என்னைப் புரிந்து கொண்டவர் கிடைத்தால் 2வது திருமணம் – சோனியா அகர்வால்

சென்னை: நடிகை சோனியா அகர்வால் தன்னைப் புரிந்து கொண்ட ஒருவர் கிடைத்தால் 2 வது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

காதல் கொண்டேன் படத்தில் நடிகர் தனுஷின் ஜோடியாக அறிமுகமாகி பின்னாளில் அவரின் அண்ணன் செல்வராகவனின் நிஜ ஜோடியாக வாழ்க்கையில் இணைந்தவர். காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் நிஜ வாழ்க்கையில்,அந்தப் படத்தின் இயக்குநர் செல்வராகவனின் காதலியாக மாறியவர்.

I Am Ready For 2nd Marriage – Sonia Agarwal

தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் 7 G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார், 2006 ல் இயக்குநர் செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2010ம் ஆண்டில் விவகாரத்துப் பெற்று செல்வராகவனை விட்டுப் பிரிந்தார் சோனியா.

தற்போது செல்வராகவனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் உள்ளது, ஆனால் சோனியா அகர்வால் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திருமணத்தைப் பற்றி சோனியா அகர்வாலிடம் கேட்டபோது ‘ இப்போது நான் தனியாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன், எனக்கு நெருக்கமானவர்கள் என்னை 2 வது திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.

எனக்கும் அந்த ஆசை உள்ளது என்னைப் புரிந்து கொண்ட ஒருவர் கிடைக்கும் போது நான் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். விவேக்கின் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்து வெளிவந்த பாலக்காட்டு மாதவன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பொங்கலுக்கு ரெடியாகும் விஜய்- அட்லீ இணையும் படம்!

சென்னை: புலி படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 59 படத்தின் ரிலீஸ் செய்தி படக்குழுவினரால், இறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் புலி திரைப்படம் இந்த வருட விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.

எனினும் புலி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 100% உறுதியாகாத நிலையிலேயே உள்ளது, ஆனால் ஆச்சரியமாக விஜய் இயக்குநர் அட்லீயுடன் இணையும் விஜய் 59 படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர்.

'Vijay 59' Release Date Confirmed

ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், காவலன் மற்றும் ஜில்லா போன்ற படங்கள் பொங்கல் அன்று வெளியாகி வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அதோடு பொங்கல் சமயத்தில் படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக வசூலிலும் சாதனை படைக்கலாம்.

இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் இந்தத் தேதியை இறுதி செய்து இருக்கின்றனர், ஒருவேளை இந்தத் தேதியில் தாமதம் ஏற்பட்டால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குடியரசு தினம் அன்று படம் வெளியாகும்.

விஜய் 59 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நடிக்க, இவர்களுடன் இணைந்து ராதிகா,பிரபு, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

குடும்பம் + செண்டிமெண்ட் என்ற கலவையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார்.

 

சன் டிவியில் கோவை சரளா… மமதிக்கு என்ன ஆச்சு?

சென்னை: சினிமாவில் பிஸியாக காமெடி நடிகையாக வலம் வரும் கோவை சரளா சன் டிவியில் குழந்தைகளுக்கான கேம் ஷோவை நடத்தப்போகிறார். அதற்கான முன்னோட்டமே அமர்களமாக தொடங்கியுள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு உண்டு. சன் டிவியில் இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சிக்கு குழந்தைகள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு உள்ளது.

Kovai Sarala host SunTV Chellame Chellam

ஞாயிறு மாலையில் குட்டி சுட்டீஸ் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிற்பகல் நேரத்தில் தற்போது ‘செல்லமே செல்லம்' என்ற கேம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மமதி தொகுத்து வழங்கி வந்தார்.

விஜய் டிவியில் ஹலோ தமிழா, சன் டிவியில் ராணி மகாராணி, சூப்பர் குடும்பம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய மமதி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லமே செல்லம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். என்னவானதோ திடீரென்று தற்போது கோவை சரளா செல்லமே செல்லம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது.

Kovai Sarala host SunTV Chellame Chellam

காஞ்சனா பேய் படங்களில் நடித்த பிறகு குட்டீஸ் மத்தியில் கோவை சரளாவிற்கு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது அதனால்தான் கோவை சரளாவை தொகுப்பாளராக நியமித்துள்ளனர் டிவி நிர்வாகத்தினர்.

சீரியலில்தான் இவருக்குப் பதில் இவர் என்று கார்டு போடுவார்கள். ஆனால் நிகழ்ச்சி தொகுப்பாளரை தூக்கிப் போட எந்த காரணமும் தேவையில்லையே. என்ன நடந்துச்சோ? எது நடந்துச்சோ?

 

'வாலு' வந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்..

சென்னை: சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப் போவதை ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள படம் வாலு, அந்த படத்தில் நடிக்கையில் தான் சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்து அதன் பிறகு பிரிந்துவிட்டனர். வாலு படம் இதோ ரிலீஸ் ஆகிறது என்று கூறி ஒரு தேதியை அறிவிப்பார்கள். பின்னர் சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிப்பு வரும். மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள்.

Vaalu gets trolled in Social media

இப்படி பல காலம் கடந்து ஒரு வழியாக வாலு ஜுலை 17ம் தேதி ரிலீஸாகிறது என்றார்கள். ஆனால் அதற்கும் தற்போது வழியில்லை. காரணம் மேக்னம் ரேஸ் தயாரிப்பு நிறுவனம் வாலு ரிலீஸுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வாலு படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாள வினியோக உரிமையை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தங்களிடம் 2013ம் ஆண்டு விற்றார். தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. அதனால் ரிலீஸுக்கு தடை விதிக்கக் கோரி மேக்னம் ரேஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தின் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் வாலு படம் எப்பொழுது தான் வரும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் ஃபேஸ்புக்கில்,
வாலு வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் என்று தெரிவித்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

தனுஷின் மாரியை "சரமாரியாக" பார்க்கலாம்.. சென்சார் சான்று!

தனுஷின் அடுத்த படமான மாரிக்கு அனைத்துத் தரப்பினரும் பாரக்கத் தக்க படம் என யு சான்றளித்துள்ளது சென்சார் குழு.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - காஜல் அகர்வால் நடித்துள்ள படம் மாரி.

இந்தப் படம் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

Dhanush's Maari gets U

இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர்.

இந்தப் படம் அனைவரும் பார்க்கத் தகுந்த வகையில் உள்ளதான் தணிக்கைக் குழுவினர் அனைவரும் தெரிவித்ததால், யு சான்று வழங்கினர்.

Dhanush's Maari gets U

வாலு படம் வெளியாகவிருந்ததால்தான் மாரியை தள்ளிப் போட்டனர். இப்போது அந்தத் தேதியில் வாலு வராமல் போனால், மாரியை வெளியிட வாய்ப்புள்ளது.

 

படத்தை முடித்துக் கொடுக்காவிடில் தற்கொலை... செல்வராகவனை மிரட்டும் தயாரிப்பாளர்

சென்னை: இயக்குநர் செல்வராகவன் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்துக் கொடுக்காவிடில், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்குனராக ஆசைப்பட்டு எடுத்த மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் இதோ, அதோ என்று இழுத்துக் கொண்டே செல்கிறது. முதல் சில நாட்கள் இந்தப் படத்தை ஆர்வமாக இயக்கிய செல்வராகவன் பின்பு அதனை மனைவியிடம் விட்டுவிட்டு வேறு படங்களுக்குச் சென்று விட்டார்.

Maalai Nerathu Mayakkam  Movie Issue

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி படவேலைகளில் பிஸியாக இருக்கிறார் என்று அனைவரும் கூறினாலும், படம் ஒரு இன்ச் கூட முன்னேறவில்லை. மீண்டும் மீண்டும் இயக்குநர் செல்வராகவனிடம் கோலா பாஸ்கர் முறையிட்டும் செல்வராகவன் எந்தப் பதிலும் கூறவில்லையாம்.

பொறுத்துப் பார்த்த கோலா பாஸ்கர் தற்போது கொக்க கோலா ரேஞ்சுக்கு பொங்கி எழுந்துவிட்டார், என் படத்தை முடித்துக் கொடுக்காவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூற விஷயம் செல்வராகவன் காதுகளைச் சென்றடைய மனிதர் ஆடிப் போய்விட்டார்.

சிம்புவை வைத்து கான் படத்தை இயக்கி வந்தவர் தற்போது அந்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு, மாலை நேரத்து மயக்கத்தைக் கையில் எடுக்கவிருக்கிறாராம்.

மாலை நேரத்து மயக்கம் முடிந்ததும் தான் அடுத்த வேலைகளில் ஈடுபட இருக்கிறாராம் செல்வராகவன். இந்தக் கோலா பாஸ்கர் வேறு யாருமில்லை செல்வராகவன் படங்களுக்கு தொடர்ந்து படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர்.

அதுமட்டுமின்றி தனது சொந்த மகனை (பாலகிருஷ்ண கோலா) கதாநாயகனாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் மாலை நேரத்து மயக்கம் படத்தை சொந்தமாகத் தயாரித்து இருக்கிறார்.

இருவருக்கும் இடையே பிரச்சினை முற்றியதில் கான் படத்துக்கு வேறு ஒருவரைப் படத்தொகுப்பாளர் ஆக்கியிவிட்டார் செல்வராகவன்.

ஒன்னு மட்டும் புரியல, அது எப்படி சிம்பு படத்துக்கு மட்டும் இந்த மாதிரிப் பிரச்சினை எல்லாம் வருது...!

 

துபாயில் வெயில்… இத்தாலிக்கு பறந்த அஜீத் – ஸ்ருதிஹாசன்

ரோம்: துபாயில வெயில் கொளுத்துது... ஏரோப்ளேனை அப்படியே இத்தாலி பக்கம் திருப்பு என்று அஜீத் உத்தரவிட்டதன் விளைவு... இப்போ சோனியா காந்தியின் ஊரில் ‘தல 56' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்தாலி தேசத்தில் குளுகுளுவென ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடி வருகிறார் அஜீத்.

அஜீத் நடித்து வரும் ‘தல 56′ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக ‘தல 56′ குழுவினர் அனைவரும் துபாய் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன.

Why Ajith and Shruthi Haasan flew off to Italy?

வாட்டும் வெயில்

கடந்த வாரம் துபாய் சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், துபாயில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அடுத்த மாதம் துபாய் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளி தினத்தின் ரிலீஸ் செய்ய வேண்டியதுள்ளதால் படப்பிடிப்பை தாமதிக்க விரும்பாத சிறுத்தை சிவா, உடனே துபாய் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

ஸ்ருதிஹாசனுடன் டூயட்

லட்சுமி மேனனுடன் முதல்கட்ட படபிடிப்பும், கபீர்சிங் உடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட அஜீத், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாட ரெடியாகி வந்தார்.

இத்தாலியில் சூட்டிங்க

துபாயில் வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்து வந்தாலும், தற்போது ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் துபாயில் அனுமதி கிடைக்கவில்லையாம். எனவேதான் இப்படக்குழு தற்போது இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.

அஜீத் - ஸ்ருதி

இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் நேற்று முதல் இப்படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அஜித், ஸ்ருதியின் டூயட் முடிந்த உடன் ஜூலை 15ம் தேதிக்குள் இந்தியா திரும்பவுள்ளனர்.

கொல்கத்தாவில் தொடரும்

அஜீத், ஸ்ருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இதன் நான்காவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

 

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்... "உச்சகட்டங்கள்" மெளனம் சாதிப்பது ஏன்?

சென்னை: ;சங்கக் கட்டிடத்தின் சுவர்களைப் பிடித்துக் கொண்டு ஆமை நடிகரும், கோழி நடிகரும் மோதி வருகின்றனர். இதனால் சங்கத் தேர்தல் படாத பாடு பட்டு வருகிறது.

இருவரின் பின்னணியிலும் பலர் பக்க பலமாக இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இவர்களில் யாருக்கு உச்சநடிகர்களின் ஆதரவு என்பதை அறிந்து கொள்ளத் தான் தமிழ் திரையுலகமே ஆவலாக உள்ளது.

Big stars afraid of ruling party

ஆனால், உச்ச நடிகர்கள் இருவரும் பயங்கர விவரமாக உள்ளார்களாம். இந்த விவகாரத்தில் தப்பித் தவறியும் மூக்கை நுழைத்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். இது தொடர்பாக இருவரும் ரகசியமாக பேசி, ஒரு உடன்படிக்கையும் செய்துள்ளனர். வாயே திறக்கக் கூடாது ப்ரோ என்று பேசி வைத்துக் கொண்டு கப்சிப் என்று இருக்கிறார்களாம். அதன்படி தான் இருவரும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்கள்.

இவ்வாறு உச்ச நடிகர்கள் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட சங்கம் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது தான் எனக் கூறப்படுகிறது. தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பது இவர்களின் எண்ணமாம்.

ஏற்கனவே இவர்களின் படங்கள் சமீப காலமாக பல சிக்கல்களைச் சந்தித்து வருவதால் மறுபடியும் புது வம்பை விலைக்கு வாங்க வேண்டாமே என்பதுதான் இவர்களின் அமைதிக்குக் காரணமாம்.

உலக மகா சூப்பரப்பு!

 

ஐ படத்தின் வசூலை முறியடிக்குமா பாகுபலி?

சென்னை: ஷங்கரின் ஐ பட வசூலை பாகுபலி முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகை வியாபித்துள்ளது.

தென்னிந்தியத் திரைப்படங்களில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக, ஷங்கரின் ஐ திகழ்கிறது. தென்னிந்தியத் திரைப்படங்களாலும் வசூல் சாதனையை நிகழ்த்த முடியும் என்று முதல்முறையாக உலகிற்கு எடுத்துச் சொன்ன படம் ஷங்கரின் ஐ.

SS Rajamouli’s 'Baahubali'  Beat Shankar's 'I' ?

2015 ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகெங்கும் வசூல் செய்த மொத்த தொகை சுமார் 202 கோடி ரூபாய் ஆகும். இந்த வசூலை இதுவரை எந்தத் தென்னிந்தியத் திரைப்படங்களும் செய்ததில்லை.

ஐ திரைப்படம் வெளிவந்து 6 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த மாதம் வெளியாக இருக்கும் பாகுபலி திரைப்படம், ஐ படத்தின் வசூல் ரெக்கார்டை முறியடிக்கும் என்று திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒருபேச்சு எழுந்துள்ளது.

ஷங்கர் ஐ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நன்கு விளம்பரம் செய்தார் ஆனால் பாலிவுட்டில் விளம்பரம் செய்யத் தவறிவிட்டார், இதன் விளைவாக வெறும் 16 கோடியை மட்டுமே இந்தியில் ஐ வசூலித்தது.

ஷங்கரை விட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எல்லா வகையிலும் பாகுபலி படத்தை நன்றாகவே விளம்பரம் செய்கிறார், தென்னிந்திய மொழிகள் தவிர்த்து இந்தியிலும் பெரிய அளவில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

இந்தியில் படத்தை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் சுமார் 1500 திரைகளில் படத்தை நன்கு விளம்பரம் செய்து வெளியிடுகிறார். உலகெங்கும் சுமார் 4000 திரையரங்குகளில் பாகுபலி வெளியாகிறது.

இன்னும் 2 தினங்களில் வெளியாக இருக்கும் பாகுபலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது, ரசிகர்கள் பலரும் விடுமுறை எடுத்துக் கொண்டு படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கண்டிப்பாக ஐ படத்தின் வசூலை பாகுபலி முறியடிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.