நடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்!

உலக அழகிப் பட்டம் வாங்கினாலும், உள்ளூரில் போணியாக முடியவில்லையே என்ற ஆழந்த வருத்தத்தில் இருந்த ஓமண நடிகைக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு வாய்ப்பு வந்ததாம்.

அப்படியொன்றும் பெரிய புராஜக்ட் என்று அதைச் சொல்ல முடியாது. சாதாரண படம்தான். சரி… எள்ளு இல்லாத குறைக்கு வேப்பங்கொட்டையையாவது அரைப்போம் என்ற நினைப்பில் சில லட்சங்களுக்கு படத்தை ஒப்புக் கொண்டு, பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு கிரீன் பார்க்குக்கே வந்திருக்கிறார் அம்மணி.

அப்போது வந்து சேர்ந்திருக்கிறார் மீடியேட்டர் ஒருவர்.

யம்மா.. உங்க ரேஞ்சே வேற… போயும் போயும் லட்சங்களில் ஒப்புக் கொள்ளலாமா.. முதல் படம் தோத்தாலும்… உனக்கு மவுசு இருக்கு. ஒரு 50 லட்சமாவது கேளு என்று, வடிவேலு சீட்டாட்டம் சொல்லிக் கொடுப்பாரே… அந்த மாதிரி ஓதிவிட… ஓமணாவும் அதை அப்படியே கிளிப்பிள்ளையாய் இயக்குநரிடம் ஒப்பித்திருக்கிறார்.

இயக்குநர் அடுத்த நொடி சொன்னது… ‘கிரீன்பார்க் பில்லையும் நீயே செட்டில் பண்ணிட்டு, பொட்டிய எடுத்துட்டு நடையைக் கட்டும்மா!!’

அடடா… ரூம் போட்டு அழக்கூட முடியாம பண்ணிட்டாங்களே!!

 

தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை…

Rowthiram Pazhagu Exposes Mercy Killing Elders

நடமாட்டம் இல்லைன்னா என்னா செய்யிறது? நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்கா எண்ணெய் சேர்த்து தலையில வச்சு தேச்சு குளிப்பாட்டி விடுவோம். அப்புறம் எளனி கொடுப்போம். அது பாட்டுக்கு கம்முன்னு படுத்தமானக்கி போயிடும்… சனிக்கிழமை செய்வோம்… அப்பத்தான சொந்தக்காரங்க எல்லோரும் வருவாங்க…

இது வீட்டில் உள்ள வயதானவர்களை கொலை செய்யும் நூதன முறை…. அதைத்தான் பிரபல தொலைக்காட்சியில் பகிரங்கமாக தெரிவித்தார் அந்த வைத்தியர். கேட்கும் போதே பதை பதைக்கும் இது போன்ற சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றைய முதியவர்களின் நிலை பற்றி கடந்த சனியன்று ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதில்தான் மூத்த குடிமக்கள் வீதிகளில் விடப்படுவது பற்றியும், வீட்டில் நடமாட்டம் இன்றி இருக்கும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது பற்றியும் ஒளிபரப்பினார்கள்.

தலைக்கு ஊத்திருப்பா…

சிசுக்கொலைகள் கேள்விப்பட்டிருப்போம். அது பரபரப்பாக பேசப்படுகிறது. ஊடகங்களில் செய்தியாக வெளியாகி தண்டனை பெற காரணமாகிறது. ஆனால் முதியவர்கள் கொல்லப்படுவது பற்றி வெளியே தெரிவதில்லை. அவர்களுடனேயே போட்டு அடக்கம் செய்யப்படுகிறது. முடியாமல் படுத்திருக்கும் முதியவர்களை தலைக்கு ஊற்றி அவர்களுக்கு சமாதி கட்டிவிடுகின்றனர் அவர்களின் பிள்ளைகள்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகம்

இதுபோன்ற சம்பவங்கள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் நடைபெறுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்கிறார் பத்திரிக்கையாளர் பிரமீளா கிருஷ்ணன். அது பற்றி மாவட்ட ஆட்சியாளரிடம் கேட்டால் மழுப்பலான பதில்தான் கிடைக்கிறது.

புறக்கணிப்பும் அலட்சியமும்

ஓடி ஆடி திரிந்த போது ஒத்தாசையாய் இருந்த பெற்றோர்கள்… தள்ளாமையினால் தடுமாறும் போது ஒதுக்கப்படுகின்றனர். இளைய தலைமுறையினரின் புறக்கணிப்பு ஒருபுறம்.. தள்ளாமை மறுபுறம் என தடுமாறித்தான் போகின்றனர்.

முதியோர் இல்லங்களில் அவலம்

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயரும் போது பெற்றோர்களை விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். நகரங்களில் கவனிக்க முடியாதவர்கள் முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றனர்.

இரண்டு பிள்ளைகள் இருந்தால் தாயை ஒருவரும், தந்தையை ஒருவரும் பிரித்து வைத்து பந்தாடுகின்றனர். தள்ளாத வயதில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்ற நிலை இங்கே அடித்து நொறுக்கப்படுகிறது.

செத்துப் போவதே மேல்

தனியாக கிடந்து தவிப்பதை விட செத்துப்போவதே மேல் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் முதியவர்கள். தவிர பாரம் என்று கருதும் பிள்ளைகள் சில தலைக்கு ஊற்றியோ, ஊசி போட்டோ, சமயத்தில் பிராந்தியை(!) வாயில் ஊற்றியோ கொலை செய்துவிடுகின்றனர்.

மூத்த குடிமக்களின் உரிமை

கடந்த ஆண்டு மட்டும் 300 வயதானவர்கள் சென்னை நகரின் தெருக்களில் விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டை விட இது அதிகமாகும். இதை விடக் கொடுமை பெற்ற தாயை உயிரோடு சுடுகாட்டில் கொண்டு போய் போட்ட சம்பவமும் நடந்துள்ளது என்பதுதான்.

வசதியற்றவர்களின் நிலை

பராமரிக்க முடியாத அல்லது பராமரிக்க விரும்பாத சொந்தங்கள் முதியவர் இல்லங்களுக்கு கொண்டுபோய் விடுகின்றனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு இப்போது சக்கையாய் துப்பிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு கூட இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்பதுதான் வேதனை.

சம்பளமில்லாத வேலைக்காரர்கள்

இதை விட கொடுமை கவனிக்கிறேன் பேர்வழி என்று சம்பளமில்லாத வேலைக்காரர்களாக பெற்றவர்களை நடத்துவதுதான். வயதானவர்களுக்கு பேருந்துகளில் கூட இடம் கொடுக்காத நிலைதான் உள்ளது. வயதானவர்களின் உரிமைகள் பல இடங்களில் மறுக்கப்படுகின்றன.

யாருக்கும் தெரியவில்லை

5 கோடி வயதானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கின்றனர் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயைக் கூட அடித்துப் பிடிங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். பெற்றோர்களை பராமரிப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது பிள்ளைகளின் கடமை.

குழந்தைகளாக மாறும் முதியோர்

வயதானவர்களும் குழந்தைகள்தான். நம்மைப் பேணிக்காத்த பெற்றோர்களை பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை. ஆனால் நமக்கு பிள்ளைகள் இருக்கிறது என்பதற்காக நம்மை பெற்றவர்களை நாம் தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியோடு முடிந்தது ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.

 

எப்படியோ.. ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்!

இன்னொரு முறை என்னை்த தொந்தரவு செய்தால் வெளிநாட்டுக்குப் போய்விடுவேன் என்று யுனிவர்சல் ஹீரோ திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார் அல்லவா?

இதில் மிகப் பெரிய உள்ளர்த்தம் இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் யுனிவர்சல் ஹீரோ அமெரிக்கா போக கடந்த ஆண்டே பக்காவாகத் திட்டம் போட்டு, வீடு கூடப் பார்த்துவிட்டாராம்.

ஹாலிவுட் படத்துக்கு முன் தயாரிப்பு வேலையே ஒரு ஆண்டாவது பிடிக்கும். அதன் பிறகு ஷூட்டிங்… புரமோஷன் என ஏகப்பட்ட பணிகள். குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அவர் ஹாலிவுட்டில் இருந்தே தீர வேண்டிய நிலை.

அதை மிக சாதுர்யமாக விஸ்வரூப பட வர்த்தகம் மற்றும் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என சிலர் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். தான் போகும் நாட்டுக்கு விசுவாசமாகத்தான் அவர் அமெரிக்காவை அத்தனை உத்தம நாடாகக் காட்டி, அதை இந்தியர் காப்பாற்றுவது போலவெல்லாம் காட்சி வைத்ததாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

ரொம்ப சீக்கிரமே, நான் அமெரிக்காவில் செட்டிலாகப் போகிறேன், என்ற அறிவிப்பு யுனிவர்சல் ஹீரோவிடமிருந்து வரும் என்கிறார்கள் உறுதியாக.

எப்படியோ.. யுனிவர்சல் ஹீரோவின் ஆஸ்கர் கனவு நிறைவேறினா சரிதான்!

 

சினிமா வேண்டாமே! தென்றல் நாயகி மறுப்பு

Thendral Shruthi Avoids Cinema Chances

சன் டிவியின் தென்றல் தொடரில் நடித்து வரும் ஸ்ருதி தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே பெரிய திரையில் நடித்தவர் ஸ்ருதி. அவர் நடித்த படங்கள் ஹிட் ஆகவில்லை. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் போனது.

இந்த சூழ்நிலையில்தான் சீரியல் வாய்ப்பு கதவை தட்டவே தென்றல் தொடரில் நடித்தார். இதில் நடித்த பின்னர் ஸ்ருதி என்பதை விட துளசி என்றுதான் பெரும்பாலான மக்களுக்கு அடையாளம் தெரிகிறது.

இந்த புகழைக் கருத்தில் கொண்டு மீண்டும் சினிமா வாய்ப்புகள் கதவை தட்டினாலும் வருகிற வாய்ப்பை தட்டிக் கழித்து விடுகிறாராம் நாயகி. காரணம் கேட்டால் ஏற்கனவே பெரியதிரையில் ஏற்பட்ட அனுபவம்தான் என்கிறார். தற்போது சின்னத்திரையில் புகழின் உச்சத்தில் இருப்பதே போதும் என்று கூறி புன்னகைக்கிறார் துளசி.

கேரளாவைச் சேர்ந்த துளசி, சீரியலுக்கு வருவதற்கு முன்பு துளசி 1996களிலேயே சினிமாத்துறைக்கு வந்துவிட்டார். இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், ஜெர்ரி, மாண்புமிகு மாணவன், மந்திரன், போன்ற தமிழ் படங்களிலும், சில மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நைட் 9 மணியானால் பொம்பள புள்ளைங்கள இல்ல ஆம்பள பசங்களத் தான் வீட்டில் பூட்டி வைக்கணும்: பிராச்சி

Boys Should Be Locked At Home Post

மும்பை: இரவு 9 மணியானால் பெண்களை அல்ல, ஆம்பள பசங்களை தான் வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் என்று நடிகை பிராச்சி தேசாய் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் டெல்லி கற்பழிப்பு வழக்கு குறித்து பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி தேசாயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

ஆண்கள் மாற வேண்டும். இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி மற்றும் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிகமாக கட்டுப்பாடுகள் விதித்தால் தான் அது போன்றவற்றை செய்யத் தோன்றும். தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் கற்பழித்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. நன்றாக படித்த யாரும் இது போன்றவற்றை செய்ய மாட்டார்கள். அனைவரும் படிக்க வேண்டும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெண்களை பார்க்கும் விதத்தில் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண் பிள்ளைகளை அல்ல ஆண் பிள்ளைகள் தாங்கள் மனிதர்களாக நடந்துகொள்வோம் என்று உறுதியளிக்கும் வரை அவர்களைத் தான் இரவு 9 மணி ஆனால் வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Actress Prachi Desai told that, I think not girls, but boys should be locked at home after 9 pm till the time they promise to improve as humans. She said so when asked about the current situation in the country and Delhi rape case.

 

முத்துலட்சுமிக்கு ரூ 25 லட்சம் நஷ்டஈடு - வனயுத்தம் இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Supreme Court Orders Give Rs 25 Lakh Muthulakshmi

டெல்லி: வனயுத்தம் படத்தில் வீரப்பன் கதையைப் பயன்படுத்தியது மற்றும் அதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை பாதிக்கும் வகையில் காட்சிகள் அமைத்ததற்காக ரூ 25 லட்சத்தை முத்துலட்சுமிக்கு நஷ்ட ஈடாக வழங்குமாறு இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற சம்மதம் தெரிவித்துள்ளார் முத்துலட்சுமி.

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும், அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்திலும் சினிமாவாக எடுத்துள்ளார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்.

ஆரம்பத்தில் இந்தக் கதையை ராம் கோபால் வர்மா மூலம் படமாக எடுப்பதாக முத்துலட்சுமி கூறியிருந்தார். ஆனால் அதற்குள் ஏஎம்ஆர் ரமேஷ் முந்திக் கொண்டு படத்தையும் அறிவித்துவிட்டார்.

அப்போதிலிருந்தே இந்தப் படத்தை எதிர்த்து வருகிறார் முத்துலட்சுமி.

இப்படத்தை எதிர்த்து முத்துலட்சுமி ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முத்துலட்சுமிக்கு படத்தை திரையிட்டு காட்டும்படி நீதிபதிகள் உத்தரவிட்டது. படத்தை பார்த்த அவர் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை பட்டியலிட்டு அவற்றை நீக்கவேண்டும் என்றார். நீதிபதிகள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது.

ஆனால் இரண்டு காட்சிகளை மட்டும் நீக்கியிருந்தார் இயக்குநர். இன்று படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘வனயுத்தம்’ படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை. எனவே அந்தப் படம் வெளியாகக் கூடாது. தனக்கு நஷ்டஈடாக பெரும் தொகையை தரவேண்டும் என்று முத்துலட்சுமி கூறியிருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். மேலும், படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘உண்மை கதை’ என்ற வாசகத்தையும் நீக்கவும் அவர் ஒப்புக்கொண்டார். முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளில் பெரும்பாலானவற்ற நீக்கவும் ஒப்புக் கொண்டார் இயக்குநர்.

இதையடுத்து, முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். படமும் நாளை வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ராதா ஸ்டைலில் மகளை தெலுங்கில் நாயகியாக்கிய ஜீவிதா

Former Actress Jeevitha S Daughter Enters Tollywood

ஹைதராபாத்: முன்னாள் நடிகை ஜீவிதாவின் மூத்த மகள் ஷிவானி தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகை ஜீவிதாவை நினைவிருக்கிறதா 1980 மற்றும் 90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். தமிழ் தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். பின்னர் இது தான்டா போலீஸ் புகழ் நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். ராஜசேகர்-ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி(17), ஷிவாத்மிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

அதில் ஷிவானி தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலகிருஷ்ணா நடித்த மித்ருடு பட இயக்குனர் மகாதேவ் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் ஷிவானி நடிப்பு மற்றும் நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறார். அது போக ஜிம்முக்கும் செல்கிறார்.

முன்னாள் நடிகை ராதா தனது மூத்த மகள் கார்த்திகாவை தெலுங்கு படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திமிர் பிடித்த காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: பாரதிராஜா

Ashamed Introducing Kajal Tamil Bh

சென்னை: காஜல் அகர்வால் திமிர் பிடித்தவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் அண்மையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, தமிழகத்தில் நடிகைகளை மதிப்புது கிடையாது. அங்கு நடிகர்களுக்குத் தான் மதிப்பு. தெலுங்கில் தான் நடிகைகளை மதிக்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு நான் அவ்வாறு கூறவே இல்லை, பத்திரிக்கை தான் தவறாக எழுதிவிட்டது என்றார் காஜல்.

இந்நிலையில் அவரை தமிழில் பொம்மலாட்டம் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதிராஜா கூறுகையில்,

அந்த பொண்ணு ரொம்பவும் திமிர் பிடித்தவர். அவர் யாரையும் மதிக்காதவர். அவரை அறிமுகப்படுத்தியதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார்.

இது குறித்து அறிந்த காஜல் பாரதிராஜாவை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் பாரதிராஜா தரப்பு பதில் அளிக்காததால் கவலையில் உள்ளாராம் காஜல்.

 

தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் பி வாசு மகன்!

தொட்டால் பூ மலரும் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷக்தி. இயக்குநர் பி வாசுவின் மகன். சூப்பர் ஸ்டார் ரஜினிதான் அவரை திரையுலகுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் போன்ற சில படங்களில் நடித்தார். இப்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்துவரும் ஷக்தி, அடுத்து தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்துக்கு ‘தெலுகுலோ நாக்கு நசனி படம் ப்ரேமா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் தொடக்கவிழா, காதலர் தினமான இன்று ஹைதராபாதில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது.

நாராயண பாபு, பூர்ணிமா நாராயன் மற்றும் வாசன் எஸ்எஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைக்கிறார். ஸ்ரீ வெண்ணிலா பாடல்களை இயற்றுகிறார்.

 

காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்!

Santhya Be Paired With Santhanam Power Star

சென்னை: காதல் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகமாகி, நடிக்கத் தெரிந்தவர் என்ற நல்ல பெயரையும் பெற்று, நடுவில் காணாமல் போன சந்தியா, இப்போது காமெடியன் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

காதல் படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்த சந்தியா, திடீரென வாய்ப்புகளின்றி தவித்தார்.

வேறு வழியின்றி தாய்மொழியான மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வர முயன்றார். ஆனால் தமிழில் கிடைத்த முக்கியத்துவம் அங்கு கிடைக்கவில்லை.

நிறைய தமிழ்ப் படங்களில் தோழி, குணச்சித்திர வேடங்களுக்கு சந்தியாவை அழைத்தனர். அவர் மறுத்து வந்தார்.

ஆனால் இப்போது வேறு வழியின்றி, ‘யா யா’ என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அது… காமெடியன் சந்தானத்துக்கு ஜோடி!

அதுமட்டுமல்ல… இந்தப் படத்தில் சந்தானத்தையும், அவர் ஜோடி சந்தியாவையும் நக்கலடிக்கும் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார். நடுநடுவே அவரும் கிட்டத்தட்ட ஜோடி எனும் அளவுக்கு தொட்டுக் கொள்வாராம் சந்தியாவை.

ஆரம்பத்தில் இந்த வேடத்தில் நடிப்பதா என்ற மனப்போராட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்பதால் ஒப்புக் கொண்டேன், என்கிறார் சந்தியா.

 

லக்கா கிக்கா மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன்… ரோஜா

I Have Learnt Tamil Through Lukka Kikka Says Roja

நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களே ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ நடத்த தயங்கும் நேரத்தில் ஜீ தமிழ் சேனலில் ‘லக்கா கிக்கா’ நிகழ்ச்சியில் அதிரடி ஆட்டம் போட்டு தெலுங்கு கலந்த தமிழில் பேசி அசத்துகிறார் நடிகை ரோஜா.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு புதுப்புது தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டாராம். செம்பருத்தியில் அறிமுகமான ரோஜா நூறு படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து இப்போது கதாநாயகிகளின் அம்மாவாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் சீரியலில் நடித்து அழுது வடிந்த ரோஜா இப்போது அதிரடி கேம் ஷோக்களை திறம்பட நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நதி எங்கே போகிறது?

சினிமாவில் பிரபலமாக இருந்த ரோஜா சின்னத்திரைக்கு வந்தது நதி எங்கே போகிறது என்ற தொடரின் மூலம்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

அழுகை பிடிக்காதாம்

இந்த தொடருக்குப் பின் வேறு தொடர்களில் ரோஜா நடிக்கவில்லை. காரணம் சோகம், அழுகை பிடிக்காது என்பதுதானாம். அதனால்தான் டிராக் மாறி ரியாலிட்டிஷோ, கேம்ஷோக்களில் புகுந்துவிட்டார். தொலைக்காட்சித் தொடர்களில் அழகைக் காட்டிலும் அழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது ரோஜாவின் கருத்து.

பிரபலப்படுத்திய நிகழ்ச்சி

நூற்று ஐம்பது படங்கள்வரை நடித்து நல்ல பெயருடனும் புகழுடனும் இருக்கும் நீங்கள் தொலைக்காட்சியில் ஏதேனும் டாக் ஷோ அல்லது கேம் ஷோ நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமே? என்று ரோஜாவைப் பார்த்து கேட்கவே “மா’ தெலுங்கு சேனலில் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட “மாடர்ன் மகாலட்சுமி’ என்ற புதுமையான கேம் ஷோ வை தொகுத்து வழங்கினார். 500 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி பெறும் வெற்றி பெற்றது இந்த ஷோ.

ஜீ தொலைக்காட்சியில் ‘லக்கா கிக்கா’

“மாடர்ன் மகாலட்சுமி’ இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துதான் ஜீ தொலைக் காட்சியின் “லக்கா கிக்கா’ கேம் ஷோ நிகழ்ச்சிக்கு அழைத்தார்களாம். இந்த நிகழ்ச்சி சந்தோசத்தையும் மன நிறைவையும் தருகிறதாம்.

புது புது தமிழ் வார்த்தைகள்

தாய் மொழி தெலுங்கு என்பதால் இந்த ஷோவில் ரோஜா பேசும் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் “தெலுங்கு வாடை வீசும் மழலைத் தமிழ் ரசிக்கும்படிதான் இருக்கும்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்களாம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு புதுப்புது தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்கிறாராம். ஹைதராபாத்தில் வசிக்கும் ரோஜா மாதம் நான்கு நாள்கள் படப்பிடிப்புக்கு சென்னை வந்து செல்கிறராம்.

 

அமீரின் ஆதி பகவன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

Ameer S Aadhi Bhagavan Certified A   

சென்னை: இயக்குநர் அமீரின் அதிபகவன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான்’ படத்தை அமீர் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ஜெயம்ரவி, நீத்து சந்திரா நடித்துள்ளனர்.

2 ஆண்டுகளாக நீண்ட தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன. இஸ்லாமியரான அமீர் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபகவான்’ படத்தில் இந்து மதத்தை அசிங்கப் படுத்தி இருக்கிறார். எனவே அதை திரையிடுவதற்கு முன்பு எங்களுக்கு போட்டு காட்ட வேண்டும், அத்துடன் ‘ஆதிபகவான்’ என்பது எங்களின் முக்கிய தெய்வத்தை குறிக்கிற சொல். எனவே படப்பெயரை உடனே மாற்ற வேண்டும் எனறெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது.

சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ்

எதிர்ப்புகள் வந்த நிலையிலும் பட வேலைகள் முடிந்து சென்சாரில் ஓகே வாங்கியிருக்கிறார்கள். படத்தில் ஆபாச காட்சிகள் இல்லாமல் போனாலும் சண்டை காட்சிகளும், பதற வைக்கிற காட்சிகளும் இருக்கிறதாம். இதன் காரணமாகவே சென்சார் ‘ஏ’ சான்றிதழ் தந்திருக்கிறதாம்.

படத்தை 22ம் தேதி ரிலீஸ் செய்த பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சேட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விடலாம் என முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

இப்படத்தை சன் டிவி வாங்கியுள்ளதை ஏற்கனவே ஒரு செய்தியில் சொல்லியுள்ளோம்…

 

டுனிசியாவில் 'தல' பெயரில் ஒரு நகரம்

Wanna Go Thala

சென்னை: ‘தல’ அஜீத் குமார் பெயரில் ஒரு நகரம் இருக்கிறது.

அஜீத் குமார் ரசிகரா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்காகத் தான். அஜீத் குமாரை அவரது ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ‘தல’ பெயரில் ஒரு நகரம் இருக்கிறது தெரியுமா?

ஆமாம் டுனிசிய நாட்டில் உள்ள அழகிய நகரம் ஒன்றின் பெயர் ‘தல’. இந்த நகரத்திற்கு அஜீத் குமாரின் பெயர் வைக்கவில்லை. மாறாக அதன் பெயரே ‘தல’ தான். ‘தல’ பெயரில் ஒரு நகரமே இருக்கு தெரியும்ல என்று அவரது ரசிகர்கள் சந்தோஷப்பட்டுவிட்டு போகட்டுமே என்று இதை தெரிவித்துள்ளோம்.

கடந்த 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தல நகரில் 13,968 பேர் வசிக்கின்றனர். டுனிசியாவிலேயே அதிக குளரான நகரம் தல தான். மேலும் அந்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் உள்ள நகரமும் தல தான்.

 

வாணியம்பாடியில் விஸ்வரூபம் ஓடிய தியேட்டருக்கு சீல்: ரசிகர்கள் ஏமாற்றம்

Theatre Showing Vishwaroopam Sealed

வேலூர்: வாணியம்பாடியில் கமலின் விஸ்வரூபம் படம் ஓடிய தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூரில் உள்ளது சங்கீத் தியேட்டர். இந்த தியேட்டர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் உரிமையாளர் கடந்த 2.5 ஆண்டு காலமாக நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை. இதனால் வரி தொகை ரூ. 1,82,575 நிலுவையில் உள்ளது. இந்த தொகையைக் கேட்டு உரிமையாளருக்கு நகராட்சி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.

இதையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவி தலைமையில், மேலாளர் சுரேஷ், குருசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சங்கீத் தியேட்டருக்கு சென்று கதவைப் பூட்டி சீல் வைத்தனர். அந்த தியேட்டரில் தற்போது கமல் ஹாசனின் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருந்தது. நேற்று காலை காட்சி முடிந்ததும் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டதால் மேட்னி ஷோவுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

முருகதாஸ் எஸ்.எம்.எஸ்ஸைப் பார்த்து வத்திக்குச்சி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய்

Murugadoss Sends Sms Vijay Attends Vathikuchi Audio

சென்னை: தனது தம்பி ஹீரோவாகும் வத்திக்குச்சி இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு வருமாறு இயக்குனர் முருகதாஸ் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.ஸைப் பார்த்து விஜய் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

இயக்குனர் முருகதாஸின் தயாரிப்பில் உருவாகும் படம் வத்திக்குச்சி. இதில் ஹீரோவாக அறிமுகமாகுபவர் முருகதாஸின் தம்பி திலீபன். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சிடியை வெளியிட்டார். விஜய் வருவது அறிந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கூட்டம் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

விழாவில் பேசிய முருகதாஸ் கூறுகையில்,

இந்த படத்தில் என் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இசை வெளியீட்டு விழாவிற்கு வருமாறு விஜய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். தான் அனுப்பினேன். அதை மதித்து அவர் நிகழ்ச்சி வந்துள்ளார். அவர் நட்புக்கு மரியாதை கொடுப்பார் என்றார்.

இதையடுத்து விஜய் பேசியதாவது,

முருகதாஸ் போனில் தகவல் கொடுக்காமல் இருந்திருந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன் என்றார்.

 

நார்வே திரைப்பட விழா.. குறும்படங்கள் போட்டி அறிவிப்பு!

ஆஸ்லோ: 4வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம்.

இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு:

பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் நான்காம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நிகழ்வானது எதிர்வரும் பங்குனி மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள “Nedre Fossum Gård -Stovner” என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.

உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.

எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.

இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு விசேடமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை(காணொளி) தேர்ந்தெடுத்து “தமிழர் விருது” வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.

குறும்பட போட்டிக்கான விதி முறைகள்:

- தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.

- திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.

- உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

- இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

- நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

- ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.

- குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

- குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.

- அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.

- தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.

- படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.

- நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.

 

இனி வெறும் ஆதிபகவன் இல்ல... 'அமீரின் ஆதிபகவன்'!!

Ameer Changes His Movie Title

ஜெயம் ரவி – நீத்து சந்திரா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகிவந்த ஆதி பகவன் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இனி அமீரின் ஆதிபகவன் என்றே இந்தப் படம் அழைக்கப்படும். இதே தலைப்பில்தான் சென்சார் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதிபகவன் என்ற தலைப்பு இந்துக்களின் கடவுள்களைக் குறிப்பதாக உள்ளதால் இப்படத்தின் தலைப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத்யடுத்து, இப்படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழு இப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறும், அப்படி நீக்கினால்தான் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அமீரிடம் கூறிவிட்டனர்.

அதனால் என்ன பரவாயில்லை… நீங்கள் ஏ சான்றிதழே கொடுங்கள்… நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அமீர் கூறிவிட்டதால், ஏ சான்று வழங்கப்பட்டது.

மேலும் படத்தின் தலைப்பையும் மாற்றுமாறு அமீரிடம் தணிக்கைக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

அதற்கும் ஒப்புக் கொண்ட அமீர், தலைப்பை ‘அமீரின் ஆதி-பகவன்’ என்று மாற்றிக் கொண்டார்.

பிழைக்கத் தெரியாத மனுசன்… இப்படியா சப்பென்று முடிப்பது… இந்து அமைப்புகளைப் போராட விட்டிருந்தால், பல கோடி ரூபாய் பப்ளிசிட்டியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்குமே அமீர்!!

 

ரஜினி ரசிகர் திருமணம்.... இரண்டாவது முறை வந்து வாழ்த்திய சூர்யா!

 

ரசிகர் திருமணம்... சூப்பர் ஸ்டார் தந்த இன்ப அதிர்ச்சி!

சென்னை: தன் தீவிர ரசிகரின் திருமணத்துக்கு திடீர் வருகை தந்து, பரிசளித்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவியின் தம்பி முருகன் - ராஜலட்சுமி திருமணம் நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நடைபெற்றது.

இந்தத் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என ரவி குடும்பத்தினர் ரஜினியை நேரில் அழைத்திருந்தனர்.

rajini visits his fan marriage   
ஆனால் ஒரு ரசிகர் நிகழ்ச்சிக்குப் போய், மற்றொரு ரசிகர் நிகழ்ச்சிக்குப் போகாமலிருந்தால் மனசு சங்கடப்படுவார்களே என்ற எண்ணத்தில், இதுபோன்ற அழைப்புகளை அமைதியாக தவிர்த்து வந்தார் ரஜினி. மணமக்களுக்கு பரிசு மட்டும் கொடுத்துவிடுவது அவர் வழக்கம்.

எனவே இந்த முறையும் ரஜினி வரமாட்டார் என்றுதான் திருமண வீட்டார் நினைத்திருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக, திருமண வரவேற்பு நாளன்று மாலை 7 மணிக்கு மின்னலாய் வந்தார் ரஜினி. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விறுவிறுவென நடந்து மணமக்கள் முன் நின்றார்.

ரஜினி வந்திருக்கிறார் என்ற அதிசயம் அதன் பிறகுதான் பலருக்கும் புரிந்தது. அத்தனை பேரும் எழுந்து நின்றனர். மணமக்களும், திருமண வீட்டாரும் ஆனந்தத்தில் கண்கலங்க, அவர்களை அமைதிப்படுத்திய ரஜினி மணமக்களை ஆசீர்வதித்து, பரிசுகளும் வழங்கினார்.

பின்னர் வந்த வேகத்தில் கிளம்பிச் சென்றார். ரஜினி வந்து போன பிறகு, ரஜினியின் அண்ணன் சத்யநாராயண கெய்க்வாட், ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் உள்பட பலரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

ரஜினி மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திரளாக வந்திருந்தனர்.

 

ராணி முகர்ஜிக்கு கல்யாணமாச்சுன்னு உண்மையைத் தானே சொன்னேன்: சத்ருகன் சின்ஹா

I Only Stated The Truth Says Shatrughan Sinha

டெல்லி: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியை ராணி சோப்ரா என்றதில் தவறில்லை. அது தான் உண்மை என்று பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ரா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்ருகன் சின்ஹா பேசுகையில், யாஷ் சோப்ரா, பமீலா சோப்ரா, உதய் சோப்ரா, ராணி... நான் ஆதித்யா சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி கூறுகிறார். ராணி சோப்ராவின் பெயரைக் குறிப்பிட்டால் அது ஆதித்யாவையும் தானே குறிக்கும் என்றார்.

ராணி முகர்ஜிக்கும் மறைந்த யாஷ் சோப்ராவின் மூத்த மகன் ஆதித்ய சோப்ராவுக்கும் கடந்த ஆண்டே ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சத்ருகன் சின்ஹா பொது நிகழ்ச்சியில் ராணியை ராணி சோப்ரா என்று அழைத்தார்.

இது குறித்து சத்ருகன் சின்ஹா கூறுகையில்,

நான் உண்மையைத் தான் கூறினேன். ஒன்று என்னை பொது நிகழ்ச்சியில் பேச அழைத்திருக்கக் கூடாது. இல்லை நான் வெளிப்படையாகப் பேசுவதை ஏற்க தயாராகிக்கொள்ள வேண்டும். யாஷ் சோப்ரா பற்றி என்னை பேச அழைத்தார்கள். அவரின் குடும்பத்தாரின் பெயர்களை குறிப்பிடுகையில் நான் ஆதித்ய சோப்ராவின் பெயரை விட்டுவிட்டேன் என்று எனது மனைவி தெரிவித்தார். அதற்கு நான் ராணி சோப்ராவின் பெயரைக் கூறினால் அது ஆதித்யாவையும் குறிக்கும் என்றேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நான் கூறியது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.

 

இளையராஜாவுக்காக ஓடோடி வந்து பாட்டு பாடிய கமல்

Kamal Haasan Sings Ilayaraja

சென்னை: இளையராஜா இசையில் கமல் ஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார்.

பாலிவுட் இயக்குனர் பாவ்னா தல்வார் பங்கஜ் கபூரை வைத்து ஹாப்பி என்ற படத்தை எடுத்து வருகிறார். இதற்கு இசை அமைப்பவர் இசைஞானி இளையராஜா. இந்த படம் காலத்தால் மறையாத நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு சமர்ப்பனமாக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை பதிவு செய்ய ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார் இளையராஜா. திடீர் என்று தனது உதவியாளரை அழைத்து கமல் ஹாசனுக்கு ஒரு போனை போட்டு வரச் சொல்லுங்கள் என்றார்.

அவரும் போன் செய்ய ஒரு மணி நேரத்திற்குள் ஸ்டுடியோவுக்கு வந்தார் கமல். ஒன்னுமில்லை கமல் ஹாப்பி படத்திற்கு நீங்கள் ஒரு பாட்டு பாடினால் நல்லா இருக்கும் பாடுங்களேன் என்றார் இளையராஜா. கமலும் ஓகே பாடிட்டா போச்சு என்று பாட 30 நிமிடத்திற்குள் பாடல் பதிவு செய்யப்பட்டது. கமல் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கமல் கூறுகையில், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் மற்றும் இளையராஜா ஆகியோர் என்னுடைய முன்மாதிரிகள். அவர்கள் அழைத்தால் உடனே ஓடுவேன் என்றார்.