'நண்பன்' படம் வெற்றி பிறகு ஓய்வில் இருக்கும் ஷங்கர், இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.
லாரன்ஸ் வேடத்தில் உபேந்திரா
லாரன்ஸ் நடித்த வேடத்தில் கன்னட ஹீரோ உபேந்திரா நடிக்கிறார். தமிழில் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை ராம நாராயணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: இது நான் இயக்கும் 125வது படம். கன்னடத்திலும் நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். தமிழில் வெளியான 'காஞ்சனா', கன்னடத்தில் 'கல்பனா' என்ற பெயரில் உருவாகிறது. காஞ்சனா பிரபல நடிகையின் பெயர். அதேபோல் கல்பனாவும் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடித்த பிரபல நடிகை. இதில் உபேந்திரா ஹீரோ. சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ருதி உள்பட பலர் நடிக்கின்றனர். கன்னடத்தில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் இது. வெவ்வேறு மொழிப் படங்களில் பணியாற்றுவது நல்ல அனுபவம். பல ஆங்கில படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மன் பற்றி 7ம் அறிவு படம் உருவானது. அவரது சீடர்கள் பலர் சீனாவில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் கதையை மையமாக வைத்து படங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு படம்தான் ஜெட்லி நடித்து தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் போதி தர்மன். அதிகபட்ச கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தமிழில் தொய்வு இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு காட்சிகளை எடிட்டிங் செய்தேன். முதலில் 100 பிரின்ட் வெளியானது. அது இப்போது 120 ஆக அதிகரித்திருக்கிறது.
இளையராஜா இசையில் "நீ தானே என் பொன்வசந்தம்"?
கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணையப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இந்த கூட்டணியும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹாரிஸையே கௌதம் நாடியதாக தெரிகிறது. இதனிடையே இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் தான்...