சென்னை: த்ரிஷாவுக்கு கோ பட நாயகி கார்த்திகாவை இவ்வளவு பிடிக்கும் என்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது.
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன. மேலும் அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்துள்ள அன்னக்கொடி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அன்னக்கொடிக்கு விளம்பரமே செய்யவில்லை என்று நினைத்த நிலையில் ஒருவர் அப்படத்தை தென் மாவட்டங்களில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தான் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் படத்திற்கு தடை கோரியுள்ளாரே அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று ஏற்கனவே பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். படம் ரிலீஸாகும் நேரத்தில் ஓசியில் நல்ல விளம்பரம் தான்.
சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். கார்த்திகாவின் பிறந்தநாளையொட்டி பல பிரபலங்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் த்ரிஷாவின் ட்வீட் தான் பலரின் கவனத்தை ஈர்க்கிறது. ட்வீட்டைப் பார்ப்பவர்கள் அடடா த்ரிஷாவுக்கு கார்த்திகாவை இவ்வளவு பிடிக்குமா என்று நினைக்கும்படி உள்ளது.
த்ரிஷாவின் ட்வீட்,
@KarthikaNair9 happppy happpy bdayyy sexyyyy womannn hav a great oneee . much love n kisses