இருவருக்கும், ஒரு வழியாக வரும் அக்டோபர் 17-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்களும் தரப்பட்டு வருகின்றன.

இதில் சயீப்பின் அம்மா நடிகை ஷர்மிளா தாகூர் படுபிஸியாக உள்ளார்.

இந்த திருமணத்துக்காக படோடியில் உள்ள சயீப் அலிகானின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடிகள் செலவழிக்கப்பட்டு, பலநூறு பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

படோடியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வருகிற 25-ந் தேதி வரை இரு வீட்டு உறவினர்களுக்கும் தங்க அறைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

ஆரம்பத்தில் டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு என்று முடிவு செய்திருந்தனர். இப்போது தங்கள் பூர்வீக அரண்மனையிலேயே திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

 

முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்

Gv Prakash Join Hands With Actor Vijay

சென்னை: முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

நடிகர் விஜய்யும் இயக்குநர் விஜய்யும் முதல் முறையாக புதிய படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்தப் படத்தை சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.

தாண்டவம் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகித்தான், கவுதம் மேனன் படத்தைக்கூட விட்டுவிட்டு இயக்குநர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் விஜய். ஆனால் தாண்டவம் படுத்துவிட்டது.

இருந்தாலும் கொடுத்த கமிட்மெண்டை மீறாமல், படத்தைக் தொடங்கச் சொல்லியிருக்கிறார் விஜய்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பது இயக்குநர் விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் விஜய்யும் ஒரு பாடல் பாடுவது வழக்கம். இந்தப் படத்திலும் அவர் பாடுவார் என்றே தெரிகிறது.

எல்லாம் சரிதான்... இயக்குநர் விஜய்யும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் இந்தப் படத்தில் எல்லாமே ஒரிஜினலாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கலாம்.

According to sources, GV Prakash Kumar is going to compose music for Vijay - Vijay's next movie.

 

பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு

Lotus Tv Will Launch On October 11

கோவையை தலைமையாகக் கொண்டு புதிய 24 மணிநேர செய்திச் சேனல் ஒன்று உதயமாகியுள்ளது. பாஜக சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்திச்சேனலுக்கு ‘லோட்டஸ் டிவி' என்று பெயரிட்டுள்ளனர். அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பை தொடங்கும் என்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளர்.

செய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

லோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்படிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.


நாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

‘இப்படிக்கு நான்' என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.

இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் ‘ஒரு கோவில் ஒரு கதை' ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.

இன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி ‘நவீனம், நாகரீகம்'.

உலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது ‘எட்டாம் அறிவு' நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.

‘சரித்திரத்தின் சரித்திரம்' நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.

இதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.

 

துப்பாக்கி தலைப்பு வழக்கு - மீண்டும் இரண்டு நாட்கள் தள்ளிவைப்பு!

Tuppakki Title Case Postponed Again

விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி தலைப்புக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒத்திப் போவது இத்துடன் 9வது முறையாகும்.

கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரிக்கும் ரவி தேவன் என்பவர், துப்பாக்கி படத் தலைப்புக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பல்வேறு காரணங்களுக்காக பல முறை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இப்போது 9வது முறையாக இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

இதுவரை தமிழ் சினிமா தொடர்பான வழக்கு ஒன்று இத்தனை முறை ஒத்திவைக்கப்பட்டதே இல்லை எனும் அளவுக்கு இழுத்துக் கொண்டு போகிறது இந்த வழக்கு. இதனால் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள துப்பாக்கியின் விளம்பர பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.

அடுத்து வரும் 5-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 

வீணா மாலிக்கின் சூடான முத்தம்!

Veena Malik Kissing Scene Is Ready To Spark Fire   
வீணா மாலிக்கின் செயல்களைப் பார்த்தால் சீக்கிரமே அவர் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகியோரை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போல. அந்த அளவுக்கு அவரும் கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

புதிதாக ஒரு ஆல்பத்தில் தோன்றி நடித்து, பாடியும் உள்ளார் வீணா. அதன் பெயர் டிராமா குவீன். இது ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ ஆல்பம். இதில் கவர்ச்சிகரமாக தோன்றி ஒரு பாடலையும் பாடியுள்ளார் வீணா.

இந்த நிலையில் இந்தஆல்பம் தொடர்பான 3வது டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வீணா மாலிக்கின் சூடான முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. படு கவர்ச்சிகரமான அந்த முத்தக் காட்சி குறித்து வீணா கூறுகையில், முத்தங்கள் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவை, அழகானவை. நமது உணர்வுகளை வெளிப்படுத்த முத்தங்கள்தான் சரியான வழியாகும். அதை அன்போடும், சந்தோஷத்தோடும் கொண்டாட வேண்டும் என்கிறார் வீணா மாலிக்.

வீணா மாலிக் ஆல்பம் வீடியோ

 

விமல் சிபாரிசு எனக்குத் தேவையில்லை! - சொல்கிறார் ஓவியா

Oviya Denied Reports On Her Affair With Vimal   

சினிமாவில் நடிக்க யாரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை. விமல் சிபாரிசுசெய்வதாகக் கூறுவதும் தவறு. யார் சிபாரிசும் தேவையில்லை, என்று நடிகைஓவியா கூறியுள்ளார்.

களவாணி, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு என விமலும் ஓவியாவும்தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துவிட்டதால், இருவரைப் பற்றியும் ஏககிசுகிசு.

விமல்தான் ஓவியாவுக்கு சிபாரிசு செய்வதாகக் கூறப்பட்டது. இருவருக்கும்தனிப்பட்ட முறையில் நெருக்கம் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் சில்லுனு ஒரு சந்திப்பு படத்தின் பிரஸ் மீட்டில்,வதந்திகளைத் தவிர்க்க, இனி ஓவியாவுடன் நடிக்க மாட்டேன் என்று விமல்அறிவித்தார்.

இந்த நிலையில், தனது விளக்கத்தையும் ஓவியா அளித்துள்ளார்.

அதில், "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில்உண்மையில்லை. எனக்காக வேறு நடிகர்களும் வாய்ப்பு தேடி அலையவில்லை.அதற்கான அவசியமும் இல்லை. இயக்குனர்கள்தான் எனக்கு வாய்ப்புதருகிறார்கள். அவர்கள் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதியதால் என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். நானும் இனி விமலுடன் நடிக்கமாட்டேன்," என்றார்.

 

ராஜமவுலி படத்துக்கு அப்புறம்தான் திருமணம்: பிரபாஸ்

Will Think About Marriage After Rajamouli Film Prabhas

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ரிபல் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ரிபல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது.

அமெரிக்காவில் 56 திரையரங்குகளில் ரிபல் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு தியேட்டருக்கு 1,662 டாலர் வரை வசூல் செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். அமெரிக்காவில் வெளியான தெலுங்குப் படத்தில் இதுவரை நாகர்ஜூனா நடித்த லைப் ஈஸ் பியூட்டிபுல் திரைப்படம்தான் வசூலில் சாதனை செய்ததாக கூறப்பட்டு வந்தது. தற்போது ரிபல் திரைப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிபல் ரிலீசுக்குப் பின் தற்பொழுது ரிலாக்ஸ் ஆகியுள்ள பிரபாஸ் அடுத்ததாக எஸ். எஸ். ராஜமவுலியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.இது ஹீரோவுக்கான கதை என்று ஏற்கனவே ராஜமவுலி கூறியிருப்பதால் அதற்காக தனி கவனம் செலுத்தி நடிக்க இருக்கிறாராம் பிரபாஸ்.

ராஜமவுலியின் இயக்கத்தில் நடிப்பது என்னுடைய லட்சியம். இதனால் திருமணம் பற்றி எல்லாம் இப்போதைக்கு நினைக்கப் போவதில்லை. ராஜமவுலியின் படத்தை முடித்த பின்னர்தான் திருமணம் பற்றி பேசப்போகிறேன் அதுவரைக்கும் ஜாலியாக கதாநாயகிகளுடன் டூயட் பாடப்போகிறேன் என்று கூறியுள்ளார் ரிபல் ஹீரோ பிரபாஸ்.

 

தமிழகத்திற்குத் தண்ணீர் தராதே... நடிகர் அம்பரீஷ் ஆர்ப்பாட்டம்!

Cauvery Issue Actor Ambareesh Leads Protest Against Tn

மாண்டியா: தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தண்ணீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என்று கன்னட நடிகர் அம்பரீஷ் அறிவித்துள்ளார். கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து அவர் மாண்டியாவில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்வேறு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புக் மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மாண்டியாவில் நேற்று நடந்த தர்ணாவில் நடிகர் அம்பரீஷ் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்திற்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு ஏற்பாடு செய்தது. அதன் தலைவர் நாராயண கெளடாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அம்பரீஷ் பேசுகையில்,தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடக விவசாயிகளுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்க வேண்டும். கர்நாடக விவசாயிகளுக்கு கன்னட திரையுலகம் எப்போதுமே ஆதரவாக இருக்கும். வருகிற 6-ந் தேதி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படும் என்றார் அவர்.

 

ஸ்டார் மூவிஸ், ஹெச்பிஒ, சோனி மேக்ஸ் பக்கமும் போயிட்டு வாங்களேன்!

Dilwale Dulhaniya Le Jayange On Sony Max Tv

தமிழ் சேனல்களில் பார்த்த படங்களையே பார்த்து போர் அடித்துவிட்டதா? கவலைப்படாதீர்கள் இந்தி, ஆங்கிலப்படங்களை பார்க்க ஆர்வம் உள்ள ரசிகர்களுக்காவே உள்ள ஸ்டார் மூவிஸ், ஹெச்பிஓ, டபிள்யூ பி, யுடிவி மூவிஸ், மூவிஸ் நவ் போன்ற ஆங்கில சேனல்களில் அட்டகாசமான திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

அதேபோல் அருமையான இந்தி திரைப்படங்களை சோனி மேக்ஸ்,ஃபில்மி, பிக்ஸ், ஜீ சினிமா, ஸ்டார் கோல்டு, மூவிஸ் ஒகே போன்ற சேனல்களில் கண்டு ரசிக்கலாம்.

சோனி மேக்ஸ் டிவியில் இன்று இரவு பிரசித்தி பெற்ற காதலர் ஸ்பெஷலான, கோடானு கோடி ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே திரைப்படம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 1995 ல் வெளியான இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், கஜோல் நடித்திருக்கின்றனர். இன்னும் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் இந்தப் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஷாருக்கான், கஜோலின் கெமிஸ்ட்ரி அட்டகாசம்.. பாடல்களோ சூப்பர்ப்.. இப்படி பல ஸ்பெஷல்களைக் கொண்டுள்ள இப்படத்தை எத்தனை முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரசிகர்களிடையே வரவேற்பினை பெறகத் தவறியதில்லை.

ஸ்டார் மூவிஸ் டிவியில் 3 மணிக்கு ஐஸ் ஏஜ் 3, ஒளிபரப்பாகிறது அனகோண்டா 2 மாலை 5 மணிக்கும், அனகோண்டா 3 இரவு 11.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. ‘நேசனல் டிரசர் : புக் ஆப் சீக்ரெட்ஸ்' திரைப்படம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நகைச்சுவை ரசிகர்களுக்காகவே ‘மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே' திரைப்படம் ஹெச்பிஓ சேனலில் இரவு 7.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 11 மணிக்கு ரஷ் ஹவர் 3 ஒளிபரப்பாகிறது.

எனவே இன்றைக்கு கொஞ்சம் தமிழ் சேனல்களை கொஞ்சம் விட்டுவிட்டு ஆங்கிலம், இந்தி சேனல்கள் பக்கம் ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்களேன்.