மும்பை: ஸ்ருதி ஹாஸன் தான் விரைவில் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
ஏழாம் அறிவு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கமல் ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன். இதையடுத்து தனுஷுடன் சேர்ந்து 3 படத்தில் நடித்தார். அதன் பிறகு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.
தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த 2 மொழிப் படங்களிலும் பிசியாக இருப்பதால் அப்பா கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்தார்.
மும்பைக்கு சென்ற ஸ்ருதி மீண்டும் தமிழ் படங்களில் எப்பொழுது நடிப்பார் என்று அவ்வப்போது கேட்கப்படுகிறது. இந்நிலையில் தான் விரைவில் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.