சென்னை: ராதிகா ஆப்தே, நயன்தாரா மற்றும் சோனியா அகர்வால் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா, ஸ்ரீதிவ்யாவின் ஆபாசப் படம் ஒன்று வெகுவேகமாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் ஆபாசப்படம் ஒன்று வேகமாக இணையத்தில் பகிரப்பட்டு வந்தது, அந்த விவகாரம் சற்று ஓய்ந்தவுடன் மற்றொரு விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து ஸ்ரீதிவ்யாவின் வாழ்க்கையில் சோகத்தைக் கொண்டு வந்துள்ளது.
நெட்டில் யாரோ ஒருவரின் ஆபாசப்படத்தை எடுத்து அதில் ஸ்ரீதிவ்யாவின் முகத்தை வைத்து மார்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள், தற்போது சுனாமியை விடவும் வேகமாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது இந்தப் புகைப்படம்.
நடிகைகளின் புகைப்படங்களை இந்த மாதிரி உருமாற்றி தான் பரப்புகின்றனர் என்று தெரிந்தும் கூட அதனை அதிக அளவில் மற்றவர்களிடம் பகிர்கின்றனர் மக்கள். மக்களின் இந்த மனநிலையைத் தெரிந்து கொண்டு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவிவருவதைக் கேள்விப்பட்ட,நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறாராம்.
காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் இந்த மாதிரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே இதற்கான சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்போது நடிகைகளின் மத்தியில் அதிகரித்து உள்ளது.