சினிமா தயாரிக்க விருப்பமா... 'ஓபன் சீஸேம்' உங்களை வரவேற்கிறது!

திரைப்பட தயாரிப்பில் ஈடுபட விரும்புகிற - தயாரிப்பு குறித்து போதிய அனுபவமில்லாத புதிய தயாரிப்பாளர்களுக்காக - ‘OPEN SESAME' என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அது எந்த மாதிரி உதவி?.. இதோ, இயக்குநர் ஆர் ரவிசங்கர் விளக்குகிறார்:

கனவு தொழிற்சாலை - இது சினிமாவுக்கு ‘சுஜாதா' வெச்ச பெயர்... ரொம்ப சரியான பெயர்...

சினிமா தயாரிக்க விருப்பமா... 'ஓபன் சீஸேம்' உங்களை வரவேற்கிறது!

கனவுகள் சுகமானவை.. கனவுகளை உற்பத்தி பண்றது அதைவிட சுகமானது.. ஆளா, கனவுலயே இன்னொன்று இருக்கு... ‘கெட்டகனவு'... அதாவது ‘NIGHTMARE'.

ஆமாம்.... சினிமா ஒரு கனவு... சினிமா எடுக்கறது பெரும் கனவு... ஆனா பலருக்கு அது கெட்ட கனவா மாறிடுது.

‘மூணு கோடி ரூபா செலவு பண்ணேன்... பாதி படம் கூட முடியல....

‘5 கோடி செலவு பண்ண படம்... ரிலீசுக்கு வழியில்லாம தவிக்குது...

‘என்கிட்ட சொன்ன கதை படத்துல வரவே இல்லை.. நான் தயாரிச்ச படத்தை எனக்கே பாக்க பிடிக்கலை....!'

இது பல புது தயாரிப்பாளர்களின் புலம்பல்கள்.... வெறும் புலம்பல் இல்ல... கோடிகளை இழந்து குமுறும் புலம்பல்.

ஒரு சின்ன உதாரணம்... கிட்டதட்ட 600 (ஆமாம் ஆறு நூறு!) தமிழ் படங்கள் ரெடியாகி ரிலீசுக்கு காத்ததிருக்கு. அதை விட ரெண்டு மடங்கு தயாரிப்புல இருக்கு... இதுல கிட்டதட்ட எல்லாமே புது தயாரிப்பாளர்.. புது டீம்!

சினிமா எடுக்கறதை பத்தி எந்த அனுபவமும் இல்லாத தயாரிப்பாளர்கள் பணத்தை போட்டுட்டு கடல்ல கரைச்ச பெருங்காயமாக பணமும் போய் நிம்மதியும் போய் நிக்கற கதைகள் ஒண்ணா ரெண்டா...!

அதுக்காக ஒட்டு மொத்த சினிமா உலகமே தப்புனு அர்த்தமா? சினிமா எடுக்குறதே தப்புன்னு அர்த்தமா? கிடையவே கிடையாது...

ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து, ‘இதுக்கு இவ்வளவுதான் செலவாகும்' னு சரியான பட்ஜெட்டை போட்டு சின்ன பட்ஜெட்ல எடுக்க நினச்சதை நினைச்சா மாதிரி எடுத்தாலே பெரும் பிரச்சனைகள் குறையும்.

அதுக்கான சரியான வழியை காட்டி ‘ இத இத இப்படி பண்ணுங்க... இது இதுக்கு இவ்வளவுதான் செலவாகும்... செலவையும் இப்படித்தான் பண்ணணும்' னு கூட இருந்து எடுத்து கொடுக்கறதுக்கு உருவானதுதான் இந்த ‘OPEN SESAME TEAM'.

‘OPEN SESAME ‘ ங்கறது அலிபாபா குகையை திறக்கறதுக்கு சொல்லப்படுகிற மந்திர சொல்...'திறந்துடு சீஸேம்'. சரியானபடி செய்தா சினிமாங்கற அலிபாபா குகையை கண்டிப்பா திறக்க முடியும்... அதுக்கு உதவுவதுதான் எங்க நோக்கம்.

ஒருத்தருக்கு படம் எடுக்கணும்னு ஆசை... தன் கதையை தானே தயாரிச்சு இயக்கவோ, அல்லது ஒரு நல்ல படத்தை தயாரிக்கவோ ஆசை ஆனால், அவருக்கு சினிமா எடுக்கறதை பற்றி ஏபிசிடி கூடத் தெரியாது.. அப்படிப்பட்ட ஒருத்தருக்கு,. கதையை திரைக்கதை வசனமா படப்பிடிப்புக்கு ஏத்தா மாதிரி உருவாக்கி தருவதிலிருந்து, நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்வது, பாடல்- இசை ஒலிப்பதிவு, படப்பிடிப்பு, எடிட்டிங், சிஜி மிக்சிங் என போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் செய்து, சென்சார் சான்றிதழ் வரைக்கும் வாங்கி தந்து ஒரு முழு படத்தை ஒப்பந்த முறையில் முறையில் ஒரு வேலையாக செய்து கொடுப்பது எங்கள் முதல் பணி.

அல்லது எனக்கே படம் இயக்க ஆசை... அப்பப்ப ஆலோசனைகள் தந்து வழிநடத்தினா போதும்னு சொன்னா அதையும் செய்து தருகிறோம்.

அல்லது, ‘ எனக்கு இந்த டைரக்ஷன் சமாச்சாரமெல்லாம் வேணாம்.. ஒரு நல்ல படத்தை தயாரிச்சா போதும்னு சொல்றாங்களா அப்படியே ஒரு நல்ல கதையை தேர்வு செய்யவைத்து உருவாக்கித் தருகிறோம்..

இன்னும் சொல்லப்போனா படம் ரிலீஸ் பண்றதுக்கு உண்டான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறோம்.

இது அனைத்தும் ஒப்பந்தம் போடப்பட்டு செய்யப்படும் வேலைகள்- இதில் ‘ பணத்தை போட்டு ஏமாந்து விட்டேன் ' என்ற வேதனைக்கே இடம் இல்லை.

இந்த அனைத்து விவரங்களும் சுவையான ஒரு வீடியோவாக ஒரு சினிமா ட்ரைலர் மாதிரியே யுட்யூபில் காணக்கிடைக்கிறது.

காண வேண்டிய தலைப்பு.....

1. TAMIL MOVIE MAKING OPEN SESAME THE RIGHT WAY (ENG)
2. TAMIL MOVIE MAKING OPEN SESAME THE RIGHT WAY (TAMIL)


இந்த ஓபன் சீஸேம் டீமில் உள்ளவர்கள்,

1.ஜோதிசுந்தர் (ஆர். ரவிஷங்கர்)
இயக்குனர் - பாடலாசிரியர்.

இயக்குனர்கள் கே. பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக இருந்தவர்.

பாடலாசிரியராக, ‘ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' ‘ சலக்கு சலக்கு ‘ ‘ பாரதிக்கு கண்ணம்மா....' ‘ எங்கே அந்த வெண்ணிலா ‘ ‘ நான் ரெடி.... நீங்க ரெடியா ‘ போன்ற பாடல்கள் எழுதியவர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி சூப்பர் குட் விலிம்ஸ் ( R.B.செளத்ரி தயாரிப்பில் ) ‘ வருஷமெல்லாம் வசந்தம் ‘ படத்தை இயக்கியவர்.

2. வி. ஜெய்சங்கர் எடிட்டர்.

சூப்பர் குட், ஆஸ்கார் பிலிம்ஸ் ஏவிஎம், போன்ற பல வெற்றி பட நிறுவனங்களில் பல வெற்றி படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்... ‘ பூவே உனக்காக , சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, திருப்பாச்சி, சிவகாசி, அரசு ‘ இப்படி பல படங்கள்.

3. எஸ். அருணாச்சலம் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிர்வாகி

ஆஸ்கார் பிலிம்ஸ், ஏவிஎம், லட்சுமி மூவி மேக்கர்ஸ், கலைப்புலி.எஸ்.தாணு, என பல வெற்றி பட நிறுவனங்களில் குறிப்பாக இயக்குனர் விக்ரமன் அவர்களின் பல படங்களில் பணியாற்றியவர்.

4. எஸ். நாகராஜன் - முன்னணி தயாரிப்பு நிர்வாகி

சூப்பர்குட் பிலிம்ஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் , கவிதாலயா என பல வெற்றி பட நிறுவனங்களிலும் ஷங்கரின் அன்னியன், ஐ, மற்றும் மஞ்சப்பை என பல படங்களில் பணி புரிந்தவர்.

 

கத்தியை ‘கட்’ பண்ணிய ஜெயா டிவி… ‘பீப்பி’ ஊதியது

குடியரசு தினத்தன்று கத்தி படம் ஒளிபரப்பாகும் என்று ஜெயாடிவியில் முன்னோட்டம் ஒளிபரப்பான நிலையில் கதை கட் செய்த தொலைக்காட்சி நிறுவனம் ‘பூவரசம்பூ பீப்பி' படத்தை ஒளிபரப்புகிறது.

கத்தி திரைப்படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது. பொங்கல் சிறப்பு திரைப்படமாக கத்தி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கத்தியை ‘கட்’ பண்ணிய ஜெயா டிவி…  ‘பீப்பி’ ஊதியது

ஆனால் பொங்கல் முடிந்த பின்னர் ஜெயா டிவியில் கத்தி படத்தின் விளம்பரம் ஒளிபரப்பினார்கள். இதனையடுத்து குடியரசு தினத்தன்று கத்தி ஒளிபரப்பகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக பூவரசம்பூ பீப்பி என்ற படத்தை ஒளிபரப்புகிறது ஜெயா டிவி.

கத்தியை எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

 

போற போக்கைப் பாத்தா போன வருஷ ரெக்கார்ட்டை மிஞ்சிடும் போலிருக்கே தமிழ் சினிமா!!

கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா. மொத்தம் 215 படங்கள்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இத்தனைப் படங்கள் எந்த ஆண்டும் வெளியானதில்லை. வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் என்ற நிலைமை.

போற போக்கைப் பாத்தா போன வருஷ ரெக்கார்ட்டை மிஞ்சிடும் போலிருக்கே தமிழ் சினிமா!!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகியுள்ள படங்களைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போய்விடும். ஜனவரி மாதத்தின் கடைசி வெள்ளியான 30-ம் தேதி வெளியாகும் எட்டுப் படங்களையும் சேர்த்தால் மொத்தம் 17 படங்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு படம் வெளியான மாதிரிதான்.

வரும் வெள்ளியன்று எஸ் ஏ சந்திரசேகரனின் டூரிங் டாக்கீஸ், தரணி, இசை, கில்லாடி, புலன் விசாரணை 2, பொங்கி எழு மனோகரா உள்ளிட்ட 8 படங்கள் வருகின்றன.

இந்த வேகத்தில் போனால் இந்த ஆண்டு தமிழ் சினிமா 250 படங்களை வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். காரணம், ஏற்கெனவே சென்சாராகி வெளியாகாமல் உள்ள படங்கள் மட்டும் 600. இவற்றில் 100 படங்கள் வெளியானால் கூட பெரிய சாதனை படைத்துவிடும் தமிழ் சினிமா.

ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுமா என்பதுதான் பெரிய கேள்விக்குறி!

 

37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்!

ஒரு பாடலில் தான் செய்த உச்சரிப்புப் பிழையை கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்திக் கொண்டார் பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ்.

37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்!

அந்தமான் காதலி என்றொரு படம். சிவாஜி கணேசன் நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கியது.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அனைத்துப் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக இரண்டு பாடல்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றவை. அவை அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகியவை.

இந்த இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர்.

இவற்றில் இரண்டாவது பாடலான

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்..
திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ்.

இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை.

தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ்.

நேற்று சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ்.

அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பை குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள். அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள். உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது.

இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.

 

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ரூ 100 கோடியை இளையராஜாவுக்கு வசூலித்து தருமா தயாரிப்பாளர் சங்கம்?

'எங்கள் அணி வெற்றி பெற்றால், இளையராஜாவுக்கு எக்கோ நிறுவனம் தரவேண்டிய காப்புரிமைத் தொகையான ரூ 100 கோடியை வசூலித்துத் தருவோம்' - கலைப்புலி தாணு தலைமையிலான அணி தயாாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் மிக முக்கியமானது இது.

காரணம், வசூலிக்கப்படும் ரூ 100 கோடியில் பாதி இளையராஜாவுக்கு, மீதி தயாரிப்பாளர் சங்கத்துக்கு.

தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ரூ 100 கோடியை இளையராஜாவுக்கு வசூலித்து தருமா தயாரிப்பாளர் சங்கம்?

இப்படி மட்டும் நடந்தால், இருப்பதிலேயே பணக்கார சினிமா சங்கமாகிவிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.

இளையராஜாவுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் ராயல்டி எனும் காப்புரிமைத் தொகையைக் கொடுக்காமலேயே அவரது ஆயிரக்கணக்கான பாடல்களை விற்று காசு பார்த்து வருகிறார்கள் எக்கோ, அகி மியூசிக் உள்ள இசை வெளியீட்டு நிறுவனங்கள்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அவர் பாடல்கள், இசையை இனி எந்த நிறுவனமும் விற்கக் கூடாது என தடை உத்தரவு பெற்றுள்ளார் இளையராஜா. இனி அனைத்துப் பாடல்களையும் இளைராஜாவே தன் சொந்த பேனரில் வெளியிடவிருக்கிறார்.

இளையராஜாவுக்கு தராமல் ஏமாற்றப்பட்ட காப்புரிமைத் தொகை ரூ 100 கோடி என கணக்கிட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதற்காக அனைத்துத் தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டு, இளையராஜா இதுவரை இசையமைத்த அனைத்துப் படங்களின் இசை உரிமையையும் அவருக்கே வழங்கியுள்ளனர்.

எனவே இளையராஜாவுக்கு மட்டுமே சொந்தமான இசையை, இதுவரை விற்று ஈட்டப்பட்ட பல நூறுகோடி ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை ராஜாவுக்கு வழங்கக் கோரி வழக்கும் தொடரவிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

 

டூரிங் டாக்கீஸ் படத்தை அமிதாப்பை வைத்து இயக்குகிறாராம் எஸ்ஏசி... தாணு தயாரிக்கிறார்!

மூன்று இளம் நாயகிகளுடன் தான் நடித்துள்ள டூரிங் டாக்கீஸ் படத்தை, இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்தை கலைப்புலி தாணுவே தயாரிக்கிறார்.

இன்று நடந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார் கலைப்புலி தாணு.

டூரிங் டாக்கீஸ் படத்தை அமிதாப்பை வைத்து இயக்குகிறாராம் எஸ்ஏசி... தாணு தயாரிக்கிறார்!

படத்தின் ட்ரைலரை வெளியிட்ட பிறகு கலைப்புலி தாணு கூறுகையில், "இந்தப் படம் எஸ் ஏ சந்திரசேகரனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக அமையும். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

டூரிங் டாக்கீஸ் படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து இயக்கப் போகிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

டூரிங் டாக்கீஸ் படத்தில் 75 வயதில் இளம் பெண்ணை காதலிப்பவராக நடித்துள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன். அந்த வேடத்தில்தான் அமிதாப்பை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.

 

முடங்கிக் கிடக்கும் 200 படங்களை வெளியிட முயற்சி! - தயாரிப்பாளர் சங்கம்

சென்னை: சென்சார் செய்யப்பட்ட பிறகும் வெளியாக முடியாமல் முடங்கியுள்ள 200-க்கும் மேற்பட்ட படங்களை இந்த ஆண்டு வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என புதிய தலைவராக தேர்வாகியுள்ள கலைப்புலி தாணு தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னையில் நடந்தது. இதில் தலைவராக கலைப்புலி எஸ். தாணு வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக தேனப்பன், கதிரேசன் ஆகியோரும் பொருளாளராக டி.ஜி.தியாகராஜனும் தேர்வானார்கள். செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.

முடங்கிக் கிடக்கும் 200 படங்களை வெளியிட முயற்சி! - தயாரிப்பாளர் சங்கம்

தலைவராக தேர்வான கலைப்புலி எஸ்.தாணு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்கம் அறவழியில் அமைதி வழியில் இழந்த பெருமையை மீட்டுள்ளது.

நம் முன்னோர்கள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், டி.ஆர். சுந்தரம், எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், டி.ராமானுஜம், டி.வி.எஸ். ராஜு போன்றோரால் காலம் காலமாக கட்டி காப்பாற்றப்பட்ட திரையுலகினரின் மாண்பினை புதிதாக தேர்வு பெற்றுள்ள நிர்வாகிகளாகிய நாங்கள் பேணி காத்திடுவோம்.

தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் மனுக்களை திரும்ப பெற்றவர்களுக்கும் போட்டியிட்டு வெற்ற வாய்ப்பை இழந்த சகோதரர்களுக்கும் சங்கத்தில் பொறுப்பினை தந்து ஒரு சேர கலையுலகை காப்போம்.

எதிர் காலத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து செயல் திட்டங்களையும் செயல் படுத்த பணியாற்றுவோம்.

வெளிவராமல் முடங்கி கிடக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்களைத் திரையிட நடவடிக்கை எடுத்து தயாரிப்பாளர் நலனை பாதுகாப்போம். இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை செய்து சிறு பட தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்போம்.

உலகில் உள்ள அனைத்து திரையுலக சங்கங்களுக்கும் முன்னோடி முதன்மை சங்கம் என பெயர் எடுக்க உழைப்போம். எங்கள் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லத்தக்க வகையில் பணியாற்றுவோம்," என்றார்.

 

பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

பாடகர்கள் ரொம்பப் பேசக் கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது, என்றார் கே ஜே யேசுதாஸ்.

கே ஜே யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவருக்கு பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகிலிருந்து பலரும் வந்து கலந்து கொண்டு யேசுதாஸை வாழ்த்தி வணங்கினர்.

இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாக்யராஜ், பார்த்திரன், பாடகிகள் பி சுசீலா, எஸ்பி ஷைலஜா, சுஜாதா, நடிகைகள் பி சரோஜாதேவி, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, ரேவதி, இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், சங்கர் கணேஷ், பாடலாசிரியர் இயக்குநர் கங்கை அமரன், நடிகர் தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா உள்பட பலரும் பங்கேற்றனர்.

பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்

விழாவில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்தினர். பதிலுக்கு யேசுதாஸும் பேசினார்.

அவர் பேசுகையில், "பொதுவா பாடகர்கள் அதிகம் பேசக்கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.

நான் என்னை ஒரு போதும் வித்வானாக நினைத்ததில்லை. இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனாகத்தான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு அரிசியிலும் ஒருவர் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். அப்படித்தான் ஒவ்வொரு பாடலும் இன்னாருக்குத்தான் என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பாடல் தனக்கு கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. அவரவருக்கான பாடல் தானாகவே கிடைக்கும்.

அய்யோ இந்தப் பாடல் எனக்கு கிடைக்காமல் போயிடுச்சேன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை," என்றார்.

நிகழ்ச்சியில் யேசுதாஸின் மனைவி பிரபாவும் கலந்து கொண்டார். யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் பல பாடல்களைப் பாடினார்.

 

தொழிலதிபர் அபூபக்கர் மகள் திருமணம் - ரஜினி நேரில் வாழ்த்து

பிரசிடென்ட் குரூப் நிறுவனங்களின் தலைவர் அபூபக்கர் - ஹமீதா பானு தம்பதியின் மகள் அஸ்லினா யாஷ்மினுக்கும், மலேசிய தொழில் அதிபர் முகமது இம்ரானுக்கும், சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

தொழிலதிபர் அபூபக்கர் மகள் திருமணம் - ரஜினி நேரில் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்கள் நீண்ட ஆயுளும், சந்தோஷமுடனும் வாழ வாழ்த்தினார்.

இத் திருமணம் முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர் குவைஷார் ஷமிம், ஆற்காடு இளவரசர், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேன், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், கர்நாடக அமைச்சர் அம்பரீஷ், மற்றும் பல அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரையுலகினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

மூன்று முடிச்சுக்கு தயாரான "மூனை"த் தொடர்ந்து மணவறையில் அமரத் தயாராகும் "ரெயினு"!

சென்னை: "ஏக் தோ தீன்" நம்பர் நடிகைக்கு திருமணம் முடிவாகியுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட உள்ளது.

மூன்று முடிச்சுக்கு தயாரான

இந்நிலையில், நம்பரைத் தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகி விட்டாராம் ரெயின் நடிகை. சூப்பர் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் கைவசம் தற்போது சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.

அதனால், வீட்டில் நல்ல தொழிலதிபராக மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லியிருக்கிறாராம். நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும், திருமணம் செய்து கொண்டு குடும்பத் தலைவியாக செட்டில் ஆகும் திட்டமாம்.

எனவே, மாப்பிள்ளை தேடும் படலத்தில் குடும்பத்தார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்களாம். கூடிய விரைவில் நடிகையிடமிருந்து அதிகாரப்பூர்வமாக திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டத்தார்.

 

நிஜத்தில் கவுதமிதான் ஹீரோ... நான் துணை நடிகன்! - கமல்ஹாஸன்

கேன்சரை எதிர்த்துப் போராடி வென்ற கவுதமிதான் நிஜ ஹீரோ.. நான் வெறும் துணை நடிகன்தான் என்றார் நடிகர் கமல் ஹாஸன்.

ஹைதராபாதில் நடந்த கேன்சர் நோய் குறித்த மாநாட்டை நடிகர் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார். நடிகை கவுதமியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் கமலஹாசன் பேசுகையில், "புற்று நோய் ரொம்ப கொடுமையானதுதான். அந்த வந்தால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்து போச்சு., விரைவில் இறந்து விடுவோம்' என்று பலர் நினைக்கிறார்கள்.

நிஜத்தில் கவுதமிதான் ஹீரோ... நான் துணை நடிகன்! - கமல்ஹாஸன்

இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாகக் கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கவுதமிதான். புற்று நோய்க்கு அவர் பணிந்து விடவில்லை. அதை எதிர்த்து தைரியமாகப் போராடினார். இறுதியில் அதனை விரட்டினார்.

சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம்," என்றார்.

கவுதமி

நடிகை கவுதமி பேசுகையில், "எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்து சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன்.

இதற்காக சிகிச்சைக்கு சென்றேன். முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன். எனது தைரியத்தை மட்டும் இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன்.

எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்துப் போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது," என்றார்.

 

பாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்!

நயன்தாரா, சாலையோர கடையில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுடுயூப்பில் வெளியாகி கலக்கியது.

நயன்தாரா காரில் இருந்து இறங்கி வந்து பீர் வாங்குவதை ரகசியமாக படம் பிடித்த யாரோ ஒருவர் இதனை கசியவிட்டதாக தகவல் பரவியது. பரபரப்பாக பேசப்பட்டது. புது சர்ச்சையும் கிளம்பியது.

ஆனால் இது நிஜமில்லையாம், ‘நானும் ரவுடிதான்' என்ற படத்திற்காகவே நயன்தாரா ஒயின்ஷாப்பில் பீர் வாங்குவது போல நடித்தாராம்.

பாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்பதற்காக இல்லையாம், நடிப்பதற்காகவாம்!

தனுஷ் தயாரிப்பில்

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து வரும் படம் நானும் ரவுடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா.நடிக்கிறார்.

பாண்டிச்சேரியில் சூட்டிங்

நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரியில் ஒயின்ஷாப்கள் அதிகம். சரக்கு விலையும் குறைவு. எனவே பீர் வாங்கும் காட்சியை படமாக்க முடிவு செய்யப்பட்டது.

பீர் வாங்கிய நயன்

குடிமகன்கள் அதிகம் மொய்க்கும் ஒரு சாலையோர ஒயின்ஷாப் முன்பு திடீரென ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அழகான பெண் இறங்குவதை பார்த்த கடை விற்பனையாளருக்கு அதிர்ச்சி. நயன்தாரா நமது கடைக்கு வருகிறாரே என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூலாக 2 கூலிங் பீர் வாங்கி செல்கிறார் நயன்தாரா.

சூட்டிங்காம்பா...

இது சினிமா சூட்டிங்தான் என்பதை உணரவே சிலரும் நீண்டநேரம் பிடித்ததாம். படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பற்றிய காட்சிகள் வெளியாவதும், அது தொடர்பான சர்ச்சைகள் உருவாவதும் வாடிக்கையாகிவருகிறது.

எல்லாம் ஒரு வௌம்பரம்...

விஜய் சேதுபதி மீசை, தாடி எடுத்தது செய்தியானது மாதிரி நயன்தாரா பீர் வாங்கியது செய்தியாகிவிட்டது. இதெல்லாம் ஓசியில கெடைக்கிற ஒரு வௌம்பரந்தானே...

கரெக்ட் செய்யும் நயன்தாரா

ஏற்கனவே ‘ராஜா ராணி' படத்தில் நயன்தாரா, அப்பாவுக்கும், கணவருக்கும் பீர் வாங்கி கொடுத்து கரெக்ட் செய்வார். இந்த படத்தில் யாருக்காக பீர் வாங்கியிருப்பார் நயன்தாரா? என்று யோசிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

 

அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் - தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் தாணு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைப்புலி தாணு, சங்கத்தில் அனைவரையும் பேதமின்றி அரவணைத்துச் செல்வேன் என்று உறுதியளித்தார்.

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ‘கலைப்புலி' எஸ்.தாணு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 438 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் - தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் தாணு

2 துணைத்தலைவர்களுக்கான தேர்தலில் எஸ்.கதிரேசன் 484 ஓட்டுகளும், பி.எல்.தேனப்பன் 355 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றார்கள்.

டி.ஜி.தியாகராஜன் 621 ஓட்டுகள் பெற்று பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி ‘கலைப்புலி' எஸ்.தாணு நிருபர்களிடம் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வியடைந்தவர்களையும் பேதமின்றி அரவணைத்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தை வெற்றிக்கரமாக நடத்திச் செல்வேன். அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் காக்க பாடுபடுவேன்," என்றார்.