டான்ஸோடு, செக்ஸையும் கலந்து கட்டினால் கலோரி போச்... இது டயஸ் பார்முலா!

Cameron Diaz Combine Dancing Burn The Most Calories

லண்டன்: உடல் எடையைக் குறைக்க ரொம்பக் கஷ்டப்படத் தேவையில்லை. நல்ல டான்ஸும், நிறைய செக்ஸும் இருந்தால் போதும் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் அழகு நடிகை கேமரூன் டயஸ்.

40 வயதாகும் இந்த ஹாலிவுட் நடிகை கவர்ச்சிக்குப் பெயர் போனவர். வயதைக் கணிக்க முடியாத அளவுக்கு கட்டுடலும், அழகான கவர்ச்சியையும் நிறைய வைத்திருப்பவர் கேமரூன் டயஸ்.

இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்தான் டான்ஸும், செக்ஸும் உடல் எடைக்குறைப்புக்கு உதவுவதாக கூறியுள்ளார்.

அவரிடம் பேட்டி கண்டவர், உடல் எடையைக் குறைப்பதில் செக்ஸ் மற்றும் நடனம் இதில் எது அதிக பங்கு வகிக்கிறது என்று கேட்டார். அதற்கு சிரித்தபடியே, ஏன் பிரிக்கிறீர்கள். இரண்டையும் மிக்ஸ் செய்யுங்கள். இரண்டையும் சேர்ந்து செய்து பாருங்கள். அதாவது ஒரே நாளில் இரண்டையும் செய்யுங்கள்.

அதேசமயம், நீங்கள் எந்த மாதிரியான செக்ஸில் ஈடுபடுகிறீர்கள் என்பதையும் பொறுத்து கலோரி குறைவது உள்ளது என்றார்.

 

காதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்?

நடிகை ரிச்சா தன் காதலன் சுந்தரைப் பிரிந்துவிட்டாராம். இப்போது புதிதாக அவர் வேறொரு நடிகருடன் நெருக்கமாகிவிட்டதால், ஆத்திரத்தில் ரிச்சா கொடுத்த பரிசுப் பொருளை வீசி எறிந்து உடைத்துவிட்டார் சுந்தர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

richa splits with her boy friends   
Close
 

மயக்கம் என்ன படத்தில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். அந்தப் படத்தில் ஆரம்பத்தில் ரிச்சாவின் காதலான வருவார் சுந்தர். பின்னர் சுந்தரின் நண்பனான தனுஷ் ரிச்சாவைக் கல்யாணம் செய்து கொள்வார்.

நிஜத்திலும் கிட்டத்தட்ட இதே மாதிரி நடந்துவிட்டதாம்.

படத்தில் நடிக்கும்போதே ரிச்சாவுக்கும் சுந்தருக்கும் ஆழமான காதல் ஏற்பட்டுவிட்டதாம். ரிச்சா சென்னைக்கு வந்துவிட்டால் இருவரும் இணைந்து உலா வந்து கொண்டிருந்தனர். சுந்தருக்கு அதிக விலை கொண்ட காமிராவை பரிசாகத் தந்திருந்தாராம் ரிச்சா (சுந்தர் அடிப்படையில் ஒரு மாடல் போட்டோகிராபர்).

இந்த நிலையில் ரிச்சா படங்களில் பிஸியாகிவிட்டதால், காதல் கொஞ்சம் டல்லடித்தது. போகப் போக ரிச்சா, சுந்தரை தவிர்க்க ஆரம்பித்தாராம். சென்னை வந்தால், சுந்தரைப் பார்க்காமலே போகத் தொடங்கிவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர், ரிச்சா கொடுத்த பரிசுப் பொருள்களைக் கூட தூக்கிப் போட்டு உடைத்துவிட்டாராம்.

ரிச்சா தனக்குக் கிடைக்காவிட்டால் 3 படப் பாணியில் கழுத்தை அறுத்துக் கொள்ளக் கூடத் தயார் என்று கூறி, அதற்கு சாம்பிளாக கையைக் கிழித்துக் கொண்டாராம்.

ஆனால் இதெல்லாம் சும்மா வதந்திங்க... ரிச்சாவுக்கு இது பற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லை என்கிறார் ரிச்சாவின் மேனேஜர்.

சுந்தர் தரப்போ, ரிச்சா அப்படிச் சொன்னா, அதையே எழுதிக்கங்க. என்கிட்ட கேக்க என்ன இருக்கு? என்கிறாராம்!

இதற்கிடையே ரிச்சாவுக்கு பாடிகார்டாக வர ஆரம்பித்திருக்கிறாராம் ஒரு புதிய நடிகர்!!

 

கோச்சடையானிலிருந்து நான் நீக்கமா.. என்ன விளையாடறீங்களா? - கேஎஸ் ரவிக்குமார்

K S Ravikumar Denies Kochadaiyan News

கோச்சடையான் படத்திலிருந்து என்னை நீக்க முடியாது. படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பில் இன்னும் நான்தான் இருக்கிறேன், என்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

'கோச்சடையான்' படத்திலிருந்து கேஎஸ் ரவிக்குமார் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மாதேஷ் பணிபுரிகிறார் என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த செய்திகளை கே எஸ் ரவிக்குமார் மறுத்துள்ளார்.

‘மும்பையில் சஞ்சய் தத்தை வைத்து நான் இயக்கிவரும் இந்திப்படத்தில் பிசியாக இருப்பதால், நான் நீக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தாமதமாக நேற்றுதான் படித்தேன். கோச்சடையான் படத்துக்காக சவுந்தர்யாவுடன் லண்டன், கேரளாவில் நடந்த படப்பிடிப்புகளில் முழுக்க நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.

எனது இந்திப் படத்தில் பிஸியாக இருப்பதால் எடிட்டிங் போன்ற போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதை நான் சவுந்தர்யாவிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஒருவேளை அதனால் மாதேஷின் உதவியை நாடியிருக்கக் கூடும். ஆகவே கே.எஸ்.ரவிக்குமாராகிய நான் தான் இப்போதும் படத்தின் மேற்பார்வை இயக்குனர். உதவி என்று வேண்டுமானால் மாதேஷின் பெயரைப் போட்டுக்கொள்ளட்டும்,' என்றார்.

சரீ... படப்பிடிப்பு முடிஞ்சதா இல்லையா... படத்தை இந்த தேதியில் கொண்டு வருகிறோம் என திரும்பத் திரும்ப தேதிகளை மாற்றிக்கொண்டிருப்பது ஏன்?

 

'வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'

அடுத்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்கிறார் வடிவேலு. தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அமைதி காத்தவர், இப்போது ஒரு பேட்டியில் அவரே முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

ஏன் இத்தனை பெரிய இடைவெளி.. அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வடிவேலு, "ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன்.

vadivelu works on 4 big projects
Close
 

நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட 'புலிகேசி - பார்ட் 2'. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம்.

அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட 'ஆப்பிரிக்காவில் வடிவேலு', யுவராஜோட 'தெனாலிராமன்', அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவாவோட 'உலகம்'. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!'', என்று பதிலளித்துள்ளார்.

வடிவேலு ரசிகர்களுக்கு உண்மையிலேயே நல்ல செய்திதான்!

 

இளவரசி கேட்டுடன் 'டேட்டிங்' போகோணும்.. ஆசைப்படும் கிம்!

Kim Kardashian Wants Kate Middleton Date

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுடன் டேட்டிங் போக ஆசைப்படுவதாக கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிம்முடன் டேட்டிங் போக பலரும் முண்டியடிக்கும் நிலையில், அவரோ கேட்டுடன் டேட்டிங் போக ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கிம்மின் காதலரான கென்யே வெஸ்ட், கிம்மை, கேட் மிடில்டன் போலவே மாற்ற பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. கேட் மிடில்டனைப் போலவே சமீபத்தில் கிம்முக்கு டிரஸ் வடிவமைத்துக்கொடுத்து போடச் சொன்னார் வெஸ்ட். இதன் மூலம் கிம்முக்கு, கேட் மீது ஒரு கண் என்பது தெரிய வந்தது. இப்போது அதை தனது பகிரங்கப் பேச்சு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் கிம்.

இதுகுறித்து அவர் கூறுகையில் அனைவருக்குமே கேட்டைப் பிடித்துள்ளது. அவருடன் டேட்டிங் போக வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். அவரை நானே அழைத்து லன்ச் சாப்பிட வருமாறு அழைக்கப் போகிறேன். அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்றார் சிலிர்ப்புடன்.

ஆசை நூறு வகை.. அதில் கிம் ஒரு வகை...!

 

‘விஸ்வரூபம்’ படத்துக்கு 3 ஆயிரம் பிரின்ட்

 3000 print for the Visvarupam movie சென்னை: 'விஸ்வரூபம் படத்துக்கு 3 ஆயிரம் பிரின்ட் போடுவதாக கூறினார் கமல். கமல்ஹாசன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் கூறியதாவது: விஸ்வரூபம் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஆர் ஓ தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. ஸ்டிரியோவில் இரு பக்கவாட்டில் ஒலி கேட்கும். புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் ஸ்பீக்கரில் ஒலி கேட்கும். தற்போது சத்யம் தியேட்டரில் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் வெளிவருவதற்குள் தமிழ்நாட்டில் 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வந்துவிடும். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் படம் வெளியாக உள்ளது. அதற்கான பணி நடக்கிறது. எனவே ரிலீஸ் தேதி நிர்ணயிக்கவில்லை. மொத்தம் 3 ஆயிரம் பிரின்ட்கள் போடப்படுகின்றன. இப்பணி முடிந்தபிறகுதான் ஹாலிவுட் பட பணி தொடங்க உள்ளேன். அதற்கும் நானே கதை எழுதுகிறேன். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. முடிவானதும் அதை பற்றி அறிவிப்பேன். இந்த படத்தை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவும் உலக ஞானமும் வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
 

திருமணம் செய்ய வற்புறுத்தி ரிச்சாவுக்கு நடிகர் மிரட்டல் : கோலிவுட்டில் பரபரப்பு

Marriage threat for actress Richa சென்னை: திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'ஒஸ்தி, 'மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் 'பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் தன்னை மணந்துகொள்ளும்படி ரிச்சாவை அவரது பாய்பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'மயக்கம் என்ன படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார்.

இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீபகாலமாக ரிச்சா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் 'பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்க வில்லை என்று வெளியேறிய ரிச்சா தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சுந்தர் மிரட்டினாராம்.

மேலும் கைகளில் அறுத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்ததுடன் அன்பாக ரிச்சா வாங்கிக்கொடுத்த கேமராவையும் அவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரிச்சாவின் மேனேஜர் கல்யாண் கூறும்போது, 'ரிச்சாவின் இமேஜை கெடுக்க சிலர் இதுபோன்ற வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ரிச்சாவும், சுந்தர் ராமும் சில காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ள அவர் எப்படி மிரட்டுவார்? அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதுதவிர வேறு எந்த உறவும் இல்லை என்றார். சுந்தர் ராம் கூறும்போது, 'இது எல்லாம் வதந்தி. நாங்கள் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டோம் என்றார்.
 

ஊர் மக்கள் சேர்ந்து நடிக்கும் படம்

Native people starring movie சென்னை: ஹீரோ, ஹீரோயின் தொடாமல் நடிக்கும் காதல் படம் 'நேசம் நெசப்படுதே என்ற பெயரில் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் ராஜ சூரியன் கூறியதாவது: மணப்பாறை மாவட்டம் பொன் முச்சந்தியில் ஸ்ரீ விஷ்ணு துர்கா கோயில் கட்டி உள்ளேன். இதை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. காதல்தான் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைக்கிறது என்ற கருவும் இதில் இடம்பெறுகிறது.

வேந்தன் ஹீரோ. அரசி ஹீரோயின். இருவரும் புதுமுகம். எந்த காட்சியிலும் இருவரும் தொட்டுக்கொள்ளாமல் நடித்திருக்கின்றனர். மூன்று பரிமாணங்களில் கதை சொல்லப்படுகிறது. பறவை முனியம்மா, நாகு, வி.எஸ்.ராகவன் மற்றும் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்களும் நடிக்கின்றனர். சாய் சிவன் ஒளிப்பதிவு. விஜய் மந்தாரா இசை. நானே இணை இசை, தயாரிப்பு, பாடல், கதை, திரைக்கதை பொறுப்பும் ஏற்றிருக்கிறேன்.
 

கிசு கிசு - சமாளிக்கும் ஹீரோயின்

Kodambakkam Kodangi கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு போன சார்மி நடிகைக்கு மார்க்கெட் டல்லடிச்சிடுச்சாம்... அடிச்சிடுச்சாம்... காத்திருந்து பாத்தவருக்கு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம்போட சான்ஸ் வந்துச்சாம். விட்டா கைநழுவிப்போயிடும்னு உடனே ஒப்புக்கிட்டாராம். இதைத்தொடர்ந்து பாலியல் தொழிலாளி வேடத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சாம். அதையும் கைநழுவிப்போகாம ஒத்துகிட்டாராம். இந்த வேஷத்துல நடிக்க ஒப்புக்கிட்டது ஏன்னு கேட்டா, பட்டும்படாம பதில் சொல்றாராம். நான் ஏத்தது பாலியல் தொழிலாளி வேஷமில்ல, கால்கேர்ள் கேரக்டர்னு சமாளிக்கிறாராம்... சமாளிக்கிறாராம்... ரெண்டு கேரக்டருக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா, அதுக்கும் வேற வேற விளக்கம் சொல்லி எஸ்ஸாகுறாராம்... எஸ்ஸாகுறாராம்...

சூப்பர் ஸ்டார் நடிக்க¤ற சடையான் படத்துல படையப்பா இயக்கம் மேற்பார்வ பொறுப்புல இருந்தாராம்... இருந்தாராம்... ஆனா திடீர்னு அவர் அதுலயிருந்து விலகி பாலிவுட் படம் இயக்கப்போயிட்டதா கோலிவுட்ல பரவுச்சாம். இதால சூப்பர் நடிகரோட அவருக்கு மனஸ்தாபம்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களாம்... ஆரம்பிச்சிட்டாங்களாம்... இத கேட்டு இயக்கம் ஷாக் ஆயிட்டாராம். பாலிவுட் படம் இயக்கப்போனாலும் சடையான் படத்தோட வேலைல என்னோட பங்கு இருக்குன்னு பதறியடிச்சி சொல்றாராம்... சொல்றாராம்...

செவன்த் சென்ஸ் ஹீரோவோடு லயன் 2 படத்துல நடிக்கிற ஹன்சியான நடிகை, பிரியாணி படத்துல செ.செ.வோட தம்பியோடு நடிக்கிறாரு. தம்பி நடிகருக்கு ஜோடி கிடைக்காம இருந்தப்போ, செ.செ.தான் ஹன்சியானவரு பேரை சிபாரிசு பண்ணினாராம்... பண்ணினாராம்... கேரக்டருக்கு நடிகை ஒட்டலேன்னாலும் செ.செ.தான் படத்தை தயாரிக்கிறதால டைரக்டரும் ஓகேன்னு தலையாட்டிட்டாராம்... தலையாட்டிட்டாராம்...
 

முதல்வரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றார் நடிகர் கமல்ஹாஸன்!

சென்னை: தனது 58வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகர் கமல்ஹாஸன்.

kamal meets cm gets her blessings
Close
 

நடிகர் கமல்ஹாஸன் நவம்பர் 7-ம் தேதி புதன்கிழமை பிறந்த நாள் கொண்டாடினார். தென் மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் என பல்வேறு வழிகளில் கமல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

தனது பிறந்த நாளன்று அவர் விஸ்வரூபம் படத்தின் Aura 3 D ட்ரைலரை வெளியிட்டார். விழா முடிந்த கையோடு, தலைமைச் செயலகத்துக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த சந்திப்பின்போது விஸ்வரூபம் மற்றும் தனது ஹாலிவுட் பட வேலைகள் குறித்து முதல்வருக்கு சிறிது நேரம் விளக்கினார் கமல்.

 

சைப் அலி கானின் சொத்து மதிப்பு ரூ.750 கோடி?

Saif Ali Khan S Property Worth Rs 750 Cr

மும்பை: பாலிவுட் நடிகரும் பட்டோடியின் நவாபுமான சைப் அலி கானின் சொத்து மதிப்பு ரூ.750 கோடி என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் பட்டோடியின் நவாப் ஆவார். அவருக்கு பரம்பரைச் சொத்து எக்கச்சக்கம் உள்ளது. அண்மையில் நடிகை கரீனா கபூரை மணந்த அவர் புதுமனைவியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவரின் சொத்து மதிப்பு ரூ. 750 கோடி என்று கூறப்படுகிறது.

அவரது தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி தான் எழுதி வைத்த உயிலில் சொத்தின் பெரும் பகுதியை மகன் சைப் பெயரில் எழுதி வைத்துள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மீதமுள்ளதை மகள்கள் சபா, சோஹாவுக்கு எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரிடமே கேட்டதற்கு அவர் கூறுகையில்,

எங்கள் சொத்தின் மதி்ப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் அது பரம்பரைச் சொத்து என்பதால் மதிப்பில்லாதது என்றார்.

 

‘வன யுத்தம்’ தடையை நீக்கக் கோரிய மனு: முத்துலட்சுமி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வன யுத்தம் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வன யுத்தம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தனது கணவர் பற்றிய வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவரை பற்றி பொய்யான தகவல்களுடன் வெளிவரும் இதுபோன்ற படங்கள் சட்டத்துக்கு புறம்பானவையாகும். எனவே எனது கணவரை காட்டுக் கொள்ளையன்போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள வன யுத்தம் படத்தை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் வனயுத்தம் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி படத்தை தயாரித்த அக்சயா கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக முத்துலட்சுமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சர்ச்சைக்கு ஆளாகியுள்ள படக் காட்சிகள் குறித்த பட்டியலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

கணவனை மாற்றிக் கொள்ளும் கதையில் நடிப்பதா... - நயன்தாராவுக்கு கண்டனம்

Local Political Party Condemned Nayanthara

நயன்தாரா நடிக்கும் ‘ராஜாராணி' படத்தில் கலாச்சார சீரழிவுக்கு துணைபோகும் கதையமைப்பு உள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி அமைப்பு.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

‘ராஜாராணி' படத்தில் ஒருவர் மனைவியை இன்னொருவர் மணப்பது போல் காட்சிகள் உள்ளன. ஜெய் நயன்தாராவைக் காதலிக்கிறார். ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புகிறார். ஆனால் சூழ்நிலை ஜெய் காதலியான நயன்தாராவை ஆர்யாவுக்கு மனைவியாக்குகிறது. ஆர்யா காதலியை ஜெய் மணந்து கொள்கிறார்.

திருமணத்துக்கு பிறகு உண்மை தெரிந்து இருவரும் காதலிகளை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்வது போல் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொருத்தனை காதலித்து இருந்தாலும் தாலி கட்டியவனை கணவனாக ஏற்பதுதான் மரபு.

இயக்குனர் பாக்யராஜ் ‘அந்த 7 நாட்கள்' படத்தில் இதைதான் பதிவு செய்து இருந்தார். ஆனால் ‘ராஜாராணி' படத்தில் மனைவிகளை காதலர்கள் மாற்றிக் கொள்வது பண்பாட்டுக்கு விரோதமானது. ‘ரமணா' படம் மூலம் சமூக அவலங்களை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ் ‘ராஜாராணி' படத்தை தயாரிப்பது முறையில்லை. இதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.