சுத்தமான இந்தியா: பிஞ்சுக் கையால் துடைப்பம் எடுத்த ஷாருக்கின் செல்ல மகன் ஆப்ராம்

மும்பை: ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமின் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை வீட்டில் இருந்தே துவங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று துவக்கி வைத்து பல பிரபலங்களுக்கு சவால் விடுத்தார். அவரது சவாலை ஏற்று உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்ட பிரபலங்களும் துடைப்பத்தை எடுத்து ஏதாவது பொது இடத்தை சுத்தம் செய்தனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் இருந்து சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். தனது இளைய மகள் ஆப்ராமின் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய கற்றுக் கொடுத்துள்ளார்.

ஆப்ராம் தன்னை விட பெரியதாக இருக்கும் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முயற்சித்துள்ளான்.

இது குறித்து ஷாருக்கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சுத்தமான இந்தியாவை இந்த இளம் வயதில் இருந்தே அவனுக்கு கற்றுக் கொடுக்கிறேன்...

 

படங்களில் நடிக்க '2 கன்டிஷன்' போடும் நம்பர் நடிகை

சென்னை: நம்பர் நடிகை தன்னை படங்களில் நடிக்குமாறு கேட்டு வருபவர்களிடம் இரண்டு கன்டிஷன் போடுகிறாராம்.

வயது 30 ஆனாலும் இன்று கோலிவுட்டில் அதிக மவுசு உள்ள நடிகை நம்பர் தான். காதல் தோல்விகள், கிசுகிசுக்கள் என எவற்றாலும் அவரது மார்க்கெட் கடுகு அளவு கூட பாதிக்கப்படவில்லை. மாறாக அவருடன் நடிக்க ஹீரோக்கள் போட்டா போட்டி போடுகின்றனர்.

'அந்த 2' காட்சிகளில் நடிக்க மாட்டேன்: நம்பர் நடிகை கறார்

அதனால் அவரும் மகிழ்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கிறங்கடிக்கும் கவர்ச்சி, நீச்சல் உடை காட்சிகளில் நடித்து பலரின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர வைத்தவர் அவர். இந்நிலையில் அவர் தற்போது தன்னை படங்களில் நடிக்க வைக்க வருபவர்களிடம் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறாராம்.

ஒன்று நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்பது. இரண்டாவது, கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பது. அவர் என்ன தான் அதிகமாக சம்பளம் கேட்டாலும், நிபந்தனைகள் விதிதdதாலும் தயாரிப்பாளர்கள் அவரது வீட்டு வாசலில் காத்துக் கிடந்து அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள்.

அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் நடிகையின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளதால் அவர் குஷியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

10 எண்றதுக்குள்ள... கிராமத்து நேபாளியாக நடிக்கும் சமந்தா!

சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தில் அவருக்கு இரட்டை வேடம். அதில் ஒன்று நேபாளி கேரக்டராம். மற்றொன்று நகரத்து பெண் கேரக்டராம்.

ஐ படத்தைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள'. இப்படம் நெடுஞ்சாலை பயணத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இக்கதைக்காக இந்தியாவில் பல்வேறு வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

10 எண்றதுக்குள்ள... கிராமத்து நேபாளியாக நடிக்கும் சமந்தா!

வழக்கமாக விக்ரம் தான் தனது படங்களில் வித்தியாசம் காட்டுவார். ஆனால், விக்ரமின் இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று கிராமத்து நேபாளி பெண் போன்ற ஒரு தோற்றமாம். இது தொடர்பான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப் பட்டுள்ளது. இதற்காக நேபாளிகளின் பாரம்பரிய உடையணிந்து சமந்தா நடித்துள்ளார்.

தற்போது நேபாளில் படத்தின் முக்கியமான காட்சிகளையும், ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளையும் படமாக்க உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை இங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

'நீயெல்லாம் நல்லா வருவடா... ஆனா தலைப்பை மட்டும் மாத்துடா'!

சில மாதங்களுக்கு முன்பு திரை நட்சத்திரங்கள் படைசூழ "நீயெல்லாம் நல்லா வருவடா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் முதல் முன்னோட்டம் வெளியானது.

படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னனி இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் முன்னனி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஏனெனில் தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற டீசர் இதற்கு முன்பு வந்ததில்லை என்பதால் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

'நீயெல்லாம் நல்லா வருவடா... ஆனா தலைப்பை மட்டும் மாத்துடா'!

தொடர்ந்து நடைபெற்று வந்த படபடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதும் படத்தின் முக்கிய பணிகள் விரைந்து நடைபெற்றன.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்கள், உயர்நிலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிற துறைகளில் இருக்கும் பிரபலங்களை அழைத்து சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது தயாரிப்பு தரப்பு. படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், உயர் காவல் துறை அதிகார்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள், இயக்குனரையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் வெகுவாக பாராட்டி இப்படம் அனைவரையும் கவரும் என்று வாழ்த்துக் கூறினார்கள்.

படத்தின் கதைக்கு ஏற்றாற் போல் இன்னும் ஏதுவான தலைப்பை வைத்தால் நன்றாக இருக்கும் என்று திரை பிரபலங்கள் ஆலோசனை கூறவே நீண்ட கலந்தாய்வுக்கு பிறகு படத்தின் தலைப்பை "காவல்" என்று மாற்றினார்கள்.

மேலும் படத்தின் இயக்குனர் நாகேந்திரனை வெகுவாக பாராட்டி "நீயெல்லாம நல்லா வருவடா" என்று செல்லமாக வாழ்த்தினார்கள்.

இப்படத்தில் விமல், சமுத்திரகனி, கிதா, தேவா, பார்பி ஹண்டா, எம்எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.

 

'கொம்பன்' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்

சென்னை: கொம்பன் படப்பிடிப்பின்போது தான் தங்குவதற்காக தனது நண்பர் குடும்பத்தோடு வீட்டை காலி செய்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 1ம் தேதி வெற்றிகரமாக ரிலீஸானது. கொம்பன் படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பர் என்று சமூல வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

'கொம்பன்' கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்

இந்நிலையில் சென்னையில் நடந்த கொம்பன் பட வெற்றி விழாவில் கார்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

நாங்கள் கொம்பன் படப்பிடிப்பில் இருந்தபோது தங்குவதற்கு இடம் இல்லை. அதனால் நான் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். அவரும், அவரது குடும்பத்தாரும் என்னை சிரித்த முகத்தோடு வரவேற்றனர்.

நான் வசதியாக தங்க வேண்டி அவர் தனது குடும்பத்தோடு வீட்டை காலி செய்து சென்னைக்கு சென்றுவிட்டார். படப்பிடிப்பு நடந்து முடியும் வரை அவர் சென்னையில் தங்கியிருந்தார். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.

 

படத்துல ஹீரோ யாரு... நானா ? மொட்டையா ? இயக்குநரின் தலையிலேயே ‘குட்டி’ய நடிகர்!

சென்னை: டெரர் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலந்து கட்டிக் கொண்டிருக்கிறார் மொட்டை நடிகர். சமீபத்தில் வெளியான சில படங்களில் டிரைலர் முதற்கொண்டு கட்- அவுட் வரை அனைத்திலும் ஹீரோவை விட காமெடி நடிகருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது.

அதில் ஒரு படம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஹீரோவாக புரோமோஷன் ஆன நடிகருடையது. முதல் படம் மூலம் தான் பெரிய அளவில் பேசப் படுவோம் என எதிர்பார்த்திருந்தவருக்கு காமெடியில் கண்டம் உண்டானது. இதனால், அவர் ரூம் போட்டு அழுது வருவதாக தகவல்.

இந்நிலையில், இசை வாரிசு இயக்கி பிரகாசமான நடிகர் நடிக்கும் படத்திலும் மொட்டை நடிகர் நடிக்கிறாராம். சமீபத்திய படங்களைப் போலவே இப்படத்திலும் காமெடியை தூக்கி வைத்து படத்தை பிரபலப் படுத்த நினைத்தாராம் இசை வாரிசு.

இந்த விஷயம் பிரகாச நடிகரின் காதுகளுக்குச் சென்றுள்ளது. ஏற்கனவே தண்ணி நடிகரின் கதையை அறிந்திருந்த நடிகர், இயக்குநரைக் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.

இந்தப்படத்தில் நான் ஹீரோவா, இல்லை அவரா என நாயகன் கேட்டதால் இயக்குநர் தரப்பு கப்சிப் ஆகிவிட்டதாம்.