7 வருடக் காதலியை கைப்பிடித்தார் 'பிளாக்' பாண்டி

சென்னை: காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கும், அவரது காதலி உமேஸ்வரி பத்மினிக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தேறியது.

அங்காடித் தெரு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாண்டி. டிவி மூலமாக சினிமாவுக்கு வந்த பாண்டி, தற்போது சினிமாவில் வளரும் நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார்.

7 வருடக் காதலியை கைப்பிடித்தார் 'பிளாக்' பாண்டி

அவரும் எம்.பி.ஏ பட்டதாரியான உமேஸ்வரி பத்மினியும் காதலித்து வந்னர். இந்தக் காதல் இன்று திருமணத்தில் முடிந்தது. இருவரும் 7 வருடமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

7 வருடக் காதலியை கைப்பிடித்தார் 'பிளாக்' பாண்டி

இரு வீட்டார் சம்மதத்துடன், இன்று சென்னை ஐஸ்வர்யா மஹாலில் நடந்த திருமணத்தில் பெரும் திரளானோர், டிவி உலகினர், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா

சென்னை: 2003ல் தீபாவளிக்கு வெளியான அஜீத், விஜய் படங்களில் துணை ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சில்வா தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகும் வீரம், ஜில்லா ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

கோலிவுட்டின் பிசியான ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளவர் சில்வா. அவர் பணியாற்றியுள்ள பிரியாணி இந்த மாதமும், வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் அடுத்த மாதமும் ரிலீஸ் ஆகின்றன.

2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா

இந்நிலையில் இது குறித்து சில்வா கூறுகையில்,

10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கடந்த 2003ம் ஆண்டு அஜீத்தின் ஆஞ்சநேயா மற்றும் விஜய்யின் திருமலை ஆகிய படங்கள் ஒரே நாளில் தீபாவளி அன்று ரிலீஸாகின. இந்த இரண்டு படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடம் துணை மாஸ்டராக பணிபுரிந்தேன். தற்போது 10 ஆண்டுகள் கழித்து நான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் பெங்கல் அன்று ரிலீஸ் ஆகின்றன. இந்த இரண்டு படங்களுக்கும் நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

2003ல் தல-தளபதி தீபாவளி, 2014ல் தல-தளபதி பொங்கல்: நெகிழும் சில்வா
 

'வெல்டன் சிவா': 'வீரம்' இயக்குனரை பாராட்டிய தயாரிப்பாளர்கள்

சென்னை: வீரம் படத்தை குறித்த நேரத்திற்குள் முடித்ததற்காக இயக்குனர் சிவாவை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.

சிறுத்தை சிவா அஜீத் குமார், தமன்னா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் வீரம். படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர்போன தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து பிற வேலைகள் நடந்து வருகிறது. படத்தை இழுத்தடித்து பட்ஜெட்டை எகிற வைக்காமல் குறித்த நேரத்தில், குறித்த பட்ஜெட்டில் சிவா முடித்துவிட்டார்.

'வெல்டன் சிவா': 'வீரம்' இயக்குனரை பாராட்டிய தயாரிப்பாளர்கள்

திறமையாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள சிவா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தயாரிப்பாளர்கள் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர்களான பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி கூறுகையில்,

அஜீத்தின் தொழில் பக்தி மற்றும் நேர்மையை பார்த்து மற்றவர்களும் அதை பின்பற்றுவதே இந்த திட்டமிட்ட பயணத்திற்கு காரணம். படம் பொங்கலுக்கு நிச்சயம் ரிலீஸாகும் என்றனர்.

 

சுயசரிதை எழுத எனக்கு தகுதி இல்லை: அமிதாப் பச்சன்

மும்பை: சுயசரிதை எழுதும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

பல பிரபலங்கள் சுயசரிதை எழுதுகிறார்கள். நீங்கள் எப்பொழுது எழுதுவீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது.

சுயசரிதை எழுத எனக்கு தகுதி இல்லை: அமிதாப் பச்சன்

அதற்கு அவர் கூறுகையில்,

சுயசரிதை எழுதும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. கடந்த 7 நிமிடங்கள் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. இந்நிலையில் கடந்த 70 ஆண்டுகளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்து எழுதுவது மிகப் பெரிய வேலை என்றார்.

 

மரத்தில் கார் மோதி விபத்து: ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ நடிகர் பால்வாக்கர் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: நேற்று நடந்த கார் விபத்தில் சிக்கி ஹாலிவுட் நடிகரான பால்வாக்கர் மரணமடைந்தார்.

ஹாலிவுட் நடிகரான 40 வயது பால்வாக்கர், நேற்று மதியம் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கடந்து கொண்டு தன் நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார், லாஸ் ஏஞ்சல்ஸ் சாண்டா கிளாரிட சிக்னல் அருகே ஒரு மரத்தின் மீது அந்த கார் மோதியது.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இதனால் அவர்கள் வந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பால்வாக்கரும், அவருடன் காரில் பயணம் செய்த நண்பரும் பரிதாபமாகப் பலியானார்கள்.

மரத்தில் கார் மோதி விபத்து: ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ நடிகர் பால்வாக்கர் மரணம்

பால்வாக்கர் தற்போது ‘ ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' என்ற திரைப்படத்தில் நடிந்துக்கொண்டிருந்தார். இது இவரது ஏழாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பால்வாக்கர் நடித்துள்ள ‘ஹவர்ஸ்' எனற திகில் நாடகம் இம்மாதம் வெளியாக உள்ளது.

பால்வாக்கரின் மரணச் செய்தி அறிந்த அவரது நண்பர்களும், ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.