திமிரு, காளைக்குப் பிறகு தருண்கோபி இயக்கும் சூதாட்டம் - நாயகி சந்தியா

திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் சூதாட்டம்.

இந்தப் படத்தில் அவருடன் ரமணா இன்னொரு நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திமிரு, காளைக்குப் பிறகு தருண்கோபி இயக்கும் சூதாட்டம் - நாயகி சந்தியா  

திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய தருண் கோபி, மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் நடிப்பில் அவர் எதிர்ப்பார்த்த மாதிரி ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இப்போது சூதாட்டம் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் தருண் கோபி.

இதில் இன்னொரு நாயகனாக ரமணாவை ஒப்பந்தம் செய்துள்ளார். தொட்டுப் பார், மகான் கணக்கு, வேகம் படங்களில் சிறப்பாக நடித்தும், அதற்கான வெற்றியை ருசிக்காத ரமணா, இந்தப் படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். தேவராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

திமிரு புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிக்கிறார்.

 

இப்போகூட 'கட்சி' ஆரம்பிக்காட்டா பவர் ஸ்டார் ஒரு பெரிய முட்டாள்: ராம்கோபால் வர்மா

இப்போகூட 'கட்சி' ஆரம்பிக்காட்டா பவர் ஸ்டார் ஒரு பெரிய முட்டாள்: ராம்கோபால் வர்மா

ஹைதராபாத்: பவன் கல்யாண் இமாலயத்தின் உச்சியில் இருக்கிறார். ஆனால் 40 ஆண்டுகள் கழித்தும் அவரது அண்ணன் சிரஞ்சீவி மலையடிவாரத்தில் இருக்கிறார் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையின் மற்றொரு பெயர் தான் இயக்குனர் ராம்கோபால் வர்மா என்று கூறும் அளவுக்கு அவர் உள்ளார். அவர் பேட்டிகளிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ எந்த கருத்தை தெரிவித்தாலும் அதனால் சர்ச்சை ஏற்படுகிறது.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மக்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதற்கான சான்றை பார்த்த பிறகும் கல்யாண் சொந்தமாக கட்சி துவங்கவில்லை என்றால் அவர் தான் மிகப்பெரிய முட்டாள். பவன் கல்யாண் இமய மலையின் உச்சியை அடைந்துவிட்டார். ஆனால் சிரஞ்சீவிகாரு 40 ஆண்டுகள் கழித்தும் மலையின் அடிவாரத்தில் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய பவனின் அத்தாரின்டிகி தாரேதி படம் லேட்டாக தற்போது ரிலீஸானாலும் வசூலில் சக்கை போடு போடுகிறது.

 

இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்?- ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்

சென்னை: செல்வராகவனின் இரண்டம் உலகம் படத்திலிருந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் திடீரென விலகிக் கொண்டார். படத்தின் பின்னணி இசையை இப்போது அனிருத் அமைக்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்திலிருந்து விலகியது ஏன்?- ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்

செல்வராகவனுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த முதல் படம் இது. படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ்தான் இசையமைத்தார். சமீபத்தில் பாடல்களும் வெளியாகின.

இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்கி ஒன்றரை வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது தீபாவளிக்கு படத்தை வெளியிட முயற்சி செய்து வரும் செல்வராகவன், படத்தின் பின்னணி இசையை முடித்துத் தர ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்டு வந்தார்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலையில், பின்னணி இசையை மட்டும் வேறொரு இசையமைப்பாளரை வைத்து முடிக்க எண்ணிய செல்வராகவன், அனிருத்தை அணுகினார். இப்போது அனிருத்தான் பின்னணி இசை கோர்த்து வருகிறார் இரண்டாம் உலகத்துக்கு.

இந்நிலையில், செல்வராகவன் படத்தில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், "ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளதால், அவற்றிற்கான வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடி காரணமாக இரண்டாம் உலகம் பின்னணி இசைச் சேர்ப்பை செய்ய முடியாத நிலை. எனவே விலகிக் கொண்டேன். வேறு காரணம் எதுவுமில்லை," என்று கூறியுள்ளார்.

 

'ராஜா ராணி' பார்க்க மனைவியுடன் கேரளா சென்ற ஸ்டாலின்

திருவனந்தபுரம்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ராஜா ராணி படம் பார்த்துள்ளார்.

புதுமுக இயக்குனர் அட்லீ ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்டோரை வைத்து எடுத்த படம் ராஜா ராணி. படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆனது.

'ராஜா ராணி' பார்க்க மனைவியுடன் கேரளா சென்ற ஸ்டாலின்

படத்தை பார்த்தவர்கள் இயக்குனர் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தாலும் படத்தை பார்க்கையில் அதுவும் குறிப்பாக ஜெய்யின் கதாபாத்திரத்தை பார்க்கையில் மௌன ராகம் கார்த்திக் நினைவுக்கு வருகிறார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் சென்று அங்குள்ள கைராலி தியேட்டரில் ராஜா ராணி படத்தை பார்த்துள்ளார்.

ஸ்டாலின் தியேட்டரில் இருந்து வெளியே வந்ததை பார்த்த செய்தியாளர்கள், தமிழ் படத்தை பார்க்க நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவரோ, படம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மோகன்லால் மகனும் ஹீரோவாகிறார்... மணிரத்னம் படத்தில் அறிமுகம்?

நடிகர் மோகன் லால் மகன் பிரணவ், மணிரத்னம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் மணிரத்னம் தரப்பில் இதுகுறித்து எந்த செய்தியும் இல்லை.

மோகன்லால் மகனும் ஹீரோவாகிறார்... மணிரத்னம் படத்தில் அறிமுகம்?

மம்முட்டி மகன் துல்ஹர் சல்மான் மலையாளத்தில் அறிமுகமாகி முன்னணி ஹீரோவாக உள்ளார்.

இதையடுத்து மோகன்லால், தனது மகன் பிரணவை ஹீரோவாக்குகிறார். முதல் படமே பிரபல இயக்குநர் படமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால், மணிரத்னத்தை அணுகியுள்ளார் மோகன்லால்.

மோகன்லாலை தமிழில் அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினம் சமீபத்தில் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்கையும் ராதா மகள் துளசியையும் ‘கடல்' படத்தில் அறிமுகம் செய்தார். இந்தப் படம் சரியாக ஓடவில்லை என்றாலும், அதில் நடித்த கவுதம் கார்த்திக்குக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. துளசிக்கும் இரு பட வாய்ப்புகள் வந்துள்ளன.

பிரணவ் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். இப்போது ஹீரோவாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுள்ளாராம்.

 

ஸ்ருதியின் அடுத்த நாயகன் ஆர்யா?

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆர்யாவும் ஸ்ருதியும் முதல் முறையாக இணையப் போகிறார்களாம்.

நடிப்பில் பெரிதாக ஸ்கோர் பண்ணாவிட்டாலும் கமல் மகள் ஸ்ருதிக்கு வாய்ப்புகளும் சம்பளமும் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு குவிகின்றன.

3 படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களைத் தவிர்த்துவிட்டு, தெலுங்கு, இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ஸ்ருதியின் அடுத்த நாயகன் ஆர்யா?

இந்தப் படத்தில் அவர் ஜோடி ஆர்யா. இந்தப் படத்தை தடையறத் தாக்க மகிழ் திருமேனி இயக்குகிறார்.

ஆர்யாவை வைத்து படம் பண்ணப் போவதாக சமீபத்தில் தனது பிஆர்ஓ மூலம் தகவல் வெளியிட்டிருந்தார் மகிழ் திருமேனி. அந்தப் படம்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஆர்யா நடிக்கும் படங்களின் பெரும்பாலான ஹீரோயின்களுடன் அவரை சேர்த்துப் பேசுவது வழக்கம். இந்த விஷயத்தில் ஸ்ருதிஹாஸனும் ஆர்யாவுக்கு சளைத்தவரல்ல.

கூடிய சீக்கிரமே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிடும் என கண்ணடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!