நடிகை சனா கானிடம் ரூ 9 லட்சம் மோசடி.. பூனம் கண்ணா கைது

வீடு வாங்கித் தருவதாகக் கூறி பிரபல நடிகை சனா கானிடம் ரூ 9 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.

தமிழில் சிம்பு ஜோடியாக ‘சிலம்பாட்டம்' படத்தில் நடித்தவர் சனாகான். ‘தம்பிக்கு எந்த ஊரு', ‘பயணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சல்மான்கானுடன் ‘ஜெய்ஹோ' இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை சனா கானிடம் ரூ 9 லட்சம் மோசடி.. பூனம் கண்ணா கைது

சமீபத்தில் இந்தி நடிகர் ஓம் பிரகாஷின் மருமகள் பூனம் கண்ணாவை சனாகான் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சனா கானின் காதலர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகியோரும் கைதானார்கள். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை என்றும் எனக்கு எதிராக சதி செய்து போலீசில் சிக்க வைத்து விட்டனர் என்றும் சனாகான் கூறினார். இந்த நிலையில் பூனம் கண்ணா மீது மும்பை ஒஷிவாரா போலீஸ் நிலையத்தில் சனா கான் பரபரப்பு புகார் அளித்தார்.

அதில் மும்பையில் தனக்கு வீடு வாங்கித் தருவதாக பூனம் கண்ணா என்னிடம் தெரிவித்தார். அதற்கு முன்பணமாக ரூ.9 லட்சம் வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் சொன்னபடி வீடு வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சனா கானிடம் மோசடி செய்ததாக பூனம் கண்ணாவை கைது செய்துள்ளனர்.

 

பண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்!

பண்ணையாரும் பத்மினியும் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. படமும் நன்றாக இருந்தது.

ஆனால் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகவில்லை படம். அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக படத்துக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் என்ற பெருமை பண்ணையாரும் பத்மினியும் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் புது இயக்குநரின் மகிழ்ச்சியும்!

இந்த தேர்வானது, படத்தின் இயக்குநர் அருண் குமாரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வழக்கமா இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 10 படங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. இந்த முறை 7 படங்கள்தான் தேர்வாகியிருக்கு. அதுல ஒரே தமிழ்ப் படம் பண்ணையாரும் பத்மினியும்தான்னு நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு படைப்பாளிக்கு தேவையானதே அங்கீகாரம்தானே. அது இப்ப தொடர்ந்து கிடைக்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஹாலிவுட் இயக்குநர்கள் பலரும் இந்தத் திரைப்பட விழாவுல கலந்துக்கப் போறாங்க... எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்," என்றார்.

அடுத்து ஆக்ஷன் படம் பண்ணுகிறார் அருண். அதிலும் ஹீரோ விஜய் சேதுபதிதானாம்!

 

காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி

காமெடி நடிகர் மகாதேவன் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 45.

தமிழில் காமெடி இரட்டையர்களாக நடித்து வந்தவர்கள் சகாதேவன், மகாதேவன். இரட்டைப் பிறவிகள்.

இவர்கள் இருவரும் இணைந்து ‘தேவர் மகன்', ‘ரோஜா கூட்டம்', ‘கோயம்பத்தூர் மாப்ளே' உட்பட பல படங்களில் நடித்துள்ளனர். அதோடு ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர்.

காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி

இவர்களில் சகாதேவன் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் நேற்று அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனும் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த மகாதேவன் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார்.

பத்து நாட்களுக்கு முன் கூட சிகிச்சைக்காக அவரது வலது கால் அகற்றப்பட்டது.

காமெடி நடிகர் மகாதேவன் மரணம்... திரையுலகினர் அஞ்சலி  

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மகாதேவன் நேற்று மாலை மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர்.

அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

 

நாளை கமல் பிறந்த நாள்.. பேஸ்புக்கில் கலைநயமான போட்டோ அப்டேட் பண்ணியாச்சு!

சென்னை: கமல்ஹாசன் நாளை பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பெயரில் வெளியாகும் பேஸ்புக்கின் கவர் போட்டோவில் இதையொட்டி கலக்கலான படத்தை அப்டேட் செய்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நாளை தனது 60வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் நலப் பணிகளுக்குத் தயாராகி வருகின்றனர்.

நாளை கமல் பிறந்த நாள்.. பேஸ்புக்கில் கலைநயமான போட்டோ அப்டேட் பண்ணியாச்சு!

நாட்டைச் சுத்தம் செய்யும் பணியில் தங்களை நாளை ரசிகர்கள் ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பெயரில் வெளியாகும் பேஸ்புக்கின் கவர் போட்டோ கலக்கலாக மாறியுள்ளது.

60 கமல்ஹாசனின் உருவத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த கலை நயம் மிக்க ஓவியம் கமல்ஹாசன் பேஸ்புக் அட்டையை அலங்கரிக்கிறது.

பார்க்கவே அசத்தலாக உள்ள இந்தப் படத்தை இங்கே (https://www.facebook.com/kamalhaasan.theofficialpage?fref=photo) போய் நீங்களும் பார்த்து விட்டு வாருங்கள்....

 

விஜய் 58... நவம்பர் 10-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு

விஜய் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 10ம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்குகிறது.

கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாட குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் விஜய்.

இன்னும் இரு தினங்களில் லண்டனிலிருந்து திரும்பும் விஜய், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

விஜய் 58... நவம்பர் 10-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு

இந்தப் படம் முழுக்க முழுக்க லார்ட் ஆப் த ரிங்க்ஸ் மாதிரி கற்பனை உலகில் நிகழும் கதையாகும். இந்தப் படத்துக்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெரிய அரண்மனை செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.

விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கன்னட ஹீரோ கிச்சா சுதீப், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாஸன் நடிக்கிறார்.

சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், கேரளா செல்லும் படக்குழு, அங்குள்ள சாலக்குடி, நீலாம்பதி அடர் காடுகளில் மீதிப்படத்தை எடுக்கிறார்கள்.

 

இந்த 'கிம்'முக்கு வேற வேலையே இல்லை: புருவத்துக்கு ப்ளீச்

நியூயார்க்: டிவி ரியாலிட்டி நடிகையான கிம் கர்தாஷியன் போட்டோஷூட்டுக்காக புருவத்தை ப்ளீச் செய்து அது இருந்தும் இல்லாதது போன்று ஆக்கியுள்ளார்.

டிவி ரியாலிட்டி ஷோ நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனுக்கு எப்பொழுதுமே மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். லோ கட் ஆடை அணிவது, பிரா இல்லாமல் வெளியே வருவது, அரை நிர்வாண போட்டோ எடுத்து அதை வெளியிடுவது என்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பார். இந்நிலையில் கருப்பாக இருந்த புருவத்தை ப்ளீச் செய்து அதை தங்க நிறத்தில் ஆக்கியுள்ளார்.

இந்த 'கிம்'முக்கு வேற வேலையே இல்லை: புருவத்துக்கு ப்ளீச்

ப்ளீச் செய்த புருவத்துடன் தனது தங்கை கென்டால் ஜென்னரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவரை பார்த்தவர்கள் என்னாச்சு கிம், உன்னுடைய புருவத்திற்கு என்று பதறிப்போய் கேட்க அவரோ கூலாக போட்டோஷூட்டுக்காக ப்ளீச் செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ப்ளீச் புருவத்துடன் எடுத்த 2 புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் அவர் சூப்பர்மாடல் காராவுடன் போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில் தனது கணவர் கான்யே வெஸ்டுடன் போஸ் கொடுத்துள்ளார்.

முன்னதாக கிம் ஒரு பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததை பார்த்து டென்ஷனாகி பதிலுக்கு நிர்வாண போட்டோஷூட் நடத்தியது கென்டால் ஜென்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'நான்சென்ஸ்': ஜெயாவுக்காக ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப், அபிஷேக், ஐஸ்

மும்பை: ஹேப்பி நியூ இயர் சுத்த நான்சென்ஸ் படம் என்று ஜெயா பச்சன் தெரிவித்ததற்கு அவரது கணவர் அமிதாப் பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே நடித்த ஹேப்பி நியூ இயர் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தை சுத்த நான்சென்ஸ் என்று நடிகை ஜெயா பச்சன் விமர்சித்துள்ளார்.

'நான்சென்ஸ்': ஜெயாவுக்காக ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப், அபிஷேக், ஐஸ்

ஜெயா பச்சன் இப்படி தெரிவித்ததை கேட்டு ஹேப்பி நியூ இயர் குழு கடுப்பானது, பச்சன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அமிதாப் பச்சன் தனது மனைவியின் கருத்துக்காக மன்னிப்பு கேட்டு ஷாருக்கானுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை அழைத்துக் கொண்டு நேராக ஷாருக்கானின் வீடான மன்னத்துக்கு சென்றார். ஆனால் அங்கு ஷாருக்கான் இல்லாததால் அவரது மனைவி கௌரியிடம் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்களாம்.

ஹேப்பி நியூ இயர் ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக்கானுக்கு ஜெயாவின் கருத்து வருத்தத்தை அளித்துள்ளதாம்.

 

'ஸ்பெஷல்-26' படத்தை பிரசாந்தை வைத்து 4 மொழிகளில் இயக்குகிறார் தியாகராஜன்!

பிரசாந்தை ஹீரோவாக வைத்து ஸ்பெஷல் 26 இந்திப் படத்தை நான்கு மொழிகளில் இயக்குகிறார் தியாகராஜன்.

பிரசாந்தை வைத்து இப்போது சாஹசம் என்ற பிரமாண்ட படத்தை எடுத்து வருகிறார் தியாகராஜன். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான ''குயின்'' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி யுள்ளார் தியாகராஜன். இப்போது பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான மற்றொரு படமான ''ஸ்பெஷல்-26'' படத்தின் ரீ-மேக் உரிமையையும் வாங்கியுள்ளார்.

'ஸ்பெஷல்-26' படத்தை பிரசாந்தை வைத்து 4 மொழிகளில் இயக்குகிறார் தியாகராஜன்!

அக்ஷ்ய் குமார், அனுபம் கெர், மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பெரும் போட்டி நடந்த நிலையில், தியாகராஜன் வாங்கினார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீ-மேக் செய்கிறார்.

''ஸ்பெஷல்-26'' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த் நடிக்கிறார், அவருடன் சத்யராஜ், மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

 

பாலாஜி மோகன் - தனுஷ் படம் தொடங்கியது!

தனுஷ் தனது அடுத்த படத்தையும் அதன் படப்பிடிப்பு தொடங்கியதையும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் தமிழில் அனேகன், இந்தியில் ஷமிதாப் போன்ற படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குபவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் படங்களைத் தந்தவர்.

பாலாஜி மோகன் - தனுஷ் படம் தொடங்கியது!

தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வாலுசன் தனுஷ் நடிப்பது இதுதான் முதல் முறை.

இந்தப் படத்தை சரத்குமாரும் ராதிகாவும் மேஜிக் பிரேம்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டரில், "பாலாஜி மோகன் படம் இன்று தொடங்கிவிட்டது. இது எனக்கு முற்றிலும் புதிய டீம். ரொம்ப ஆர்வத்தோடு உள்ளேன், விரைவில் தலைப்பு அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

 

மீஞ்சூர் கோபியை சாதிப் பெயர் சொல்லித் திட்டினாரா ஏ ஆர் முருகதாஸ்?

எழுத்தாளரும் கத்தி படக் கதைக்கு உரிமை கோரி போராடி வருபவருமான மீஞ்சூர் கோபியை, இயக்குநர் முருகதாஸ் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கத்தி படத்தின் கதை, காட்சிகளை முழுமையாகத் திருடி படமெடுத்ததாக மீடியாக்களில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார் ஏஆர் முருகதாஸ்.

மீஞ்சூர் கோபியை சாதிப் பெயர் சொல்லித் திட்டினாரா ஏ ஆர் முருகதாஸ்?

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவரும் முருகதாஸ், அடுத்தவர் கதையைத் திருடிப் படமெடுக்க நான் என்ன மூளை இல்லாதவனா என்று கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்ட கோபி, ஊடகங்களில் முறையிட்டு வருகிறார். கத்தி தன் கதைதான், அதை எப்படி முருகதாஸ் தனதாக்கிக் கொண்டார் என்பதற்கான ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் கோபி.

இந்த நிலையில் கோபியை சாதிப் பெயர் சொல்லி முருகதாஸ் திட்டியதாக, கோபி தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

'இந்த விஷயத்தில் --- சாதியைச் சேர்ந்த அவன் ஜெயிக்கிறானா... --- சாதியைச் சேர்ந்த நான் ஜெயிக்கிறேனா.. பார்த்து விடலாம்.. அவனுடன் சமாதானமாக வேண்டிய அவசியம் இல்லை' என்று கோபி தரப்பினருடனான பேச்சுவார்த்தையின்போது முருகதாஸ் கோபமாகக் கூறினாராம். இதனை ஆடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர் கோபி தரப்பினர்.

ஏற்கெனவே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், 'நானும் மனிதன்தான், எனக்கொண்ணுன்னா என் சாதிக்காரனும் வருவான்ல' என்று முருகதாஸ் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

 

செஞ்சு காட்டிட்டீங்க...: விஷாலைப் பாராட்டிய விஜய்

திருட்டு விசிடிக்கு எதிராக களமிறங்கிய விஷாலுக்கு திரையுலகில் பாராட்டுகள் குவிகின்றன. இப்போது நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு விஷாலைப் பாராட்டியுள்ளார்.

திருட்டு விசிடியை ஒழிப்பதில் போலீஸை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்து முதலில் களமிறங்கியவர் இயக்குநர் நடிகர் பார்த்திபன். தன் படத்தோடு வெளியான மற்ற படங்களின் திருட்டு விசிடியையும் பிடித்துக் கொடுத்து பரபரப்பு கிளப்பினார். குடைக்குள் மழை சமயத்திலிருந்தே இதனைச் செய்து வருகிறார் அவர்.

செஞ்சு காட்டிட்டீங்க...: விஷாலைப் பாராட்டிய விஜய்

சமீபத்தில் அவரது கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வெளியீட்டின் போது, பர்மா பஜார், அண்ணா நகர் உள்பட பல இடங்களில் தானே நேரடி ஆக்ஷனில் இறங்கிய பார்த்திபன் திருட்டு விசிடி விற்பவர்களைப் பிடித்துக் கொடுத்தார்.

அவரது வழியில் விஷாலும் சமீபத்தில் களமிறங்கினார். தனது தீபாவளி வெளியீடான பூஜை, மற்றும் விஜய்யின் கத்தி பட சிடிக்கள் விற்றவர்களை கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார்.

அவரது இந்த செயலுக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

அவர் விஷாலுக்கு அனுப்பிய ட்வீட்டில், " பெருமையாக உள்ளது விஷால். பேசிக் கொண்டிருப்பதைவிட, செயலில் காட்டுவதுதான் சிறந்தது என நிரூபித்துவிட்டீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் விஷால்.