காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குனர் பாலுமகேந்திரா. தமிழ் நாட்டிற்கு கிடைத்த சத்யஜித்ரே. தன் ஒப்பற்ற திறனால் திரையில் அடர் இருட்டைக் கூட அழகுபட காண்பித்த ஒளி ஒவியர்..சக மனிதர்களை மட்டுமல்ல,

காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

அஃறிணைகளிடமும் அளவில்லாத பாசத்தை வைத்திருந்த மனிதன்.

ஒரு முறை நாம் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது குறும்படங்கள் குறித்து பேச்சு எழுந்தது. பரபரப்பான இயக்குனராக இருந்தபோதும் குறும் படங்கள் எடுப்பதை பாலுமகேந்திரா எப்போதும் கைவிட்டதில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது, 'குறும்படங்கள் எடுப்பது ஒரு சுகானுபவம்,' என்றார். நாம் அவர் எப்போதோ எடுத்த ஒரு குறும்படத்தைப் பற்றி நினைவு படுத்தியதும், அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த படம் எடுத்து பல ஆண்டுகளாகி விட்டது. வார இதழ் ஒன்றில் ஒரு பக்க கதையாக வந்திருந்தது. அது ஏற்படுத்திய பாதிப்பால் அந்த கதையை படமாக்கியிருந்தார் பாலு சார்.

'அந்த கதையை எழுதியவர் பெயர் எனக்கு மறந்து விட்டது . உங்களுக்கு நினைவிருக்கா,' என்றார்.

'இருக்கு சார் சூரியசந்திரன்,' என்றதும்,

'ஆமாம்ப்பா. அவரை கண்டுபிடிக்க முடியுமா,' என்று குழந்தைபோல் கெஞ்சினார்.

காற்றில் கரைந்த பாலு மகேந்திராவின் கனவுப் பட்டறை!

காரணம் அந்த கதையின் மேல் அவர் வைத்திருந்த காதல். கண்ணுக்குத் தெரியாத ஒரு அறிமுக எழுத்தாளர் எழுதிய படைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் அந்த படைப்பை மதித்து அவரை சந்திக்க துடிக்கும் அந்த படைப்புள்ளம் யாருக்கு வரும்?அவர் உதவியாளர்கள் என்று சொல்லிக்கொண்டு உயர்ந்த இடத்தில் இருக்கும் இயக்குனர்களுக்குக் கூட வராது.

பாலு சாரை கிறங்கடித்த அந்தக் கதை இதுதான். ஊரில் பெரிய நிலசுவான்தாராக இருக்கும் ஒரு பெரியவர் தெரு நாய் ஒன்றை குட்டியிலிருந்தே வளர்த்து வருவார். அவர் வீட்டில் யாரும் அவரை மதிப்பதில்லை. இந்த நாய்தான் அவருக்கு துணை. குட்டிநாய் வளர்ந்து பெரிதாகிவிடும். திடீரென்று ஒரு நாள் அந்த பெரியவர் இறந்துவிடுவார்.

பெரும் சொத்து வைத்திருப்பவர் என்பதால் சொந்தங்கள் திரண்டு வந்தது. பெரியவர் உடலை நாற்காலியில் வைத்து அழும். அப்போது ஒரு புகைப்படக்காரர் பெரியவரைச் சுற்றியழும் கூட்டத்தை போட்டோ எடுப்பார். அங்கு அழுதுகொண்டிருந்த அத்தனைபேரும் உடனே முகத்தை துடைத்து, தலையை சரிசெய்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் அந்த பெரியவர் வளர்த்த நாய் மட்டும் 'நம்ம ஃப்ரண்டுக்கு என்னாச்சு' என்கிற மாதிரி உயிரற்ற அவரின் உடலை வெறித்துப் பார்த்தபடி நிற்கும். இதுதான் அந்த கதை. இதை கண்கள் குளமாகும் வகையில் உயிரோட்டமாகப் படம் பிடித்திருப்பார் பாலு மகேந்திரா.

ஒரு படைப்பிற்கு மரியாதை செய்யும் அந்த பேரன்பும் பெருங்கருணையும் பாலுமகேந்திராவிற்கு மட்டுமே உண்டு. அவரோடு பேசி முடித்து கிளம்பும் போது, 'இருங்கள் என் பிள்ளைகளை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,' என்று மாடிக்கு அழைத்துப்போனார். நமக்கு யாராக இருக்கும் என்று சர்ப்பரைஸ்.. போனால், மாடி முழுதும் வண்ண வண்ண பூக்களோடு செடிகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு செடியாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘இவன் பேரு வித்தியாசமானது. இவன் என்ன செய்வான் தெரியுமா இலைகளையே பூக்களோட நிறத்துல முளைக்க வைப்பான். மூணு மாசம் இலைகளை உதிர்த்து விட்டு நிற்பான். அப்புறம் தழைப்பான்,' என்று நிஜக் குழந்தைகளை போல வாஞ்சையோடு செடிகளை வருடிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்..

இந்த நேரத்தில் தான் ஒரு தலைசிறந்த கேமராமேன், இயக்குனர் என்ற எந்த கிரீடமும் அவர் தலையில் இருந்ததில்லை. இந்த எளிமையை பல்வேறு தருணங்களில் அவரிடம் காணலாம்.

ஒரு இயக்குனருக்கு படம் எடுப்பது மட்டுமே வேலையில்லை. அவன் இலக்கிய உலகத்தினரோடும், சாமான்ய மக்களோடும் இணைந்திருக்கவும் வேண்டும் என்ற பண்பு அவரிடம் இருந்தது.

தமிழ் சினிமா வரலாற்றில் மற்ற மொழிக்காரர்களிடம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடியத் திரைப்படமான ‘வீடு' படத்தில் ஒரு காட்சி வரும். தன் பேத்தி கஷ்டப்பட்டுக் கட்டிக் கொண்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட வருவார் சொக்கலிங்க பாகவதர். செருப்பைக் கழட்டிப் போட்டு, வலது காலை எடுத்து வைத்து மாடிப்படி ஏறிச் செல்வார். இன்னும் பூசி முடிக்கப்படாத செங்கற்சுவரினை தன் தளர்ந்த கைகளினால் தடவிப் பார்ப்பார். கண்களில் கசியும் மகிழ்ச்சியை, அவரது பொக்கை வாய்ச் சிரிப்பு நமக்குக் காட்டும்.

கூடவே இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்' நம்மை அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு செல்லும். ‘வீடு' படத்தைப் பார்த்த ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனுக்கும் இந்தக் காட்சி மறக்க முடியாத ஒன்று. கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடம்தான் ஒப்பற்ற கலைஞர் பாலுமகேந்திராவின் கனவுப் பட்டறையான ‘சினிமாப் பட்டறை' என்பது எல்லோருக்கும் தெரியாத செய்தி.

பாலுமகேந்திரா தனது இறுதிக் காலங்களில் பெரும்பகுதியை தனது சினிமாப் பட்டறையிலேயே கழித்தார். சினிமாவை ஒருபோதும் தொழிலாகக் கருதாத அந்த கலைஞருக்கு அவரது சினிமாப் பட்டறைதான் உயிர்மூச்சு. அதனால்தான் அவரது உயிர் பிரிந்தவுடன் அவரது உடல் சினிமாப் பட்டறையிலேயே பொது மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவர் காலமானவுடன் அவரது கனவு கலைந்து விடாத வண்ணம், சினிமாப் பட்டறையில் வகுப்புகள் நடந்து கொண்டுதானிருந்தன. பாலுமகேந்திரா என்னும் கலைஞர் உயிரோடு அந்தப் பட்டறையில் உலவிக் கொண்டிருந்தார்.

இப்போது அந்த கனவுப் பட்டறை மூடப்பட்டு விட்டது. கட்டடத்தின் முகப்பில் பாலு மகேதிராவின் கையெழுத்திலேயே பொறிக்கப்பட்டிருந்த ‘பாலு மகேந்திரா சினிமாப் பட்டறை' என்னும் எழுத்துகள் காணாமல் போய்விட்டன. ‘வீடு' திரைப்படத்தில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் ஆசையுடன் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்த அந்தக் காட்சியை இப்போது பார்க்கும் போது, அது சொக்கலிங்க பாகவதர் அல்ல, பாலு மகேந்திரா என்பது நமக்குப் புரிய வருகிறது.

கடைசி வரைக்கும் கதையும் கருணையுமாக வாழ்ந்து விட்டுப் போன பாலு சாரை இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது. யாரோ முகம் தெரியாத ஒரு எழுத்தாளனைப் பார்க்க, இந்திய சினிமாவின் முகமாக இருந்த ஒரு இயக்குனர் ஆசைப்படுகிறார் என்றால் அந்த எளிமையை என்னவென்று சொல்வது. அவர் வாழ்ந்த காலத்தில் 'அப்பா அப்பா' என்று வெறும் வாய் ஜாலத்திலேயே வலம் வந்த பிள்ளைகளுக்குப் புரியுமா அப்பாவின் ஆன்மாபடும் வலி?

-தேனி கண்ணன்

 

பட்ற... இதுவும் ஒரு படத்தின் பெயர்தான்!

நச்சென்று உறைக்கும் உண்மையும் அதைச் சார்ந்த கடினமான சம்பவங்களும் எப்பொழுதும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.

'பட்ற' என்ற தலைப்பில் ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்தி குமார் தயாரிக்கும் புதிய படம், நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் வேறு வழியின்றி சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை.

பட்ற... இதுவும் ஒரு படத்தின் பெயர்தான்!

மனித உருவில் வலம் வரும் மிருகங்கள் இடையே வாழும் ஒரு இளைஞன் விண்வெளி துறையில் சாதிக்க விரும்புகிறான். அவனது வானுயர்ந்த எண்ணங்கள் அவனது வாழ்வில் சந்திக்கும் சில சம்பவங்களால் கீழே விழுந்து நொறுங்கிப் போகிறது. அவன் இருந்து இருக்க கூடாத, ஆனால் இருந்து விட்ட ஒரு சூழ்நிலை அவனது வாழ்கையை புரட்டிப் போடுகிறது. சமூகத்தின் இரு பெரிய தூண்கள் இடையே அவன் ஒரு துரும்பாக நுழைந்து, எப்படி ஒரு ஆயுத கிடங்காக மாறி அவர்களை அழிக்கிறான் என்பதே ' பட்ற' படத்தின் கதை.

பட்ற... இதுவும் ஒரு படத்தின் பெயர்தான்!

சமூகத்தின் அவலமான இரு பெரிய துருவங்களின் போர் எப்படி அப்பாவி மக்களின் வாழ்கையை பாதிக்கிறது என்பதை அறிமுக இயக்குனர் ஜெயந்தன் மிகவும் துணிச்சலாக இதில் படமாக்கியுள்ளாராம்.

மிதுன் தேவ் என்பவர் நாயகனாகவும், வைதேகி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

விரைவில் வெளியாகவிருக்கிறது பட்ற!

 

வாவ்.. ஐ ட்ரைலர் பிரமாதம்! -ஷாரூக்கான்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐ படத்தின் ட்ரைலர் பார்த்து வியந்து போய் பாராட்டு தெரிவித்துள்ளார் ஷாரூக்கான்.

ஷாரூக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள புதிய படம் ‘ஹேப்பி நியூ இயர்.' தற்போது இப்படத்தின் விளம்பரத்துக்காக நாடு முழுவதும் சுற்றி வருகிறார்கள் இருவரும்.

சமீபத்தில் சென்னைக்கும் இருவரும் வந்திருந்தனர். மிகத் தாமதமாக வந்ததால், பெரும்பாலான செய்தியாளர்கள் புறக்கணித்தாலும், சிலர் மட்டும் ஷாரூக்கானுடன் பேசினர்.

வாவ்.. ஐ ட்ரைலர் பிரமாதம்! -ஷாரூக்கான்

அப்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ஐ படத்தின் டிரைலரை பார்த்து தான் வியந்ததாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஐ' பட ட்ரைலரைப் பார்க்கும்போது வித்தியாசமான பாணியில் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலரைப் பார்த்து அசந்து போனேன்,' என்றார்.

ஷங்கரும் ஷாரூக்கானும் இணைந்து ரோபோ படத்தில் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவனுக்கு தண்ணில கண்டம்... ஒரு தமாஷ் படம்!

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகிறது இவனுக்கு தண்ணில கண்டம் எனும் புதிய படம்.

மக்களிடையே பிரபலமான வாக்கியத்தை தலைப்பாக்கினால் எளிதில் சென்று சேரும் என்பதற்காக இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.

சின்னத் திரையில் பிரபலமான ''சின்ன பாப்பா பெரிய பாப்பா ' போன்ற தொடர்களை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது.

இவனுக்கு தண்ணில கண்டம்... ஒரு தமாஷ் படம்!

'நகைச்சுவை கலந்த கதைகளுக்கு சின்னத்திரை, பெரியத்திரை என்ற பேதம் இல்லை விவிஆர் சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்கும் வி. வெங்கட்ராஜ் கதையைக் கேட்ட உடனே படப்பிடிப்புக்குச் செல்லுமாறு கூறி விட்டார்,' என்கிறார் இயக்குநர் சக்திவேல்.

'இவனுக்கு தண்ணில கண்டம்' இன்றைய இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களை நகைச்சுவை கலந்து சொல்லும் படமாக உருவாக்கப்படுகிறதாம்.

'வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியைச் சந்திக்கும் ஒரு தொலைக் காட்சித் தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன் இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையைப் புரட்டிப் போடுகிறது. போட எத்தனிக்கிறது.அதன் தொடர்ச்சியாகநடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமா என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கிறேன். துரித வேகத்தில் படப்பிடிப்பையும் முடித்து, டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறோம். இவனுக்கு தண்ணில கண்டம் முழுக்க முழுக்க எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படம்,' என்கிறார் சக்திவேல் மிகுந்த நம்பிக்கையுடன்.

தொலை காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர், சென்ட்ராயன்,' நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

 

நடித்தது மூன்றே படம்... அதற்குள் இந்த நடிகர் போடும் ஆட்டம் தாங்கலையே!

மூன்று படங்கள்தான் நடித்திருக்கிறார் அந்த நடிகர். பத்திரிகைகள் வேறு ஆஹா ஓஹோ என அவரைப் புகழ்ந்து, ரஜினியின் சாயல் தெரிகிறது என்றெல்லாம் ஏற்றிவிட, அவருக்கு தலை கால் புரியவில்லை.

அந்த மப்பில்தான் ஐ பட இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்தபோது அப்படி நடந்து கொண்டார் போலிருக்கிறது.

புதுப் பையன், நல்லா நடிக்கிறாரே என்று நினைத்து பல தயாரிப்பாளர்கள் அவரை அணுகி கால்ஷீட் கேட்டால், நடிகர் கூறும் பதிலைக் கேட்டு செம கடுப்போடு திரும்புகிறார்களாம்.

அதற்கு முக்கிய காரணங்கள் அவர் காட்டும் செம கெத்து, இன்னொன்று அவர் கேட்கும் ஓவர்.......... சம்பளம்.

சமீபத்தில் ஒரு புதிய தயாரிப்பாளர் பாபிசிம்ஹாவை வைத்து படமெடுக்க ஆசைப்பட்டு அவரிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்திருக்கிறார்.

சிம்ஹாவோ என்ன கதை, யார் டைரக்டர் என்பதையெல்லாம் விசாரிக்காமல் 'பாஸ், இப்போ வந்த 'மதுரை ஸ்பெஷல் ட்ரிங்க்' படத்துக்கப்புறம் என்னோட ரேஞ்சே மாறிப்போச்சு, தெரியாத தயாரிப்பாளர்கள், புது டைரக்டர்கள் படங்களில் எல்லாம் நான் நடிக்கிறதில்லேன்னு முடிவு பண்ணிருக்கேன். எனக்குன்னு ஒரு சர்க்கிள் இருக்கு. அவங்களுக்கு மட்டும்தான் படம் பண்ணுவேன்.. இன்னொன்னும் அடுத்த வருஷம் வரைக்கும் தேதியில்ல.. அதுக்கப்புறம்தான் தருவேன்," என்றாராம்.

ஹீரோவா நடிக்க புக் பண்ணியிருப்பதால், சம்பளமாக ஒரு கோடி வேணும் என்பதும் கூடுதல் கண்டிஷனாம்.

இவரைப் போன்ற நடிகர்கள் எல்லாம் விதார்த்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்திருந்தார் விதார்த். இத்தனைக்கும் அந்த விழாவில் அவருக்கு யாரையுமே தெரியாது.

அப்போது அவர் சொன்னார்: "நாம சினிமாவுக்குள்ள வர்றப்போ யாரையுமே தெரியாமத்தான் போய் வாய்ப்பு கேட்கிறோம். அதேமாதிரி தான் இந்த படத்தோட டீம்லேயும் எனக்கு யாரையும் தெரியாம இருந்தாலும் நான் அவங்களை வாழ்த்த வந்திருக்கேன். இனிமே இவங்களைப் பத்தி நான் தெரிஞ்சுப்பேன்!"

யதார்த்தை புரிந்த அவர் எங்கே, புதுமுக இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் இனி கண்டுகொள்ளவே மாட்டேன் என்று என்று முடிவெடுத்திருக்கும் இந்த மூன்று பட நடிகர் எங்கே!

 

கத்தியில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி

அமலாபால் உள்ளிட்ட பல பிரபல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, தற்போது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கத்தி' படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

ரவீனா ரவி பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவியின் மகள்.
சசி இயக்கிய ‘555' படத்தில் நடித்த மிருத்திகா மற்றும் எரிகா பெர்னாண்டஸ் இருவருக்கும் டப்பிங் பேசியிருந்தார் ரவீனா ரவி.

கத்தியில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி

அதுமட்டுமில்லாமல், சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த ‘நிமிர்ந்து நில்' படத்தில் அமலாபாலுக்கு டப்பிங் பேசியிருந்தார்.

சமந்தாவுக்கு டப்பிங்

தற்போது ‘கத்தி' படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இந்த செய்தி டுவிட்டரில் பரவலாக பரவி வருகிறது. விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘கத்தி' படத்தின் டிரைலரை இந்த வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். தீபாவளிக்கு படம் வெளிவருகிறது.

டப்பிங் ஆள் மாறினார்

சமந்தாவுக்கு ‘அஞ்சான்' படத்தில் மானசி என்பவர் டப்பிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தக்குரலில் சமந்தா

நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் சொந்த குரலில் வசனங்களை பேசி நடித்திருந்தார் சமந்தா. நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூன்று மொழிகளிலும் நாயகி சமந்தாவே நடித்தார். மூன்று மொழிகளிலும் சமந்தாவே சொந்தமாக டப்பிங் பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தாஸேட்டா கவலை வேண்டாம்.. நாங்க இருக்கோம்! - ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் சங்கம்

பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்று கருத்து சொன்னதால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது ஆண்கள் சங்கம்.

திருவனந்தபுரத்தில் நடந்த விழா ஒன்றில் கே.ஜே.யேசுதாஸ் பேசும் போது ஆண்கள் போல் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது. ஜீன்ஸ் அணிந்து மற்றவர்கள் மனதைக் கெடுக்கக் கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைக்க வேண்டும். எளிமையையும் அன்பையும் உயர்ந்த குணங்களை கொண்டவர்கள் பெண்கள். இது போன்ற உடைகள் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்றார்.

தாஸேட்டா கவலை வேண்டாம்.. நாங்க இருக்கோம்! - ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் சங்கம்

யேசுதாஸ் பேச்சுக்கு பெண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளா முழுவதும் போராட்டங்களும் நடந்தது. மகளிர் காங்கிரசார் யேசுதாசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி போலீசில் புகார் அளித்தனர். மகளிர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் ஜேசுதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் யேசுதாஸ் பேச்சுக்கு கேரளாவில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். யேசுதாஸ் பேச்சு சரியானதுதான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் யேசுதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஐ படத்தின் கதை? அதற்குள் ஒரு சர்ச்சை!

ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது பேச்சே இல்லை. வெற்றி பெறுகிற எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான். இப்படி பேசாத திரையுலக பிரபலங்களே இல்லை. ஒவ்வொரு பட்ஜெட் பட மேடைகளிலும் இந்த வார்த்தைகளை சம்பிரதாயத்திற்காகவாவது சொல்வது மரபு. இதை இங்கே நினைவு படுத்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே பெரிய படம் என்ற முத்திரையோடு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ஷங்கரின் ஐ! இந்த படத்தின் கதை இதுதான் என்று ஐ படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகு சமூக வலைதளங்களில் பெரிய கதையே கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அது இன்னும் தொடர்கிறது. இந்தக் கதையைப் படித்துவிட்டு அதிர்ந்து போயிருக்கிறார் ‘சாய்ந்தாடு சாய்தாடு' படத்தின் இயக்குனர் கஸாலி. ஏன் இந்த பதற்றம்? ஐ படத்தின் கதை என்னவென்று ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்களோ, அதுதான் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும்!

ஐ படத்தின் கதை? அதற்குள் ஒரு சர்ச்சை!

என் கதையைப் பார்த்து ஷங்கர் காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதற்கு நான் ஒன்றும் சினிமா தெரியாதவன் அல்ல. ஆனால் இது ஒத்த சிந்தனையாக கூட இருக்கலாம் அல்லவா என்கிறார் அவர். இனி வலைத்தளங்களில் வரும் ஐ படத்தின் கதையும், அதன் பின்னாலேயே சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் கதையும் இங்கே தரப்பட்டுள்ளது.

'ஐ' படத்தின் கதையாக வெளிவந்தது இதுதான்...

'விக்ரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் எமி ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.

இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திரத் தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய முயற்சிக்கிறார். அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை என வில்லன் யோசித்துக் கொண்டிருக்கையில், உபேனை சந்திக்கின்றார் விக்ரம். அவரது உடம்பிலும் அந்த மருந்து ஏற்றப்படுகிறது.

ஐ படத்தின் கதை? அதற்குள் ஒரு சர்ச்சை!

ஆனால், அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார் விக்ரம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார் விக்ரம். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாற, இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூர விலங்குகளாக மோதுகின்றனர்.

பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது தான் படத்தின் முடிவு'.

சாய்ந்தாடு சாய்ந்தாடு கதை:

ஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய 'கிளினிக்கல் டிரையல்' என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். 'ஓ' நெகட்டிவ், 'பி' நெகட்டிவ் மற்றும் 'ஏபி' நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். 'ஏ' நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் கதாநாயகனுக்கு இருக்கிறது.

டாக்டர் 'ஏ' நெகட்டிவ் குரூப் உள்ள வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு தற்செயலான பிரச்சனையில் ஹீரோ அடிபட்டு, அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிறான். டாக்டரும் அவனுக்கு அந்த புதிய மருந்தைச் செலுத்துகிறார்.

ஐ படத்தின் கதை? அதற்குள் ஒரு சர்ச்சை!

அவன், மருந்தின் விளைவாக பலசாலியாகிறான். சாதாரணமானவனாக இருந்தவன் பலசாலியாகி நிறைய விசயங்களைச் செய்கிறான். பின்பு, அவனுக்கும் மருந்தின் பக்க விளைவு காரணமாக முகம், உடலெல்லாம் கொப்புளம் வருகிறது. ஒரு கட்டத்தில் சீரியசாகி கோமா நிலைக்குச் செல்கிறான்.

இறுதியில், டாக்டர் என்ன ஆனார், ஹீரோ என்ன ஆனான், டாக்டரைப் பழி வாங்கினானா? என்பதுதான் படத்தின் முடிவு. மருத்துவ ஆராய்ச்சி, அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்பவைதான் கதையின் மையக் கரு.

என்ன சொல்கிறார் இயக்குநர் கஸாலி?

‘இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர். அவர் இதுவரை அந்தப் படத்தின் கதையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. எனவே, அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஏதுமில்லை!'