சென்னை: சுந்தரமான இயக்குனரை அவர் இயக்கிய ஹீரோக்களே அதிர வைத்துள்ளார்களாம்.
சுந்தரமான இயக்குனர் வெற்றிப் படங்களை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து படமாக இயக்குகிறோமே நாமே ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்போம் என்று முடிவு செய்தார்.
அவர் இதற்கு முன்பும் ஹீரோவாக நடித்துள்ளார் அல்லவா அதனால் தான் மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. ஆனால் சோலோ ஹீரோவாக வேண்டாம் நாம் அண்மையில் எடுத்த வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோக்களில் யாரையாவது கூட்டு சேர்த்துக் கொள்வோம் என்று நினைத்தார். இதையடுத்து அந்த ஹீரோக்களிடம் யப்பா, என் படத்தில் என்னுடன் நடிக்க வாருங்களேன் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர்களோ போங்க சார், நாங்கள் எல்லாம் உங்களுடன் நடிக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்களாம். எப்படி நம்பினோம் இப்படி பேசுகிறார்களே என்று இயக்குனர் கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்துள்ளார்களாம்.