திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷாலு மேனனுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்துள்ளது திருவனந்தபுரம் நீதிமன்றம்.
சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக நிறுவன உரிமையாளர் பிஜு ராதாகிருஷ் ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர், கேரள முதல்வர் உம்மன்சாண் டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன் மற்றும் பிரபல நடிகை ஷாலு மேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள் ளனர்.
இவர்களை கேரள குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் முடிந்ததை தொடர்ந்து மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடிகை ஷாலுமேனன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. எனவே அவர், மீண்டும் ஜாமீன் கேட்டு நேற்று புதிய மனு தாக்கல் செய்தார்.
அதில், கேரளாவில் பல்வேறு நாட்டிய பள்ளிகளை நடத்தி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறேன். சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை அதிகாரி எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கத் தயாராக உள்ளஏன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் கடும் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
மாஜிஸ்திரேட்டு இதனை ஏற்றுக்கொண்டு நடிகை ஷாலுமேனனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.