இவுங்ககிட்டயெல்லாம் எதுக்கு ரஜினிக்கு வாழ்த்து கேட்கணும்... வாங்கிக் கட்டிக்கணும்..?

இவுங்ககிட்டயெல்லாம் எதுக்கு ரஜினிக்கு வாழ்த்து கேட்கணும்... வாங்கிக் கட்டிக்கணும்..?

டிசம்பர் மாதம் வந்தாலே மீடியாக்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பிவிடும். ரஜினி பிறந்த நாளுக்கு சிறப்பு மலர்கள், சிறப்புப் பக்கங்கள் வெளியிட தயாராகிவிடுவார்கள்.

இன்னொரு பக்கம் டிவி சேனல்கள். எல்லா சேனல்களுமே ரஜினி பிறந்த நாளுக்காக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.

சன், கலைஞர், விஜய், ராஜ் போன்ற சேனல்கள் தொடர்ந்து ஒரு வாரம் ரஜினி படங்களை ஒளிபரப்புகின்றன. குறிப்பாக ராஜ் டிவி ஒரு மாதம் முழுக்க ரஜினி படங்களை ஒளிபரப்பி வருகிறது.

ரஜினி பிறந்த நாளன்று அவருக்கு பிரபலங்களை வைத்து வாழ்த்து சொல்ல வைப்பது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கம்.

இதற்காக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் வரும் பிரபலங்களை ஓரம் கட்டி, ரஜினி சார் பர்த்டேவுக்கு விஷ் பண்ணுங்க, என்று கேட்பார்கள்.

99 சதவீத நட்சத்திரங்கள் நான் ரஜினியின் பரம ரசிகன் என்று ஆரம்பித்து அவருக்கு வாழ்த்துச் சொல்லி முடிப்பார்கள்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே கடுப்படிப்பார்கள்.

இப்படித்தான் போன ஆண்டு நடிகர் ஜீவாவிடம் பேட்டி கேட்டபோது, ரஜினிக்கு நான் எதுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லணும்? எனக்கு அவர் சொல்வாரா? என்று கேட்டு வாழ்த்துச் சொல்ல மறுத்துவிட்டாராம், விஜய் டிவிக்கு.

இந்த ஆண்டு அதேமாதிரி கேவலமாகப் பேசியிருப்பவர் சுஹாசினி. ரஜினியுடன் நடித்தவர், எண்பதுகளின் ப்ளாஷ்பேக் நிகழ்ச்சியில் ரஜினியை உரசிக் கொண்டு நின்றவர் என்பதால் அவரிடம் போய் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள் மேடம், என்று கேட்டிருக்கிறார்கள் சேனல்காரர்கள்.

உடனே அவர், 'நான் எதுக்கு அவருக்கு வாழ்த்து சொல்லணும்? என் பிறந்த நாளுக்கு நீங்க போய் அவருகிட்ட பேட்டி கேட்டா கொடுத்துருவாரா? நான் அவருக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன்," என்றார் வெடுக்கென்று.

முகம் தெரியாத நபராக இருந்தாலும் பிறந்த நாள், விசேஷம் என்றால் வாழ்த்துவது மனிதப் பண்பாடு. அதெல்லாம் தெரியாத நபர்களிடம் இனி ரஜினிக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு போய் நின்னு, ரஜினியை அசிங்கப்படுத்தாதீங்கப்பா!