சென்சார் நோட்டீசிலிருந்து தப்பித்த கோச்சடையான்!

சென்னை: மண்டல தணிக்கைத் துறை விளக்கக் கடிதத்திலிருந்து தப்பித்திருக்கிறது ரஜினியின் கோச்சடையான். காரணம் சில பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் வெளியான செய்திகள்தான்!

கோச்சடையான் தமிழ்ப் படத்துக்கு சென்னையில் உள்ள மண்டல தணிக்கைக் குழு எந்த கட்டுமில்லாமல் யு சான்றிதழ் கொடுத்துவிட்டது.

சென்சார் நோட்டீசிலிருந்து தப்பித்த கோச்சடையான்!

இது மீடியாவில் பெரிய செய்தியாக வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், சிலர் ஒரு கேள்வியை எழுப்பினர்.

கோச்சடையான் இறுதிப் பணிகளை முடிக்க படத்தின் இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் சீனாவில் தங்கியிருந்த நேரத்தில், கோச்சடையானுக்கு யு சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.. இறுதிப் பணிகள் முடியாத ஒரு படத்துக்கு யு சான்றா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த செய்திகளைப் பார்த்த தணிக்கைத் துறையினர் கோச்சடையான் படக்குழுவுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பத் தயாராகினர்.

அதற்கு முன் கோச்சடையான் குழுவிடம் போனில் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போதுதான் சில உண்மைகள் அவர்களுக்கே தெரிய வந்துள்ளது. கோச்சடையான் தரப்பில் தவறு இல்லை என்றும், விஷயம் தெரியாமல் சிலர் தவறாக செய்தி வெளியிட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மண்டல தணிக்கைத் துறை அலுவலர் வி பக்கிரிசாமி கூறுகையில், "தணிக்கைச் சான்று பெற்ற விஷயத்தில் கோச்சடையான் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. காரணம் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, அதுவும் 2டி பதிப்புக்குத்தான் அவர்கள் சான்று பெற்றுள்ளனர்.

3டி மற்றும் இந்திப் பதிப்பின் வேலைகள்தான் இப்போது நடந்து வருவதாகக் கூறினர். இந்த பதிப்புகளுக்கு தனித்தனியாக தணிக்கைச் சான்று பெறவிருக்கின்றனர். எனவே இதில் எந்தத் தவறுமில்லை. பத்திரிகைச் செய்திகளை நம்பி நாங்கள் விளக்கம் கேட்கவிருந்தோம். நல்ல வேளை, கேட்கவில்லை!" என்றார்.

 

கோடை ஸ்பெஷல் லிஸ்டில் சேர்ந்தது நஸ்ரியாவின் திருமணம் எனும் நிக்கா!

கோடை விடுமுறை ஸ்பெஷல் படங்கள் பட்டியலில் கோடை ஸ்பெஷல் லிஸ்டில் சேர்ந்தது நஸ்ரியாவின் திருமணம் எனும் நிக்கா!  

'புரிதல் அவசியம் ' என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தப் படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதாம்.

இதுபற்றி இயக்குனர் அனீஸ் கூறுகையில், "இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்பிரதாயங்களையும், கலாசாரத்தையும் பின்னணி ஆக வைத்து எடுக்கபட்டுள்ளது.

நஸ்ரியாவின் நடிப்பும் சரி தோற்றப் பொலிவும் சரி, அவருக்கு என் இப்படி ஒரு புகழ் என்பதற்கு விடை தரும்.

ஜெய் எங்கேயும் எப்போதும் எல்லோரையும் எப்போதும் கவரும் வண்ணம் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் கிப்ரானின் இசை இந்த படத்தின் இன்னொரு ப்ளஸ். என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்தமைக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூற விரும்புகிறேன்," என்கிறார்.

ஏப்ரல் இறுதி அல்லது மேயில் இந்தப் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

 

த்ரிஷா நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் ஆட்களுக்கும் சம்பந்தமே இல்லை... ஏற்பாட்டாளர்கள் விளக்கம்!

டொரன்டோ: கனடாவில் த்ரிஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்களுக்கும் தொடர்பே இல்லை. இது முழுக்க முழுக்க ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த மார்ச் 29-ம் தேதி தமிழ் ஒன் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் த்ரிஷா.

த்ரிஷா நிகழ்ச்சிக்கும் டக்ளஸ் ஆட்களுக்கும் சம்பந்தமே இல்லை... ஏற்பாட்டாளர்கள் விளக்கம்!

இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்ட கனடிய தமிழ் இணையதளங்கள் சில, 'டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்டிருக்கிறார். இது தமிழர் விரோத செயல்,' என்று கண்டித்திருந்தனர்.

இதுகுறித்து நாமும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் தமிழ் ஒன் மற்றும் வணக்கம் எப்எம் நிறுவனத்தினர்.

அவர்கள் அளித்துள்ள விளக்கம்:

கனடிய தமிழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கம் ஊடகம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஒரு நல்ல நோக்கத்துக்காக நடந்த விழா இது. இதனை பிரபலப்படுத்தவே சென்னையிலிருந்து நடிகை த்ரிஷாவை அழைத்தோம்.

விழாவில் SAAC அமைப்பு சார்பில் 25000 டாலர்களை 120 ஆடிஸம் பாதித்த குழந்தைகளுக்கு த்ரிஷா கையால் வழங்கினோம். மேலும் இந்தக் குழந்தைகளுக்கு உதவ 10 பேர் தலா 1500 டாலர் செலுத்தி ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தனர்.

இந்த நல்ல நோக்கம் கொண்ட நிகழ்ச்சியை டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர்கள் செய்ததாக கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

 

ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தடை!

ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த, ராஜசேகர் என்பவர், சென்னை பெருநகர மூன்றாவது உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுவில், '8 பாயிண்ட்' நிறுவனத்தை சேர்ந்த அருமை சந்திரனும், நானும் சேர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் - நீலம் உபாத்யாயா நடிக்க, 'ஓம் சாந்தி ஓம்' படம் தயாரித்தோம்.

ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்துக்கு தடை!  

படத்தை சூரிய பிரபாகர் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும், செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையும், சாட்டிலைட் உரிமையும் எனக்கு தரப்பட்டு, இதற்காக முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது ஒப்பந்தத்தை மீறி, செங்கல்பட்டு ஏரியா மற்றும் சாட்டிலைட் உரிமைகளை, வேறு நபருக்கு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இதனால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும்,' என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 8ம் தேதி வரை, 'ஓம் சாந்தி ஓம்' படத்தை வெளியிடக்கூடாது, என இடைக்காலத் தடை விதித்தார்.

 

நடிகை லின்ட்சே லோஹனை வீட்டில் இருந்து விரட்டிய டைட்டானிக் ஹீரோ?

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ தனது வீட்டுக்கு வந்த நடிகை லின்ட்சே லோஹனை விரட்டியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

டைட்டானிக் படம் மூலம் பிரபலம் ஆனவர் லியோனார்டோ டிகேப்ரியோ. தற்போது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக
உள்ளார் அவர். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான உல்ப் இன் தி வால் ஸ்ட்ரீட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

நடிகை லின்ட்சே லோஹனை வீட்டில் இருந்து விரட்டிய டைட்டானிக் ஹீரோ?

இந்நிலையில் கேப்ரியோ தனது வீட்டில் செக்கர்ஸ் விளையாட தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்போது நடிகை லின்ட்சே லோஹனும் கேப்ரியோ வீட்டுக்கு வந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் தனது நடிப்புத் திறமைக்காக பாராட்டப்பட்டவர் லின்ட்சே. அதன் பிறகு ஓரினச்சேர்க்கை, மது, போதைப் பொருள் பழக்கத்தில் சிக்கி மார்க்கெட்டை இழந்தார். மேலும் அவ்வப்போது சிறை சென்றும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோஹனின் பிரச்சனைகளால் அவரை பார்ட்டிக்கு அழைக்க பிரபலங்கள் தயங்கும் நிலையில் தான் கேப்ரியோ வீட்டுக்கு அவர் வந்தார். வந்த சில நிமிடங்களில் உட்கார இடம் இல்லை, என் அருகில் இவர்கள் இருக்கக் கூடாது, அவர்கள் இருக்கக் கூடாது என்பது போன்று பிரச்சனைகளை கிளப்ப ஆரம்பித்தார் லோஹன். இதை பார்த்த கேப்ரியோ தனது நண்பர்களிடம் லோஹன் வந்த 15வது நிமிடத்திலேயே அவரை வெளியே அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

 

அதெப்படி... எல்லாருக்கும் லிப் டு லிப் கிஸ் கொடுக்க முடியும்? - லட்சுமி மேனன்

சென்னை: அதெப்படி கேட்பவர்களுக்கெல்லாம் உதட்டோடு உதடு முத்தம் தர முடியும்? என்று நடிகை லட்சுமி மேனன் கேட்டார்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுக்கு லட்சுமி மேனன் தந்த லிப் டு லிப் முத்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுவிட்டது.

இந்த முத்தம் குறித்து கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த லட்சுமி மேனன், 'கதைக்கு தேவையென்றால் யாருடன் வேண்டுமானாலும் முத்தக் காட்சியில் நடிப்பேன்," என்று கூறியிருந்தார்.

அதெப்படி... எல்லாருக்கும் லிப் டு லிப் கிஸ் கொடுக்க முடியும்? - லட்சுமி மேனன்

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"யாருடன் வேண்டுமானாலும் முத்தக் காட்சியில் நடிக்கத் தயார்னு சொல்லியிருக்கீங்களே... அது யாராக இருந்தாலும் பரவாயில்லையா?' என்று கேள்வி எழுப்பினர்.

"கதைக்குத் தேவையென்றால் என்றுதான் நான் சொன்னேன்," என்றார் பதிலுக்கு.

அப்போ கூட நடிக்கிறது யாரா இருந்தாலும் பரவால்லயா என்று திரும்பவும் கேட்க, "யாராயிருந்தாலும் எப்படி குடுக்க முடியும்... ஹீரோவா இருந்தா தரலாம்,' என்றார்.

உதட்டை குவிச்சி வச்சிகிட்டு, உங்க கால்ஷீட் கேட்டு வர ஒரு கூட்டமே தயாரா இருக்காமே லட்சுமி!!

 

இளையராஜா கச்சேரிக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கிய மதுரை ரசிகர்!

இளையராஜா கச்சேரிக்கு ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கிய மதுரை ரசிகர்!

மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் இளையராஜாவின் சங்கீதத் திருநாள் நிகழ்ச்சியின் டிக்கெட்டை ரூ 2.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் ஒரு இசை ரசிகர்.

அவருக்கு இளையராஜாவே தன் கையால் இந்த டிக்கெட்டை வழங்கினார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இளையராஜா. அவருடைய மகன் கார்த்திக் ராஜா ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ 1 லட்சத்துக்கும் அதிகமாக விலைகொடுத்து டிக்கெட் வாங்குவோருக்கு இளையராஜாவே தன் கையால் டிக்கெட்டைத் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த இளையராஜாவின் ரசிகர் ஒருவர் ரூ 2.5 லட்சம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து இளையராஜா கூறுகையில், "ரசிகர்களின் ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது. மதுரை மக்களைச் சந்திக்க நானும் வெகு ஆவலாக உள்ளேன். பெரிய விலை கொடுத்து டிக்கெட் வாங்கி வருகிறார்கள். அவர்களையெல்லாம் திருப்திப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக இருக்கும்," என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் மதுரை கீஷ்டு கானம் உள்ளிட்ட கடைகளில் கிடைக்கின்றன.

 

ஃப்ரீயா இருந்தா அப்படியே பண்ணை வீட்டுக்கு வாங்களேன்... - பிரபல நடிகையின் அழைப்பு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோவென்றிருந்த நடிகை அவர். அந்த நம்பர் ஒன் அந்தஸ்து இருக்கும்போதே இந்திக்கு ஓடினார்.

முதல் படம் பிரமாதமாகப் போனாலும், அடுத்தடுத்த தோல்விகள் நடிகையை முடக்கிப் போட்டுவிட்டன.

இப்போது இந்தியிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழுக்கும் வரமுடியாமல் தவிக்கிறாராம் அம்மணி.

இதற்கிடையில் கேரளாவில் கடற்கரையோர ஊர் ஒன்றில் பிரமாதமான பண்ணை வீட்டை விலைக்கு வாங்கு அதி நவீனத்துக்கு மாற்றியுள்ளாராம்.

இருக்கும் நேரமெல்லாம் ஓய்வுதான் என்பதால் பெரும்பாலும் இந்த பண்ணை வீட்டில்தான் பொழுதைக் கழிக்கிறாரம் நடிகை.

அதுமட்டுமல்ல, பாலிவுட்டில் தனது நட்பு வட்டத்திலிருக்கும் இயக்குநர்களுக்கு ஸ்பெஷலாக அழைப்பு விடும் நடிகை, வார இறுதி நாட்கள் தவிர்த்த மற்ற தினங்களில் தனது பண்ணை இல்லத்தில் வந்து தங்கிவிட்டுச் செல்லுமாறு அழைக்கிறாராம்.

சமீபத்தில் அப்படி அழைப்பு கிடைக்கப் பெற்ற ஒரு இயக்குநர், நடிகையின் பண்ணையில், அவரது அன்பான கவனிப்பில் மூன்று நாட்கள் தங்கிச் சென்றாராம்.

மும்பை போனதும் முதல் வேலையாக தனது அடுத்த படத்தில் பண்ணை நடிகைக்கும் ஒரு பாத்திரம் இருப்பதாக இனிப்புச் சேதி சொன்னாராம்!