1/12/2011 12:55:21 PM
‘ரோபோ’வுக்கு இரண்டு விருதுகள்!
1/12/2011 12:55:21 PM
நடிகர் கார்த்தி வீடு முற்றுகை
1/12/2011 4:54:20 PM
நாடார் சமூகத்தை சேர்ந்த 'ராக்கெட் ராஜா'வின் பெயரை படத்தில் பயன்படுத்தியதை கண்டித்து நடிகர் கார்த்தி வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், நாடார் அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர். 'சிறுத்தை' என்ற படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். ராக்கெட் ராஜா என்ற பெயரை பயன்படுத்தியதற்கு தற்போது நாடார் சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், காமராஜர் ஆதித்தனார் கழகம், நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலையில் தி.நகர் கிருஷ்ணா தெருவில் உள்ள நடிகர் கார்த்தியின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் கார்த்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த உதவி கமிஷனர் மனோகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நடிகர் கார்த்தியின் வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால், பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் குவிக்கப்பட்டது. 100 பேரை கைது செய்து, அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து, நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் கூறுகையில், ''ராக்கெட் ராஜா பெயரை படத்தில் பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி இ&மெயில் மூலம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. அதனால்தான் முற்றுகை போராட்டத்தில் இறங்கினோம். எங்களது கோரிக்கையை கவனிக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்'' என்றனர்.