ராணி போல் நடைபோட்ட பாலிவுட் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்

மும்பை: பாலிவுட் கவர்ச்சிப் புயலான சன்னி லியோன் பங்கேற்ற ரேம்ப் ஷோவால் மேடையே தள்ளாடிப்போனது இந்தியாவின் சர்வதேச நகை வார விழாவில்.

மும்பையில் நடைபெற்ற இந்த நகைத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்ன நடை பழகிய சன்னி லியோன், சுமித் ஜவானியின் "அபலா" என்னும் நகைகளை அணிந்து நடை போட்டார்.

ராணி போல் நடைபோட்ட பாலிவுட் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்

இந்த ரேம்பில் " அழகு ராணி" யாக வலம் வந்து அசத்திய லியோன், "ராயல் டிரைப்" என்று பெயரிடப்பட்ட நகைகளை அணிந்து வந்தபோது, மகாராணியாகவே காணப்பட்டார்.

கருப்பு நிறத்திலான கற்கள் பதிக்கப்பட்ட கவுனில் தலையில் அழகான இரண்டு வட நெத்தி அணிகலன், கழுத்தில் மிகப்பெரிய ராணிகள் அணிவது போன்ற நெக்லஸ் மற்றும் பின்புறம் வரை நீண்ட கழுத்தணி, காலில் தண்டை, கைகளில் வளையல்கள் என்று ஒரு ராஜவம்ச ராணியாக மின்னினார் சன்னி லியோன்.

மொத்ததில் அந்த மாலை நேரத்தில் அழகில் ஜொலித்த கவர்ச்சிப் புயலால் நிறைய பேர் கரை ஒதுங்க முடியாமல் தத்தளித்தது என்னவோ உண்மைதான்.

 

ரூ 15 கோடி செலவில் 2 புதிய படப்பிடிப்பு அரங்குகள்... ஜெ. அறிவிப்புக்கு ஃபெப்சி நன்றி!

சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.15 கோடியில் இரண்டு நவீன வசதிகளுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது.

கடந்த திங்களன்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், புதிய படப்பிடிப்புத் தளங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

ரூ 15 கோடி செலவில் 2 புதிய படப்பிடிப்பு அரங்குகள்... ஜெ. அறிவிப்புக்கு ஃபெப்சி நன்றி!

அதாவது, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் காலியாகவுள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை பரிசீலனை செய்து 14.07.2014 அன்று சட்டசபையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு படப்பிடிப்பு அரங்குகளைத் திறப்பதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

"நம்பருடன்" காதல் முறிவு.. அரசியல் குடும்பத்து நடிகர் தற்கொலைக்கு முயற்சி?

சென்னை: தமிழ்த் திரையுலகில் நேற்று பரவிய செய்தி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. நிஜமா, உண்மையா என்றுதான் பலரும் கிசுகிசுத்துக் கொண்டனர். காரணம், அந்த இளம் தயாரிப்பாளர் - நடிகர் - அரசியல் குடும்பத்து வாரிசு தற்கொலைக்கு முயன்றதாக வந்த தகவலால்.

இத்தனைக்கும் அந்த இளம் நடிகர் திருமணமானவர், சந்தோஷமாக மனைவியுடன் குடும்பம் நடத்தி வருபவர். தந்தையுமானவர். ஆனால் தன்னுடன் 2வது படத்திலும் ஜோடி சேர்ந்த நடிகையுடன் ஏற்பட்ட காதல் முற்றி, அந்தக் காதலை அந்த நடிகை நிராகரிக்கப் போய் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் தற்கொலைக்கு இவர் முயன்றதாக அந்த பரபரப்புச் செய்திகள் கூறின.

இந்த செய்தியை ஒரு முன்னணி நாளிதழ் செய்தியாக வெளியிடப் போய் பரபரப்பு பற்றிக் கொண்டு விட்டது.

சிங்கம் நடிகர் படத்திலிருந்து

இந்த இளம் நடிகர் சிங்கம் நடிகரை வைத்துத் தயாரித்த படத்தில்தான் அந்த நடிகை இவருக்கு அறிமுகமானார். அப்போதே நடிகை மீது நடிகருக்கு ஒரு இது வந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நடிகைக்கு அது வந்ததா என்பது தெரியவில்லை.

மறுபடியும்

இந்த நிலையில் தானே கதாநாயகனாக அவதாரம் எடுத்தார் நடிகர். மேலும் தனது புதிய படத்திலும் தனக்குப் பிடித்த நடிகையை அவர் ஜோடியாகவும் போட்டார். காதலை வளர்க்கவும், ஆழப்படுத்தவும்தான் இந்த முயற்சி என்று பேசிக் கொள்கிறார்கள்.

மலைக்கோவில் வாசலில்

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் வளர, நடிகை மீதான நடிகரின் காதலும் மறுபக்கம் விறுவிறுவென வளர்ந்து வந்ததாம். இருவரும் படப்பிடிப்புக்கு மத்தியில் பழனிக்கெல்லாம் போய் சாமி கும்பிட்டு வந்தார்களாம்..

என்னப்பா இது

ஆனால் இந்த விஷயத்தை நடிகரின் குடும்பத்தார் ரசிக்கவில்லை. விஷயம், குடும்பத்துப் பெரியவர் காதுகளுக்குப் போக அவர் நடிகரை கூப்பிட்டு என்னப்பா இது, இதெல்லாம் வேண்டாம், விட்டுரு என்று அறிவுரை கூறினாராம்.

விடாத காதல்

ஆனால் அதை அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விட்டு விட்டாராம் நடிகர் - காரணம் காதல் முற்றியதால், காதில் எதுவும் ஏறவில்லையாம். மறுபடியும் தனது புதுப் படத்தில் நடிகையை ஜோடியாக்கியுள்ளார்.

சுதாரித்த நடிகை

ஆனால் இப்போது நடிகை சுதாரித்துக் கொண்டாராம். எனக்கு உங்கள் மீது நட்பு மட்டுமே, காதல் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறவே கண்ணாடி மீது பட்ட கல்லாக நடிகரின் மனது உடைந்து போய் விட்டதாம்.

சோகத்தில்

இந்த சோகத்தில்தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது நண்பர் நடிகர் ஒருவர்தான் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறுகிறார்கள்.