ஹைதராபாதில் லிங்கா இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு.. ஓடும் ரயில் ரஜினி சண்டைக் காட்சி!

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடக்கிறது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி மோதும் காட்சி படமாக்கப்பட்டது.

ரஜினியின் ‘லிங்கா' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். சுதந்திர காலத்துக்கு முந்தைய ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷியும், மாடர்ன் இளைஞரான ரஜினிக்கு அனுஷ்கா ஜோடியாகவும் நடிக்கின்றனர்.

ஹைதராபாதில் லிங்கா இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு..  ஓடும் ரயில் ரஜினி சண்டைக் காட்சி!

வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நயன்தாரா ஒரு பாடல் காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தேவ்கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஹாலிவுட்டிலிருந்து லாரன் இர்வின் என்ற நடிகையும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் 40 நாட்கள் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட பாதிப்படத்துக்கான காட்சிகளை சுட்டுத் தள்ளிவிட்டார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் ரயிலில் வில்லன்களுடன் ரஜினி சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த ஷெட்யூலில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.

 

லோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும் ஜாலி படம் ‘சாமியாட்டம்’


நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் 'சாமியாட்டம்'.

லேசான கதை, மென்மையான காட்சிகள், வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என உருவாகும் படம் இந்த ‘சாமியாட்டம்'.

நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வரும் நம்பியார் படம் விரைவில் வெளியாகிறது. சாமியாட்டம் இவரது இரண்டாவது சொந்தப் படம்.

மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட இவர், தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி', ‘குட்டி', உத்தமப் புத்திரன்' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தவை.

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல் செய்த படமான ‘சுவாமி ரா ரா' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம் (அதானே... ரீமேக் ஸ்பெஷலிஸ்டாச்சே!!).

லோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும் ஜாலி படம் ‘சாமியாட்டம்’

படத்துக்கு ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன். இவர் ‘யுவன் யுவதி', 'என்னமோ ஏதோ' படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்.

களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக் கதை.

படத்தின் நாயகியாக மும்பைப் பெண் ஒருவரை அறிமுகம் செய்கிறார்கள். பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கியமான ‘திடுக்' வேடத்தில் வருகிறார் பவர் ஸ்டார்!

 

'ஆமா.. எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட!'- சித்தார்த் கடுப்பு

ஹைதராபாத்: எனக்கு மகன் இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் பொய், வதந்திதான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.

படங்கள் இருக்கிறதோ இல்லையோ.. எப்போதும் வதந்திகளில் இருப்பவர் நடிகர் சித்தார்த்.

திருமணமாகி, விவாகரத்தும் பெற்றுவிட்ட சித்தார்த்துடன் பல நடிகைகள் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டனர். நடிகை ஸ்ருதியும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது.

'ஆமா.. எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட!'- சித்தார்த் கடுப்பு

இப்போது நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் சித்தார்த்துக்கும் அவரது மனைவி, குழந்தைகளுக்கும் இன்றளவும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதில் படு அப்செட் ஆகிவிட்டாராம் சித்தார்த்.

இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சித்தார்த், "ஆமாம்... எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி. ஆனால் அவனுக்கு நான்கு கால்களும் ஒரு வாலும் இருக்கும்.

என்னுடைய இந்த செல்ல நாய்க்குட்டியை நான் தெரு ஓரத்தில் கண்டெடுத்தேன். நான் அவன் மீது அன்பு கொண்டு அவனை காப்பாற்றினேன்," என்று கடுப்புடன் கூறியுள்ளார்.

 

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...

சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினிக்கு மூன்று வயது வரை பேச்சு வராமலிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?

ஆனால்.. அதுதான் உண்மையாம். இதை திவ்யதர்ஷினியே கூறியுள்ளார்.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருக்கும் திவ்யதர்ஷினி சுருக்கமாக டிடி என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது கலகலப்பான பேச்சுக்காகவே டிடி நடத்தும், காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்பாடி.. இந்த பொண்ணு வாயில மாட்டினா அவ்வளவுதான் என்று நினைக்கும் அளவுக்கு பொரிந்து தள்ளிவிடுவார் திவ்யதர்ஷினி.

தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளினியாக விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். "அவ்வளவுதான்.. இந்த பொண்ணுகிட்ட வாய் கொடுத்து மாட்டிக்கப்போராரு ஸ்ரீகாந்த்" என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இப்படி வாயாடி என்று பெயரெடுத்த டிடிக்கு மூன்றுவயது வரை பேச்சே வராதாம்.

இதை விஜய்டிவியில் சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய பிறகு டிடியே சொன்னார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கு மூன்றுவயது வரை பேச்சே வராமல் இருந்தது. 10ம் வகுப்பு படிக்கும்வரை மேடையில் ஏறி எந்த நிகழ்ச்சியும் செய்தது கிடையாது. என் தந்தைதான் என்னை ஊக்கப்படுத்துவார். ஆனால் எனக்கு பேசத்தெரியும் என்று தெரிந்துகொள்ளாமேல அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சின்னவயசுல பேசாமல் இருந்ததால்தான் மொத்தமா சேர்த்துவச்சி இப்போ பேசுறியா தாயி..!

 

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

மும்பை: தனது முன்னாள் காதலனும் நெஸ் வாடியா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் கூறியுள்ளார்.

கடந்த மே 30-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்த போது, ஸ்டேடியத்தின் கார்வார் பெவிலியனில் வைத்து தன்னை பலர் முன்னிலையில் அசிங்கமாகப் பேசியதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் நெஸ் வாடியா மீது புகார் கொடுத்துள்ளார் ப்ரீத்தி.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

எழுத்துப் பூர்வமாக ப்ரீத்தி கொடுத்த புகாரின்பேரில், நெஸ் வாடியா மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 506 மற்றும் 509-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ப்ரீத்தியிடம் முதல் தகவலறிக்கையும் தரப்பட்டுள்ளது.

யார் நெஸ் வாடியா?

ப்ரீத்தியும் நெஸ் வாடியாவும் முன்பு இணைந்து வாழ்ந்தனர். 5 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

உறவில் பிரிந்தாலும் இருவரும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக வியாபாரத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் நெஸ் வாடியா வேறு பெண்ணுடன் சுற்ற ஆரம்பித்தாராம்.

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா புகார்!

இதை ப்ரீத்தி ஜிந்தாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை - பஞ்சாப் அணிகள் மைதானத்தில் மோதிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் ஒரு மூலையில் ப்ரீத்தியும் நெஸ் வாடியாவும் கடுமையான வாக்குவாதத்தில் மோதிக் கொண்டிருந்தார்களாம். அதைத் தொடர்ந்துதான் இந்த செக்ஸ் தொல்லைப் புகாரைக் கொடுத்துள்ளார் ப்ரீத்தி.

 

சூர்யாவுக்கு வில்லனாகிறார் 'மைக்' மோகன்?

மைக் மோகனை இன்றைய இளைர்களுக்கு எந்த அளவு நினைவிருக்குமோ தெரியவில்லை. ஆனால் முப்பதுகளைத் தாண்டிய அத்தனைப் பேருக்கும் அவரை ஒரு வெள்ளி விழா நாயகனாகத் தெரியும்!

அவர் நடிப்பு எப்படி இருந்தாலும், தன் வசம் பல சாதனைகளை வைத்திருப்பவர் மோகன்.

இவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அந்தப் படங்களில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் படு பிரபலம்.

பெரும்பாலும் பாடகராகவே பல படங்களில் நடித்ததால் அவருக்கு மைக் மோகன் என்று ஒரு பட்டப்பெயர்.

தொன்னூறுகளில் காணாமல் போன மோகன், சில ஆண்டுகளுக்கு அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கினார். பின்னர் சுட்ட பழம் என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பல கேரக்டர் ரோல்கள் கிடைத்த போதும், ஏற்க மறுத்துவிட்டார்.

சூர்யாவுக்கு வில்லனாகிறார் 'மைக்' மோகன்?

ஆனால் தற்போது மோகன் நடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. இதையறிந்த வெங்கட் பிரபு, தன் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளார்.

சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரதான வில்லனாக நடிக்க மோகனிடம் பேசியுள்ளார் வெங்கட்பிரபு.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

 

பாலியல் புகார் கொடுத்தது ஏன்?- ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

மும்பை: என்னைப் பாதுகாத்துக் கொள்ளவே நெஸ் வாடியா மீது பாலியல் புகார் தந்தேன். யாரையும் பழிவாங்க அல்ல, என்று ப்ரீத்தி ஜிந்தா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது பழைய ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். இதில் நெஸ் வாடியா கைதாகக் கூடும்.

பாலியல் புகார் கொடுத்தது ஏன்?- ப்ரீத்தி ஜிந்தா விளக்கம்

புகாருக்குப்பின் ப்ரீத்தி ஜிந்தா அளித்துள்ள அறிக்கையில், "இது எனக்கு கடினமான நேரம். அன்று நடந்த சம்பவத்தால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இந்தப் புகாரை யாரையும் புண்படுத்துவதற்கான நான் புகார் அளிக்கவில்லை. என்னை காப்பாற்றுவதற்காகவே புகார் அளித்துள்ளேன்.

இந்த விவகாரம் குறித்து மீடியாக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து என்னுடைய தனித்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ப்ரீத்தி ஜிந்தாவுக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான ஆதாரங்களை, வான்கடே ஸ்டேடியத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளிலிருந்து பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் மும்பை போலீசார்.

 

‘தூள்’ வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்

‘தூள்’ வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்

ஹைதராபாத்: தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார்

தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார்.

1981-ல் மா பூமி என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா. தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர்.

2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப் பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா

மும்பை: ப்ரீத்தி ஜிந்தா என்மீது கூறியுள்ளவை பொய்யான குற்றச்சாட்டுகள். எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது என நெஸ் வாடியா கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் ஆண் நண்பர் மற்றும் கிரிக்கெட் வியாபார கூட்டாளி நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார். நெஸ் வாடியா, பிரபல பாம்பே டையிங் நிறுவன அதிபர்.

ப்ரீத்தி ஜிந்தாவின் புகார் பொய்யானது... அதிர்ச்சியாக உள்ளது!- நெஸ் வாடியா

ப்ரீத்தி ஜிந்தாவுடன் 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் பிரிந்தனர். உறவு பிரிந்தாலும், பிஸினஸில் பிரியவில்லை. கிரிக்கெட் வியாபாரத்தை இணைந்தே செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மே 30-ம் தேதி தான் ப்ரீத்தியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் குறித்து அவர் கூறுகையில், "பிரீத்தி ஜிந்தாவின் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. இந்த வழக்கைச் சந்திக்க தயாராகவே உள்ளேன். காரணம், இது ஆதாரமற்ற புகார் என்பது எனக்குத் தெரியும்,'' என்றார்.

 

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

ஊர்சுற்றிப் புராணம் என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு களஞ்சியம் இயக்கும் படம் இந்த ஊர்சுற்றிப் புராணம். அதில் சில தினங்கள் நடித்த பிறகு, அஞ்சலி தன் சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.

தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?

சென்னைக்கே அவர் வரவில்லை. மேலும் தனது இந்த நிலைக்கு முக்கிய காரணம் மு களஞ்சியம்தான். அவரும் தன் சித்தியும் திட்டமிட்டு தன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தனர் என பகிரங்க குற்றம்சாட்டினார் அஞ்சலி.

இன்னும் அஞ்சலிக்கு அவர் சொத்துக்களும் பல கோடி ரூபாயும் திரும்பக் கிடைக்கவே இல்லையாம். வீடு, பணம் அனைத்தையும் இழந்து, ஹைதராபாதில் தஞ்சமடைந்திருக்கும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார் அஞ்சலி.

தன் படத்தில் நடிக்கும் வரை அஞ்சலி சென்னையில் கால் வைக்கவே விடமாட்டேன் என்றும், வழக்குத் தொடருவேன் என்றும் அஞ்சலியை மிரட்டி வருகிறார் களஞ்சியம்.

ஆனால், களஞ்சியத்தின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். புதிய தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயார் என்று கடந்த வாரம் கூறியிருந்தார் அஞ்சலி.

இந்த நிலையில், இயக்குநர் சங்கத்தை வைத்து அஞ்சலி மீது தடை கொண்டு வர களஞ்சியம் முயற்சி செய்தார்.

களஞ்சியம் சொன்னதைக் கேட்டு இயக்குநர் சங்கமும் அஞ்சலி மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சங்கத்தின் தலைவர் விக்ரமன், நிர்வாகிகள் செல்வமணி உள்ளிட்டோர் களஞ்சியத்துக்கு ஆதரவாக இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்களாம்.