அனுஷ்காவுடன் நடிக்க பயமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அனுஷ்காவுடன் நடிக்க பயமா?

2/3/2011 12:07:51 PM

விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தெய்வமகன்' படத்தில் அனுஷ்கா, அமலா பால் நடிக்கின்றனர். இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டான இதில் நடிப்பது பற்றி அமலா கூறியது: அனுஷ்காவுடன் நடிக்க பயமா என்று ஏன் கேட்கிறார்கள் தெரியவில்லை. எனக்கு எந்த பயமும் இல்லை. நான் ரொம்பவும் எளிதாக யாரிடமும் பழகிவிடுவேன். நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு நிறைய தோழிகள் உண்டு. கேரளாவில் இருக்கும்போது வீட்டில் இருப்பதைவிட 24 மணி நேரமும் தோழிகளுடன் சுற்றுவதுதான் வேலை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோழிகளை அழைத்து வீட்டிலேயே பார்ட்டி கொடுப்பேன். சமீபத்தில் 'தெய்வமகன்' பட குழுவினருக்கு விக்ரம் பார்ட்டி கொடுத்தார். நானும் கலந்துகொண்டேன். அதேபோல் நானும் பட குழுவினருக்கு பார்ட்டி கொடுத்தேன்.


Source: Dinakaran
 

விஜய்க்கு மாமனாராக நடிக்கிறார் சத்யராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய்க்கு மாமனாராக நடிக்கிறார் சத்யராஜ்

2/3/2011 3:28:26 PM

ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட¢சத்திர பட்டாளம் நடிக்கும் படம் ‘நண்பன்’. இப்பட ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. கதைப்படி கல்லூரி முதல்வர் வேடம் ஏற்றுள்ள சத்யராஜ்,
இலியானாவுக்கு அப்பாவாக நடிக்கிறார். படத்துக்காக அவருக்கு வித்தியாசமான கெட்அப்பும் போடப்படுவதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஜீவாவின் மனைவியாக கவுரவ வேடத்தில் அனுயா நடிக்கிறார். இந்த படத்தில் நடித்தபடி ‘குலசேகரனும் கூலிப்படையும்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைப்புச் செய்திகள்’ உள்ளிட்ட படங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார். “ஹீரோவாக மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிப்பேன்” என்றார் சத்யராஜ்.


Source: Dinakaran
 

ஆங்கில படத்தில் பூஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆங்கில படத்தில் பூஜா

2/3/2011 3:29:51 PM

ஆங்கிலம்- உருது மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் பூஜா. இது குறித்து அவர் கூறியது: பிபிசி ஆங்கிலம்-உருது மொழிகளில் படம் ஒன்றை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக நடிக்க பேச்சு நடக்கிறது. இந்திய பின்னணியில் நடக்கும் கதை என்பதால்,
இதில் நடிக்க கேட்டுள்ளனர். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதே நேரம், இப்படம் குறித்த அனைத்து விவரங்களும் இன்னும் முடிவாகாமல்
உள்ளன. விரைவில் பட அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன்.நான் சினிமாவிலிருந்து விலகி விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது உண்மையல்ல. பெங்களூரில் எனது நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகின்றனர். அதில், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன். இப்போதைக்கு தனிமையை விரும்புகிறேன். குடும்பத்தாருடன் பொழுதை கழிப்பதும் சந்தோஷமாக இருக்கிறது. திருமணத்தைப் பற்றி யோசிக்க வில்லை. எனது அப்பாதான் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். சிலரது போட்டோக்களையும் காட்டினார். எல்லோருமே வெளிநாட்டு மாப்பிள்ளைகளாக இருந்தனர். திருமணத்துக்கு பின் வெளிநாட்டில் செட்டிலாகும் விருப்பம் இல்லை.  இவ்வாறு பூஜா கூறினார்.


Source: Dinakaran
 

நிருபராகும் நகுலன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நிருபராகும் நகுலன்

2/3/2011 3:32:03 PM

இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான். ‘சச்சின்’ படத்தை இயக்கியவர். அதற்கு பின் சில படங்களை இயக்க முயன்றார். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. நகுலன் நடிப்பில் Ôதலைப்புச் செய்திகள்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் நகுலன். “இந்த வேடம் எனக்கு புதிது. இதற்காக நிறைய பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறேன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய படமாக இது இருக்கும். இதில் நடித்த படியே ‘ஈரம்’ அறிவழகன் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன்” என்றார்.


Source: Dinakaran
 

கிசு கிசு -வாரிசை கண்காணிக்கும் ஹீரோ

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

வாரிசை கண்காணிக்கும் ஹீரோ

2/3/2011 3:38:50 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

பிரகாச ஹீரோவை வச்சு திரும்பவும் படம் இயக்க பிளான் பண்ணினாராம் வர்மாவான இயக்கம். இதுக்காக நடிகர்கிட்ட பேசினாராம்… பேசினாராம்… இப்போதைக்கு கால்ஷீட் இல்லைன்னு நடிகரு எஸ் ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…

தெலுங்கு நாக ஹீரோவின் வாரிசோடு நடிக்கிறாரு கல்லூரி நடிகை. வெளிநாட்ல ஷூட்டிங் நடந்தப்போ, நடிகரும் நடிகையும் ரொம்பவே நட்பாயிட்டாங்களாம்… நட்பாயிட்டாங்களாம்… விஷயம் தெரிஞ்ச அப்பா நடிகரு, மகனை கண்காணிக்க ரெண்டு பேரை ஷூட்டிங் ஸ்பாட்ல உலவ விட்டிருக்கிறாராம்… விட்டிருக்கிறாராம்…

சின்ன பட தயாரிப்புங்க கால்ஷீட் கேட்டா, விமலான நடிகரு அதிகமா சம்பளம் கேட்டு மிரட்டுறாராம்… மிரட்டுறாராம்… அதோடு கேரவேன், அது இதுன்னு நிறைய கண்டிஷன்கள் போடுறாராம்… போடுறாராம்… நடிகரை பற்றி கோடம்பாக்கத்துல சொல்லி, தயாரிப்புங்க புலம்புறாங்க… புலம்புறாங்க…


Source: Dinakaran
 

நடிப்பை தொடரும் ஐடியாவில் நவ்னீத் கவுர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிப்பை தொடரும் ஐடியாவில் நவ்னீத் கவுர்

2/3/2011 3:47:31 PM

கருணாஸ் ஜோடியாக 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் நடித்து வருகிறார் நவ்னீத் கவுர், மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பத்னேரா தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ரானாவை திருமணம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நவ்னீத் கவுர் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பை தொடரும் ஐடியாவில் இருப்பதாக கூறினார்.


Source: Dinakaran
 

மீண்டும் ஷூட்டிங் தொடங்கிய ‘திருத்தணி’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் ஷூட்டிங் தொடங்கிய 'திருத்தணி'

2/3/2011 4:04:10 PM

பரத், சுனேனா, ராஜ்கிரண் நடிக்கும் படம் 'திருத்தணி'. பாஸ்கர் தயாரிக்கிறார். படத்தை இயக்கும் பேரரசு இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நிறுத்தப்பட்ட ‘திருத்தணி’ பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டது. பரத் இதில் ஜிம் மாஸ்டராக வருகிறார். மேலும், 'திருத்தணி' படத்துக்கு 40 டிரான்ஸ்பார்மர் செட் அமைத்து சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.


Source: Dinakaran
 

இனி பாடுவதாக இல்லை :யுவன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இனி பாடுவதாக இல்லை : யுவன்

2/3/2011 5:08:46 PM

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் மியூசிக் டைரக்டர்
யுவன் சங்கர் ராஜா. அவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது ஹிட்டாகிறது.
மேலும் சென்ற அவர் இசையமைத்த, பையா, நான் மகான் அல்ல, பாணா காத்தாடி, பாஸ்
என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இசை பெரிதும் பேசப்பட்டது. அவர் குரலுக்கு
தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்த நிலையில், இனி பாடுவதில்லை என்ற
அதிர்ச்சிகரமான முடிவை இன்று அறிவித்துள்ளார். தனது ட்விட்டரில் “இனி
பாடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. எவ்வளவு காலத்துக்கு என்பது
தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு பாடுவதாக இல்லை”, என்று
குறிப்பிட்டுள்ளார்.


Source: Dinakaran