வாழ்த்து மழையில் புதுமனை புகுந்த சிவகார்த்திகேயன்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் புதிய வீடு ஒன்றை சென்னை கே.கே. நகரில் கட்டி வந்தார், முழுவதும் கட்டி முடிக்கப் பட்ட அந்த வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் நடத்தி குடிபோயிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒருசிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்த சிவா, இன்று வீடு குடிபுகுந்ததைக் கேள்விப்பட்ட சினிமாத் துறையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Sivakarthikeyan builds a new house

இயக்குனர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து நடித்த 6 படங்களிலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நடிப்பால் கவர்ந்த சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் திருச்சியாகும்.

சிவாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தில் சூரி,சமுத்திரக் கனி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

புதுவீட்டுக்கு தனுஷை கூப்பிட்டிங்களா சிவா........

 

சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவிக்கும் பாகுபலி ட்ரைலர்

எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி ட்ரைலருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக உருவாகியுள்ள பாகுபலி படம் இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்து பிரமித்து நிற்கிறார்கள் பிற மொழி படைப்பாளிகள்.

பிரபல ஹாலிவுட் ட்ரைலர் விமர்சகரான கிரேஸ் ராண்டால்ப், இந்த ட்ரைலர் மிக பிரமாதமாக வந்திருப்பதாகவும், இந்த ட்ரலரில் வரும் இயற்கைக் காட்சிகள் தன்னை இந்தியாவுக்குச் செல்லத் தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு காட்சியையும் பிரமித்து பாராட்டியுள்ள இந்த விமர்சகர், சர்வதேச மார்கெட்டில் இந்தியப் படங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக பாகுபலி வருகை அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

செல்போன் நம்பரால் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் திலீப்

திருவனந்தபுரம்: கடந்த வாரங்களில் எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் இருந்தார் மலையாள நடிகர் திலீப், தினசரி பத்திரிக்கைகளைப் புரட்டிய சேட்டன்கள் திலீப்பின் பேட்டியோ செய்தியோ இல்லாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு திரிந்தனர். மீண்டும் வந்தால் வான்டட்டாக தான் வருவேன் என்று இரண்டு நாட்களாக தினசரிகளை நிரப்பிக் கொண்டிருக்கிறார் திலீப் .

எல்லாம் ஒரு செல்போன் நம்பரால் வந்த வினை, எப்போதுமே திலீப்பின் பிரச்சினை காவ்யாதானே இதென்ன புதுக்கதை என்று கேட்பவர்களுக்கு உண்மையிலேயே இந்தப் பிரச்சினை உண்டானது ஒரு செல்போன் நம்பரால் தான். சமீபத்தில் வெளியான சந்திரேட்டன் எவிடயா படத்தில், திலீப் ஒரு பெண்ணிடம் தனது செல்போன் நம்பரை சொல்வார். 10 நம்பர்களும் முழுதாக சொல்லப்பட்ட அந்த சீனை நன்றாக நோட் செய்த நம்ம ஊரு பக்கிகள் தினமும் அந்த நம்பருக்கு போன் செய்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Woman wants Dileep's movie taken off theaters for showing her mobile number

அந்த போன் நம்பர் இந்தப் படத்தில் துளிக்கூட சம்பந்தப் படாத ஒரு பெண்ணுடையது, தற்போது தினசரி அர்த்த ராத்திரி வேலைகளிலும் அந்த நம்பரைத் தொடர்பு கொண்டு எல்லோரும் தொந்தரவு கொடுப்பதால் அந்தப் பெண் படத்தில் இருந்து தன்னுடைய நம்பரை நீக்கச் சொல்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் நஷ்ட ஈடும் தரவேண்டும் என்று வழக்கில் கூறியிருக்கிறாராம். இந்தப் பிரச்சினையில் தற்போது திலீப்பின் தலை தொடர்ந்து உருள்வதால் மனிதர் மிகுந்த மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

எல்லாம் திலீப்போட ராசி...போல

 

பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற தங்கச்சி லக்ஷ்மிக்கு பரிசு கொடுத்து அசத்திய அஜீத்

சென்னை: லக்ஷ்மி மேனன் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அவருக்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார் அஜீத்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 56. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகிறார்கள். படத்தில் அஜீத்தின் பாசக்கார தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.

Ajith suprises Lakshmi Menon with a gift

அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் லக்ஷ்மி பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

லக்ஷ்மி பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் விதமாக பாசக்கார அண்ணன் அஜீத் அவருக்கு பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தாராம். அஜீத் பரிசு கொடுத்ததை சற்றும் எதிர்பாராத லக்ஷ்மி மேனன் திகைத்துவிட்டாராம்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இது முடிந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்த உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் துவக்க பாடலில் அஜீத் அருமையாக டான்ஸ் ஆடியதாக கூறப்படுகிறது.

 

நடுரோட்டில் சண்டை போட்ட நஸ்ரியா

திருவனந்தபுரம் : நம்ம நஸ்ரியாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு சமீபத்தில் நஸ்ரியா ஒரு வேலையைச் செய்திருக்கிறார். நாட்டையே திருத்தற வேலை அப்படின்னு யாரும் தப்பா நினைச்சிடாதிங்க, நஸ்ரியா போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்திருக்காங்க. இந்த பகத் பாசில் சும்மா இல்லாம ஒரு காரை வாங்கி தன்னோட அன்புப் பரிசா நஸ்ரியாவுக்கு கொடுக்க அந்தக் கார வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாம தன்னோட உறவினர்களைப் போய்பார்த்துட்டு வந்திருக்காங்க நஸ்ரியா.

Nazriya Nazim Creates Problem Amidst Traffic?

அதுவரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போய்ட்டு இருந்துச்சி, திரும்ப வர்றப்ப கொச்சினுக்கு ஒரு நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில ஒரே டிராபிக்கா இருந்திருக்கு. இதனால பொண்ணு காரை நத்தை வேகத்தில ஓட்டிட்டு வந்திருக்கு, தீடிர்னு யாரோ ஒரு புண்ணியவான் நஸ்ரியாவோட காரை லேசா உரசிட ஆரம்பிச்சது கிரகம் அந்தக் காரை உரசினவருக்கு.

காரை விட்டு பயங்கரக் கோபமா இறங்கின நஸ்ரியா எப்படி என்னோட கார் மேல நீ உன்னோட காரக் கொண்டுவந்து உரசலாம் அப்படி இப்படின்னு பயங்கரமா கத்த ஆரம்பிச்சிருக்காங்க ரோட்டில போன பசங்க ஏ நம்ம நஸ்ரியா டான்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில கூட்டம் திமுதிமுன்னு குவிஞ்சி போச்சாம் அந்த இடத்தில. கடைசியில போலீஸ் வந்து நஸ்ரியாவ சமாதானம் செஞ்சு அனுப்பி வச்சிருக்காங்க.

பூவிற்குள் ஒரு புயல்..........

 

பிலிம்பேர் விருதுகள் 2015 – தென் இந்திய விருதுகளுக்கான ரேஸில் குதிக்கும் கோலிவுட்!

சென்னை: திரையுலகில் சிறந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஐடியா நிறுவனம் பிலிம்பேர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்தவகையில் பிலிம்பேர் விருதுகளுக்காக இந்தவருடம் பரிந்துரைக்கப்பட்டுள்ள தென் இந்திய நடிகர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

62வது பிலிம்பேர் விருதுகள் விழாவில் பிளாக் லேடியை தக்கவைக்கப் போகும் பெயர்கள் இருக்கும் தென் இந்திய தமிழ் சினிமா பட்டாளத்தின் நாமினி லிஸ்ட் இங்கே உங்களுக்காக.

62nd Filmfare Awards South Tamil Nomintations

சிறந்த படங்கள்:

கத்தி

காவியத்தலைவன்

மெட்ராஸ்

முண்டாசுப்பட்டி

விஐபி

சிறந்த இயக்குனர்:

ஏ.ஆர்.முருகதாஸ் - கத்தி

பி.ஏ.ரஞ்சித் - மெட்ராஸ்

ராம்குமார் - முண்டாசுப்பட்டி

வசந்தபாலன் - காவியத்தலைவன்

வேல்ராஜ் - விஐபி

சிறந்த நடிகர்கள்:

அஜித் - வீரம்

தனுஷ் - விஐபி

கார்த்தி - மெட்ராஸ்

சித்தார்த் - காவியத்தலைவன்

விஜய் - கத்தி

சிறந்த நடிகை:

அமலா பால் - விஐபி

கேத்ரின் தெரசா - மெட்ராஸ்

மாளவிகா நாயர் - குக்கூ

வேதிகா - காவியத்தலைவன்

சிறந்த துணை நடிகர்:

பாபி சிம்ஹா - ஜிகர்தண்டா

கலையரசன் - மெட்ராஸ்

பிரித்விராஜ் - காவியத்தலைவன்

சமுத்திரக்கனி - விஐபி

தம்பி ராமைய்யா - கதை திரைக்கதை வசனம் இயக்கம்

சிறந்த துணை நடிகை:

அனிகா சோட்டி - காவியத்தலைவன்

கோவை சரளா - அரண்மனை

ரித்விகா - மெட்ராஸ்

சரண்யா பொண்வண்ணன் - விஐபி

சீதா - கோலிசோடா

சிறந்த இசையமைப்பாளர்:

அனிருத் ரவிச்சந்தர் - மான் கராத்தே, விஐபி, கத்தி

ஏ.ஆர்.ரஹ்மான் - காவியத்தலைவன்

சந்தோஷ் நாராயணன் - மெட்ராஸ்

சிறந்த பாடல் வரிகள்:

மதன் கார்க்கி -செல்பி புள்ள

நா.முத்துக்குமார் - அழகு

பா.விஜய் - யாருமில்லா

வைரமுத்து - ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

யுகபாரதி - மனசுல சூரக்காத்து

சிறந்த பாடகர்:

அனிருத் ரவிச்சந்தர் - உன் விழிகளில்

ஹரிசரண் - ஹே சண்டிக்குதிர

கார்த்திக் - ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

பிரதீப் குமார் - ஆகாயம் தேடி

விஜய் - செல்பி புள்ள


சிறந்த பாடகி:

பய்வா பண்டிட் - ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

சக்தி ஸ்ரீ கோபாலன் & தீக்‌ஷிதா - நான் நீ

ஸ்வேதா மோகன் - யாருமில்லா

வந்தனா ஸ்ரீநிவாசன் - உன்னை இப்ப

உத்ரா உன்னிகிருஷ்ணன் - அழகு

 

காக்கா முட்டைக்கு மேலும் ஒரு விருது!

இரண்டு தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற காக்கா முட்டை படம் மேலும் இரு விருதுகளை வென்றுள்ளது.

இத்தாலி நாட்டில் மிலன் நகரில் நடைபெற உள்ள 25-வது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் சிறந்த உள்நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலித்த படத்திற்கான விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Two more awards for Kakka Muttai

காக்கா முட்டை படத்தை மணிகண்டன் இயக்கியிருக்கிறார். தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோ மல்லூரி, சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்னை குடிசைப் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள், மேல்தட்டு மக்கள் மட்டுமே உண்ணும் உணவாக கருதக்கூடிய பீட்சாவை வாங்கி சாப்பிட படும் பாடுகள்தான் கதை.

படம் உலகெங்கும் நாளை வெளியாகிறது.

 

ருத்ரம்மாதேவியா அல்லது பாகுபாலியா?

ஹைதராபாத்: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்து வரும் பாகுபாலி படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும் நாமும் கண்டுவிடலாம் என்று அனைத்து மொழி ரசிகர்களும் பாரபட்சமில்லாமல் ஒருபக்கம் ஏங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் சத்தமேயில்லாமல் ரிலீசிற்குத் தயாராகி விட்டது மற்றொரு சரித்திரப் படமாகிய ருத்ரம்மாதேவி.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபாலி படம் அனுஷ்கா, பிரபாஸ், சத்யராஜ், ராணா மற்றும் சுதீப் என ஏராளாமான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது. அதே போன்று இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ரம்மா தேவி படமும் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், நித்யா மேனன் மற்றும் ராணா என இந்தப் படத்திலும் நட்சத்திரங்களைக் குவித்தே எடுத்திருக்கின்றனர்.

Rudramadevi or Baahubali; which movie is going to bang Box Office?

இரண்டு படத்திலும் அனுஷ்கா தான் நாயகி எனினும் நாயகர்களாக பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் என இரண்டு படங்களிலும் ஹீரோக்கள் வேறுபட்டிருக்கின்றனர். இரண்டு படங்களுமே சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை, பாகுபாலியின் பட்ஜெட் கிட்டத்தட்ட 200 கோடி ருத்ரம்மா தேவிக்கு செலவு வெறும் 60 கோடி தான். ருத்ரம்மா தேவி 3D படமாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது.

பாகுபாலி பாகுபாடின்றி பலமொழிகளில் வெளியாகவிருக்கின்றது. இந்தப் படமும் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப் பட்டிருக்கின்றது, தற்போது பிரச்சினை படங்களின் வேறுபாடு அல்ல இரண்டில் எது முதலில் வெளியாகப் போகிறது என்பதுதான். அனேகமாக பாகுபாலியை ரிலீசில் ருத்ரம்மாதேவி முந்திக் கொண்டுவிடும் என்று கூறுகிறார்கள். இரண்டு படங்களும் வெளியான உடனே சமூக வலைதளங்களில் பின்வரும் தலைப்பில் கண்டிப்பாக பட்டிமன்றங்கள் நடக்கும், பட்டிமன்றத் தலைப்பு என்னவென்று கேட்கிறீர்களா சிறந்த படம் ருத்ரம்மா தேவியா அல்லது பாகுபாலியா என்பது தான்.

பாகுபாலி புயலைத் தாங்குமா ருத்ரம்மா தேவி...பார்க்கலாம்

 

சாலையோரம் படத்தில் மீண்டும் வில்லனான பாண்டியராஜன்

சாலையோரம் படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார் இயக்குநர் ஆர் பாண்டியராஜன்.

இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன், திரைக்கதை எழுதி இயக்கி வரும் படம் ‘சாலையோரம்'.

இப்படத்தில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஷ்கினின் அஞ்சாதே படத்துக்குப் பிறகு பாண்டியராஜன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

Pandiyarajan plays negative role in Salaiyoram

துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவம் படிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது இந்தப் படம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரோசையா கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.

விழாவில் பேசிய பாண்டியராஜன் கூறுகையில், "மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்கும்போதே, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறினேன். ஆனால், மிஷ்கினோ உங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் சரியாக வரும் என்று கூறினார். ஒரு இயக்குvரால் எந்த நடிகரையும் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கவைக்க முடியும் என்பதற்கு அதுதான் சான்று," என்றார்.

 

நடிகராக மாறினார் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி!

பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் முதல் முறையாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விஷாலின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி.

மிஷ்கின் இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் பிசாசு. இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். பேய்ப் படமாக வெளியான இப்படத்தில் பிரயாகா பேயாகவும், இவருக்கு அப்பாவாக ராதாரவியும் நடித்திருந்தார்.

Vishal's father GK Reddy turns actor

இப்படம் தற்போது கன்னடத்தில் ‘ராக்‌ஷஸி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை முருகதாஸின் உதவியாளர் அஷ்ரப் இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகனாக நவரசன் நடிக்கிறார். நாயகியாக சிந்து லோகநாத் நடிக்கிறார். ராதாரவி நடித்த கதாபாத்திரத்தில் விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டி நடிக்கிறார்.

முதல் முறையாக முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜிகே ரெட்டி.

பிசாசு படமாக்கப்பட்ட அதே சென்னை பின்னி மில்லில் ஐஸ் பேக்டரி போல் செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் ஜி.கே.ரெட்டி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது அந்த இடத்திற்கு விஷால் வந்து நேரில் பார்த்தார்.

தன் தந்தை நடிப்பதைப் பார்த்துவிட்டு, பின்னர் படக்குழுவினரையும் வாழ்த்திச் சென்றார் விஷால்.

 

விஜய் படத்தில் தொடரும் பாடல் செண்டிமெண்ட்

சென்னை: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்ட விஜய் தனது ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். முதன்முதலில் 1994 ம் ஆண்டு ரசிகன் படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடலைப் பாடியதின் மூலமாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகமான விஜய், இதுவரை சுமார் 30 க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது படங்களில் பாடியுள்ளார்.

இவர் படம் தவிர்த்து நண்பர் சூர்யாவிற்காக அவரின் பெரியண்ணா படத்தில் ஒருசில பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்போது சமீபமாக தான் நடிக்கக் கூடிய எல்லாப் படங்களிலும் ஒரு பாடலைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரசிகர்களும் இவரின் குரலில் வெளிவந்த பாடல்களுக்கு மிகுந்த வரவேற்ப்பைக் கொடுத்து வருகின்றனர்.

Vijay   to sing a song  for Puli?

விஜய் சமீபத்தில் பாடிய கூகுள் கூகுள் (துப்பாக்கி), வாங்கங்கணா வணக்கங்கணா(தலைவா), செல்பி புள்ள( கத்தி) போன்ற பாடல்கள் மெகா ஹிட்டனாதைத் தொடர்ந்து தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் புலி படத்திலும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்,பாடலை அவர் நடிகை சுருதியுடன் இணைந்து பாடியுள்ளதாகத் தெரிகிறது.. இசையமைப்பாளர் டி.எஸ்.பி யின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் பாடலை அவர் பாடியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு செண்டிமெண்ட் மச்சி.............

 

பிலிம்பேர் விருதில் 7 பிரிவுகளில் மோதும் கத்தி

சென்னை: பிலிம்பேர் விருதுகள் என்றால் எல்லோருக்கும் தெரியும் அல்லவா, வருடாவருடம் இந்தியாவில் வெளிவரும் அனைத்துப் படங்களிலும் இருந்து சிறந்த கலைஞர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்து இந்திய அரசால் வழங்கப் படும் ஒரு கவுரவம்தான் பிலிம்பேர் விருதுகள். இந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான தமிழ் படங்கள் மற்றும் தமிழ் நடிகர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ள நிலையில், விஜய் நடித்த கத்தி திரைப்படம் பிலிம்பேரில் 7 விருதுகளுக்காக தேர்வு செய்யப் பட்டுள்ளது.

Kaththi

கடந்த வருடம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியான கத்தி திரைப்படம் சுமார் 70 கோடி செலவில் எடுக்கப்பட்டு 130 வசூலைக் குவித்தது. 2014 ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ஒருசில திரைப்படங்களில் கத்தியும் ஒன்று. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் விஜய் மற்றும் சமந்தா நடித்திருந்தனர். விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில், அவரே சொந்தமாக செல்பி புள்ள என்ற பாடலையும் அனிருத் இசையில் பாடியிருந்தார்.

தற்போது இந்த வருடம் நடக்க இருக்கும்62 வது பிலிம்பேர் விருதுகளில் கத்தி திரைப்படம், சுமார் ஏழு பிரிவுகளில் போட்டியிடப் போகிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை,சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பாடகர் ஆகிய 7 பிரிவுகளில் கத்தி திரைப்படம் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.இதில் எந்தப் பிரிவில் விருதை வெல்லப் போகிறது என விஜயின் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கத்திக்கு ஷார்ப் அதிகம்தான்...

 

ஜீவா ரௌடியாக நடிக்கும் திருநாள் படப்பிடிப்பில் நிஜ ரவுடிகள் மோதல்

யான் படத்துக்குப் பிறகு ஜீவா நடிக்கும் புதிய படம் திருநாள். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார்.

அந்த கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் மிரட்டுகிறார்.

Jiiva - Nayanthara's Thirunaal shooting at Kumbakonam

‘திருநாள்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் டவுனின் சந்து-பொந்து வழியாக ஜீவா ரவுடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரவுடிகளின் சண்டையும் தத்ரூபமாக படமாகிவிட்டதாம். சுவாரஸ்யமாக இருந்ததாலும் அவற்றையுடம் படத்தில் இடம்பெறச் செய்கிறாராம் இயக்குநர்.

ஜீவா - நயன்தாரா ஜோடியுடன் ‘பாண்டியநாடு' வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோ மல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-மகேஷ் முத்துசாமி; இசை-ஸ்ரீ; சண்டை-சூப்பர் சுப்பராயன்; கலை-வி.சீனு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-பி.எஸ்.ராம்நாத்; தயாரிப்பு-எம்.செந்தில்குமார்.

 

நடிகர் ஹரீஷ் திருமணம்.. குருவாயூர் கோயிலில் நடந்தது!

புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, வெத்துவேட்டு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த ஹரீஷ் - டாக்டர் அபிநயா திருமணம் இன்று குருவாயூர் கோயிலில் நடந்தது.

Actor Harish marries a doctor

புன்னகைமன்னன், சிந்து பைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிகப் பெரிய வெற்றிப் படங்களில் எடிட்டராகப் பணியாற்றியவர் மறைந்த (கணேஷ்) குமார் - கீதாஞ்சலி தம்பதியின் மகன்தான் ஹரீஷ்.

ஹரீஷுக்கும் குமார் - டாக்டர் சந்திதேவி தம்பதியின் மகள் டாக்டர் அபிநயாவுக்கும் இன்று குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்தது.

மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்.