சுனேனாவுக்கு பாவாடை, தாவணியால் வந்த பிரச்சனை


சும்மா, சும்மா பாவாடை, தாவணியில் வரும் கிராமத்துப் பெண்ணாக நடிக்கவே அழைத்தார்கள் அதனால் தான் வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டேன் என்று நடிகை சுனேனா தெரிவித்தார்.

வம்சம் படத்தில் கருணாநிதி குடும்பத்து வாரிசான அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சுனேனாவை அதற்குப் பிறகு ஆளையே காணோம். அவரைத் தேடிக் கண்டுபிடித்து காரணம் கேட்டதற்கு எல்லாம் பாவாடை, தாவணியால் வந்த இடைவெளி என்றார். என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,

வம்சம் படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக வந்தேன். அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த 4,5 படங்களில் பாவாடை தாவணி அணியும் கிராமத்துப் பெண் கதாபாத்திரமாகத் தான் இருந்தது.

இது என்னடா ஒரே பாவாடை, தாவணியாக இருக்கிறது என்ற பயமே வந்துவிட்டது. அதனால் தான் மாறுதல் வேண்டி வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டேன். அதனால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சமரன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறேன். அதில் த்ரிஷாவும் உள்ளார்.

மேலும் ராசு மதுரவனின் படத்திலும் நடிக்கிறேன். இந்த 2 படங்களிலுமே எனக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் இல்லை என்பது சந்தோஷமான விஷயம். மாடர்ன் பெண்ணாக வருகிறேன். சமரன் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.

நான் நடித்துள்ள ‘திருத்தணி’, ‘கதிர்வேல்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன என்றார்.
 

பாட சான்ஸ் குடுப்பீங்களா? சரண்யா மோகன்


நடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு பாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூதுவிட்டு வருகின்றனர்.

இத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் 'நான்'. அதில் அவருக்கு ஜோடியாக 'திரு திரு துரு துரு' புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூலம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டுள்ளனர்.

புதிதாக பாடக் கற்றுக் கொண்டவுடன் தங்களது குரல் வளத்தை சோதிக்க முடிவு செய்துள்ளனர். நமக்குத் தான் பாடத் தெரியுமே, படத்தில் பாட்டு பாடினால் என்ன என்று மூவருக்கும் ஆசை வந்துள்ளது.

இதையடுத்து அம்மணிகள் பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூதுவிட்டு வருகின்றனர்.

இவர்களை பாடகியாக்கப்போவது யாரு?
 

பக்திமானாக மாறிய கவர்ச்சி மான் ஹன்சிகா!


கவர்ச்சிகரமாக தோற்றம் தரும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு ஆன்மீகத்தில்தான் அதிக நாட்டமாம்.

இன்றைய தேதிக்கு தமிழ் ரசிகரகள் மனதில் நாற்காலி போட்டு கனவுகன்னியாக அமர்ந்திருப்பவர் கொளுக், மொளுக் பொம்மை மாதிரி இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தான். ஹன்சிகா நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க, குஷ்பூ மாதிரி இருக்கீங்கன்னு ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுகிறார்களாம். அடடா தமிழ் ரசிகர்களுக்கு என் மேல் எவ்வளவு பாசம் என்று பூரித்துப் போயுள்ளார் ஹன்சிகா.

அவர் ஒரு பக்திமான் என்பது உங்களுக்குத் தெரியுமா? காரில் செல்லும்போது வழியில் கோவில் வந்தால் உடனே கை கூப்பி, கண் மூடி, சாமி கும்பிடுவார். பிறகு சாமிக்கு ஒரு பறக்கும் முத்தமும் கொடுப்பார். ஹன்சிகா பக்திமான் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள பொண்ணும் கூட. ஒரு முறை ஷூட்டிங் போகிற வழியில் யாரோ அடிபட்டுக் கிடக்க நமக்கென்ன என்று போகாமல் அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவரது வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளார்.

தத்தி, தத்தி நடித்தாலும், பொண்ணு பக்தியில் படு சிரத்தையாதன் இருக்கு!.
 

கெஸ்ட் ரோலில் நடித்ததற்காக ரஜினிக்கு ஷாருக் தரும் பிஎம்டபிள்யூ


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவி கௌரி கான் மற்றும் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து ரா ஒன் படத்தை ரூ. 175 கோடியில் தயாரித்து நடித்தார்.

ஷாருக், கரீனா கபூர் நடித்த இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. கடந்த 4ம் தேதி வரை ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். இதனால் இந்தி படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பில்லாத தமிழகத்திலும் ரா ஒன் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் உடல் நிலை குணமாகி நடித்த முதல் படம் ரா ஒன் என்பதால் ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அமோக வரேவேற்பு இருக்கிறது. தான் கேட்டதற்கு இணங்க கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதே போன்று ரா ஒன் படத்தில் நடித்த இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பல் மற்றும் இயக்குனர் அனுபவ் சின்ஹாவுக்கும் அவர் பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதற்காக அவர் மும்பையைச் சேர்ந்த டீலரிடம் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார். இந்த கார் ரூ. 84 லட்சத்து 17 ஆயிரம் முதல் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிரசவத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஏக்கம்: அங்குமிங்கும் ஓடும் அபிஷேக்


நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவத்திற்கு முன்பு சில உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதற்காக அவர் மும்பையில் உள்ள செவன் ஹிலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற கர்ப்பிணிகளைப் போன்று சில உணவுப் பண்டங்கள் மீது ஆசை வந்துள்ளது.

புளி அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அழைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார்.

என்றைக்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்கள் அவர் பின்னால் தான் செல்கின்றன. குழந்தை பிறப்பது பற்றி ஐஸ் டென்ஷனா இருக்காரோ இல்லையோ மீடியாக்கள் படு டென்ஷனாக உள்ளன.
 

பாப் பாடகி காகா ஆணா, பெண்ணா?


பிரபல பாப் பாடகி லேடி காகா செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா. அவர் அண்மையில் இந்தியாவுக்கும் கூட வந்திருந்தார். டெல்லி அருகே நடந்த பார்முலா 1 கார்ப் பந்தயம் முடிந்தவுடன் நடந்த பார்ட்டியில் அவர் கலந்து கொண்டு ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

காகாவின் லேட்டஸ்ட் ஆல்பம் மேரி தி நைட். அதன் வெளியீட்டின்போது அவர் தான் சில வித்தியாசமான போஸ்களில் இருப்பதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டார். அதில் ஒன்றில் அவர் ஸ்ரெட்ச்சரில் படுத்திருப்பது போன்று இருந்தது.

இதையடுத்து காகா செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்ற வதந்தி கிளம்பியுள்ளது. அதற்கேற்ப அவர் தனது ரசிகர்களிடம் இதுவரை தெரிவிக்காத ஒரு விஷயத்தை தெரிவிக்கப்போவதாகவும். அது அருவறுக்கத்தக்கதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு அவர் செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை செய்கு கொண்டிருப்பாரோ என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் அவர் வித்தியாசமான விக்குகள், உடைகள், மேக்கப்பில் தோன்றுவதால் இந்த வதந்தி உண்மையாக இருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.