'அட இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதானப்பா...!' - 'காமெடி திருட்டு' குறித்த கவுண்டரின் கமெண்ட்!

கவுண்டமணி - சத்யராஜ் நடிக்கும் ஒரு படத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

49 ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கூறுகையில், "கவுண்டமணி சார் தான் எங்களைப் போன்ற பலருக்கும் ரோல் மாடல். என்னை ட்ரெண்ட் நடிகர்னு சொல்றாங்க. உண்மையாவே இப்பவும் ட்ரெண்ட் நடிகர் கவுண்டமணி சார் தான்.

Goundamani's comments on 'comedy imitators'

நான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்கும்போது சத்யராஜ் சார்கிட்ட கவுண்டமணி சாரின் நக்கல்களை கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதையெல்லாம் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு சீக்ரெட்டான காமெடி.

சமீபத்தில் அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் அவர் தனது ரிங் டோனை மாற்றி விட்டேன். இப்போது ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் டோன் அப்படின்னு சொன்னாரு. இப்போ சொல்லுங்க யாரு ட்ரெண்ட் செட்டர்னு!

Goundamani's comments on 'comedy imitators'

அவர் கிட்ட பேசும் போது கூட சொன்னேன் 'உங்களோட காமெடிகள் எங்களுக்குள்ள இருக்கு.. தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க திருடித் திருடி வித்துகிட்டுத்தான் இருக்கோம்'னு. இதைக் கேட்டதுமே, "அட இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதுதானப்பா..." என அசால்ட்டாக கமெண்ட் அடித்தார்.

திரும்ப நீங்களும் சத்யராஜ் சாரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கணும் சார்.. முடிஞ்சா அதுல எனக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார். இதுதான் என் ஆசை.

49ஓ அரசியல் கலந்த விவசாயம் பத்தின படம். அந்த விஷயத்த காமெடி கலந்து சொல்லணும்னா கவுண்டமணி சாராலதான் முடியும். அவர மிஞ்சின ஆள் இதுவரை இல்ல, இனிமேலும் இல்ல. திரும்ப ஸ்கிரீன்ல கவுண்டமணி சார பார்க்கப்போறோம்ங்கற சந்தோஷம் எங்க எல்லாருக்கும் இருக்கு.

எனக்கு உங்கள மீட் பண்ண சான்ஸ் குடுத்ததுக்கு தயாரிப்பாளர் சிவபாலனுக்கு நன்றி.

Goundamani's comments on 'comedy imitators'

(இப்படி சிவகார்த்திகேயன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே கூட்டத்தில் இருந்து கவுண்டமணி சார் மாதிரி பேசுங்க என கேட்டனர்..) சும்மா இருங்க... கவுண்டமணி சார் மாதிரி பேசணுமாம். அப்பறம் அதுக்கும் அவரு கவுண்ட்டர் குடுத்துருவாரு. அதுக்குத்தான் நான் இருக்கேன்ல அவன் என்னாத்துக்கு பேசுறான்னு சொல்லிடுவாரு," என சிவகார்த்தி சொல்ல, அட்டகாசமாகச் சிரித்தார் கவுண்டர்!

 

தெலுங்கில் தனி ஒருவன்: ராம் சரணை இயக்கும் மோகன் ராஜா!

தமிழில் பெரும் வெற்றிப் பெற்றுள்ள தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் மோகன் ராஜா. இதில் முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடித்து  வெளியாகி பெரும் பாராட்டுகளுடன் வசூலைக் குவித்து வருகிறது தனி ஒருவன்.

Mohan Raja remakes Thani Oruvan in Telugu

இதனையடுத்து இந்தப் படத்தை இந்தியின் ரீமேக் செய்ய சல்மான் கான் முயன்று வருகிறார். சல்மான் ஒப்புக்கொண்டால் படத்தை இந்தியில் தானேஇயக்கப் போவதாக ராஜா கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

மோகன் ராஜா இயக்க உள்ள இப்படம் அடுத்த வருடம் துவங்கும் எனத் தெரிகிறது. தற்சமயம் புரூஸ் லீ, மற்றும் சிரஞ்சீவியின் 150வது பட வேலைகளில் ராம் சரண் தீவிரமாக உள்ளார்.

 

சிவகார்த்திகேயனை நான் ஹீரோவாக்கினா... என்னோட ஹீரோ டென்ஷன் ஆகிடுவாரு - கே.வி.ஆனந்த்

சென்னை: இயக்குநர் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்று காட்டுத்தீ வேகத்தில் எழுந்த வதந்தி கே.வி.ஆனந்தின் காதுகளை எட்ட, உடனே நான் சிவகார்த்திகேயனை இயக்கவில்லை என்று ட்விட்டரில் மறுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

சமீபத்தில் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக செய்திகள் பரவி வந்தன, மேலும் முன்னணி ஹீரோக்கள் மறுத்ததால் தான் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார் என செய்திகள் பரவ அதற்கு தற்போது டிவிட்டரில் பதில் கூறியுள்ளார் கே.வி.ஆனந்த்.

இது அப்பட்டமான வதந்தி, இதைக் கேட்டால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஹீரோவும் டென்ஷன் ஆகிவிடுவார் என கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2 விஷயங்கள் உருதியாகி உள்ளன ஒன்று கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ இல்லை, மற்றொன்று அவரின் அடுத்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.

இதில் உச்சகட்டமாக கே.வி.ஆனந்தின் இந்த ட்வீட்டை நடிகர் சிவகார்த்திகேயனும் ரீட்வீட் செய்துள்ளார்.

 

மாமா அஜீத்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்- ஷாமிலி

சென்னை: அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நேற்று வந்த நடிகைகள் கூட ஆசைப்பட "நான் என் மாமாவுடன் சேர்ந்து ஒருபோதும் நடிக்க மாட்டேன்" என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார் அஜீத்தின் மச்சினி ஷாமிலி.

நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி மற்றும் துரை.செந்தில்குமாரின் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

I Will Never Opposite With Ajith - Says Shamlee

மேலும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஷாமிலி ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஷாமிலி அளித்த பேட்டியில் மாமா அஜீத்துடன் எப்போதும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

ஒருவேளை அவரின் படங்களில் ஏதேனும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தால் பார்க்கலாம், ஆனால் எப்போதுமே அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன்.

மாமா மிகவும் அமைதியாக இருப்பார் அவருடன் இருக்க எல்லோருமே விரும்புவார்கள். அவரைப் பொறுத்தவரை வீடு மற்றும் சமையல் போன்றவற்றை மிகவும் விரும்புவார்.

சமீபத்தில் அவர் என்னை வைத்து போட்டோ ஷூட் நடத்தியது என்னால் மறக்கவே முடியாது" என்று மாமாவைப் பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ஷாமிலி.

 

நான் மீண்டும் சினிமாவில் நடிப்பதை அஜீத் விரும்பவில்லை! - ஷாம்லி

நான் சினிமாவில் நடிப்பதை அக்கா கணவர் அஜீத் விரும்பவில்லை. ஆனாலும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்காமல் ஒத்துழைப்பு தருகிறார் என ஷாலியின் தங்கை ஷாம்லி கூறியுள்ளார்.

ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கலக்கியவர்.

Ajith never likes me to acting films, says Shamli

இப்போது குமரியாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இப்போது நாயகி வேடங்களில் நடிக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்தில் ஷாமிலி ஒரு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அதே போல் விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷாம்லி 2009-லேயே ஒரு தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார். ஆனால் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

மீண்டும் நடிக்க வந்தது குறித்து ஷாம்லி கூறுகையில், "உண்மையில் அஜித்துக்கு நான் நடிப்பதில் விருப்பமில்லை. எனினும் நான் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சொன்னவுடன் அதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

நான் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியவுடன், அவரே முன்வந்து என்னை புகைப்படங்கள் எடுத்தார்," என்றார்.

 

ரஜினியுடன் முதல் முறையாக இணையும் கிஷோர்!

சிறந்த நடிகராக பாராட்டுகளைப் பெற்று வரும் கிஷோருக்கு, கபாலி மூலம் புதிய பெருமை.

இந்தியாவின் முதல் நிலை நடிகரான ரஜினியின் படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் என்பதே அந்த பெருமை. படப்பிடிப்பு தொடங்க இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில், கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Rajini's Kabali: Kishore on board

ரஜினியோடு ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உட்பட பலர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மெட்ராஸ் படத்தில் நடித்தவர்களில் 80 சதவீதத்தினர் இந்தப் படத்தில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு முக்கிய வேடமொன்றில் கிஷோர் நடிக்கிறார். ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்லஅறிமுகத்தைப் பெற்றிருக்கும் கிஷோருக்கு, ரஜினி படத்தில் ஒப்பந்தமானது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாம்.