சேரனின் 'தவமாய் தவமிருந்து', 'பட்டியல்', 'சத்தம் போடாதே', 'மிருகம்' என பல தமிழ் படங்களில் நடித்தவர் பத்மப்ரியா. தன் நடிப்பு+அழகு என தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு தமிழில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தது. என்றாலும் அவரால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்'. இதனையடுத்து தமிழில் சிறிது காலம் இவரை காணவில்லை, தற்போது மீண்டும் தன் 2வது இன்னிங்சிஸை தொடங்கியுள்ளார் பத்மப்ரியா. கற்றது தமிழ் புகழ், இயக்குனர் ராம் இயக்கி நடிக்கும் 'தங்க மீன்கள்' என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார் அவர். இந்த படம் மூலம் தமிழில் சினிமாவில் நிரந்திர இடம் கிடைக்கும் என நம்புவதாக பத்மப்ரியா கூறியுள்ளார்.
பிரெஞ்சு சப்-டைட்டில் "நண்பன்"!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் திரைப்படம் வரும் 12ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, 'நண்பன்' படம் பிரான்ஸ் நாடுகிளல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக் குழு. இதற்காக படத்தை பிரெஞ்சு சப்-டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்(பிரான்ஸ் நாட்டில்). மேலும் பிரெஞ்சு சப்-டைட்டிலுடன் வெளியாகும் முதல் தமிழ் படம், 'நண்பன்' படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்குணம் இயக்கத்தில் விக்ரம்!
களவாணி', 'வாகை சூட வா' போன்ற வெற்றி படங்களை இயக்கிய, இயக்குனர் சற்குணத்துக்கு அடுத்து படம் பெரிய படமாக அமைந்துவிட்டது. சமீபத்தில் பொது நிகழச்சியில் கலந்து கொண்ட நம்ம சீயான் விக்ரம், இயக்குனர் சற்குணத்தின் முந்தைய படங்களை வெகுவாக பாராட்டினாராம். இதனையடுத்து, இயக்குனர் சற்குணமும், விக்ரமும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்த போது, நிறைய கதைகளை விக்ரமிடம், சற்குணம் சொன்னாராம். அதில் ஒரு கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், விரைவில் நாம் இணைந்து படம் எடுப்போம் என்று சற்குணத்திடம், விக்ரம் கூறியுள்ளாராம்.