தமன்னா, ஹன்சிகாவை வம்பிழுத்துக்கிட்டே இருப்பேன்: சந்தானம்

Santhanam Likes Tamanna Hansika

தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்ற ஜாலியாக இருக்கும் என்று நகைச்சுவை நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் பிசியான காமெடியன் என்றால் அது சந்தானம் தான். கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் சந்தானம் தனது திரையலகப் பயணம் பற்றி கூறுகையில்,

என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமாவில் இருந்து சென்றுவிட்டதால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச்சி இன்னொருவரின் வளர்ச்சிக்கு காரணமாகாது. ஒரு நாள் நான் தோல்வி அடைந்தால் ஓகே மக்களுக்கு என் காமெடியை பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

காமெடியன் என்பதால் ஜோடி சேரும் ஆசையெல்லாம் இல்லை. ஆனால் தமன்னா, ஹன்சிகா கூட பணியாற்றுவது ஜாலியாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அவர்களை கிண்டலடித்துக் கொண்டே இருப்பேன். அவர் என்னை திட்டித் தீர்ப்பதை ரசிப்பேன் என்றார்.

அது சரி, அழகான ராட்சஷிகள் திட்டினால் யார் தான் ரசிக்க மாட்டார்கள்...

 

துபாய் சி.சி.எல் விழாவில் நடனமாட ரூ. 25 லட்சம் பெறும் நடிகை!

துபாயில் நடைபெறவிருக்கும் சிமா விருது வழங்கும் விழாவில் ஆட நடிகை ஒருவர் ரூ. 25 லட்சம் வாங்குகிறாராம்.

சிசிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், சிமா (South Indian International Movie Awards) விருது வழங்கும் விழாவும் துபாயில் ஜூன் 21 மற்றும் 22 ம் தேதி இரண்டு நாள் நடைபெற உள்ளன.

இதில் சிமா விருது வழங்கும் விழா வரும் 21 ம் தேதி நடைபெறுகிறது. அதில் தென்னிந்திய நடிகர், நடிகையர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இதில் அமலாபால், ஸ்ருதிஹாசன், சமீரா ரெட்டி, ஹன்சிகா போன்ற நடிகைகள் பங்கேற்க உள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையின் ஒரு பகுதியை 100 குழந்தைகளின் படிப்பு செலவிற்கு ஸ்காலர்ஷிப் தர உள்ளனராம்.

துபாய் விருது விழாவில் நடனமாட ஒரு நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் பேசியிருக்கின்றனராம். அம்மணிக்கு இப்போது படங்களை விட கலைநிகழ்ச்சிகள்தான் கை கொடுக்கின்றன என்கின்றன சினிமா வட்டாரங்கள். சி.சி.எல் அவார்டு நிகழ்ச்சிகளில் நடனமாடும் நடிகைகளிலேயே அந்த நடிகைக்குதான் அதிக சம்பளம் என்பதால் புகைச்சலில் இருக்கின்றனர் பிற நடிகைகள்.

ஓடுற குதிரை வாலில்தானே பணத்தை கட்டுவாங்க என்பது சினிமாக்காரங்களுக்கு தெரியாதா என்ன?

 

ஸ்டார் ஹோட்டலில் ரூம் பிடிக்காததால் லக்ஷ்மிராய் ரகளை

Lakshmi Rai Creates Ruckus A Hotel   

லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரூம் பிடிக்காததால் நடிகை லக்ஷ்மி ராய் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை லக்ஷ்மி ராய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தாண்டவம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தில் எடுக்கப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் லண்டனில் தங்கி காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்ற லக்ஷ்மி ராய்க்கு அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த ரூம் அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் அதில் தங்க மாட்டேன் என்று ரகளை செய்ததுடன் ஷூட்டிங்கிற்கும் வர மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் லக்ஷ்மி ராய்க்காக மணிக்கணக்கில் காத்திருந்தார்களாம். லக்ஷ்மி ராய் ரூமுக்காக செய்த ரகளை இய்ககுனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் லக்ஷ்மி ராய்க்கு வேறு வசதியான ரூம் கொடுக்குமாறு சொன்னாராம். புது ரூம் கிடைத்த பிறகே அவர் கோபம் அடங்கி ஷூட்டிங் சென்றாராம்.

விஜயுடன் நடிக்க ஆசையாக இருக்கு என்று லக்ஷ்மி ராய் கூறியவுடன் கவலைப்படாதீர்கள் நான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் உங்களை நடிகக் வைக்கிறேன் என்று இயக்குனர் விஜய் தெரிவித்திருந்தார். இந்த ரகளைக்கு பிறகும் அந்த வாய்ப்பை கொடுப்பாரா?

 

தனுஷ் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமான ரஹ்மான்!

Rahman Compose Dhanush Films

ஏ ஆர் ரஹ்மான் தமிழில் கலக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனுஷ் நாயகனாக அறிமுகமானார். அவரது முதல் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.

அதன் பிறகு 23 படங்கள் நடித்துவிட்டார். ஆனால் எந்தப் படத்துக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவில்லை.

அந்தக் குறை இப்போது தீர்ந்துவிட்டது. தனுஷின் ஒரு படம் அல்ல, இரு படங்களுக்கு இசையமைப்பாளராக ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியில் தனுஷ் நடிக்கும் ரஞ்சானா மற்றும் தமிழில் பரத்பாலா இயக்கத்தில் உருவாகும் மரியான் ஆகிய படங்கள்தான் அவை.

இந்தப் படங்களின் கதையை முழுவதுமாக படித்துப் பார்த்து திருப்தியான பிறகுதான் இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.

கடந்த ஆண்டு தமிழில் ஒரு படம் கூட ரஹ்மான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு வரிசையாக நிறைய தமிழ்ப் படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்!

 

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... கிருஷ்ணவேணி பஞ்சாலை!

Friday New Releases   

இன்று வெள்ளிக்கிழமை... வழக்கம்போல இன்றும் சிறு முதலீட்டுப் படங்கள் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெளியாகியுள்ளன.

இன்று வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களில் ஓரளவு எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என்றால் அது கிருஷ்ணவேணி பஞ்சாலைதான்.

பஞ்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு காதல் கதை. மற்ற இரு படங்கள் தூதுவன் மற்றும் 'பொற்கொடி பத்தாம் வகுப்பு'.

இவற்றைத் தவிர, அப்பு பப்பு மற்றும் டைகர் விஸ்வா என இரு மொழிமாற்றுப் படங்களும் வெளியாகின்றன.

ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ள பிரமாண்ட ஹாலிவுட் படம் Prometheus தமிழகத்தில் மட்டும் 100 அரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த முப்பரிமான விஞ்ஞான படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் ஆச்சரியப்படுத்துகிறது. இன்னொரு படம் மடகாஸ்கர் 3.

ஷாங்காய் என்ற இந்திப் படமும் இன்றுதான் வெளியாகியுள்ளது.

 

எஸ்ஏ சந்திரசேகரன் படத்திலிருந்து ரீமா சென், கார்த்திகாவும் விலகல்!!

Reema Sen Karthi Quit Sac Movie

எஸ் ஏ சந்திரசேகரன் தன் உதவியாளரை வைத்து இயக்க, அவர் மகன் நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படம், இப்போதைக்கு இருட்டைவிட்டு வெளியே வருவதாகத் தெரியவில்லை.

இந்தப் படத்தின் நாயகனாக பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது விக்ரம் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள, புதுமுகம் ஒருவரை ஹீரோவாக்க எஸ் ஏ சந்திரசேகரன் முடிவு செய்துள்ளாராம்.

இந்த நிலையில் படத்தின் ஹீரோயின் கார்த்திகா, இந்த ஆட்டத்துக்கு நான் வரலே என்று ஒதுங்கிக் கொண்டுள்ளாராம். விக்ரம் ஹீரோ இல்லாத நிலையில் புதுமுகத்துடன் நடிக்க முடியாது என்று அவர் பிடிவாதமாக உள்ளாராம்.

அடுத்து படத்தில் குத்தாட்டம் போட ஒப்புக் கொண்ட ரீமா சென்னும் இப்போது இந்தப் படம் வேண்டாம். என் டேட்ஸை கேன்சல் பண்றேன்ஜி என்று பக்குவமாகக் கழன்று கொள்ளப் பார்க்கிறாராம்!

காரணம்... அதே தான். விக்ரம் பிரபு ஹீரோவாக இருந்தால் அவரோடு குத்தாட்டம் போட ரெடி. வேறு புதுமுகம் என்றால் வேண்டாம் என்பதுதான் ரீமாவின் பதிலும்!

இவங்கள்லாம் பிறக்கும்போதே நடிகையாகவே இருந்தார்களோ... வாய்ப்புக்காக ஒவ்வொரு இயக்குநர் வீட்டுக் கதவையும் தட்டிய ஒரு காலத்துப் புதுமுகங்கள்தான் நாமும் என்பதை மறந்துவிட்டார்களோ!

 

விஸ்வரூபம் கதை என்ன...? - கமல் பதில்

Kamal Reveals Vishwaroopam Story    | விஸ்வரூபம் வால்பேப்பர்   | விஸ்வரூபம் ட்ரெய்லர்  

விஸ்வரூபம் என்ன மாதிரி கதை... அந்தப் படம் உருவான பின்னணி குறித்து கமல்ஹாஸன் விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.

அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இன்று சிங்கப்பூர் ஐபா விழாவில் வெளியிட்டார் கமல்.

பின்னர் இந்தப் படத்தின் கதை குறித்து கமல்ஹாஸன் கூறுகையில், "விஸ்வரூபம் என் மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்.

கதை இதுதான்: அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.

ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது...

இதுதான் கதையின் மையக் கரு. இதில் யாரும் எதிர்ப்பார்க்காத சில காட்சிகள் உண்டு. முழுசாக சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடுமே. அதான்.. மீதி வெள்ளித்திரையில்," என்றார்.

விஸ்வரூபம் ட்ரெய்லர்

விஸ்வரூபம் படங்கள்

விஸ்வரூபம் வால்பேப்பர்

 

மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து வெளியேறினார் சமந்தா!! - ஏன்? என்னாச்சு? எப்படி?

Samantha Walks Of Kadal   

கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!

ஏன்? என்னாச்சு? எப்படி?

என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.

எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.

சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.

ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...

இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.

 

நடிகை திரிஷாவின் 1 கோடி ரூபாய் ஸ்வாஹா?

Trisha S Rs 1 Cr Money Looted Bank Staff   

சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்திருந்த திரிஷாவின் பணத்தை வங்கி ஊழியரே நூதன முறையில் ஆட்டையை போட்டு விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் வங்கியில் கணக்கு தொடங்கிய திரிஷா சில கோடி ரூபாய்களை அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்தாராம். கடந்த வாரத்தில் வங்கி கணக்கை சரி பார்த்த ஊழியருக்கு ஒரு கோடி ரூபாய் குறைந்தது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டாராம். உடனே வங்கி அதிகாரிகளிடம் புகார் செய்த உடனே போலீசுக்கு போக வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கெஞ்சியுள்ளனர். இதனால் த்ரிஷாவும் புகார் கொடுக்காமால் விட்டு விட்டாராம்.

வங்கி அதிகாரிகள் விசாரித்ததில் அதே வங்கியில் கலெக்சன் சென்டரில் உள்ள ஒருவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்தனர். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அவர்களது கணக்கில் வரவு வைக்கும் ஊழியர், த்ரிஷாவின் கணக்கு விபரங்களை கம்யூட்டரில் இருந்து டவுன்லோடு செய்துள்ளார். பின்னர் அதைப் பயன்படுத்தி ஒரு கோடியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்திருக்கிறாராம்.

திரிஷாவின் வங்கி கணக்கிற்கு பணம் போய் சேர்ந்ததா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லையாம்.

 

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளை

Robbery Hero Balakrishna House

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஜுபிளி ஹில்ஸ் வீட்டில் இருந்து தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடு ஹைராபாத்தில் உள்ள ஜுபிளி ஹி்ல்ஸில் உள்ளது. கடந்த 24ம் தேதி அவருடைய மனைவி வசுந்தரா மகன் மற்றும் மகளுடன் விடுமுறையைக் கழிக்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டார். பாலகிருஷ்ணா வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மராமத்து பணிகள் வேறு நடந்து வந்தது. அதை வசுந்தராவின் சகோதரியின் கணவர் பிரசாத் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

வசுந்தரா பிரசாத்துக்கு போன் செய்து வீட்டில் உள்ள பொருட்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். பிரசாத் வீட்டுக்கு சென்றபோது படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க ஒட்டியாணம், வைரத் தோடு, வைர நெக்லஸ், வைர பிரேஸ்லட், ரூபி நெக்லஸ், ஒமேகா வாட்ச் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஜுபிளி ஹில்ஸ் போலீசில் பிரசாத் புகார் செய்தார். திருட்டு குறித்து போலீசார் விசாரி்தது வருகிறார்கள்.

 

ஒரே குகையில் சந்தித்த இரண்டு கவர்ச்சி சிங்கங்கள்!

Namitha Sona Shed Their Enmty

கொஞ்ச நாளைக்கு முன்பு வரை முட்டி மோதிக் கொண்டிருந்த நமீதாவும், சோனாவும் தங்களது கவர்ச்சிக் கரங்களால் நேருக்கு நேர் பாசத்துடன் குலுக்கிக் கொண்ட காட்சி கோலிவுட் சாம்ராஜ்யத்தில் சந்தோஷ அலைகளை எழுப்பியுள்ளதாம்.

கவர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் நமீதாவும், சோனாவும். இருவரும் சேம் போட்டில் பயணம் செய்தாலும் கூட சோனாவை விட நமீதாவுக்கே ரசிகர்கள் ஜாஸ்தி. யார் படத்திற்கு அதிக குஸ்தி நடக்கும் என்று பந்தயம் வைத்தால் அதில் வெல்பவர் நமீதாவாகத்தான் இருப்பார். அப்படி ஒரு கட்டுக்கடங்கா ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் நமீதா.

நமீதாவுக்கு இணையாக சோனாவும் ஷோக்காக இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி நிழலுக்கு பக்கத்தில் கூட வர முடியாமல் போய் ஜகா வாங்க நேரிட்டது.

இடையில் இருவருக்கும் மோதல் முற்றிக் கொண்டு, பகைமை பற்றிக் கொண்டது. நமீதாவைப் பார்த்து திமிர் பிடித்தவர் என சோனா உறும, சோனான்னா இன்னா என்று நமீதா பதிலுக்கு வார பகைமை முற்றியது.

ஆனால் சமீபத்தில் சோனா தனது பிறந்த நாளையொட்டி கொடுத்த பாட்டில் பிளஸ் ஆட்டம் பாட்ட பார்ட்டியில் நமீதா விசிட் அடித்து அனைவரையும் விசிலடிக்க வைத்தார்.

திரையுலகின் இளவட்ட நடிகர் நடிகையர் உள்பட பலரும் திரண்டு வந்து சோனாவை வாழ்த்தியெடுத்து விட்டனர். இந்த விழாவில்தான் நமீதாவும் நாலு வார்த்தை பாராட்டி வெழாவை சிறப்பித்து விட்டுப் போனார்.

மொத்தத்தில் இதுவரை எதிரும் புதிருமாக முறுக்கிக் கொண்டிருந்த இந்த இரண்டு கவர்ச்சி சிங்கங்களும் ஒரே குகையில் சந்தித்து தங்களது பகையைத் தணித்துக் கொண்டு விட்டன.

சரி, ரெண்டு பேரும் சேர்ந்து தங்களது முழுத் திறமையைக் காட்டி ஒரு படத்தில் நடிப்பார்களா என்று கும்பக்கரையிலிருந்து ஒரு ரசிகர் ஏக்கத்துடன் கேட்கிறார்..

 

நோயாளிகளை ஏமாற்றி காசு பறிக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்பதா?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நோயாளிகளை ஏமாற்றி காசு பறிக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆமிர்கான் கூறினார். இந்தி டிவி சேனல் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான் 'ரியாலிட்டி ஷோ' நடத்துகிறார். அதில், 'சாதாரண நோய்க்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் சில டாக்டர்கள் பயமுறுத்தி அறுவை சிகிச்சை வரை இழுத்து சென்று விடுகின்றனர். அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்' என்று கருத்து தெரிவித்தார். இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ஆமிர்கானை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள ஆமிர்கான், ''நான் மருத்துவ துறையை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை. மருத்துவ துறையை பெரிதும் மதிக்கிறேன். டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் ஷமித் ஷர்மா உள்ளிட்ட பல டாக்டர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறேன். சிறிய அளவிலான சில டாக்டர்கள் நியாய தர்மங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். எனது கருத்தை மருத்துவ துறையை சேர்ந்த பிரபல டாக்டர்களும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் பாராட்டி இருக்கிறார்கள். முறைகேடாக நடக்கும் டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது'' என்றார்.


 

பிரபு மகன் விலகியதால் கார்த்திகா-ரீமா வெளியேற முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலிருந்து பிரபு மகன் விலகியதால் ஜோடியாக நடிக்கவிருந்த கார்த்திகா-ரீமாவும் விலக முடிவு செய்துள்ளனர். 1980களில் வெளியான படம் 'சட்டம் ஒரு இருட்டறை'. எஸ்.ஏ.சந்திர சேகரன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தை தற்போது ரீமேக் செய்து தயாரிக்கிறார் நடிகர் விஜய். விஜயகாந்த் ஏற்று நடித்த வேடத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவருக்கு ஜோடியாக கார்த்திகா மற்றும் முக்கிய வேடத்தில் ரீமா சென் நடிக்கவிருந்தனர்.

விக்ரம் நடித்த சில காட்சிகளும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது. ஹீரோ விக்ரம் பிரபு திடீரென்று படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய ஹீரோவை நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திர சேகரன் முடிவு செய்துள்ளார். இந்த திடீர் மாற்றத்தால் கார்த்திகா, ரீமா அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ளும் கார்த்திகா முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போடுகிறார். இந்நிலையில் புதிய ஹீரோவுடன் நடிக்க தயக்கம் காட்டுகிறார். இதையடுத்து படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதேபோல் ரீமா சென்னும் விலகுவார் என்று தெரிகிறது.


 

சத்யம் தொலைக்காட்சியில் ‘வரலாற்றின் மறுபக்கம்’

Varalatrin Marupakkam Tv Program

நேற்றைய சம்பவங்கள்தான் இன்றைய வரலாறாக பேசப்படுகின்றன. உலக உலுக்கிய சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் பல்வேறு தகவல்களை உலகறியச் செய்கிறது சத்யம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வரலாற்றின் மறுபக்கம் நிகழ்ச்சி.

உலகத்தை மாற்றியமைத்த பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளையும், உலக அளவில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும், இந்த உலகத்தின் போக்கை மாற்றியமைத்த தனிமனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் ஆதியோடந்தமாக வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, `வரலாற்றின் மறுபக்கம்.'

பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் பின்னணியில் நடந்த நிகழ்வுகள் போன்றவையும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.

பி.பி.சி. உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணியில் இருந்து 10.30 மணிவரை ஒளிபரப்பாகிறது.

 

சித்தியிடம் சினிமா கற்ற 'செம்பட்டை' கவுரி நம்பியார்!

Actress Karthika S Sister Gowri Debuts In Sembattai

தமிழ் பட உலகிற்கு மலையாள தேசத்தில் இருந்து கவுரி நம்பியார் என்ற புதுநடிகை அறிமுகமாகியுள்ளார். செம்பட்டை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள கவுரி நம்பியார் வேறு யாருமல்ல ‘கோ' பட நாயகி நடிகை கார்த்திகாவின் பெரியப்பா மகள் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

கோலிவுட்டிற்கு புதுவரவான நடிகை கவுரியிடம் பேசியதில் "சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, "அலைகள் ஓய்வதில்லை ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் கவுரி.

"இந்த, "செம்பட்டை படத்தில் உப்பு விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், காதல், சென்டிமென்ட் இரண்டும் கலந்த கதாபாத்திரம் என்பதால், கதையோடு கலந்து நடித்துள்ளேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும் போது, எனது நடிப்பு பேசப்படும் என்றார்.

"எனது சித்தி ராதா சொன்னது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மதித்து நல்ல நடிகை என்ற பெயருடன் சினிமாவில் நீடித்திருப்பேன் என்று சித்தி புராணம் பாடுகிறார் கவுரி நம்பியார். இந்த படத்தின் ஹீரோ திலீபன், விமல், விதார்த் ஆகியோருடன் இணைந்து கூத்துப்பட்டறையில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவராம். செம்பட்டை இயக்குநர் ஐ.கணேஷ், பாசில், சித்திக் போன்ற இயக்குனர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவராம்.

 

'ஹோமோ'வுக்கு 'ஓ' போடும் வீணா மாலிக்!

ஓரிணச்சேர்க்கைக்கு பாலிவுட் நடிகை வீணா மாலிக் ஆதரவு தெரிவி்த்துள்ளார்.

வீணா மாலிக் பெயரைச் சொன்னதும் அவர் நடித்த படங்களை விட அவர் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் தான் மக்களுக்கு நினைவுக்கு வரும். அப்படி சர்ச்சைக்கு பெயர் போனவராக உள்ளார்.

veena malik support homosexuality   
Close
 

இந்நிலையில் ஓரிணச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவளித்துள்ளார். ஏற்கனவே ஓரிணச்சேர்க்கைக்கு பாலிவுட் நடிகை செலினா ஜேட்லி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வீணா கூறுகையில்,

ஓரிணச்சேர்க்கையில் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் திருமணத்தை வெளிப்படையாகவே ஆதரிக்கிறேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், ஹாலிவுட் நட்சத்திரங்களும் ஓரிணச்சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கும்போது ஒவ்வொரு நாட்டு குடுமகனும் இதை ஏன் ஆதரிக்கக் கூடாது.

தனக்கு பிடித்தவாறு வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

ஓரிணச்சேர்க்கை பற்றி பேசுவதே பாவம் என்றிருந்த நிலை மாறி தற்போது அதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by: Siva
 

இந்தியாவின் இணையற்ற தலைவர் அண்ணல் அம்பேத்கர் - முதல் பத்து பட்டியலில் ரஜினி!

Dr Ambetkar Leads Who Greatest Indian After Gandhi

காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் யார் என்ற கருத்துக் கணிப்பில், பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர் 7 லட்சம் வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

முதல் பத்து மிகச் சிறந்த இந்தியர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 8வது இடம் கிடத்துள்ளது.

ஹிஸ்டரி, சிஎன்என்-ஐபிஎன் சேனல்கள் இணைந்து ஆன்லைனிலும், நேரடி கள ஆய்வு மூலமும் நடத்தும் இந்த சர்வே நாடு முழுவதும் இப்போது பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

நவீன இந்தியாவில் மகாத்மா என்றழைக்கப்படும் காந்திக்குப் பிறகு, அவருக்கு நிகரான தலைவர் யார் என்ற வாக்கெடுப்பில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், அன்னை தெரசா, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அப்துல்கலாம், ரஜினிகாந்த் உள்பட 50 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஆன்லைனில் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறையிலும், அடுத்தது நேரடி கள ஆய்வு மூலமும் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
Dr Ambetkar leads in 'Who is the greatest Indian after Gandhi'poll!
ஒருவர் 10 தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்ந்தெடுக்கலாம். ஒரு முறைக்கு மேல் வாக்களிக்க முடியாது.

ஆன்லைன் வாக்கெடுப்பில் இதுவரை 883294 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு மட்டும் 708414 வாக்குகள்!

அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்து கன்ஷிராமுக்கு 29731 பேர் வாக்களித்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாக்கெடுப்பில் அதிகம் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும், அண்ணல் அம்பேத்கரின் முக்கியத்துவம் முன்பை விட இப்போது அதிகம் உணரப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் பத்துப் பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. அடுத்த இடம் ஏ ஆர் ரஹ்மானுக்கு. அமிதாப் 10வது இடத்தில் உள்ளார்.

வாக்களிக்க இன்னும் அவகாசம் இருப்பதால் இந்த பட்டியலில் மாற்றங்கள் வரலாம். ஆனால் முதல் இடத்துக்கு மட்டும் எந்த மாறுதலும் வராது. காரணம் பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் ஒருவர் மட்டுமே லட்சங்களில் வாக்குகளைப் பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு சில ஆயிரங்கள்தான்.

மகாத்மா காந்திக்குப் பிறகு சிறந்த இந்தியர் - முதல் பத்து:

1 டாக்டர் அம்பேத்கர்  723055
2 கன்ஷிராம்                30361
3 வாஜ்பாய்                  16267
4 அப்துல் கலாம்          12662
5 சச்சின் டெண்டுல்கர் 10014
6 அன்னை தெரசா        8110
7 வல்லபாய் படேல்      7624
8 ரஜினிகாந்த்                6897
9 ஏஆர் ரஹ்மான்           5071
10 அமிதாப் பச்சன்         4525

 

அஜீத் கூட நடிச்சது என் அதிர்ஷ்டம்: பார்வதி ஓமனகுட்டன்

Parvathy Omanakuttan Praises Ajith

அஜீத் குமாருடன் பில்லா 2 படத்தில் நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று புதுமுக நடிகை பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்துள்ளார்.

பில்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வரும் மலையாளத்து பெண்குட்டி பார்வதி ஓமனகுட்டன். அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் முதன் முதலாக நடித்துள்ள தமிழ் படமான பில்லா 2 சிறப்பாக வந்துள்ளது. படம் வெயாகும்போது எனது கதாபாத்திரம் பேசப்படும். எனக்கும் கோலிவுட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அஜீத் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். அவர் ஒரு ஜென்டில்மேன்.

பெரிய நடிகராக இருந்தாலும் தோரணையே இல்லாமல் படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும் கலகலப்பாகப் பேசி பழகினார். ஷூட்டிங்கின்போது மிகவும் எளி
மையாக இருந்தார். அவருடைய நடவடிக்கைகள் வியக்கும் வண்ணம் இருந்தது என்றார்.

அஜீத் குமாரிடம் என்ன மாய, மந்திரம் இருக்கிறதோ. அவருடன் பணிபுரிபவர்கள் அனைவரும் அவரின் புகழ்பாடுகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் பார்வதியும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பர்பக்ஷன்' என்றால் என்ன... கமல் கிட்ட கத்துக்கலாம்!

கமல்ஹாசனின் kamal sizzles kathak vishwaroopam    | விஸ்வரூபம் வால்பேப்பர்   | விஸ்வரூபம் ட்ரெய்லர்  

Close
 

ஆன்ட்ரியா ஜெரிமியாவுடன் கதக் ஆடும் கமலைப் பார்க்கும் யாருக்குமே சற்றே ஆச்சரியம் பொங்குவதைத் தடுக்க முடியாது. ஆண்ட்ரியாவை விட கமல்ஹாசன்தான் இதில் அழகாக, நடனத்துக்கே உரிய பெண்மை மிளர காணப்படுகிறார். நடனத்துக்கு முதல் முக்கிய விஷயமே 'அம்சம்', முக பாவனை, பாடி லாங்குவேஜ்தான். அவை அத்தனையும் கமல்ஹாசனிடம் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது இந்த ஸ்டில்லைப் பார்க்கும்போது. முழுமையான நெளிவு சுளிவுகளுடன், அட்டகாசமான உடல் வளைவுடன், படு க்யூட்டான டான்ஸராக இதில் ஜொலிக்கிறார் கமல்.

இத்தனைக்கும் இப்படத்தில் நடிக்கப் போவதற்கு முன்பு வரை கதக் குறித்து அவருக்கு ஏபிசிடி கூட தெரியாதாம். இந்தப் படத்துக்காகத்தான் கமல் கதக் கற்றுக் கொண்டார். கதக் மேதையான குருஜி பிர்ஹு மஹராஜிடம் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த நடனத்தைக் கற்றுக் கொண்டு அதை படத்தில் அழகாக பயன்படுத்தியிருக்கிறார். இந்த பிர்ஹு மஹராஜ்தான், தேவதாஸ் படத்தில் மாதுரி தீட்சித்தை கதக் ஆட வைத்து அனைவரையும் மயக்கியவர்.

விஸ்வரூபம் படத்திலும் கமல்ஹாசன் ஆடும் இந்தக் கதக் நடனம் சூப்பர் ஹிட் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நடனக் காட்சியில் பிர்ஹு மஹராஜின் கதக் பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் வந்து ஆடி நடனத்திற்கும், பாடலுக்கும் மேலும் உயிர் கொடுத்துள்னராம்.

டான்ஸ் தெரிந்தவர்தானே, எதையாவது ஆடி இதுதான் கதக் என்று கூறி விட்டுப் போகாமல் சில நிமிட பாடல் காட்சி என்றாலும் கூட சிரத்தை எடுத்துக் கொண்டு முழு டான்ஸையும் கற்றுக் கொண்ட கமல் உண்மையிலேயே பெர்பெக்ஷனிஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.

இந்த டான்ஸ் பிட்டை மட்டுமே வைத்து சலங்கை ஒலி போல தனி படமே எடுக்கலாம் போலிருக்கே....!

விஸ்வரூபம் ட்ரெய்லர்

விஸ்வரூபம் படங்கள்

விஸ்வரூபம் வால்பேப்பர்

Posted by: Sudha
 

அந்த வசனத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சொல்கிறார் சிம்பு

Simbu Denies Reports On Vaalu Dialogues

வாலு படத்தில் தனுஷை தாக்குவது போல வரும் வசனத்தை நான் எழுதவில்லை. எனக்கு அதில் சம்பந்தமே இல்லை என்று கூறியுள்ளார் சிம்பு.

சிம்பு தற்போது நடித்து வரும் வாலு படத்தில் தனுசை தாக்கி வசனம் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ், படிக்காதவன் படத்தில் தன்னை வெறுக்கும் தமன்னாவிடம் 'என்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்' என்று வசனம் பேசுவார். அந்த வசனத்துக்கு போட்டியாக 'வாலு' படத்தில் வசனம் இடம் பெற்றுள்ளது.

ஹன்சிகா சிம்புவிடம், 'ஒரு சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா உன்னை மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிச்சிடும்' என்று வசனம் பேசுவதுபோல் காட்சி உள்ளது.

இந்த வசனம் தனுசுக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி, இப்போதே இணையதளங்களில் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வசனம் குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "வாலு' படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த வசனத்தை எழுதியது இயக்குனர் விஜய். எனக்கும் அந்த வசனத்துக்கும் சம்மந்தம் இல்லை. யாரையும் தாக்கி எழுதவில்லை. மற்றவர்கள் கற்பனைக்கு பதில் சொல்லமுடியாது," என்றார்.

 

ஷில்பா மகனுக்கு பெயர் வச்சாச்சு!

Raj Kundra Shilpa Shetty Announce Their Son Name
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது மகனுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்று பெயர் வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். கடந்த மாதம் 21ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஷி்ல்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் டுவிட்டரில் அதன் பெயர் பேபி கே என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டதாக ராஜ் குந்த்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ராஜ் குந்த்ராவின் டுவீட்:

நானும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து எங்கள் மகனுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்று பெயர் வைத்துள்ளோம். வியான் என்றால் துடிப்பானவன் என்று பொருள்.

ஷில்பாவின் டுவீட்:

என் மகனுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்று இன்று பெயர் வைத்துள்ளோம்.

ராஜ் குந்த்ராவின் டுவீட்:

டுவிட்டருக்கு வந்துள்ள வியான் ராஜ் குந்த்ராவுக்கு வரவேற்பு கொடுங்கள். அவனிடம் நன்றாக நடந்து கொள்ளுங்கள். அவன் பதில் அளிக்கலாம்.

 

ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்!

Kamal Launches Vishwaroopam First Trailer
பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் எடுத்துள்ள விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று சிங்கப்பூரில் வெளியானது.

ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டமும், செய்நேர்த்தியும் ரசிகர்களைக் கவர்வதாக உள்ளன.

தீவிரவாதம், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் மையக்கரு என்பது இந்த ட்ரைலரில் தெரிகிறது.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

கமலின் பரதநாட்டியமும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த பரத நாட்டிய தாளக்கட்டுக்கு ஏற்ப பின்னர் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்தை வைத்திருப்பது சுவாரஸ்யம்.

சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த ட்ரைலரை இன்று வெளியிட்டார். படத்தின் சில காட்சிகளையும் அங்கே திரையிட்டுக் காட்டினார்.

ட்ரைலரின் முடிவில் கமல் சொல்கிறார்: 'ஹீரோவும் நானே... வில்லனும் நானே..' (படம் வந்தா தெரிஞ்சிடுமே!!)

அவர் பேசுகையில், "13வது ஐஃபா விழாவில், பிராந்திய மொழி படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஷபனா ஆஸ்மி, லிவ் உல்மான் போன்றோர் உள்ள இந்த மேடையில் நானும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்," என்றார்.