ஒரு விரலை காட்டும் வாரிசு நடிகர்: பாதி விரலை காட்டும் தயாரிப்பாளர்கள்

சென்னை: தொப்பி நடிகரின் மகன் படத்தில் நடிக்க ரூ. 1 கோடி கேட்க தயாரிப்பாளர்களோ ரூ.50 லட்சம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் அதற்கு மேல் எல்லாம் உங்களுக்கு கொடுக்க முடியாது என்கிறார்களாம்.

தொப்பி நடிகரின் மகன் பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. இதையடுத்து கவலையில் ஆழ்ந்த நடிகர் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க கிளம்பினார்.

அவரது நடிப்பில் வெளியான இரண்டாவது படமும் பப்படமானது. முதல் இரண்டு படங்களும் ஊத்திக் கொண்ட நிலையிலும் நடிகர் சம்பளத்தில் மட்டும் கறாராக இருக்கிறாராம். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ.1 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

போங்க தம்பி உங்களுக்கு ரூ.1 கோடி எல்லாம் கொடுக்க முடியாது வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

இப்படி நாம் கேட்கும் சம்பளத்தில் பாதியை மட்டும் தருவதாகக் கூறுகிறார்களே என்று நடிகர் கவலையில் உள்ளாராம்.

 

டோலிவுட் போட்ட போடு: அடக்கி வாசிக்கும் நயன நடிகை

சென்னை: டோலிவுட்டில் நடிக்க தடை உத்தரவு பிறப்பித்த பிறகு நயன நடிகை அடக்கி வாசிக்கிறாராம்.

நயன நடிகை தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இப்படி தான் தெலுங்கில் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். விளைவு தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கால்ஷீட் கொடுப்பதிலும் கறாராக இருந்த அம்மணி சற்று இறங்கி வந்துள்ளாராம். கால்ஷீட் விஷயத்தில் சேட்டை செய்யாமல் சமத்து பிள்ளையாக கேட்கும் தேதிகளை கொடுக்கிறாராம்.

தடை உத்தரவுக்கு பிறகு அம்மணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாராம். ஆனால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மட்டும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் கால்ஷீட் விஷயத்திலாவது பிரச்சனை செய்யாமல் இருப்பதால் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் விரும்புகிறார்களாம்.