தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

சென்னை: தோலில் உண்டாகும் அலர்ஜி காரணமாக இனி இறால் சாப்பிட வேண்டாம் என நடிகை நயன்தாராவுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.

நயன்தாராவுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று இறால் குழம்பு. தினமும் உணவோடு இறால் இருந்தால் தான் நயன் சாப்பிடுவாராம். இது தெரிந்தே அவரது வெளியூர் படப் பிடிப்புகளிலும், படக்குழுவினர் தேடி அலைந்து இறால் குழம்பு வாங்கி வைத்து விடுவார்களாம்.

தோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்

ஆனால், தொடர்ந்து சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்து வந்த நயனுக்கு தற்போது சாப்பாட்டிலும் சோதனை வந்து விட்டது. அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறதாம்.

எனவே, நயனுக்கு மிகவும் பிடித்த இறாலை இனி அறவே தொடக்கூடாது என தடை விதித்து விட்டார்களாம் டாக்டர்கள்.

இதனால் மீண்டும் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம்.

 

பெற்றோர் பேச்சையும் மீறி காதலுடன் சுற்றும் நடிகை: கவலையில் 'ஹீரோ' அப்பா

சென்னை: தன்னுடைய இளைய மகள் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் காதலில் விழுந்திருப்பது உத்தம வில்லனுக்கு கவலை அளித்துள்ளதாம்.

உத்தம வில்லன் நடிகரின் மூத்த மகள் பிசியான நடிகையாக உள்ளார். இந்நிலையில் இளைய மகள் உதவி இயக்குனராக இந்தி படங்களில் பணியாற்றி வந்தார். தாயுடன் மும்பையில் தங்கியிருக்கும் அவர் தற்போது சுள்ளான் நடிகர் நடிக்கும் இந்தி படத்தின் மூலம் நாயகியாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது தந்தையுடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் மகனை தீவிரமாக காதலிக்கிறாராாம். நடிக்க வந்ததும் காதலா, வளரும் நேரத்தில் இது தேவையா என்று அவரது தந்தையும், தாயும் கவலையில் உள்ளார்களாம். அவர்களுக்கு மகளின் காதல் பிடிக்கவில்லையாம். இதையடுத்து மகளை தந்தையும், தாயும் கண்டித்தார்களாம்.

ஆனால் அவர் தனது அக்கா போன்று இல்லை. தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாத குணம் உள்ளவர். அதனால் பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

 

நள்ளிரவு பார்ட்டிகளில் ஆட்டம் போடும் தளபதி

சென்னை: தளபதி நடிகர் தற்போது நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டு தூள் கிளப்புகிறாராம்.

தளபதி நடிகர் வீடு விட்டால் ஷூட்டிங், ஷூட்டிங் விட்டால் வீடு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது எல்லாம் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறாராம்.

நள்ளிரவு பார்ட்டிகள் என்றால் தளபதி எப்பொழுதும் பிரசன்ட் தானாம். பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இளம் ஹீரோ, ஹீரோயின்களுடன் விடிய விடிய செம ஆட்டம் போடுகிறாராம்.

தனது தந்தையுடன் ஏற்பட்ட மோதலால் வருத்தம் அடைந்த நடிகர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆறுதல் தேடுகிறாராம்.