வெளியானது பாண்டிராஜ்- சூர்யாவின் ஹைக்கூ பர்ஸ்ட் லுக்

சூர்யா தயாரித்து நடிக்க, பாண்டிராஜ் இயக்கி வரும் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் தோற்ற போஸ்டர்கள் இணையத்தில் வெளியானது.

சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலர் நடித்து வரும் படம் 'ஹைக்கூ'. பிசாசு பட இசையமைப்பாளர் ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Haiku movie first look released

பாண்டிராஜ் இயக்கி வருகிறார். முதல் பிரதி அடிப்படையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த 'இது நம்ம ஆளு' படத்தின் தாமதத்தால் 'ஹைக்கூ' படத்தை துவங்கினார் பாண்டிராஜ். இப்போது படப்பிடிப்பையே முடித்துவிட்டார்.

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாஸ்' படத்துடன் 'ஹைக்கூ' படத்தின் டீஸர் இணைக்கப்பட்டுள்ளது. இன்று சமூக வலைதளங்களில் 'ஹைக்கூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை 'ஹைக்கூ' டீஸரையும் யூ - டியூப் தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

 

100 கோடி ரேசில் ஜெயிக்கப் போவது பிகுவா (அ) தனு வெட்ஸ் மனுவா?

மும்பை பாலிவுட்டில் 100 கோடி படங்களின் வரிசையில் இந்த வருடம் முதலில் இணையப் போவது தீபிகாவின் பிகு படமா அல்லது கங்கனாவின் தனு வெட்ஸ் மனு ரிட்டர்னா என்பது இன்னும் தெரியவில்லை, நல்ல விமர்சனம் தெளிவான கதை குடும்ப செண்டிமெண்ட் எல்லா விசயத்திலும் இரண்டு படங்களுமே ஒன்றை மிஞ்சவில்லை. எனினும் பிகுவை விட தனு வெட்ஸ் மனுவிற்கு தற்போது திரையரங்குகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த பிகு படம் ஆரம்பத்தில் நல்ல வசூலைக் கொடுத்தது. ஆனால் கடந்த வாரம் வெளியாகிய தனு வெட்ஸ் மனு ரிடர்ன் படத்தால் வசூலில் தற்போது தொய்வு விழுந்துள்ளது என்றே தோன்றுகிறது, 100 கோடி படங்களின் நாயகி என்ற பட்டப் பெயரைத் தீபிகா தக்க வைத்துக் கொள்வாரா என்பது இன்னும் சற்று தினங்களில் தெரிந்து விடும். பிகு ஏற்கனவே உலக அளவில் 100 கோடியை வசூலில் தொட்டு விட்டது ஆனால் இந்தித் திரயுலகில் தொடுமா என்பது இனிமேல் தான் தெரியும்

Box Office Collection: 'Tanu Weds Manu Returns' a Blockbuster; 'Piku' Yet to Reach 100 Crore Mark in India

மூன்று வாரங்களில் பிகு படம் 74.33 கோடியும் ஒரே வாரத்தில் தனு வெட்ஸ் மனு 62.95 கோடியும் வசூலித்துள்ளது, தனு வெட்ஸ் மனு படத்தால் பிகு படத்தின் வசூல் குறைந்துள்ளது தற்போது உள்ள நிலவரத்தை வைத்துப் பார்த்தால் இந்த வருடத்தின் முதல் 100 கோடியை வசூலித்த படம் என்ற பெருமையை தனு வெட்ஸ் மனு தட்டிச் செல்லும் போலத் தெரிகிறது.

தமிழ்நாட்ல படம் ஓடுறதே பெரிய பிரச்சினை இதுல நாங்க எங்க 100 கோடியப் பாக்குறது..

 

“பர்மிய முஸ்லிம்களை காப்பாற்றுவோம்” – பேஸ்புக்கில் ஆதரவு தரும் நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்காக நடிகர் விஜய் சேதுபது தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு காலமாக பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினர் "மியன்மாரை சேந்தவர்கள் அல்ல" என்ற கருத்து பரப்பப்பட்டு பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் அவர்கள் வெளியேற்றும் வகையில் அவ்வப்போது இனக்கலவரங்கள் நடைபெற்று வருகிறது.

இதனால் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன‌.

Vijay sethupathi supports Myanmar Muslims in FB

புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.

இதனால் இப்பிரச்சனை உலக அரங்கின் கவனத்தை ஈர்த்து தற்போது பாதிக்கப்பட்ட ரோஹிங்கிய‌ மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழும்ப தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நிலையில் தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி "பர்மாவில் அப்பாவி முஸ்லிம் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" என பேஸ்புக் மூலம் ஆதரவு குரல் எழுப்பியுள்ளார்.

 

கொளுத்தும் வெயில்…. கொடைக்கானல் சூட்டிங்… கொண்டாட்ட டீம்!

அக்னி நட்சத்திர வெயில் பட்டையை கிளப்ப நட்சத்திர பட்டாளத்தோடு கொடைக்கானலுக்கு கிளம்பிவிட்டார் சித்தி நடிகை. கூல் கிளைமேட்டை அனுபவித்தது போல ஆச்சு சூட்டிங் வைத்தது போலவும் ஆச்சு என் டூ இன் ஒன் வேலையில் ஈடுபட்டுள்ளார் சித்தி. சீரியலின் டி.ஆர்.பியை எகிறவைக்க தற்கொலை சீனை வைத்து நினைத்ததை சாதித்து கொண்டார் சித்தி.

சித்தி நினைத்தது போலவே ‘அவங்களை கொன்னுடாதீங்க' என்று ரசிக ஜனங்கள் கதற மறுபடியும் கதையில் ட்விட்ஸ்ட் வைத்து விட்டார் நடிகை. மொத்த யூனிட்டும் கொடைக்கானலில் குவிந்துள்ளது. நடிகர்களின் குடும்பத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் முகாமிட்டுள்ளனராம்.

பகலில் சூட்டிங் இரவில் கொண்டாட்டம் என ஒரே உற்சாகம்தானாம். எப்படியோ கொதிக்கிற வெயிலுக்கு ஜில் கிளைமேட்டில் சூட்டிங் நடத்தி தினந்தோறும் ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகிறார் சித்தி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

 

'வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!' - திருப்பூர் சுப்பிரமணியம்

வேந்தர் மூவீசுக்கு படம் செய்து தருவதாக ரஜினி எந்த விதமான வாக்குறுதியும் தரவில்லை. அதுபற்றி யாரிடமும் அவர் பேசவும் இல்லை, என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதனால் அந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது. அது குறித்த ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திடப்பட்டு, அதை தாணுவிடமிருந்து பெறுவது போல போஸ் கொடுத்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான், இப்போது ரஜினி வேந்தர் மூவீசுக்கு படம் பண்ண வேண்டும் அல்லது மேலும் ரூ 15 கோடி தர வேண்டும் என பேட்டியளிக்கிறார்.

Rajini never says to do movie for Vendhar, says Tiruppur Subramaniyam

மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிங்கார வேலன், 'சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஆறு கோடியே ஒரு லட்சம் இதுவரை வந்து சேரவில்லை' என்றார்.

அதோடு பனிரெண்டரை கோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர் மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத் தருவார் என்றும் அந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணை தயாரிப்பாளர்களாகி விடுங்கள்.

அந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி வாய் மொழியாகச் சொன்னதாகவும் தெரிவித்தார்கள்.

இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இது கடைந்தெடுத்த பொய் என்றார்.

பனிரெண்டரை கோடியில் ஆறரைக் கோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே?

எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ஆறு கோடிதான் வந்தது. அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக் கொடுத்துவிடுவோம். அவர் மகள் கல்யாணம் முடிந்ததும் இந்த செட்டில்மென்ட் முடிந்துவிடும்.

ராக்லைன் வெங்கடேஷ் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்களும் தாணுவும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே?

அவர் சொல்வது அனைத்துமே கடைந்தெடுத்த பொய்கள். எங்களுக்கு வந்தது ஆறு கோடிதான் அதைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன் வெங்கடேஷிடமே கேட்டுக் கொள்ளலாம்.

வேந்தர் மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத் தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே?

ரஜினி சாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள். ரஜினி சார் என்றைக்குமே இப்படி வாக்குறுதிகள் தந்ததில்லை. வெறும் பப்ளிசிட்டிக்காக திரும்பத் திரும்ப இப்படி பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிங்கார வேலன். வந்த வரை லாரம் என்று அவருடன் இருக்கும் சிலரும் அமைதியாக அவருக்கு உடன்படுகிறார்கள். மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுதான் வருத்தமாக உள்ளது.

 

நடிகர் சங்கத்துடன் மீண்டும் மோதும் விஷால்... தலைவர் பதவிக்கு குறி?

புதுக்கோட்டை: நடிகர் சங்க கட்டடம் சொந்தமாக கட்டப்படாவிட்டால், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர, வேறு வழியில்லை என, நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை, நடிகர் விஷால் மற்றும் கருணாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

Actor Vishal raise his Voice against South india Film actors association

பின்னர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது....

சென்னையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் ஒரு திரைப்பட நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்டடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றால், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு தங்கள் தரப்பில் இருந்து போட்டியிட நேரிடும்.

இவ்வாறு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தயாராகும் இளம் நடிகர் பட்டாளம்

பட வாய்ப்பே இல்லாத ஓய்வுபெற்ற நடிகர்கள், சினிமாவிலேயே நடிக்காதவர்கள், சங்கத்தில் அமர்ந்து கொண்டு எந்த பிரச்சினையாக இருந்தாலும் இளம் நடிகர்களை அழைத்து மிரட்டும் பாணியில் விசாரிப்பது இளம் நடிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் இளம் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடிகர் சங்கத்துக்கு எதிராக ஒரு இளம் தலைமையை உருவாக்க தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வேலையை முன்னால் நின்று செய்வது விஷால் என்கிறார்கள் திரைப்படத்துறையில். அதனால் அவரையே வரும் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நிறுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு செய்தியாக சரத்குமார் வகிக்கும் நடிகர்சங்கத் தலைவர் பதவிக்கு இளைஞர் பட்டாளம் சார்பில் நடிகர் சிவக்குமாரை நிறுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

பொதுச் செயளலாளர் பதவியில் நீடிக்கவே ராதாரவியும் விரும்புகிறார்.

 

மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்!

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம்.

சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

Surya appears as Eelam Tamil in Massu

இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல் முறை. அதனால், படத்தை மகிழ்ச்சியோடு பாருங்கள்," என்று கூறியுள்ளார்.

‘மாசு' படம் பேய் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். பிரேம்ஜி, சமுத்திரகனி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் படம்... தீபாவளிக்கு அஜீத் படம்!

விஜய்யின் புலி படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கும், அஜீத் படம் தீபாவளிக்கும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் இப்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன் ஜோடியாக நடிக்க, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vijay, Ajith movies release date

இந்தப் படத்தை விஜய்யின் மேனேஜர் பிடி செல்வகுமாரும் தமீம் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

தலை 56

அடுத்து அஜீத் படம். இந்த ஆண்டின் பெரிய ரிலீசாக வரவிருக்கும் அஜீத்தின் 56வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது கோடையை முன்னிட்டு படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அஜீத், அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.

சிவா இயக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார்.

 

ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் படங்களைத் தயாரிக்கும் கலைப்புலி தாணு!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் ஹாட்டஸ்ட் தயாரிப்பாளர் என்றால் அவர் கலைப்புலி தாணுதான்.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களைத் தயாரிக்கிறார் தாணு. ஒரு படம் ரஜினி நடிக்க ரஞ்சித் இயக்குவது.

Thanu's projects with Rajini, Vijay

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரம் வெளியாக உள்ளது. இயக்குநர் ரஞ்சித் மலேசியாவில் லொகேஷன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த படம் விஜய் நடிக்க, அட்லீ இயக்குவது.

இந்தப் படத்தில் சமந்தாவுடன் மீண்டும் ஜோடி போடுகிறார் விஜய்.

இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறார் தாணு என்பதுதான் இதில் விசேஷம்.

தமிழ் சினிமாவில் எந்தத் தயாரிப்பாளரும் இதுவரை இப்படி, ஒரே நேரத்தில் இரு பெரும் படங்களைத் தயாரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்.. நேரம் ஹீரோவுக்கு "நேரம்" கைகொடுக்குமா?

திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலியின் படங்களான பிரேமம் மற்றும் இவிடே ஆகிய இரண்டு படங்களும் சொல்லி வைத்தது போல ஒரே நாளில் நாளை வெளியாகின்றன இது நிவினுக்கு அதிர்ஷ்டத்தைத் தருமா அல்லது அவரது மார்க்கெட்டை சரித்து விடுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Actor Nivin Paulys two movie’s releasing tomorrow

இப்போது இருக்கிற சூழ்நிலையில் நிவினின் நேரம் நன்றாகத் தான் உள்ளது ஆனால் இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாவது கண்டிப்பாக அவரது நேரத்தை பதம் பார்க்கக் கூடியஒருசெயல்தான்என்பதில்சந்தேகமில்லை,இவிடேபடத்தில்பிரித்விராஜ்ஹீரோவாகவும் நிவின் வில்லனாகவும் நடித்துள்ளனர் பிரேமம் படத்தில்நிவின்சிங்கிள்ஹீரோ, ஆனால் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று செய்தி பரவி விட்டால் மற்றொரு படத்தின் வசூல்கண்டிப்பாக பாதிக்கும்.

எப்போதாவது ஹீரோயின்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதுண்டு ஆனால் பொதுவாக படங்களை பொறுத்த வரை ஹீரோக்களின் மார்க்கெட்டைதான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள், எந்த ஒரு ஹீரோவுக்கும் இந்த மாதிரி விஷப்பரிட்சையில்இறங்க மனம் வராது தான் ஆனால் நிவின் என்ன வேண்டுமென்றேவா செய்கிறார், படங்கள் வெளியாவது இயக்குனர் மற்றும்தயாரிப்பாளர்களின் கையில் அல்லவா உள்ளது எனவே பட வெளியீட்டில் அவர் தலையிட முடியாது, ஒன்று செய்யலாம்கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கலாம்.

ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் நிவினுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு சொல்ல ஆசைதான்...பாக்கலாம்

 

கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் இயக்கும் த்ரில்லர் படம் '54231'!

மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் '54231' .

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார்.

'ரம்மி', 'தாண்டவக்கோனே' படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னட வரவு பவித்ரா.

54321.. A new Thriller from Karthik Subbaraj's assistant

'நெருங்கிவா முத்தமிடாதே' நாயகன் சபீர் வில்லனாக இருக்கிறார். மேலும் ரோகிணி, ரவி ராகவேந்தர், 'பசங்க' சிவகுமார் நடித்துள்ளனர்.

படக் கதையில் இரண்டு மணி நேரம் நடக்கும் கதையைத் திரையில் இரண்டு மணி நேரம் நடக்கும் காட்சிகளாக உருவாக்கி உள்ளது படத்தின் சிறப்பு.

அதென்ன 54321?

"படத்தில் 5 பாத்திரங்கள், 4 விதங்களில் 3 கொலைகளை 2 மணி நேரத்தில் செய்து பழி தீர்த்தல் என்கிற 1 விஷயத்தை எப்படி நிறைவேற்றி முடிக்கிறார்கள் என்பதே கதை," என்கிறார் இயக்குநர் ராகவேந்திர பிரசாத்.

'காதல்' புகழ் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பாலசுப்ரமணியெம்மின் உதவியாளர்

எடிட்டிங்- ரஜீஷ், ஸ்டண்ட் -திலிப் சுப்பராயன், கலை -ராம், நடனம் -ஷெரீப், பாடல்கள் - நா, முத்துக்குமார்.

படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவரவுள்ள' 54321' படத்துக்கு இப்போதே 5..4..3..2..1 என்று கவுண்ட் டவுன் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்!

 

சிம்பு படத்தில் டிஷ்கியான், டிஷ்கியான் செய்யும் டாப்ஸி

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்தில் போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடிக்கிறார்.

தனுஷின் நண்பேன்டாவான சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படம் கான். கான் என்றால் காடு என்று அர்த்தம். இந்த படத்தின் பட்பிடிப்பு துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார்கள்.

Taapsee turns police officer for Selvaraghavan

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். கான் படத்தில் சிம்பு முருக பக்தராக வருகிறார். டாப்ஸியோ முதல் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காஞ்சனா 2 படத்தில் பேயாக வந்த டாப்ஸி தற்போது போலீஸ் அதிகாரியாக ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

கான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை காட்டுப்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். டாப்ஸி திரு இயக்கத்தில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தமிழ்ச்செல்வி என்ற குடும்பத்து பெண்ணாக வருகிறாராம்.

கான் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. அண்ணன் இயக்கத்தில் நண்பன் நடிக்கும் படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

1900 அரங்குகளில் சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி'

சூர்யா நடித்துள்ள மாசு என்கிற மாசிலாமணி படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது.

சூர்யா நடித்த படங்களிலேயே அதிக அரங்குகளில் வெளியாகும் படம் என்ற அறிவிப்புடன் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

Massu is the biggest release in Surya's career

இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் சேர்த்து 1900 அரங்குகளில் மாசு படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இவற்றில் தமிழகத்தில் மட்டும் 425 அரங்குகளில் படம் வெளியாகிறது. ஆந்திரா - தெலங்கானாவில் 570 அரங்குகளிலும், கேரளாவில் 142 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

கர்நாடகத்தில் 100 அரங்குகள், இந்தியாவின் பிற பகுதிகளில் 140 அரங்குகள் இந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

உலகின் பிற பகுதிகளில் 700 அரங்குகளில் மாசு வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விரைவில் வெளியாகிறது இண்டிபெண்டன்ஸ் டே 2

லாஸ் ஏஞ்செல்ஸ்: 1996 ல் வெளிவந்து வெற்றிபெற்ற இண்டிபெண்டன்ஸ் டே படத்தின் இரண்டாம் பாகமான இண்டிபெண்டன்ஸ் டே 2 விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது. முதல் பாகத்தை எடுத்த ரோலன் எம்மிரிச் இரண்டாம் பாகத்தை கிட்டத்தட்ட 19 வருடங்கள் களைத்து இயக்கி இருக்கிறார் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாம் பாகத்திலும்நடித்திருக்கிறார்கள் ஒரே ஒருவர் மட்டும் நடிக்கவில்லை அவர் வில் ஸ்மித்.

Independence Day 2 coming soon

அவரைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவருமே உள்ளேன் ஐயா என்று இந்தப் படத்தில் அட்டன்டன்ஸ் போட்டிருக்கிறார்கள் பில்புல்மேன்,ஜெப் கோல்ட்பிலம், பிரென்ட் ஸ்பின்னர், விவிகா மற்றும்முக்கியமானநடிகர்கள்அனைவரும்நடித்திருக்கிறார்கள்படத்தைஇயக்குவதோடு நிறுத்தாமல் திரைக்கதையையும் கார்ட்டர் பிளேன்சர்ட் மற்றும் டீன்டெவிலுடன் சேர்ந்து எழுதி இருக்கிறார் இயக்குனர் ரோலன் எம்மிரிச். முதல் பாகத்த தயாரிச்ச 20 த் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனமேஇந்தப் படத்தையும்தயாரிச்சிஇருக்காங்க ( ஹாலிவுட்ல வர்ற முக்கால்வாசி படத்த இவங்க தான் எடுக்கிறாங்க போல)

கதை என்ன எவ்ளோ தைரியம் இருந்தா ஹாலிவுட் மூவில போய் கதைய கேட்பிங்க சாரி எதிர்பார்ப்பிங்க சரி சரி சொல்றேன் வழக்கம் போல முதல் பார்ட்ல பாத்த மாதிரி ஏலியன்ஸ் ( உண்மையிலே இருக்காங்களா என்ன ) இந்த பூமிய குறிப்பா அமெரிக்காவ தாக்கி அழிக்க வராங்க வழக்கம் போல நம்ம ஹீரோக்கள் ( ஹாலிவுட் படத்துல எல்லோருமே ஹீரோதான் ) அதை தடுத்துப் போராடி அமேரிக்காவ சாரி இந்த பூமிய எப்படிக் காப்பாத்தறாங்க இது தான் கதை. அதிரடி ஆக்சன் மற்றும் நல்ல வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்னு எல்லோரும் சொல்றாங்க அடுத்த மாதம் ஜூலைல படம் வெளியாகுது. படத்தோட முதல் பாகம் 75 மில்லியன் செலவில எடுக்கப்பட்டு 817 மில்லியன் வசூல் செஞ்சது அதோட இந்தப் படம் அதிகவசூல்சாதனைய நிகழ்த்தும்னு எதிர்பார்க்கிறாங்க

புதுசு புதுசா யோசிச்சு படம் பாக்கறவங்க கண்ணுல மரண பயத்தைக் காட்டி அனுப்புறதே வேலையா போச்சுஇந்தஹாலிவுட்காரங்களுக்கு..

 

லிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்!

லிங்கா விவகாரத்தில் தொடர்ந்து வேண்டுமென்றே ரஜினியின் பெயரை களங்கப்படுத்தும் வகையில் விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் செயல்பட்டு வருவதால், ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் ஒன்றிணைய முடிவு செய்துள்ளனர்.

லிங்கா படம் பெரும் வசூலைக் குவித்தாலும், பொய்யான வசூல் கணக்குகளைக் காட்டி அந்தப் படத்தை தோல்விப் படமாக அறிவித்தனர், படத்தை விநியோகித்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த தொழிலுக்கு புதியவர்கள் என்று கூறிக் கொண்டனர்.

Top actors support Rajini in Lingaa issue

ஆனால் படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, படத்துக்கு எதிராக மிக மோசமான பரப்புரையை மேற்கொண்டு படத்தை ஓடவிடாமல் செய்ததாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் புகார் கூறியது நினைவிருக்கலாம்.

உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம் என எந்த அளவு கீழ்த்தரமாக இறங்க முடியுமோ அந்த அளவு இறங்கினர்.

பின்னர் கணக்கு வழக்குகளை விசாரித்து ரூ 12.5 கோடியை நஷ்டஈடாக ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் கொடுக்க சம்மதித்தனர்.

இதைப் பிரித்துக் கொள்வதில் லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குள் பெரும் சண்டை. உடனே மீண்டும் ரஜினி தலையை உருட்ட ஆரம்பித்துவிட்டனர் இந்த விநியோகஸ்தர்கள்.

ரஜினியிடம் மேலும் ரூ 15 கோடி கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ரஜினியை மிகவும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை நாட்கள் இருந்ததைப் போல அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதேநேரம் ரஜினிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படும் அனைவருக்கும் பாடம் புகட்ட வேண்டும் என சில முன்னணி நடிகர்கள் ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்களாம்.

முதல் கட்டமாக ரஜினிக்கு ஆதரவாக முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து அறிக்கை வெளியிடவிருக்கின்றனர். அடுத்த கட்டமாக, லிங்கா படத்தை முன்னிறுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் சிலருக்கு ரெட் போட்டு, நிரந்தரமாக தமிழ் சினிமாவிலிருந்து விலக்கி வைக்கவும் முடிவெடுத்துள்ளார்களாம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி அமைப்பு என அனைத்து அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சிரஞ்சீவி-பாலகிருஷ்ணா நேரடி மோதல்

ஹைதராபாத் தெலுங்குலகில் மிகப் பெரிய ஹீரோக்களான சிரஞ்சீவியும் பாலகிருஷ்ணாவும் தங்கள் படங்களின் மூலம் நேரடியாக மோதிக் கொள்ள இருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப் பின் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் படம் ஆட்டோ ஜானி இதன்பட பூஜை அவரின் பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி தொடங்க இருக்கிறது.

படம் அடுத்த வருடம் சங்கராந்தி ஸ்பெஷல் ஆக திரைக்கு வர இருக்கிறது அதே புனிதமான நாளில் தன் படமான டிக்டேட்டர் படத்தை திரைக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறார் நந்தமூரி பாலகிருஷ்ணா இதனால் இருவரும் படங்களின் மூலமாக நேரடியாக மோதிக் கொள்ளவிருக்கிறார்கள்.

Epic Battle Between Chiranjeevi and Balakrishna

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இது 150 வது படம் பாலகிருஷ்ணாவுக்கு அவரது 99 வது படம், அதோடு எப்போதுமே பாலகிருஷ்ணாவுக்கு சங்கராந்தி ஸ்பெஷல் தான் அந்த நாளில் அவர் தனது படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே இதே போல ஒரு சங்கராந்தியில் இருவரது படங்களும் சிலவருடங்களுக்கு முன்பு மோதியது இதில் பாகிருஷ்ணா படம் மெகா ஹிட் அடித்தது, பார்க்கலாம் இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அல்லவா அதற்குள் எது வேண்டுமானாலும் மாறலாம்.

நம்ம தமிழ் சினிமாவில நாலு நாளைக்குள்ள ஒரு படத்துக்கு மூணு தடவ பேர மாத்திட்டாங்க இதெல்லாம் ஒரு விஷயமா என்ன...

 

'பிரேம்ஜியை உங்களுக்குப் பிடிக்காதா... மாஸ் பாருங்க, பிடிக்கும்!'

அது என்னமோ சினிமாக்காரர்கள் சிலருக்கே கூட பிரேம்ஜி என்றாலே அலட்சியம். அண்ணனின் தயவில் தடாலடியாக முக்கிய இடம் பிடித்துவிடுகிறாரே என்ற பொறாைமையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இயல்பாக நடிக்கிறார் என்பதை ஏனோ இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

'All Premji haters will love him after Masss release' - Venkat Prabhu

சினிமா செய்தியாளர்கள் சிலரும் கூட இப்படி ஒரு நினைப்பில் இருப்பது வெங்கட் பிரபுவுக்கு ஏக வருத்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத அவர் இப்படிச் சொன்னார்:

நான் எப்போதும் ஒரு கதையை எழுதும்போது, பிரேம்ஜியை ஒரு சிறிய கதாபாத்திரமாக வைத்துதான் எழுதத் தொடங்குவேன். அந்த கதாபாத்திரத்தை மேலும் மேலும் மெருகேற்ற அது படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்து அமையும். என்னுடைய படங்களில் பிரேம்ஜி நடிக்கவில்லையென்றால், அவர் என்னுடைய படத்துக்கு இசையமைப்பாளராக இருப்பார். நடிக்கிறார் என்றால் யுவன் இசையமைப்பாளராக பணியாற்றுவார்.

நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திடப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றி வருகிறோம்.

பிரேம்ஜியை பிடிக்காதவர்களுக்கு, மாஸ் படத்தை பார்த்தால் அவரைப் பிடிக்க ஆரம்பிக்கும். அவரை என் தம்பியாக மட்டும் பார்க்க வேண்டாம். ஒரு நடிகனாக, கலைஞனாகப் பாருங்கள்," என்கிறார்.

 

கோலம்போட ஆசையிருக்கு... கூப்பிட ஆளில்லையே...

சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே கேட் தாண்டி குதித்து உதவி இயக்குநரின் கரம் பிடித்தவர் அந்த தேவ நடிகை. குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆனவர் சின்னத்தரையில் கோலம் போட வந்தார். சூரிய டிவியில் 5 ஆண்டுகாலம் ஓடியது அந்த சீரியல். அதன்பின்னர் அரச டிவியில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த சீரியலும் பிரபலமானது. அப்புறம் சூரிய டிவிக்காக இரட்டை வேடத்தில் போலீஸ் யூனிபார்ம் போட்டார் நாயகி. அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே கழன்று கொண்டார். கணவரை கதாநாயகனாக்கி ஜோடியாக நடித்து படம் எடுத்தார். படம் பாதி நாள் கூட ஓடியதோ இல்லையோ, 100வது நாள் விழா எடுத்து கலக்கினார். கை நஷ்டப்பட்டதுதான் மிச்சம். கடைசியில் கான்வென்ட் டீச்சராக வேலை செய்தார். ஆனாலும் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறாராம்.

Famous actress back to TV serial

நைட்டி விளம்பரம், மசாலா பொடி விளம்பரம் என சின்னத்திரை வழியாக வந்து போனாலும் சீரியலில் நடித்தது போல வருமா என்று கேட்கும் நாயகி, சீரியல் இயக்குநர்களுக்கு தூது விட்டுள்ளார். அம்மணியில் பல்ஸ் பார்த்த இயக்குநர்களோ, டைட்டில் ரோல் இல்லை, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்களாம்.

வேற வழி.. கிடைச்சதை ஏற்றுக்கொண்டுதானே ஆகணும் என்று தேவ நடிகையும் சம்மதம் சொல்லியிருக்கிறாராம். விரைவில் சின்னத்திரையில் நாயகி கோலம் போட வருவார் என்று எதிர்பார்கலாம்.

 

பெப்பெர்ஸ் டிவியின் " தட்டுக் கடை"

சென்னை: பெப்பெர்ஸ் டிவில புதுசா ஒரு சூப்பர் ப்ரோகிராம் போயிட்டு இருக்கு அப்படி என்ன நல்ல ப்ரோகிராம்னு ஆர்வமா கேட்கிறீங்களா நமக்கு ரொம்ப பிடிச்ச ஸ்நாக்ஸ் பத்தி தான் அதாவது இந்த ரோட்டோரக் கடையில செய்யற உணவுகள் பத்திதான் இதுல கொஞ்சம் வித்தியாசமா அந்தந்த ஏரியாவில உள்ள கடைகளுக்கு போய்ட்டு அவங்க செய்யற விதம் என்னென பொருட்கள் சேக்கறாங்க அந்த டேஸ்ட் எப்படிக் கிடைக்குதுன்னு எல்லாத்தையும் நேரடியா டிவில காட்டறாங்க

இந்த நிகழ்ச்சியப் பாக்குறப்ப ஓ மை காட் நான் பலவருசமா இதே ஏரியா தான் எனக்கு எப்படி இந்தக் கடை இங்க இருக்கறது தெரியாம போச்சுன்னு நீங்க கண்டிப்பா திங் பண்ற அளவுக்கு நல்ல நல்ல வித்தியாசமான புட்ஸ் எல்லாம்செய்முறையோட விளக்குராங்கப்பா

Peppers Tv's new programme   “ thattu Kadai”

இதுவரைக்கும் ராமாவரம் பக்கத்தில இருக்கிற டேஸ்ட்டான சமோசா கடை அடையாறுல உள்ள சுவையான சிக்கன் கடை அப்புறம் இந்த ஜாங்கிரி எப்படி செய்றாங்க இந்த மாதிரி சுவையான பல விசயங்களோட உணவுகள் என்ன மாதிரி செய்றாங்க மத்தவங்களுக்கும் இவங்களுக்கும் சுவையில என்ன வித்தியாசம்னு நிகழ்ச்சிய நடத்தறவரு அதை சாப்பிட்டுகிட்டே சொல்வாரு, என்ன அவரு சாப்பிடறப்பதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

Peppers Tv's new programme   “ thattu Kadai”

நம்ம நாட்டு உணவுகள் மற்றும் தெருவில இருக்கற பாரம்பரியமான உணவுகள் பத்தி சொல்லனும்கிற நோக்கத்தோட இந்த ப்ரோகிராம் போயிட்டு இருக்கு உங்க டிவியில வெள்ளிகிழமை காலையில 11.30 மணி மற்றும் சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இதப் பாக்கலாம். சண்டே மட்டும் தான் ப்ரீயா இருக்கிங்கன்னா ஈவினிங் 7 ஓ கிளாக் பாக்கலாம்.

நல்ல முயற்சி அப்படியே எங்கத் தெரு பக்கமும் வந்துட்டுப் போங்க சார்