விளம்பர படமொன்றில் சூர்யா-ஜோதிகா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விளம்பர படமொன்றில் சூர்யா-ஜோதிகா!
2/28/2011 3:07:12 PM
கல்யாணத்துக்கு பிறகு நடிப்புக்கு டாட்டா டாட்டா சொன்ன ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு மும்பையில் சூர்யாவுடன் விளம்பர படமொன்றில் நடித்துள்ளார். தன் கணவரின் அகரம் அறக்கட்டளையில் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த ஜோதிகா, அதன் ஏர்செல் விளம்பர படத்தில் நடித்தார். தற்போது தன் கணவருடன் சேர்ந்து விளம்பர படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் ஜோதிகா.


Source: Dinakaran
 

கவுதம் மேனன் வீடு முற்றுகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவுதம் மேனன் வீடு முற்றுகை

2/28/2011 11:03:58 AM

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் வீட்டை முற்றுகையிட்ட, இந்துமக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கவுதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் Ôநடுநிசி நாய்கள்Õ. இந்த படத்தில் வளர்ப்பு தாயை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் ஆபாசமாக படத்தை எடுத்துள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தரமணி கானகம் பகுதியில் உள்ள கவுதம் மேனனின் வீட்டை, இந்து மக்கள் கட்சியினர் நேற்று காலை முற்றுகையிட வந்தனர். தகவல் கிடைத்து அடையாறு துணை கமிஷனர் தலைமையில் போலீசார் விரைந்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த முயன்ற அவர்களை, கைது செய்தனர். இச்சம்பவம் பற்றி கவுதம் மேனன் கூறுகையில், ''நடுநிசி நாய்கள்Õ படத்தின் கதாநாயகன் மனநலம் பாதிக்கப்பட்டவன். அவனை அறியாமல் நடக்கும் நிகழ்வுகளைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டாம் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன்ÕÕ என்றார்.


Source: Dinakaran
 

இயக்குனர் பேச்சை கேட்க :ஓவியா மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இயக்குனர் பேச்சை கேட்க : ஓவியா மறுப்பு

2/28/2011 2:57:49 PM

'அகராதி’ பட இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியது: அண்ணன் தங்கை பாசம், வில்லனின் பண ஆசையால் நடக்கும் விபரீதம் என கமர்ஷியல் த்ரில்லர் கதை. ஹீரோ பிரதீப். ஹீரோயின் ஓவியா. அண்ணன் தங்கையாக பவன், மோனிகா. வில்லன் ஆர்.வி.டி.ராஜ்குமார். இதன் ஷூட்டிங் ஈசிஆர் கடற்கரையோர பங்களாவில் நடந்தது. கண்ணாடிகள் உடைவது போல் ஒரு காட்சி. இதில் ஓவியா நடிக்க வேண்டும். கண்ணாடிகள் நொறுங்குவதற்காக அதில் வெடி வைத்திருந்தோம். இதை ஓவியாவிடம் சொல்லி காதில் பஞ்சு வைத்துக்கொள்ள எச்சரித்தேன். அவர் மறுத்துவிட்டார். காட்சியின்போது பாம் வெடித்த சத்தம் காதை துளைத்தது. விபத்து நடந்துவிட்டதோ என அலறியபடி கரையோரம் வசித்த குடிசை மக்கள் ஓடிவந்து விசாரித்தனர். காட்சி பற்றி விளக்கிய பிறகு புறப்பட்டு சென்றனர். இக்காட்சியில் ஓவியா அலறிவிட்டார். காதும் அடைத்துக் கொண்டது. சிறிதுநேரம் அதிர்ச்சியில் இருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகே சகஜ நிலைக்கு வந்தார். அவரது துணிச்சலை படக் குழுவினர் பாராட்டினர். அதுபோல் கோல்குண்டாவில் நடந்த ஷூட்டிங்கில் 80 அடி பள்ளத்தாக்கில் மோனிகா கயிற்றில் தொங்கிய காட்சி படமாக்கியபோது அவரும் டூப் போடாமல் நடித்தார்.


Source: Dinakaran
 

கமலுடன் இணைய மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமலுடன் இணைய மாட்டேன்

2/28/2011 2:58:46 PM

டைரக்டர் மிஷ்கின் கூறியது: ரசிகர்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதில் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. வெவ்வேறு களங்களில் கதை அமைப்பதை வரவேற்கிறார்கள். சினிமாவில் ஏ, பி, சி என்று எந்த எல்லையும் இருப்பதாக நான் கருதவில்லை. 'நந்தலாலாÕ படத்தில் காமெடி, ஹீரோயிஸம் எதுவும் கிடையாது. ஆனாலும் படத்தை பாராட்டினார்கள். தமிழ் சினிமா வளர்ச்சிக்கு இது உதாரணம். அடுத்த ஸ்கிரிப்ட் முடித்துவிட்டேன். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறேன். இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மக்களின் பிரச்னை. ஆனால் நிச்சயமாக இது Ôவார்Õ படமாகவோ ராணுவ கதை கொண்ட படமாகவோ இருக்காது. இதில் இரண்டு ஹீரோக்கள். ஒருவர் ஜான் ஆப்ரகாம். மற்றொருவருக்கான தேர்வு நடக்கிறது. ஹீரோயினையும் தேடிக் கொண்டிருக்கிறேன். 'கமல்ஹாசனை இயக்கும் திட்டம் என்ன ஆனதுÕ என்கிறார்கள். அந்த திட்டத்தை கைவிட்டு விட்டேன். இனி அவருடன் இணையும் திட்டம் இல்லை. ஆனால் அவருக்காக எழுதிய கதையை ஹாலிவுட் படமாக எதிர்காலத்தில் இயக்குவேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.


Source: Dinakaran
 

மயங்கி விழுந்தார் சமீரா,பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மயங்கி விழுந்தார் சமீரா, பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்!

2/28/2011 11:36:47 AM

ஷூட்டிங்கில் சமீரா ரெட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் ஷூட்டிங் நடந்தபோது, சமீரா திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை அளித்த டாக்டர்கள், அதிகமான காய்ச்சல் இருப்பதால் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ஷூட்டிங் கேன்சல் ஆனது. இதுபற்றி சமீரா தரப்பில் விசாரித்தபோது, 'இந்தி, தெலுங்கு படங்களிலும் சமீரா நடித்து வருகிறார். அதோடு கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து நடித்துவருவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.


Source: Dinakaran
 

தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழுக்காக தெலுங்கை தவிர்த்தார்

2/28/2011 11:05:10 AM

தமிழுக்காக தெலுங்கு வாய்ப்பை தவிர்தேன் என்றார் அஞ்சலி. அவர் மேலும் கூறியதாவது: தொடர்ந்து எனது படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வெளியூர்போகும்போது என்னை ரசிகர்கள் நடிகையாகப் பார்ப்பதில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள். நம்பர் ஒன் நடிகை, கவர்ச்சி நடிகை என்பதை தாண்டிய இந்த இமேஜ், எனக்கு பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதி வரை எனக்கு தொடர்ச்சியாக படங்கள் இருக்கிறது. அதனால் இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்தேன். தமிழில் எனக்கு ஏற்ற மாதிரியான கேரக்டர்கள் தொடர்ந்து அமைவதால் மற்ற மொழிகளில் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை.


Source: Dinakaran