நான் பேயாட்டம் போட மாட்டேன் என்றேனா?: த்ரிஷா

சென்னை: பேய் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அத்தகைய படங்களில் நடிக்க தயார் என்றும் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் இதுவரை ஒரு பேய் படத்தில் கூட நடித்தது இல்லை. இந்நிலையில் அவருக்கு பேய் படங்கள் பிடிக்காது என்றும், அவர் பேய் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

'நானே வருவேன்' பாட த்ரிஷா ரெடி: பார்க்க நீங்க ரெடியா?

தன்னை தேடி வந்த பேய் பட வாய்ப்புகளை ஏற்க த்ரிஷா மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து த்ரிஷா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

பேய் படங்கள் பற்றி த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கூறப்பட்டதற்கு மாறாக எனக்கு எப்பொழுதுமே பிடித்தது பேய் படங்கள் தான். அதனால் அத்தகைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

சென்னை: சினிமா பைனான்சியர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா. இவரிடமிருந்து, இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார்.

செக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கஸ்தூரி ராஜா வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் வரும் 13-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

மீண்டும் இந்தியா வருகிறார் அர்னால்ட்!

ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஷநெக்கர் மீண்டும் இந்தியா வருகிறார்.

டெல்லியில் நடைபெறும் எரிசக்தி ஆய்வு மைய மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இந்த மாநாடு 7-ந் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த பசுமை மாநாடு நடக்கிறது.

மீண்டும் இந்தியா வருகிறார் அர்னால்ட்!

இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அர்னால்டு கலந்து கொள்வதன் மூலம் இந்த மாநாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன் 2007-ம் ஆண்டு 2012-ம் ஆண்டு நடந்த பசுமை மாநாட்டில் அர்னால்ட் கலந்து கொண்டார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ பட இசை வெளியீட்டில் பங்கேற்றார் அர்னால்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

யு ஏ சான்றுடன் வெளியாகிறது என்னை அறிந்தால்!

அஜீத்தின் யு ஏ சான்றுடன் வெளியாகிறது என்னை அறிந்தால்!

முதலில் இதை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போவதாக இருந்தனர். ஆனால் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் பட்டியலும் வெளியாகிவிட்டதால், இப்போது யு ஏ சான்றுடனேயே வெளியாகிறது என்னை அறிந்தால்.

இதனால் மாநில அரசின் கேளிக்கை வரி விலக்கு இந்தப் படத்துக்கு கிடைக்காது. வருகிற வசூலில் 30 சதவீதம் வரை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். தொலைக்காட்சியில் இந்தப் படம் வெளியாகும்போது மீண்டும் தணிக்கை செய்யப்பட வேண்டியிருக்கும்.

இவற்றைத் தவிர்க்கவே அனைவரும் யு சான்றுக்கு முயற்சிக்கிறார்கள். இந்த ஆண்டைப் பொறுத்தவரை வெளியான படங்களில் பெரும்பாலானவை யு ஏ-தான். ஷங்கரின் ஐ, எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்துள்ள இசை, எஸ் ஏ சந்திரசேகரனின் டூரிங் டாக்கீஸ் போன்றவைகூட யுஏதான்.

 

சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய ‘மெத்’... ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்

மெத் நடிகை நடிப்போடு கவர்ச்சியிலும் கலக்குவதால் வாய்ப்புகளும் குவிகின்றன. தளபதி படத்தோடு இந்த ஆண்டு 7 படங்கள் இருப்பதால் தனது சம்பளத்தை சத்தமில்லாமல் உயர்த்திவிட்டாராம்.

பேய் வேடத்தில் நடித்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து அதே இயக்குநரின் படத்தில் நடித்தார் நடிகை. கூடுதல் கவர்ச்சி காட்டவே பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. எனவே ஒரு கோடியில் இருந்து இரண்டு கோடியாக்கிவிட்டாராம் மெத் நடிகை.

சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய ‘மெத்’... ஷாக் ஆன தயாரிப்பாளர்கள்

தனது உதவியாளருக்கு தேவையான செலவு, ஹோட்டல் செலவு, விமான போக்குவரத்து செலவு என எத்தனையே செலவுகளை தயாரிப்பாளரின் தலையில் கட்டிவிடுகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் ஷாக் ஆகியிருக்கிறார்களாம்.

இந்த திடீர் சம்பள உயர்வுக்கு காரணம் பேய் பட வெற்றிதான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

இசை படத்தில் 7 நிமிட காட்சிகள் குறைப்பு

ஒரு சினிமா 2 மணி நேரம் இருந்தாலே போதும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்ட இந்த நேரத்தில், 3 மணி நேரத்துக்கு குறையாமல் எடுத்து ரிலீஸ் பண்ணி வருகிறார்கள்.

சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே 3 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீளம் கொண்டவையாகவே உள்ளன.

இசை படத்தில் 7 நிமிட காட்சிகள் குறைப்பு

அடுத்து வரவிருக்கும் அஜீத்தின் என்னை அறிந்தால் கூட கிட்டத்தட்ட 3 மணி நேரம்தான்.

ஒரு காட்சியைக் கூட குறைக்கவோ வெட்டவோ மனசில்லை என்று கூறி ரிலீஸ் செய்வதும், பின்னர் மக்கள் பொறுமையிழந்து நெளிவதைப் பார்த்து சில நிமிட காட்சிகளைக் குறைப்பதும் தொடர்கிறது.

இசை படத்தில் 7 நிமிட காட்சிகள் குறைப்பு

சமீபத்தில் வெளியான இசை படத்திலும் இதே கதைதான். இந்தப் படம் 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடக் கூடிய வகையில் வெளியானது.

படம் பார்த்த பலரும் படத்தின் நீளத்தை குறையாகச் சொன்னதை அறிந்து, உடனடியாக 7 நிமிடக் காட்சிகளைக் குறைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

 

ஹீரோ அஜீத்தை அடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த வில்லன் விஜய்

சென்னை: அஜீத்தை அடுத்து அருண் விஜய் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் ரிலீஸாக உள்ள நிலையில் அஜீத் குமார் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வந்தார். இந்நிலையில் அஜீத்தை அடுத்து என்னை அறிந்தால் பட வில்லன் அருண் விஜய்யும் திருப்பதி சென்று வந்துள்ளார்.

ஹீரோ அஜீத்தை அடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்த வில்லன் விஜய்

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திருப்பதியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன்... அருமையான தரிசனம். அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்... ஆண்டன் அருள்புரிவானாக என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அருண் விஜய் நம்புகிறார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு அளித்ததற்காக அவர் கௌதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

டார்லிங் குழுவினருக்கு விஜய் பாராட்டு

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ள பேய்ப் படமான டார்லிங்கை உருவாக்கிய குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.ட

பொங்கல் தினத்தன்று விக்ரம் நடிப்பில் ‘ஐ', விஷால் நடிப்பில் ‘ஆம்பள' என இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் ஜி.வி.பிரகாஷின் ‘டார்லிங்' படமும் வெளியானது. திருப்தியான வெற்றியைப் பெற்றுள்ளது.

டார்லிங் குழுவினருக்கு விஜய் பாராட்டு

டார்லிங் படத்தை விஜய்க்காக திரையிட்டுக் காண்பித்துள்ளனர். படத்தை விஜய் மிகவும் ரசித்துப் பார்த்த விஜய், இயக்குநர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

சமீப காலமாக புதிய படங்களை அடிக்கடி பார்க்கும் விஜய், சம்பந்தப்பட்ட கலைஞர்களைப் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமான முதல் சினிமா!

தமிழர்களின் கலைச் சிறப்பை உலகுக்கு பறை சாற்றும் கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமாக்கப்பட்ட முதல் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஓம் சாந்தி ஓம்.

ஸ்ரீகாந்த் - நீலம உபாத்யாயா நடித்துள்ள 'ஓம் சாந்தி ஓம்' படம் ஆவி - பேய் சம்பந்தப்பட்ட கதை.

படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நீலம் உபாத்யாயா நடிக்கிறார்.

கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில் படமான முதல் சினிமா!

'நான் கடவுள்' ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர். இவர் எஸ். ஜே. சூரியா, ராஜேஷ்.எம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர்.ஒளிப்பதிவு கே.எம். பாஸ்கரன், இசை- விஜய் எபிநேசர்.

இந்தப் படம் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு காட்டப்பட்டது. அவர்கள் படத்தைப் பார்த்து பாராட்டி, யு சான்று அளித்துள்ளனர். யு சான்று பெற்ற முதல் பேய் படம் ஓம் சாந்தி ஓம்தான்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக கம்போடியா அங்கோர்வாட் கோயிலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். இந்த கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'நண்பன கூப்பிட்டு பாரு.. உயிரையே கொடுப்பான் பாரு..!'

ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்.'

இந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்சயா நடிக்கிறார். மற்றும் அன்பாலயா பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ‘ஆடுகளம்' நரேன், சிங்கம்புலி, ‘நான் கடவுள்' ராஜேந்திரன், ரவி மரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் என்று பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

'நண்பன கூப்பிட்டு பாரு.. உயிரையே கொடுப்பான் பாரு..!'  

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.

இவர் ஏற்கெனவே வைகாசி பொறந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு ஆகிய படங்களை இயக்கியவர். நடிகர்கள் பிரசாந்த், சரவணன் ஆகியோரை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கூட. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்துக்கு செல்வா.ஆர்.எஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராதாபாரதி பேசிய போது, "நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். சமீபத்தில் இந்த படத்திற்காக நட்பை மையப்படுத்தி

‘அண்ணன் தம்பிய கூப்பிட்டுப் பாரு

அக்காவையும் கூப்பிட்டுப் பாரு

மாமன் மச்சான கூப்பிட்டுப் பாரு

மாப்பிளையையும் கூப்பிட்டுப் பாரு

சொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப் பாரு

உதவின்னு கேட்டுப் பாரு

யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு?

நண்பன கூப்பிட்டு பாரு..!

உயிரையே கொடுப்பான் பாரு..' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகி உள்ளது. விரைவில்திரைக்கு வர உள்ளது..," என்றார்.

 

குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்

வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவிருக்கும் என்னை அறிந்தால் படத்தை ரியல் இமேஜ் பிரிவியூ அரங்கில் பார்த்தார் அஜீத்.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படம், முழுநீள ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்

சமீபத்தில்தான் படத்தின் ரீரெக்கார்டிங் பணிகள் முடிந்தன. படத்தை அஜீத்து போட்டுக் காட்டினார் கவுதம் மேனன். அஜீத்துடன் அவர் குடும்பத்தினரும் படத்தைப் பார்த்தனர்.

மொத்தம் 2 மணி 56 நிமிடங்கள் ஓடுகிறது என்னை அறிந்தால்.

படத்தின் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளன. 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது இந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் 95 அரங்குகளில் வெளியாகிறுது. தமிழகத்தில் 400 அரங்குகள் இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

Rating:
3.0/5
-ஷங்கர்

நடிப்பு: எஸ் ஏ சந்திரசேகரன், பாப்ரி கோஷ், அபி சரவணன், சுனு லட்சுமி, ரோபோ சங்கர்

ஒளிப்பதிவு: அருண் பிரசாத்

இசை: இளையராஜா

பிஆர்ஓ: பி டி செல்வகுமார்

தயாரிப்பு: ஷோபா சந்திரசேகரன்

இயக்கம்: எஸ் ஏ சந்திரசேகரன்

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

வெளிநாடுகளில் ஒரு படத்தில் இரு தனித்தனி கதைகளைப் படமாக்கி காட்டுவது வழக்கம். தமிழில் கே பாலச்சந்தர் அப்படி ஒரு முயற்சி செய்தார். அவருக்குப் பின் இப்போது எஸ் ஏ சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸை எடுத்துள்ளார்.

ஒரு டிக்கெட்டில் இரண்டு படங்கள். இரண்டுமே சோடை போகாதவை என்பதுதான் முக்கியமானது.

முதல் படத்துக்கு காதல் 75 என்று தலைப்பிட்டிருக்கிறார்.

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

தலைப்பே சொல்லிவிடுகிறது கதை என்னவென்று. எழுபத்தைந்து வயதான ஒரு முதியவர், மரணத்தின் வாசலில் நிற்பவர், 50 ஆண்டுகளுக்கு முன் தன்னைப் பிரிந்து போன காதலியைத் தேடிச் செல்வதுதான் கதை. முதியவர் வேடத்தில் எஸ் ஏ சந்திரசேகரனே நடித்திருக்கிறார்.

இரண்டாவது கதை, செல்வி 5-ம் வகுப்பு.

தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதை. தமிழகத்தின் ஒரு பகுதியில் இன்றும் நிலவும் கொடூரமான சாதிக் கொடுமையை, சாதீய திமிரால் அப்பாவி மக்கள் சிதைக்கப்படுவதைச் சித்தரிக்கும் கதை.

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

கீழ் சாதிக்காரர்கள் படித்து பதவிக்கு வந்து தங்களையே அதிகாரம் பண்ணுவதை விரும்பாத ஆதிக்கசாதி குடும்பம் ஒன்று, தங்கள் கிராமத்தில் கீழ் சாதிக்காரர்கள் யாருமே படிக்கக் கூடாது என்று அராஜகம் பண்ணுகிறது. அதை எதிர்த்துப் பேசும் பத்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று மரத்தில் தொங்க விடுகிறது.

ஆதரவற்ற அந்த சிறுமியின் அக்கா, இந்த கொடியவர்களை எப்படி பழிவாங்குகிறாள் என்பது மீதிக் கதை.

முதல் பாதியை தன் பாணியில் ஜாலியாக நகர்த்திச் செல்கிறார் எஸ்ஏசி. ஒரு நடிகராக, மிகையின்றி நடித்திருக்கிறார். உடலால் வயதானாலும் மனதால் என்றும் இளமையாக இருக்கும் அந்தப் பாத்திரத்தின் குணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு வலது, இடது கரங்களாய் நின்று பேருதவி புரிந்திருக்கிறார் இளையராஜா.

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

முதல் கதையில், சிறு வயது எஸ்ஏசியாக வரும் அபி சரவணன், அவருக்கு ஜோடியாக வரும் பாப்ரி கோஷ் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். குறிப்பாக அந்த ரொமான்ஸ் பாட்டில் கலக்கியுள்ளனர்.

இரண்டாவது கதைதான் டூரிங் டாக்கீஸின் ஜீவனே.

அக்காவாக வரும் சுனு லட்சுமிக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ரோபோ சங்கர், செவ்வாழை, ஆடுகளம் ஜெயபாலன், அந்த சிறுமி.. அனைவருமே அந்த கிராமத்தின் நிஜ மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

ரோபோ சங்கர் மாதிரி கொடுமைக்காரன் வீட்டிலும் பாசமுள்ள ஆத்தாவும், பண்புள்ள மனைவியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டூரிங் டாக்கீஸ் - விமர்சனம்

தமிழகத்தின் கிராமங்களில் இப்படி ஒரு கொடுமைக்கு ஆளாகி, அதை வெளியில் சொல்லவும் வக்கின்றி தவிக்கும் செல்விகளும் அக்காக்களும் ஏராளம். அவர்களுக்கான குரலாய் இந்தப் படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய க்ளைமாக்ஸில் எய்ட்ஸ் பற்றி பேசுவது, அந்த டிவி சேனல் நிருபர்கள்.. என படத்தில் சின்னச் சின்ன குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை ஓட்டத்துக்கு தடையாக இல்லை.

படத்துக்கு உண்மையாகவே உயிர் கொடுத்திருப்பவர் இளையராஜா. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தந்திருக்கும் பின்னணி இசை -குறிப்பாக இரண்டாம் பாதி கதைக்கு - இனிமையான பாடல்கள் இந்தப் படத்தை வேறு தளத்துக்கு உயர்த்தியுள்ளன. மகாகவி பாரதியாரின் இரண்டு பாடல்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார்கள். அக்காவும் தங்கையும் பாடும் அந்த கிராமத்து கீதத்தில் இசையும் ஒளிப்பதிவும் அத்தனை அழகு.

ஒரு அர்த்தமுள்ள படத்தைத் தந்த நிறைவுடன், தன் இயக்குநர் இன்னிங்க்ஸை முடித்திருக்கிறார் எஸ்ஏசி!

 

சன்னி லியோனுடன் மோதும் "ஆம்பள" மதுரிமா!

மும்பை: ஜாஸ்மின் டிசவுசா இயக்கும் ஒன் நைட் ஸ்டாண்ட் இந்திப் படத்தில் இரு கவர்ச்சி நடிகைகள், கவர்ச்சிப் போட்டியில் குதித்துள்ளனர். இதனால் பைசா போட்டியில்லாமல் படத்துக்கு ஓசியாக பெரும் பப்ளிசிட்டி கிடைத்துவிட்டதாம்.

இயக்குநர் அந்தோணி டிசவுசாவின் மனைவிதான் ஜாஸ்மின். இவர் இயக்கும் படம் ஒன் நைட் ஸ்டாண்ட். படத்தின் பெயரிலேயே அதற்கான விளக்கமும் உள்ளதால் அதை விவரிக்கத் தேவையில்லை.

இப்படத்தில் முதலில் நாயகியாக சன்னி லியோனை புக் செய்திருந்தனர். இப்போது மேலும் கவர்ச்சி மெருகூட்டியுள்ளார் ஜாஸ்மின். இன்னொரு நாயகியாக மதுரிமாவை சேர்த்துள்ளார்.

சன்னி லியோனுடன் மோதும்    | சன்னி லியோன்  

தனது ரோல் குறித்து மதுரிமா கூறுகையில், இது மிகவும் கவர்ச்சிகரமான பாத்திரம். அதேசமயம் நடிப்புக்கும் வாய்ப்பு தந்துள்ளனர். என்னால்தான் இந்த பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முடியும் என்பதால் என்னை அழைத்துள்ளனர். நானும் இந்தப் படத்தில் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறேன் என்கிறார் மதுரிமா.

இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் தனுஜ் விர்வானி. இவர் பழம்பெரும் நடிகை ரத்தி அக்னிஹோத்திரியின் மகன் ஆவார்.

இந்தியில் மதுரிமா ஏற்கனவே டாஸ், கமால் தமால் மாலமால் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே போண்டியான படங்கள். இருந்தாலும் அவரது கவர்ச்சிக்காகவே ஒன் நைட் ஸ்டாண்ட் படத்தில் நடிக்க வைக்கிறார் ஜாஸ்மின்.

தெற்கிலும் தனது கவர்ச்சி அலையைப் பரப்பி வருகிறார் மதுரிமா. தமிழில் ஆம்பள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலின் 2வது அத்தையின் மகளாக, ஐஸ்வர்யாவின் மகளாக நடித்துள்ளார் மதுரிமா. சேர்ந்து போலாமா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஒரு படம் இருக்கிறதாம். தெலுங்கில் நிறையப் படங்களில் தலை காட்டியுள்ளார்.