சூப்பர் குடும்பத்தில் கோபம் கொண்ட கங்கை அமரன்! டிஆர்பிக்கான நாடகமா?


Gangai Amaran Drama On Sun Tv Super Kudumbam
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் கங்கை அமரன் மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கோபத்தோடு வெளியேறினார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

சன் டிவி சீரியலில் நடிப்பவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் குடும்பம். சனிக்கிழமைதோறும் இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மருதாணி, முத்தாரம், அழகி வரை 18 சீரியலைச் சேர்ந்த நடிகர், நடிகையர்கள் உள்ளிட்ட அத்திப்பூக்கள் குடும்பத்தில் இருந்து வந்த கற்பகம் பாட்டு என்ற பெயரில் பாடினார். இதனால் டென்சனான நடுவர் கங்கை அமரன், கற்பகம் பாடியதை பாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கமெண்ட் செய்தார்.

தனது பங்காக 5 மதிப்பெண் மட்டுமே வழங்கினார். மற்ற நடுவர்கள் மீனா, சுகன்யா ஆகியோர் 6 மதிப்பெண் வழங்கினார்.

தனக்கு மதிப்பெண் குறைவாக வழங்கப்படுவதாக கற்பகம் குற்றம் சாட்டினார். இதைக்கேட்ட கங்கை அமரன் என்ன மதிப்பெண் கொடுக்க வேண்டுமே அதைத்தான் கொடுத்திருக்கிறோம் என்றார்.

அப்பொழுதும் கற்பகம் சமாதானம் அடையவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷர்மிளா, கற்பகத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நமக்கு என்ன வருமோ அதை சரியாக செய்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் தன்னுடைய ஆட்சேபத்தை தெரிவித்தார்.

திருமதி செல்வம் காவ்யா

இந்த கலாட்டா முடிந்த உடன் திருமதி செல்வம் காவ்யா நடனமாடினார். இந்த நடனத்திற்கு செல்லமே குழுவில் இருந்த சிநேகா ஓடிவந்து கட்டியணைந்து பாராட்டினார்.

நடுவர்கள் மீனாவும், சுகன்யாவும் பாராட்டி ஆளுக்கு 8 மதிப்பெண்களை வழங்கினர். ஆனால் கங்கை அமரன் 7 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கினார். இதற்கு காவ்யா அதிருப்தி தெரிவித்தார். காவ்யா நன்றாகத்தான் நடனமாடினார் என்று காவ்யாவிற்கு ஆதரவாக செல்லமே குடும்பத்தைச் சேர்ந்த வாசு பேசினார். உடனே நடுவர் கங்கை அமரனுக்கு கோபம் வந்துவிட்டது. நல்ல நடுவராக போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

உடனே அனைவருமே செய்வதறியாது திகைத்தனர். வாசுவின் கருத்துக்கு சுகன்யா எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் நடுவர்கள் மீனாவும், சுகன்யாவும் கங்கை அமரனை சமாதானம் செய்தனர். காவ்யாவும் தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்கவே கங்கை அமரன் மீண்டும் அரங்கிற்கு வந்தார். எல்லோரும் அவரை பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ரியாலிட்டி ஷோக்களில் இதுபோன்ற கலாட்டாக்கள் நடைபெறுவது வாடிக்கைதான். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் நடுவராக பங்கேற்ற சிம்பு அழுதுகொண்டே வெளியேறினார். நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்க இதுபோன்ற பல நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம். கங்கை அமரன் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.
 

இந்தியாவின் அழகி நமீதா - ஜப்பான் டிவி சேனல் அறிவிப்பு

டோக்கியோ: இந்தியாவின் அழகி நமீதா என ஜப்பானின் புகழ்பெற்ற டோக்யோ தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்யோ டிவி.

namitha is indian beauty says japanese tv channel   
இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக புகழ்பெற்ற நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்யோ தொலைக்காட்சி.
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்:
'யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends
Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளோம்.
Namitha
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

கிசு கிசு - ஹீரோ மீது தயாரிப்பு தாக்கு

Kodambakkam Kodangi

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

மூத்த தயாரிப்பு மேல வேல்டு ஹீரோ குறை சொன்னதை படிச்சி தயாரிப்பு உர்ரானாரு. நடிகருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினாரு. இதுக்கு ரியாக்ஷன் வர்றதுக்கு முன்னேயே மறுபடியும் மூத்த தயாரிப்பு அட்டாக் பண்ண ஆரம்பிச்சிட்டாராம்... ஆரம்பிச்சிட்டாராம்... 'நாயகன் படத்தை ஹாலிவுட் படத்துலேருந்து காப்பி அடிச்சதா சிலர் சொல்றாங்க. அதே மாதிரி ஹாலிவுட் நடிகரோட நடிப்பைதான் வேல்டு ஹீரோ காப்பி அடிச்சாரு. அந்த சீனெல்லாம் நம்ம கலாசாரத்துக்கு ஒத்துபோகலன்னு தாக்கி இருக்காராம்... இருக்காராம்...

பிரமாண்ட இயக்கம், வெளிநாட்ல ஷூட்டிங் முடிச்சிட்டு திரும்பிவந்து ஈசிஆர் பக்கம் ஷூட்டிங் நடத்த பிளான் பண்ணிருக்காராம்... இருக்காராம்... இதுக்காக அந்த பகுதில இருக்க¤ற பங்களா, பர்னிச்சர்னு எல்லாத்தையும் ரென்ட்டுக்கு எடுக்க சொல்லி இருக்காராம். பிரமாண்ட இயக்கத்தோட படம்னு தெரிஞ்சதும் உரிமையாளருங்க ரேட்டை ஏத்திட்டாங்களாம்... ஏத்திட்டாங்களாம்... ஒரு இடத்துக்கு குறைஞ்சது ஒரு நாளைக்கு 2 லகரமாவது ரென்ட் தரணும்னு சொல்றாங்களாம். ஆனா இந்த ஸ்பாட்டுக்கான பட்ஜெட் சொற்பமாவே பட டீம் ஒதுக்கி இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

பகவன் படத்துல நடிச்ச ஹீரோயினோட கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்அவுட் ஆச்சான்னு காட்டன் வீர இயக்கத்துக்கிட்ட கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... நான் பேசற தமிழ் ஹீரோயினுக்கு புரியாது. அவங்க பேசுற இங்கிலிஷ் எனக்கு புரியாது. சீனை நடிச்சிகாட்டி வேலை வாங்க¤னேன். இந்த நெலைல கெமிஸ்ட்ரி எதுவும் ஒர்க்அவுட் ஆகலேன்னு கடுப்பா சொல்றாராம்... சொல்றாராம்...
 

ரஜினி மாறவே இல்லை : தீபிகா படுகோன் புகழாரம்

Rajini has not changed : Deepika Padukone tribute

மும்பை: உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்பும் ரஜினியின் வேகம் குறையவில்லை என புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். இது குறித்து அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எத்தனை ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருக்கிறார். ஆனாலும் சினிமாவின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் மானிட்டர் முன் அமர்ந்து தான் நடித்த காட்சிகளை ஒரு குழந்தையை போல் பார்ப்பார். தான் நடித்த காட்சிகள் மட்டுமல்ல, மற்றவர்கள் நடித்த காட்சியைகூட பார்ப்பார். நன்றாக நடித்திருந்தால் உடனே கைதட்டி, பாராட்டுவார்.

அவரது கண்களை பார்த்தாலே சினிமா மீது அவருக்குள்ள ஈடுபாட்டை பார்க்க முடியும். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்தித்த ஏராளமானவர்களில் நானும் ஒருத்தி. அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய பின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அப்போது அவரை பார்த்தேன். உடல் நலம் பாதிப்பதற்கு முன் எந்த வேகத்துடன் இருந்தாரோ அதே வேகம் அவரது நடவடிக்கைகளில் தெரிந்தது. அவர் சிறிதும் மாறவில்லை. அதுதான் ரஜினி. கோச்சடையான் புது தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படம். இதில் நடித்ததே தனி அனுபவம்தான். தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியிலும் இப்படம் ரிலீசாகிறது. அதனால் இதை தமிழ் படம் என்று மட்டும் சொல்லக் கூடாது. இது சர்வதேச படம். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.
 

பாலிவுட்டை கலக்குகிறார் கத்ரீனா கைப்.. சொல்கிறார் உக்ரைன் மாடல் நதாலியா

I Am Proud Katrina Kaif As She Rocks Bollywood

மும்பை: பாலிவுட்டை இப்போதைக்கு செமத்தியா கலக்கி வருவது கத்ரீனா கைப்தான். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று மார்தட்டிக் கூறியுள்ளார் உக்ரைனிலிருந்து பாலிவுட்டில் பட்டையைக் கிளப்ப வந்திருக்கும் நதாலியா கோஸனோவா.

முன்பெல்லாம் உள்ளூரிலேயே நடிகைகளைக் கொள்முதல் செய்து வந்தார்கள். இப்போதெல்லாம் பாரீன் போய் ஆள் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியப் படங்களில் நடித்த முதல் வெளிநாட்டு நடிகை ஹெலன்தான். அதன் பின்னர் அமி ஜாக்சன், கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், யானா குப்தா, பார்பரா மோரி என ஏகப்பட்ட பேர் வந்து விட்டனர்.

இந்த வரிசையில் தற்போது உக்ரைனிலிருந்து ஒரு உலுக்கும் அழகியைக் கூட்டி வந்துள்ளனர் பாலிவுட்டுக்கு. இவர் ஒரு மாடல் அழகி. அன்ஜூனா பீச் என்ற படத்தில் நடித்தவர். தற்போது அழகிகளின் குவியல் படமாக மாறி வரும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் புக் ஆகியுள்ளார். சதீஷ் ரெட்டி தயாரித்து, ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் உள்ளிட்டோர் குவிந்து கிடக்கின்றனர் என்பது நினைவிருக்கலாம்.

இப்படத்தில் நடிக்கவிருப்பது குறித்து நதாலியா கூறுகையில், பாலிவுட் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறதகு. இதில் ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்களுடன் இணையப் போவதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு அருமையான படம். என் மூலமாக நல்லதொரு மசாலாவை ரசிகர்கள் ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நானும் ஏமாற்ற மாட்டேன்.

எனக்கு மிதுன்சக்கரவர்த்தி, ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரைப் பிடிக்கும். அவர்களுடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

கத்ரீனா கைப்பையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாலிவுட்டை அவர்தான் கலக்கி வருகிறாராமே. பாலிவுட்டில் குறுகிய காலத்தில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தவர் அவர். அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.

நதாலியா இப்போது இந்தி கற்க ஆரம்பித்துள்ளாராம். சீக்கிரமே இந்தியில் நன்றாக மாட்லாடுவாராம்...

 

சான்டி புயல் காரணமாக இளையாராஜா நிகழ்ச்சி ரத்து?

Ilayaraaja S Canada Concert Cancelled

சென்னை: இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெறவிருந்தது. அதில் 100-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள், பின்னணி பாடகர்-பாடகிகள் கலந்து கொள்ளவிருந்தனர். மிகப் பிரமாண்டமாக ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. 30000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஆனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவம்பர் மாதத்தை விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக ஈழ தமிழர்கள் கடைபிடிப்பதால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை வேறு மாதத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறி வந்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் என இளையராஜாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கூறினர்.

இதற்கிடையில், அமெரிக்காவை புரட்டிப் போட்ட சாண்டி புயல் காரணமாக விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கனடாவிலும் தட்பவெப்பம் சாதகமாக இல்லை.

இதைத் தொடர்ந்து வருகிற 3-ந் தேதி கனடாவில் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாம். இளையராஜா நேற்று முன்தினம் இரவு கனடா புறப்படுவதாக இருந்தார். அந்த பயணத்தை அவர் ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இளையராஜா தரப்பில் இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை.

 

அனுஷ்கா சொத்துக்கள் பூமிகா புருஷன் கட்டுப்பாட்டில்?

Anushka S Properties Bhumika Hubby   

நடிகை அனுஷ்காவின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் பூமிகாவின் கணவர் பரத் தாகூரின் கட்டுப்பாட்டில் உள்ளனவாம்.

யோகா டீச்சராக இருந்து நடிகையாக மாறிய அனுஷ்காவுக்கு ரூ.25 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன.

அனுஷ்கா தான் சம்பாதித்ததை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.

படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அனுஷ்கா, அதை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வாங்கும் பொறுப்பை பூமிகாவின் கணவர் பரத்திடம் விட்டிருக்கிறாராம். பரத் தாகூர் ஒரு யோகா மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் போனால்கூட, அதற்கான பணத்தை பரத்தின் மேனேஜர்தான் வந்து செட்டில் செய்கிறாராம்.

அனுஷ்காவின் பணத்தை, விசாகபட்டிணத்தில் உள்ள மதுரவாடா, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் வீட்டு மனைகளில் முதலீடு செய்துள்ளாராம் பரத். சொந்த ஊரான பெங்களூரிலும் நிலங்கள் வாங்கியுள்ளார்களாம்.

பூமிகாவுக்கும் அவர் கணவர் பரத் தாகூருக்கும் அனுஷ்காவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

சில விஷயங்களை டீப்பா ஆராய்ச்சி பண்ணா ரிசல்ட் நாராசமா இருக்கும்!!

 

மும்பையில் செட்டிலா? பிரியா ஆனந்த் பதில்

Settle in Mumbai? : Priya Anand Answer

சென்னை: மும்பையில் செட்டிலாகிறாரா என்றதற்கு பதில் அளித்தார் பிரியா ஆனந்த். 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', 'வாமனன்', 'புகைப்படம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். அவர் கூறியதாவது: இந்தியில் ஸ்ரீதேவியுடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடிப்பதற்கு முன்பே சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். இந்நிலையில்தான் ஸ்ரீதேவியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறுவயதில் இருந்தே நான் அவரது ரசிகை. உடனே ஒப்புக்கொண்டு நடித்தேன். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. சில தென்னிந்திய நடிகைகள் இருப்பதுபோல் நீங்களும் மும்பையில் குடியேறுவீர்களா? என்கிறார்கள்.

தற்போது எனது தாத்தா பாட்டியுடன் சென்னையில் வசிக்கிறேன். இந்தி படங்களில் நடிப்பதால் மும்பைக்கு செல்லும் யோசனை எதுவும் இல்லை. 'கோ அன்டே கோட்டி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். த்ரில்லர் கதையான இது தமிழிலும் ரிலீஸ் ஆக உள்ளது. எனது பாட்டி மராட்டி. அப்பா பாதி தெலுங்கு, பாதி மராட்டி. எனது அம்மா தமிழ்பெண். என் குடும்பத்தை பொறுத்தவரை இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக கூறலாம். எனவே மராட்டிய பெண்ணாக நடிக்க வாய்ப்பு வரும்போதெல்லாம் குஷியாகிவிடுவேன். 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் மராட்டிய பெண்ணாக நடித்தேன். தற்போது 'ரான்கிரிஸ்' படத்திலும் மராட்டிய பெண்ணாக நடிக்கிறேன். இவ்வாறு பிரியா ஆனந்த் கூறினார்.
 

ஒரே கதையை 50 முறை சொன்ன இயக்குனர்

The director told me the same story 50 times

சென்னை: தயாரிப்பாளருக்கு ஒரே கதையை 50 முறை சொன்னார் இயக்குனர். நகுல், பூர்ணா நடித்த 'கந்தகோட்டை' படத்தை இயக்கியவர் சக்திவேல். இவர் இயக்கும் புதிய படம் 'ஈகோ'. இதுபற்றி அவர் கூறியதாவது: ஈஸ்வர் கோமதி என்ற இரு கதாபாத்திரங்களின் முதல் எழுத்தை சுருக்கித்தான் 'ஈகோ' என படத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. புதுமுகங்கள் வேலு, அனஸ்வரா ஜோடி. நகைச்சுவை வேடத்தில் பால சரவணன் நடிக்கிறார். இரண்டு இளைஞர்கள் ஒரு குடும்பத்திடம் வசமாக சிக்கிவிடுகிறார்கள்.

அவர்களிடம் இருவரும் படும்பாட்டை நகைச்சுவையாக படம் சொல்கிறது. என் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமே இந்த கதை. இப்படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் கூறியபோது பல்வேறு குறுக்குகேள்விகள் கேட்டார். ஒவ்வொரு சீனுக்கும் லாஜிக் என்ன என்று விவரிக்க கூறினார். 50 முறை இக்கதையை அவரிடம் திரும்ப திரும்ப சொன்னேன். அதன் இறுதிவடிவம் ரசிக்கும் விதத்தில் அமைந்தது. ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு. காஷ் வில்லன்ஸ் இசை. பெரியசாமி ரவிச்சந்திரன் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் சக்திவேல் கூறினார்.
 

இணையத்தில் உலவும் 'டேஞ்சரஸ்' பிரபலம் சன்னி லியோனாம்!

Sunny Leone Named The Most Dangerous Celebrity   

இணையதளத்தில் அதிகம் பேர் பார்க்கும் பிரபலமாக சன்னி லியோன் உள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சைபர்ஸ்பேஸ் எனப்படும் இணையதள உலகின் மிகவும் ஆபத்தான பிரபலம் சன்னி லியோன் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மெக்அபீ பாதுகாப்பு மென்பொருள் ஆய்வு மேற்கொண்டது. இதில் முன்னாள் போர்ன் ஸ்டாரும் தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னிலியோன் பக்கத்திற்கான லிங்க்கை பார்வையிடுவது ரிஸ்க்கானது என்று தெரியவந்துள்ளது. அவருக்கு 9.95 சதவிகிதம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் கத்ரீனாகைப், கரீனா கபூர் இடம் பெற்றுள்ளனர்.

கத்ரீனா கைப் கடந்த ஆண்டின் மிக அதிக ஆபத்தான பிரபலமான தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு கத்ரீனா 8.25 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக கரீனா கபூர் 6.67 சதவிகிதம் பெற்று மூன்றாவது இடம் பெற்றுள்ளார்.

பிரியங்கா சோப்ரா, பிபாஷாபாசு ஆகியோர் நான்கு, ஐந்தாவது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக வித்யாபாலன், தீபிகா படுகோனோ, ஐஸ்வர்யாராய் பச்சன் உள்ளனர்.

பூனம்பாண்டேவிற்கு இதில் கடைசி இடம்தான் கிடைத்துள்ளது. ஆண்களில் மிகவும் ஆபத்தான பிரபலமாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.