ரஜினியின் சிறந்த வசனங்கள்... இதெப்டி இருக்கு!

ரஜினியின் சிறந்த வசனங்கள்... இதெப்டி இருக்கு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு விதத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்கள்.

ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு சிறப்பான விஷயம் அதில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரஜினி, அதற்காக தானே சிலவற்றைச் சேர்ப்பதும் உண்டு.

ஹவ்வீஸ் இட் தொடங்கி, அந்த கதம் கதம், லகலகலக வரை சொல்லிக் கொண்டே போகலாம்.

அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

இதெப்டி இருக்கு!

ரஜினிக்கு அவரது முதல் படத்தில் அவ்வளவாக வசனங்களில்லை. ஆனால் இரண்டாவது படமான மூன்று முடிச்சு தொடங்கி வசனங்களில் பின்னியிருப்பார். ரஜினி நடித்த பதினாறு வயதினிலேவில் அவருக்கு வில்லன் வேடம். சில காட்சிகள்தான். ஆனால் பளிச்சென்று தெரிவது அவர்தான். குறிப்பாக அந்த வசனம் 'இதெப்டி இருக்கு!'

சீவிடுவேன்...

முரட்டுக்காளையில் ரஜினியின் புகழ்பெற்ற வசனம் 'சீவிடுவேன்!' பின்னாளில் எந்திரன் படத்தில் இதே வசனத்தை ரஜினி எதிரில் கலாபவண் மணி பேசிக் காட்டுவார்!

ஹவ்வீஸ் இட்...

இது வீராவில் ரஜினி பயன்படுத்திய முத்திரை வசனம். அதை அவர் உச்சரித்த அழகே தனி.

நான் ஒரு தடவ சொன்னா...

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற வசனம், 'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..'. பாட்ஷாவில் இடம்பெற்ற இந்த வசனம் கிட்டத்தட்ட ஆட்சி மாற்றத்துக்கே வழிவகுத்தது.

ஆண்டவன் சொல்றான்...

ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்... இது அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற படு பாப்புலர் வசனம். நான்கு வார்த்தைகளுக்குள் ஏகப்பட்ட அர்த்தங்களை உள்ளடக்கிய வசனம் இது.

என்வழி தனீ வழி...

படையப்பாவில் இடம்பெற்ற இந்த வசனத்தை ஒவ்வொரு முறை சொல்லும்போதும், ஆங்கிலத்தில் ஒரு இணை வசனத்தைச் சொல்வார் ரஜினி. வெகு ஈர்ப்புடன் அமைந்த வசனம்.

நான் எப்போ வருவேன்...

முத்து படத்தில் காட்சியோடு இணைந்து வரும் 'நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்," என்று ரஜினி பேசியதற்கு பல அரசியல் அர்த்தஙக்கள் கற்பிக்கப்பட்டன. இன்னும் கூட இந்த வசனம் உயிர்ப்புடன்தான் உள்ளது!

கதம் கதம்

பாபா படத்தின் இந்த வசனத்தை, அந்தப் படம் வெளியானபோது பிறந்திருக்காத சின்னஞ்சிறுசுகளும்கூட இன்று பாபா முத்திரையுடன் சொல்லிக் காட்டுவதே இந்த வசனத்தின் சிறப்பு.

லகலகலக...

இது ஒரு வசனம்கூட இல்லை. தன் எள்ளலைக் காட்ட ரஜினி பயன்படுத்திய ஒருவித ஒலி. அதற்குக் கிடத்த வரவேற்பு வரலாறு காணாதது.

ச்சும்மா அதிருதில்ல...

சிவாஜியில் இடம்பெற்ற வசனம் இது. நிஜமாகவே சினிமாவை அதிரவைத்தது, அதன் வீச்சு.

அடேங்கப்பா...

பல படங்களில் ரஜினி இந்த சொல்லைப் பயன்படுத்தும் விதம், அதை உச்சரிக்கும் தொனி... அடேங்கப்பா!

 

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை

கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை

சென்னை: நடிகர் முகேஷ் சமீபத்தில் செய்த சட்ட விரோத இரண்டாவது திருமணம் குறித்து இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மலையாள நடிகர் முகேஷ், பிரபல தமிழ் நடிகை சரிதாவை காதல் திருமணம் செய்தார். ஆனால் இருவருக்கும் பெரும் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் முகேஷ் சமீபத்தில் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதற்கு நடிகை சரிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் முகேஷ் இரண்டாவது திருமணம் செய்திருப்பது சட்டவிரோதம் என்று புகார் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வரை பஞ்சாயத்துக்கு வந்து விட்டது. வழக்குத் தொடரவும் சரிதா முடிவு செய்துள்ளார்.

நேற்று பகலில் நடிகர் முகேஷ், ரகசியமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரை நிருபர்கள் பார்த்து விட்டனர். எதற்காக கமிஷனர் அலுவலகம் வந்தீர்கள்? என்று கேட்டபோது, சொந்த குடும்ப பிரச்சினை காரணமாக வந்திருப்பதாக சொல்லி விட்டு, அவர் வேகமாக கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.

அவர் வரதட்சணை ஒழிப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விவரம் எதையும் தெரிவிக்க, கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மறுத்து விட்டார்.

 

என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி

சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.

என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார்.

அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.

என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி

யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார்.

விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!

 

கோச்சடையான் இசை வெளியீடு, பட ரிலீஸ்.. நீடிக்கும் மவுனம்!

சென்னை: ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் ரஜினியின் கோச்சடையான் இசை வெளியீடு, பட ரிலீஸ்.. நீடிக்கும் மவுனம்!   

ஆனால் கோச்சடையான் படம் மட்டும் இதில் விலக்காக உள்ளது.

இந்தப் படத்தின் முழுமையான ஸ்டில்கள், ட்ரைலர்கள் என்று கூட இதுவரை வரவில்லை. நான்கைந்து ஸ்டில்கள், அனிமேஷன் ரஜினி நடப்பது போன்ற காட்சி அடங்கிய டீஸர் மற்றும் ஒரு பாடலின் ஆடியோ க்ளிப் போன்றவரை மட்டுமே வெளியாகியுள்ளது.

இவை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்பது பரவலான பேச்சாக உள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததையடுத்து இப்படத்தை வரும் ஜனவரி 10-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் பின்னர் ரஜினி சொன்னதால், பட ரிலீசை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் ஆடியோ ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் என்று கூறினர். ஆனால் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தயாரிப்பாளர் தரப்பிலும், இயக்குநர் சவுந்தர்யா தரப்பிலும் கனத்த மவுனமே நிலவுகிறது. இதுவரை நான்கு முறை படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை! - இயக்குநர் மகேந்திரன்

இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை! - இயக்குநர் மகேந்திரன்

சென்னை: என் படங்களுக்கு தன் இசையால் வசனமெழுதியவர் இளையராஜாதான். அவரது இசைக்கு நான் அடிமை, என்று இயக்குநர் மகேந்திரன் கூறினார்.

சினிமாவும் நானும் என்ற தலைப்பில் மகேந்திரன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் மகேந்திரன் பேசுகையில், "மெளனத்தை விட சிறந்த மொழி இருப்பதாகத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை, மெளனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். 'உதிரிப் பூக்கள்' போன்ற எனது படங்களில் மெளனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள்.

உண்மைதான், எனது படத்துக்குப் பெரும்பாலும் வசனம் எழுதியது இளையராஜாதான். மெளனங்களை நான் வசனங்களாக வடித்தபோது, இசையால் ஒவ்வொரு இடத்தையும் நிரப்பியவர் இளையராஜா.

100 ஆண்டுகள் கடந்தும் டூயட் பாடல்கள் இருப்பது தமிழ் சினிமாவின் சுமையாக இருக்கிறது. சினிமாவின் இயல்புத் தன்மையை பாடல்கள் கெடுத்து விடும். அதே சமயம், நான் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமை. பல நேரங்களில் மன இறுக்கத்துக்கு மருந்தாக இருந்தவை ராஜாவின் பாடல்களே. திரைக்கதை எழுதும் போதும், மனஉளைச்சலை உணரும்போது அவரது இசையும் பாடல்களுமே மனத்தை அமைதிப்படுத்தும்," என்றார்.

நீங்கள் கேட்க நினைக்கும், அனைத்து கேள்விகளுக்கும் ‘சினிமாவும் நானும்' புத்தகத்தில் பதில்கள் கூறியுள்ளேன்," என்றார்.

 

ரஜினி ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம் - ஏராளமான நலத்திட்ட உதவிகள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு நல உதவிகளை வழங்கி வரும் ரசிகர்கள் இன்று, அதிகாலையிலிருந்தே ரத்த தானம், அன்னதானம், படிப்பு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நல உதவிகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளைச் செய்து வருகின்றனர்.

பொதுவாக ரஜினி தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் அமோகமாகக் கொண்டாடுகிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம் - ஏராளமான நலத்திட்ட உதவிகள்!

தன் பிறந்த நாளை முன்னிட்ட பல்லாயிரம் ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை எண்ணி ரஜினியும் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு ஆட்சேபம் சொன்னதில்லை.

அதேபோல எந்த ஊரிலும் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் மக்களுக்கு இடைஞ்சலாகவோ, முகம் சுளிக்கும் வகையிலோ இருந்ததில்லை. அதனால்தான் ரசிகர்களோடு ஏராளமான பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள் இந்த விழாக்களில்.

மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில்தான் இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே ரஜினி பிறந்த நாள் விழாதான்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும், உடையும், உதவித் தொகையும், கல்வி உதவியும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளும் கிடைத்து வருகின்றன ரஜினி ரசிகர்கள் மூலம்.

சென்னை முழுக்க சுவரெங்கும் ரஜினி பிறந்த நாள் போஸ்டர்கள், பல பகுதிகளிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என திருவிழா களைகட்டியிருக்கிறது இன்று.

இதுகுறித்து சென்னை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற பொறுப்பாளர் ராமதாஸ் கூறுகையில், "பிறந்த நாள் விழா கொண்டாடுங்க. ஆனா அது யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் கொண்டாடுங்க," என்பதுதான் தலைவர் ரஜினியின் உத்தரவு. அதை இதுவரை எந்த ரசிகரும் மன்ற பொறுப்பாளரும் மீறியதில்லை. தலைவரின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை மாநிலம் முழுவதும் உள்ள மன்றங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது இரு மடங்காகியுள்ளது. காரணம், இளைஞர்கள் ஏராளமானோர் தலைவரின் ரசிகர்களாக இருப்பதுதான்," என்றார்.

மகாராஷ்ட்ராவில்..

மகாராஷ்ட்ராவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் உள்ளன ரஜினிக்கு. இவற்றின் தலைமை மன்றத்துக்கு ஆதிமூலம் என்பவர் தலைவராக உள்ளார். ஆண்டு முழுவதும் ரஜினி பெயரில் பல விழாக்கள் நடத்தி வரும் இவர், இன்று பிறந்த நாளன்று முழுவதும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஜப்பான் ரசிகர்கள்

தமிழகத்தைப் போலவே, ஜப்பானில் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர்களும் இன்று அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் சொன்னேன்! - கருணாநிதி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தான் வாழ்த்தியதை பேஸ்புக்கிலும் நிலைத் தகவலாக வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி முதல்வராக இருந்தாலும் சரி, இல்லாமலிருந்தாலும் சரி.. தொடர்ந்து அவருடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினி. 1996-ல் திமுக தலைமையில் ஆட்சி அமையக் காரணமாக இருந்தவரே ரஜினிதான் என்பதால், அவருடனான உறவில் சிறு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது திமுகவும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் சொன்னேன்! - கருணாநிதி

ரஜினி உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தன் வயது, நடக்க இயலாமை என எதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியிலேயே போய் ரஜினியைப் பார்த்து நலம் விசாரித்தார். அதுமட்டுமல்ல, அவருக்கு ஒன்றுமில்லை, நலமுடன் வருவார் என வெளியில் திரண்டிருந்தவர்களிடம் தகவலைச் சொன்னார். அதன் மூலம் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு தங்களுக்குள் இருப்பதை கருணாநிதி உணர்த்தினார்.

ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்டுதோறும் ரஜினிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லத் தவறியதில்லை கருணாநிதி.

இந்த ஆண்டும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியுள்ளார் கருணாநிதி.

இதனை பேஸ்புக்கில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு ,நான் இன்று ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தேன்," என நிலைத் தகவலாக வெளியிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் முக ஸ்டாலினும் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

பிறந்த நாளை பெங்களூரில் நண்பர்களுடன் அமைதியாகக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்க, அவரோ அமைதியாக பெங்களூர் யாரும் அறியாத ஒரு இடத்தில் நண்பர்களுடன் அமைதியாகக் கொண்டாடி வருகிறார்.

ரஜினியின் 64-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பிறந்த நாளை பெங்களூரில் நண்பர்களுடன் அமைதியாகக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார்!

கடந்த ஆண்டு தன் பிறந்த நாளன்று ரசிகர்களை வீட்டில் சந்தித்து உற்சாகமூட்டினார் ரஜினி. அடுத்த நாள் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பெரிய விழா எடுத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்த விழாவில் ரஜினியும் பங்கேற்றார். அப்போது பெற்றோரை பாதுகாக்க வேண்டும், சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும் என்றெல்லாம் ரசிகர்களுக்கு அறிவுரைகள் கூறினார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கை விட்டனர்.

ஆனால் இந்த பிறந்த நாளில் அவர் சென்னையில் இல்லை. நேற்று முன்தினம் மாலை திடீர் என்று பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

இன்று நண்பர்களுடன் யாரும் அறியாத ஒரு இடத்தில் ரஜினி தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகிறார்.

ரஜினி இல்லை என்பது தெரிந்தும், ஏராளமான ரசிகர்கள், பெண்கள் ஆர்வத்துடன் ரஜினி வீட்டுக்குச் சென்று, வீட்டிலிருந்தவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு ரஜினி வீட்டார் இனிப்பு கொடுத்து அனுப்பினர்.

 

ஆர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்த தினம் இது!

11.12.13 .. நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் தேதி என்பதால் இந்தத் தேதியை உலகமே விசேஷ தினமாகக் கொண்டாடி வருகிறது. ஆர்யாவும் இந்தத் தேதியை வாழ்நாளில் மறக்கமுடியாது. காரணம் இன்றுதான் அவர் பிறந்த தேதி.

இந்த ஆண்டு அடுத்தடுத்து ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் என மூன்று படங்களி்ல் நடித்திருந்தார் ஆர்யா.

ஆர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்த தினம் இது!

பிறந்த நாள் என்பதற்காக லீவு போட்டு விட்டு கேக் வெட்டிக் கொண்டிருக்காமல், மகிழ் திருமேனி இயக்கும் மீகாமன் படத்தில் நடிக்கப் போய்விட்டார் ஆர்யா. (பார்ட்டியெல்லாம் சாயங்காலம்தானாம்!)

வரும் நாட்களிலும் ஆர்யாவுக்கு பெரிய படங்கள் காத்திருக்கின்றன.

அடுத்து அவர் எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்திலும், அதன் பிறகு தனது ஆஸ்தான இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்கிறார்.

இதே பரபரப்பு, பிஸியுடன் இனிவரும் ஆண்டுகளிலும் திகழ இன்று பிறந்த நாள் காணும் ஆர்யாவை வாழ்த்துவோம்!

 

ஜெயம் ரவி குடும்பத்தின் டார்ச்சர் - ஆடியோ விழாவில் அம்பலமாக்கிய இயக்குநர்

சென்னை: ஒரு படம் எடுக்க கதை சொல்லப் போனால் ஜெயம் ரவி குடும்பத்தினர் எப்படியெல்லாம் இயக்குநர்களைப் படுத்துகிறார்கள் என்பதை இயக்குநர் கரு பழனியப்பன் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.

ஜெயம் ரவி குடும்பத்தின் டார்ச்சர் - ஆடியோ விழாவில் அம்பலமாக்கிய இயக்குநர்

இன்று நடந்த சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "நண்பன், புத்தகம், மது ஆகிய மூன்றிலும் பழையதுதான் எபோதுமே ருசி மிகுந்தது. சினிமாவில் எனக்கு நண்பர்கள் குறைவு. ஆனால் நான் சினிமாவிற்கு வந்ததிலிருந்து எனக்கு நண்பனாக இருப்பவன் சமுத்திரக்கனி.

ஜெயம் ரவியிடம் இந்த கதையை பற்றி பேசிவிட்டு வந்ததும் சமுத்திரக்கனி என்னிடம் ‘ரவி அப்பா மோகன் ஒரு திருத்தம் சொல்கிறார். ரவி அண்ணன் ராஜா ஒரு திருத்தம் சொல்கிறார். ரவி ஒரு திருத்தம் சொல்கிறார். எனக்கென்னமோ இந்த வண்டி கிளம்பாது என்று தோன்றுகிறது' என்றார்.

ஜெயம் ரவி குடும்பத்தின் டார்ச்சர் - ஆடியோ விழாவில் அம்பலமாக்கிய இயக்குநர்

அதற்கு நான் சொன்னேன் ‘பேசாமல் அவர்கள் மூவரையும் ஒன்றாக உட்கார வைத்து பேசிவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும் என்று சொன்னதற்கு, இந்த படத்தை துவங்குவதை விட அவர்கள் மூவரையும் ஒன்றாக உட்கார வைப்பதுதான் கஷ்டம், படத்தை துவங்க ஐடியா கேட்டால் நீ படத்தை முடிக்க ஐடியா கொடுக்கிறாயே' என்றார்.

ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் மாதிரியும், அமலாபால் அமலா மாதிரியும், சமுத்திரக்கனி ஷங்கர் மாதிரியும் வரவேண்டும் என வாழ்த்துவதைவிட, சமுத்திரக்கனி அவனாகவே புகழ் பெற வேண்டும் என வாழ்த்தலாம்," என்றார்.

 

பைசூலுக்கு உதவுகிறார்... வேறு அதிகாரி விசாரிக்கணும்! - போலீசார் மீது நடிகை ராதா பரபரப்புப் புகார்!

பைசூலுக்கு உதவுகிறார்... வேறு அதிகாரி விசாரிக்கணும்! - போலீசார் மீது நடிகை ராதா பரபரப்புப் புகார்!

சென்னை: என் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பைசூலுக்கு ரகசியமாக உதவி வருகிறார். எனவே வேறு அதிகாரி விசாரிக்க வேண்டும் என போலீஸ் மீது கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ராதா.

தயைரிப்பாளர் பைசூல் என்பவர் தன்னை செக்ஸ் மோசடி செய்துவிட்டார் என்று கூறி சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார்.

அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் கமிஷனரைச் சந்தித்த நடிகை ராதா, காவல்துறையினர் மீதே பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அப்போது, பைசூல் தன்னிடம் ரூ 50 லட்சம் மோசடி செய்ததற்கான ஆவணங்களைக் கொடுத்த ராதா, தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பைசூலின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் நான் மன உளைச்சல் அடைத்துள்ளேன். அதேவேளையில் எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட போலீஸார் மறுக்கின்றனர். போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய பைசூலை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன்," என்றார்.

 

சிம்புவின் இங்க என்ன சொல்லுது.... பணமோசடி வழக்கில் சிக்கி நிக்குது!

சென்னை: சிம்புவின் இங்க என்ன சொல்லுது.... பணமோசடி வழக்கில் சிக்கி நிக்குது!    

இதுகுறித்து நீலகண்டனிடம் கேட்டபோது, வழக்கு எதுவும் தொடர வேண்டாம். பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். இந்த நிலையில், எனக்கு பணம் தராமல், நடிகர்கள் சிம்பு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இங்க என்ன சொல்லுது' என்ற படம் நீலகண்டன் தயாரித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்''என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து படத் தயாரிப்பாளர் நீலகண்டன் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.

 

ரித்திக் ரோஷனை நெளிய வைத்த நடிகையின் 'பளீச்' உடை

மும்பை: நிகழ்ச்சி ஒன்றுக்கு உடல் அங்கங்கள் தெரியும் வகையில் லேசான துணியில் உடை அணிந்திருந்த நடிகை கங்கனாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள நடிகர் ரித்திக் ரோஷன் தயங்கினார்.

இந்தியா ரிசார்ட் பேஷன்வீக் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், நடிகை கங்கனா ரனௌத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரித்திக் ரோஷனை நெளிய வைத்த நடிகையின் 'பளீச்' உடை

கங்கனா அணிந்திருந்த ஆடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது, சிலரை முகம் சுளிக்கவும் வைத்தது. அங்கம் தெரியும் வகையில் லேசான துணியில் ஆடை அணிந்து வந்தார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ரித்திக் ரோஷன் தயங்கி, நெளிந்தார்.

ஆனால் கங்கனாவோ கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கங்கனா ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.