காதலரை பதிவுத் திருமணம் செய்து சூப்பராக ரிஷப்ஷன் வைத்த நடிகை சோஹா அலி கான்

மும்பை: பாலிவுட் நடிகை சோஹா அலி கான் தனது காதலரான நடிகர் குணால் கேமுவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் தங்கை நடிகை சோஹா அலி கான். அவர் பாலிவுட் நடிகர் குணால் கேமுவை காதலித்து வந்தார். இந்நிலையில் கேமு சோஹாவுக்கு மோதிரம் அணிவித்து திருமணத்தை நிச்சயம் செய்தார்.

காதலரை பதிவுத் திருமணம் செய்து சூப்பராக ரிஷப்ஷன் வைத்த நடிகை சோஹா அலி கான்

இதையடுத்து சிறப்பு திருமண சட்டப்படி கடந்த 25ம் தேதி அவர்களின் திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள சோஹாவின் வீட்டில் அவரது தாய் பாலிவுட் நடிகை சர்மிளா தாகூர், சகோதரர் சயிப் அலி கான், அண்ணி கரீனா கபூர், சகோதரி சபா அலி கான் ஆகியோரின் முன்பு பதிவுத் திருமணம் நடந்தது. திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.

அதன் பிறகு பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகைகள் நேஹா தூபியா, மலாய்க்கா அரோரா கான், அம்ரிதா அரோரா, சோபி சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் சயிப் அலி கானின் மகன் சித்தி கரீனா கபூருடன் சகஜமாக பழகியதுடன், ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.

 

இந்தக் ‘கொசு’த் தொல்லை தாங்களயே.... சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

சென்னை: பதி நடிகர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். இப்போது அவர் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.

நட்புக்காக நண்பர்களின் படங்களில் சிறிய வேடங்களில் கூட தலை காட்டியவர் தான் இவர். ஆனால், அவரிடம் ஏன் இந்த அதிரடி மாற்றம் என அவரது நெருங்கிய வட்டாரத்தாரிடம் கேட்டால், ''குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால், நிறைய பேர் வந்து கதவை தட்டுகிறார்கள். சம்பளத்தை உயர்த்தி விட்டால், கதவை தட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்து விடும்'' என நடிகர் விளக்கம் கூறுகிறாராம்.

ஆனால், சிறிய படங்கள் மூலம் மக்களிடம் அதிக கவனிப்பைப் பெற்றவரான இந்த நடிகர், இவ்வாறு அதிரடியாக கோடிகளில் சம்பளத்தை உயர்த்தினால், சின்னத் தயாரிப்பாளர்கள் பலர் நடிகரை நெருங்கவே பயப்படுவார்களே... இதை ஏன் நடிகர் மறந்தார்.

 

கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கணைய பாதிப்பு காரணமாக நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை விந்தியா, இப்போது அதிமுகவில் முழுநேரப் பேச்சாளராக உள்ளார்.

கணையம் பாதிப்பு... நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி!

சில தினங்களுக்கு முன் வாரணாசிக்குச் சென்றிருந்தார் விந்தியா. அங்கிருந்து சென்னைக்கு திரும்பியதிலிருந்து பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் நேற்று அவர் உடல் நிலை மோசமடைந்து, மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து கேகே நகரில் உள்ள கேஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

பாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்

பாரத ரத்னா விருது பெறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை.. நாடு இப்போது தந்திருக்கும் கவுரமே பெரியது என நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

பாரத ரத்னாவுக்கு நான் தகுதியற்றவன் - அமிதாப்

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்மவிபூஷண்' வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மம்தா கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "அமிதாப்பச்சனுக்கு பத்மவி பூஷணுக்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்.. அதற்கு தகுதியானவர் அவர்," என கூறியிருந்தார்.

அமிதாப்

இதற்கு அமிதாப் பச்சன் தனது ‘ட்விட்டர்' பக்கத்தில் இப்படி பதிலளித்திருந்தார்:

"மம்தா அவர்களே, பாரத ரத்னா என்ற அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு இப்போது தந்திருப்பதே மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்," என்றார்.

 

தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படம் பற்றி பிரஸ் மீட் வைக்காமலே ஏகப்பட்ட செய்திகள் கொட்டுகின்றன.

காரணம், இந்தப் படம் பாலாவின் ஸ்பெஷல் உருவாக்கம் மற்றும் இளையராஜாவின் ஆயிரமாவது படம் என்ற பெருமை.

தாரை தப்பட்டையில் சசிகுமாருக்கு 7 கெட்டப்புகளாம்

படத்துக்கான இசையை இளையராஜா பல மாதங்களுக்கு முன்பே போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் திரைக்கதையை மீண்டும் மீண்டும் சரிபண்ணிக் கொண்டிருந்த பாலா, இரு மாதங்களுக்கு முன்புதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார். அதே வேகத்தில் பெருமளவு காட்சிகளை படமாக்கியும் விட்டார்.

படத்தின் நாயகன் சசிகுமாருக்கு இதில் ஏழு விதமான தோற்றங்களாம். எந்தத் தோற்றமும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் சமீப காலமாக சசியை எங்குமே பார்க்க முடிவதில்லை.

சசிகுமார் ஜோடியாக இந்தப் படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். விரைவில் மிக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தவிருக்கிறார்கள்.

 

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்! - ஆரம்பிச்சிட்டாங்கய்யா மிரட்டலை!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு புதிய மிரட்டல் வந்துள்ளது. அந்தப் படம் வெளியாகும் பிப்ரவரி 5-ம் தேதி, சென்னையில் 8 அரங்குகளில் குண்டு வெடிக்கும் என மிரட்டியுள்ளனர் சிலர்.

இதுகுறித்து சென்னையில் உள்ள உதயம் தியேட்டர் மேலாளருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. அஜீத், திருவான்மியூர் என்ற பெயரிலிருந்து வந்த கடிதத்தை தியேட்டரின் மேலாளர் ஹரிஹரன் வாங்கிப் பார்த்தார்.

அதில், "என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் ஆகும் அன்று உதயம் தியேட்டர் உள்ளிட்ட 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்! - ஆரம்பிச்சிட்டாங்கய்யா மிரட்டலை!

அதே போல அஜீத்தின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் பார்த்து பயந்துபோன ஹரிஹரன், உடனடியாக குமரன் நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று தியேட்டர்களை சோதனையிட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோல எதிர்மறை புரளிகளைப் பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர். இதுவும் அவர்களின் வேலையோ என்ற கோணத்தில் ஆராய்ந்து வருகிறது காவல் துறை.

என்னை அறிந்தால் படம் சென்னையில் மட்டும் 45 அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. தமிழகமெங்கும் 400 அரங்குகளில் வெளியாகிறது.

 

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்

கேரள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா கிராமத்தைச் சேர்ந்த இவர் பத்திரப்பட்டு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் மரணம்

தொடர்ந்து சமயமில்லாம் போலும், கண்ணக்குள், அங்குரி, ஆவேசம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து கேரள மக்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த ஆண்டு மசாலா ரிப்பப்ளிக் என்ற படத்தில் நடித்தார். இதுதான் அவரது கடைசி படம். மொத்தம் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

கேரள சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தவர் அரவிந்தன்.

கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அரவிந்தன் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். கடந்த 19-ந்தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தனர்.

ஆனால் மாலா அரவிந்தனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இன்று காலை (புதன்கிழமை) மாலா அரவிந்தன் மரணமடைந்தார்.

கோவையிலிருந்து மாலா அரவிந்தனின் உடல் கேரளாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டது. அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

அரவிந்தனருக்கு இவருக்கு கீதா என்ற மனைவியும். முத்து என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனர்.

 

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அஜீத்தின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கப் போவதாகவும், அஜீத் தனக்கு மிக சவுகர்யமான நாயகன் என்றும் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறியுள்ளார்.

என்னை அறிந்தால் படம் வெளியாவது குறித்து அதன் தயாரிப்பாளரான ஏ எம் ரத்னம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ரத்னம் பதில்

அப்போது அவரிடம், அடுத்தடுத்து அஜீத் படங்களைத் தயாரிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.எம்.ரத்னம், "ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்கப் போகிறேன்.

இந்தப் படத்தை வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்.

அஜித் எனக்கு சவுகரியமான கதாநாயகனாக உணர்கிறேன். அவரும் அப்படித்தான் கருதுகிறார். எனவேதான் எங்கள் கூட்டணி தொடர்கிறது', என்றார்.

 

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் அஜீத் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு குழுமிய தனது ரசிகர்களை நலம் விசாரித்தார். அவர்கள் தந்த அன்புப் பரிசை பெற்றுக் கொண்டதோடு, உடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார்.

வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜீத்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று படங்கள் எடுத்துக் கொண்டார் அஜீத். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜீத்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.

திருப்பதிக்கு அஜீத் செல்வது இது முதல் முறையல்ல. என்னை அறிந்தால் படத்துக்கு முன், வீரம் படம் முடிந்ததும் திருமலைக்குச் சென்று இயக்குநர் சிவாவுடன் மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியது நினைவிருக்கலாம்.

 

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரங்கள் ஆனபிறகுதான் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

அனைத்து தினசரிகள், முன்னணி இணையங்கள் தொடங்கி குசும்பர்களின் கிசுகிசு.காம்கள் வரை அனைத்திலும் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டேன். தேர்தல் தொடர்பாக கைகலப்புகளோ, கோர்ட்டில் மறுதேர்தல் கேட்டு மல்லுக்கட்டுகளோ இல்லை. இதற்கு மேல் யாரும் 'கிளம்பி' வரமாட்டார்கள் என்று திடமாக நம்புவோம்.

காரணம் அடிதடிகளில் ஈடுபட்டவர்களும் கோர்ட் கேஸ் என்று தடை வாங்கியவர்களும் ஒன்று, அளவுக்கு மீறி டயர்டாகி விட்டார்கள். அடுத்தது, அதில் முக்கால்வாசிப்பேர் பதவிக்கு வந்துவிட்டார்கள்!

இந்த அடிதடிகள் எப்போது துவங்கின என்று சின்னதாக ஒரு ஃப்ளாஷ்பேக் பார்ப்போம்.

2011 மே திமுக ஆட்சி அஸ்தமனமாகி மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 'அமரர்' ராமநாராயணன் இருந்தார். பெரும் பதவியில் இருந்தாலும் அவரளவுக்கு ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது அரிது. யாரும் தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச, ஒரே ஒரு போன் காலில் அவரை சந்தித்துவிட முடியும். அரசியலில் திமுக சார்புடயவராக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அரசியல் சார்பற்றே நடந்துகொண்டார்.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தலைவர் பதவிக்காலம் முடிய மேலும் ஒரு வருடம் இருந்தது. எனினும் தான் தலைமைப் பதவியில் இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் சரியாக வந்து சேராது என்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து உடனே தேர்தல் வைப்பது சரிப்படாது என்ற முடிவில், அதிமுக

ஆதரவாளர் என்று கருதப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்காலிக தலைவராக்கப்பட, அன்று யூனியனுக்குள் சனியன் புகுந்தது. 'எஸ்.ஏ. சி சங்கத்துக்காக எதையும் செய்ய மாட்டார். அம்மாவின் உண்மையான விசுவாசி நான்தான்' என்று கே. ஆர் கள்ளாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். சுமார் ஆறுமாத காலம் நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு ஒரு தேர்தல் நடத்தினார்கள். அந்தத் தேர்தலில் எஸ்.ஏ.சியிடம் 13 ஓட்டுக்களில் தோற்றுப்போன கே. ஆர் மீண்டும் போங்காட்டம் ஆட ஆரம்பிக்க, கவுன்சில் தெருச் சண்டை நடக்கும் இடமாக ஆக ஆரம்பித்தது. இவர்களது சண்டையானது குழாயடிச் சண்டைகளுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் இருந்தது.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

விதவிதமாக, வெரைட்டியாக அடித்துக் கொண்டார்கள். காலையில் கேயார் அணியில் இருந்து தாணுவிடம் சண்டை போட்டவர், மதிய லஞ்சை எஸ்.ஏ.சியிடம் சாப்பிட்டுவிட்டு, இரவு டின்னருக்கு மீண்டும் தாணுவிடமே தஞ்சமடைந்து கேயாரைக் கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்ட அந்தர்பல்டிகள் அடிக்கடி அரங்கேறின. நேனு, நீனு கடைசியா தாணு என்று ஆட்டங்கள் நடந்தன.

அடுத்து வரிசையாக மறுதேர்தல்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களுமாக கவுன்சில் அல்லுசில் ஆகி கடந்த ஞாயிறன்றுதான் 'ஐயாம் நவ் நார்மல்' என்று ஆகியிருக்கிறது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நடந்த அந்தத் தேர்தலில் சின்னப்புள்ளத்தனமான பஞ்சாயத்துக்கள் ஏதுமின்றி பேல்லட் பேப்பரில் ஓட்டுப்போட்டு வந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

முன்னர் நடந்த பல பஞ்சாயத்துக்களின் காரணகர்த்தா தாணுவையே சிலபல உள்நோக்குகளுடன் ‘ஒரு வாட்டி அவரும் என்னதான் பண்றாருன்னு விட்டுக் குடுத்து பாப்பமேப்பா' என்ற எண்ணத்தில் தலைவராக்கி இருக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சில முக்கிய தலை'களுக்கும் இது பொருந்தும்.

ஏனெனில் கடந்த நான்கு வருடங்களாக நடந்த வெட்டுக் குத்துக்களால் தயாரிப்பாளர் சங்கம் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கிறது. இனி ஒரு மறுதேர்தலோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ வந்தால் கவுன்சிலை தூக்கிக்கொண்டு போய் கண்ணம்மா பேட்டையில் அடக்கம் பண்ணவேண்டிய நிலை.

2008- திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட சிறுபட்ஜெட் படங்களுக்கான மானியம் கடந்த ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

FROM ADDRESS.....TO ADDRESS இரண்டுமே இல்லாத அனாதைக் கடிதம் போல, சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்தின் பிரச்சினைகள் குறித்து யார் யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாத நிலை மேற்படி சிலவருடங்களாகவே நீடித்து வருகிறது.

இதனாலேயே ஃபிலிம் தின்று படம் போட்ட ஏ.வி.எம், சூப்பர்குட், சிவாஜி பிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி நின்று திரையுலகில் நடப்பனவற்றை சினிமா பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

தேங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க, விவரமில்லாமல் அல்லது தக்க வழிகாட்டுதல் இன்றி படமெடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை ஒரிஜினல் பாம்புகளின் படையெடுப்பு போல் ஆனது.
பதில்களற்ற கேள்விகள் கவுன்சில் முழுக்க, ஐந்து வருடங்களாக பெருக்கப்படாத குப்பைகள் போல் குவிந்து கிடக்கின்றன.

என்ன செய்யப்போகிறார்கள் தாணுவும் அவரது சகாக்களும் என்று அறிந்துகொள்ள புதிய அணியின் செயற்குழு உறுப்பினரும், கடந்த ஏழு ஆண்டுகாலமும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராய் இருந்து வருபவருமான தயாரிப்பாளர் விஜயமுரளி அவர்களைச் சந்தித்தேன்.

பொதுவாக பேசிவிட்டு ‘புதுப்படம் எடுக்கவரும் தயாரிப்பாளர்கள் குறித்து ஒரு கதை சொன்னார் பாருங்கள்.. ‘அப்படியே நான் ஷாக்காயிட்டேன்....'


(இதை மட்டும் நாளையே தொடர்வேன்)

 

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதிஹாஸன்

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள்.

இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்.

பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட கலைஞர் ஸ்ருதிஹாஸன். மிக இளம் வயதிலேயே, தன் தந்தையின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.

ஆரம்பத்தில் லக், ஏழாம் அறிவு போன்ற படங்கள் அவருக்கு கைகொடுக்காவிட்டாலும், பின்னர் அவர் நடித்த தெலுங்கு, இந்திப் படங்கள் சக்கைப் போடு போட ஆரம்பித்துவிட்டன.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதிஹாஸன்

கவர்ச்சி, நடிப்பு, சர்ச்சை என எதிலுமே குறை வைக்காத நடிகை ஸ்ருதி. இன்று இந்திய சினிமாவில் இயக்குநர்களால் அதிகம் தேடப்படும் நடிகை ஸ்ருதிதான்.

இன்று தன் பிறந்த நாளையொட்டி, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், "எனது ரசிகர்கள் தாங்கள் செய்துள்ள நல்ல விஷயங்கள் பற்றி தெளிவாக எனக்கு மெயில் அல்லது சமூக வலைத் தளத்தில் செய்தி அனுப்புங்கள். அவற்றில் சிறந்த 5 மெயில்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு எனது புகைப்படத்துடன் கூடிய ஆட்டோகிராப் அனுப்புவேன். இவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தியும் உண்டு," என்று கூறியுள்ளார்.

 

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

ஐ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய், விக்ரம், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று விடிய விடிய கொண்டாடினர்.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இந்தப் படம் மூலம் முதல் முறையாக ரூ 100 கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்ட நடிகர் விக்ரம் மிக உற்சாகமாக பங்கேற்று, அனைவரையும் வரவேற்றார்.

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

நடிகர் விஜய்யும், ஷங்கரும் இந்த விருந்தில் பங்கேற்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

ஐ 'வெற்றி விருந்து'.... செம குஷியில் விஜய், விக்ரம், ஷங்கர்!

நல்ல குத்துப் பாடல்களைப் போடச் சொல்லி, டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர் விஜய் உள்ளிட்ட அனைவரும்.

இயக்குநர் ஷங்கர் அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் (பீகே ரீமேக் என்கிறார்கள்) இயக்கப் போவதாக வரும் செய்திகளை இந்த விருந்து உறுதிப்படுத்துவதாக பேச ஆரம்பித்துள்ளனர்.

 

தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன்... புலி.. உருவான பிரமாண்டங்களின் கலைக் கூடம்!

ஸ்டுடியோக்களை விட்டு தமிழ் சினிமா அவுட்டோருக்குப் பறந்துவிட்டாலும், பிரமாண்ட செட்கள் அமைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்றால்... அது ஸ்டுடியோவில்தான் சாத்தியம்.

இருப்பதிலேயே இன்றைக்கு மகா நவீனமாய் உள்ள ஸ்டுடியோ என்றால் அது ஆதித்யராம் ஸ்டுடியோதான்.

தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன்... புலி.. உருவான பிரமாண்டங்களின் கலைக் கூடம்!

சென்னை ஈசிஆர் சாலையில் சகல வசதிகளோடும் ஆதித்யராம் உருவாக்கியுள்ள இந்த ஸ்டுடியோவில்தான் தசாவதாரம் உருவானது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் உருவானது. இப்போது விஜய்யின் புலி படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் இங்குதான் நடந்தது.

இருபத்தைந்து ஏக்கரில், இரண்டு பகுதிகளாக இந்த ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளார் ஆதித்யராம். ஏக் நிரஞ்சன், குஷி குஷிகா, ஸ்வக்தம், சண்டதே சண்டதே படங்களைத் தயாரித்தவர்.

ஸ்டுடியோவை நிர்வகிப்பதோடு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களும் தயாரித்து வருகிறார் ஆதித்யராம்.