36 வயதினிலே படம் எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்! - சூர்யா

36 வயதினிலே படத்தை எடுத்ததற்காக நான் பெருமைப் படுகிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ள படம் 36 வயதினிலே. கடந்த வாரம் வெளியாகி, பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இந்தப் படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் சாதகமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இதனால் மிகவும் மகிழ்ந்து போன சூர்யா, "36 வயதினிலே படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு என்னை நெகிழ வைக்கிறது.

Surya prouds for producing 36 Vayathinile

பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் மதிப்புக்குரிய மீடியாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அதன் விளைவுதான் 36 வயதினிலே. இந்த மாதிரி முயற்சிகளைத் தொடர்வேன், என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

ஓட்காவை ஓரமா வச்சிட்டு போய் தூங்குங்க..! - சர்ச்சை கிளப்பும் ராம்கோபால் வர்மாவுக்கு சூடு

ட்விட்டரில் சர்ச்சை கிளப்புவதையே வேலையாகக் கொண்டுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு, இயக்குநர் அனுராக் காஷ்யப் சூடு கொடுத்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான படம் பாம்பே வெல்வெட். மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் வசூலிலும் பின் தங்கியது.

Tweet fight of RGV - Anurag Kashyap

இப்படத்தை பற்றியும், இயக்குனர் அனுராக் காஷ்யப் பற்றியும் ராம்கோபால் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட படத்திற்கு அதன் இயக்குநர் ஆதரவாக பேசுவது எப்படி இருக்கிறது என்றால், ஒரு பெண்ணைப் பார்த்து நான் என்னை ரொம்ப விரும்புகிறேன் எனவே நீ என்னை விரும்புகிறாயா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை" என்று கூறுவது போல் இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்து வந்த அப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், பொறுமையிழந்து நேற்று அவருக்கு பதில் ட்டுவிட் செய்துள்ளார்.

அதில், "சார்... ஓட்காவை ஓரமாக வைத்துவிட்டு போய் தூங்குங்கள். ஐ லவ் யு...லாட் ஆப் கிஸ்ஸஸ்" என்று பதிலளித்துள்ளார். அனுராக்கின் ட்விட்டிற்கு பதிலளித்த ராம்கோபால் வர்மா, "நான் குடிப்பதை விட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. மேலும் நான் ஆண்களை முத்தமிடுவதில்லை; ஐ லவ் யு" என கூறியுள்ளார்.

 

போன ஜென்மத்துல தான் யாரா இருந்தோம்னு நெஜமாவே தேடப் போறாராம் நடிகர் தீலிப்

திருவனந்தபுரம்: சந்தானம் ஒரு படத்தில நான் யாரு நான் யாருன்னு மூச்சு விடாமக் கேட்பாரே, அதே மாதிரி ஒரு நடிகர் போன ஜென்மத்துல நாம என்னவா இருந்தோம்னு நிஜமாவே தேடப் போறாராம்.

மலையாள நடிகர் தீலிப் தான் அந்த முன்ஜென்மத்த தேடப் போற நடிகர். எல்லாம் இவர் நடிச்ச சந்திரேட்டன் எவிடயா படத்தால வந்த வெனை தான்.

Actor Dillep Eager To know His Early life

ஆமாம் அந்தப் படத்தில குடும்பத்தோட தஞ்சாவூர் கோவிலுக்குப் போகும் தீலிப் ஜாதகம் மூலமா முன் ஜென்மத்தில் தன்னோட காதல் கைகூடாம போனதத் தெரிஞ்சிகிட்டு தன்னோட காதலிய இந்த ஜென்மத்தில தேடிப் போற மாதிரி கதை இருக்கும்.

அந்தப் படத்தில நடிச்சு முடிச்ச தீலிப் உண்மையிலே போன ஜென்மத்தில தான் யாரா இருந்திருப்போம்னு தேடப் போறாராம்.கடவுள் பக்தி அதிகம் உள்ள தீலிப் இதற்காக தஞ்சாவூருக்கு திரும்ப போய் தன்னுடைய முயற்சியைத் தொடங்கப் போறாராம்.

அப்படியே கையோட உங்க போன ஜென்மத்து காதலி மற்றும் மனைவி யாருன்னும் கேட்டு தெரிஞ்சிட்டு வாங்க சார்.. பல பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்!

 

விடியல் படத்தை ஆகஸ்டுக்குள் முடிச்சிடுங்க! - 'நாட்டாமை' சரத்குமாருக்கு கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் கூப்பிடுங்க நாட்டாமை சரத்குமாரை எனும் அளவுக்கு, பரபரப்பாக பஞ்சாயத்து பண்ணி தீர்வு கண்டு வருகிறார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

ஆனால் அந்த சரத்குமாருக்கே இப்போது ஒரு பஞ்சாயத்து. அவர் நடித்த விடியல் படம் முடியாமல் இழுத்தடிப்பதாக வழக்கு நீதிமன்றம் போக, இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

Vidiyal movie: Madras high Court order to Sarath Kumar

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகிய இருவரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கால அவகாசம் நிர்ணயித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கிரிகுஜா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.சுந்தரராமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நடிகர் சரத்குமாரின் ஆர்.ஆர்.ஆர். மூவிஸ், ராதிகாவின் ஐ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து "விடியல்' என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனம் கடந்த 2010-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

Vidiyal movie: Madras high Court order to Sarath Kumar

ஆனால், படம் தயாரிப்பது தொடர்பாக நாங்கள் ஒப்பந்தம் செய்த பிறகு, "சென்னையில் ஒரு நாள்' என்ற திரைப்படத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு ஆர்.ஆர்.ஆர். மூவிஸ், ஐ பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டன.

எங்களுடன் ஒப்பந்தம் செய்து, படத்தை முடித்துக் கொடுக்காமல் 'சென்னையில் ஒரு நாள்' படத்தை வெளியிடக் கூடாது எனக் கோரி வழக்கு தொடர்ந்தோம். அப்போது, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 'விடியல்' படத்தை முடித்துக் கொடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

ஆனால், அவர்கள் உத்தரவாதம் அளித்தவாறு படத்தை இதுவரை முடித்துக் கொடுக்கவில்லை. இந்தப் படம் தயாரிப்பதற்காக இதுவரை ரூ. 1.38 கோடி வழங்கியுள்ளோம்.

Vidiyal movie: Madras high Court order to Sarath Kumar

எனவே, நாங்கள் அளித்த ரூ.1.38 கோடி தொகைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லது அசையாச் சொத்துகளை முடக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'விடியல்' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் சரத்குமார், ராதிகா தரப்பினர் முடிக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்காமல், மேலும் அவகாசம் கோரினால் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்த பின்னரே அவகாசம் வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

 

மோகன்பாபு மகன் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக வந்த த்ரிஷா - ராணா.. மலர்ந்தது புது லவ்!

ஒரு உறவு முறிந்தால், அடுத்த உறவுக்கு கை நீள்வதும், ஒரு திருமணம் நின்றால்.. வேறு ஜோடி அமைவதும் சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நடக்கவே செய்கிறது.

அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது த்ரிஷா - ராணா ஜோடி.

Rana renews affair with Trisha

ராணாவுடன் அநியாயத்துக்கு நெருக்கமாக சுற்றிக் கொண்டிருந்தவர் த்ரிஷா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் எனும் அளவுக்கு முன்பு கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் அதையெல்லாம் டமாரென்று ஒரு நாள் உடைத்தார் த்ரிஷா. ராணாவின் உறவையும் உதறினார்.

அடுத்த சில மாதங்களில் த்ரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததும். தனி ப்ளைட்டில் இருவரும் ஊர் சுற்றியதும், இப்போது நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதும் ஊரறிந்தது.

இந்த உறவு முறிந்த அடுத்த சில வாரங்களில் த்ரிஷாவும் ராணாவும் மீண்டும் ஜாடை மாடையாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். முதலில் ட்விட்டரில் ஆரம்பித்த இந்த மறு உறவு, இப்போது மீண்டும் ஜோடியாக சுற்றும் அளவுக்குப் போயிருக்கிறது.

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த நடிகர் மோகன் பாபு மகன் மஞ்சு மனோஜ் திருமண சங்கீத் நிகழ்ச்சிக்கு இருவரும் ஜோடியாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

சரி, மீடியாவுக்கு பஞ்சமில்லாமல் செய்தி தரப் போகிறார்கள். வாழ்க!

 

முதலில் மஞ்சு.. அடுத்து ஜோதிகா.. இப்போ பிரியங்கா...!

பெங்களூர்: இந்த வருடம் சினிமாவில் நடிகைகளின் மறுபிரவேச வருடம் போல. 16 வருடங்கள் கழித்து நடிகை மஞ்சு வாரியர் ஹௌ ஓல்ட் ஆர் யூ படத்திலும் அதே படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா சுமார் 8 வருடங்கள் கழித்தும் நடிக்க வந்தனர்.

இப்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை பிரியங்கா திரிவேதி. தமிழில் அஜித்துடன் ராஜா (அதில் ஜோதிகாவும் இன்னொரு ஹீரோயின்), விக்ரமுடன் காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்த இவர் கன்னட நடிகர் உபேந்திராவைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலானார்.

Actress Priyanka’s new avatar

தற்போது கன்னட திரை உலகின் பிரபல ஒளிபதிவாளரும், இயக்குனருமான தினேஷ் பாபுவின் இயக்கத்தில் பிரியங்கா என்ற படத்தில் நீண்ட வருடங்கள் கழித்து நடித்து இருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

எல்லா இயக்குனர்களும் இனி ஹீரோயினுக்கு கதைய ரெடி பண்ணுங்கப்பா..!

 

தெலுங்கில் ரக்ஷுடுவாக வெளியாகும் சூர்யாவின் மாஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த ‘மாஸ்' படம் தெலுங்கில் ரக்ஷுடு என்ற பெயரில் வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

மாஸ் தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சூர்யா, தெலுங்கு நடிகர் பிரபாஸ், வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கோதண்டராமி ரெட்டி, யுவன்சங்கர் ராஜா, கே.இ.ஞானவேல்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Surya's Masss to release in Telugu as Rakshudu

விழாவில் சூர்யா பேசுகையில், "தெலுங்கு ரசிகர்கள் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறார்கள். என் படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் காட்டும் அன்புக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் நாயகர்கள் பிரபாஸ், ராணா இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி," என்றார்.

 

காஷ்மீருக்குப் போன இடத்தில் காத்ரீனா நினைவில் மூழ்கிய சல்மான்!

காஷ்மீர்: காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தனது முன்னாள் காதலியான கத்ரீனா கைஃபின் நினைவு வந்துவிட்டது.

சல்மான் கான் இயக்குனர் கபீர் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வருகிறார் சல்மான். மேலும் காஷ்மீரில் தான் எடுத்துள்ள புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Salman Khan Will Never Forget Katrina Kaif

காஷ்மீரில் கரீனா கபூருடன் நடித்து வரும் சல்மான் கானுக்கு தனது முன்னாள் காதலியான கத்ரீனா கைஃபின் நினைவு வந்துள்ளது. ஏக் தா டைகர் படத்திற்காக அவரும், கத்ரீனாவும் ஆடிய மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்ற பாடல் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது. அந்த பாடல் பற்றி நினைத்த சல்மானுக்கு கத்ரீனாவின் நினைவும் வந்துள்ளது.

பாலிவுட்டில் நுழைந்த கத்ரீனா சல்மான் கானின் காதலியாக சில ஆண்டுகள் வலம் வந்தார். பின்னர் அவர் சல்மானை பிரிந்து சென்று நடிகர் ரன்பிர் கபூருடன் சேர்ந்துவிட்டார். ரன்பிர் கபூருக்கும், கத்ரீனாவுக்கும் விரைவில் திருமணம் என்று பாலிவுட்டில் கூறப்படுகிறது.

காதல், திருமணம் பற்றி ரன்பிர் பேசினாலும் கத்ரீனா அது தொடர்பாக வாய் திறப்பதே இல்லை.

 

ரஜினிகாந்த்தின் அடுத்த 2 படங்களின் பட்ஜெட் ரூ. 370 கோடியாமே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த இரு படங்களுக்கான பட்ஜெட் முறையே 70 கோடி மற்றும் 300 கோடி என்று கூறுகிறார்கள். அதாவது மொத்த பட்ஜெட் 370 கோடி ரூபாய்.

ரஜினி அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். முதலில் ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 70 கோடி. இதை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க இருக்கும் பிரமாண்டமான படத்திற்கு லைகா நிறுவனம் 300 கோடி ரூபாய் தாரை வார்க்கத் தயாராக உள்ளதாம்.

Rajini next two movies total budget Rs. 370 crores

இரண்டு படங்கள்

ரஞ்சித்தின் புதிய படத்திலும் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் ரஜினி. இதில் ஷங்கரின் படம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப் பட உள்ளதாம்.

எந்திரன் 2 வா அல்லது வேறு படமா?

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2 வாக இருக்குமா அல்லது வேறு புதுப் படத்தை ஆரம்பிக்கிறாரா என்று புதிதாக பேசவுள்ளனர்.

ஏன் லேட் எந்திரன் 2

படத்தில் ஹீரோவுக்கு சமமான வில்லன் வேடத்தில் நடிக்க எந்த பெரிய நடிகரும் தயாராக இல்லை. விக்ரமை அணுகி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதைப் பற்றிய எந்த செய்தியும் இன்னும் உறுதியாகவில்லை.

வில்லனாக ஷாருக்கான்

தற்போது இந்தி நடிகர் ஷாருக்கானை நடிக்க வைக்க இருப்பதாக கூறுகிறார்கள். தமிழ், இந்தி என இரு மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில் தமிழில் ஷாருக்கான் வில்லனாகவும் இந்தியில் ரஜினி வில்லனாகவும் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட இருப்பதாக பேசப்படுகிறது.

ரஜினியின் சம்பளம் எவ்வளவு

ரஞ்சித் படத்திற்கு 30 கோடி ரூபாயும் ஷங்கர் படத்திற்கு 50 கோடி ரூபாயும் ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம். இது தவிர வியாபாரத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரஜினிக்கு தயாரிப்பாளர்கள் கொடுக்கவுள்ளனராம்.

எப்போது வெளிவரும் படங்கள்

2016 பொங்கலுக்கு ரஞ்சித் படமும் 2017 பொங்கலுக்கு ஷங்கர் படமும் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். ஆனால் எந்தத் தகவலும் வழக்கம் போல அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

 

விஜய் அண்ட் விஜய்யுடன் கை கைகோர்க்கிறார் பிரபு தேவா!!

போக்கிரி, வில்லு படங்களுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கிறார்கள் பிரபு தேவாவும் விஜய்யும்.

விஜய்யின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது போக்கிரி. இந்த வெற்றியை அவருக்குத் தந்தவர் பிரபுதேவா. இந்த அளவுக்கு வில்லு போகவில்லை என்றாலும், பிரபு தேவா - விஜய் கூட்டணி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.

பிரபு தேவாவும் அடிக்கடி, விஜய்யை மீண்டும் இயக்க ஆசை என்று கூறி வந்தார்.

இப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.

Prabhu Deva to join hands with Vijay and Vijay

சமீபத்தில் விஜய்யைச் சந்தித்த பிரபு தேவா, ஒரு அதிரடி ஆக்ஷன் - காமெடி கதையை அவருக்குச் சொல்லி இருக்கிறார். கதை பிடித்ததால் உடனே சில மணி நேரம் அது பற்றி விவாதித்துமிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ஒரு படம் பண்ணவும் முடிவு செய்துள்ளாராம் பிரபு தேவா. இதில் அவர் ஹீரோ மட்டுமே. இதுகுறித்தும் பேசிவிட்டார்களாம். விரைவில் அறிவிப்பு வரவிருக்கிறதாம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த களவாடிய பொழுதுகள் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

திறமையால முன்னுக்கு வாம்மா!- மச்சினிச்சிக்கு அட்வைஸ்

ரேஸ் நடிகரின் மச்சினிச்சியை தமிழில் நடிக்குமாறு ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரோ நேராக தெலுங்கில் நடிக்கப் போனார். ஒரே ஒரு படம்தான் நடித்தார். அப்புறம் பெரிதாக எடுபடவில்லை.

திரும்பவும் நடிக்க வந்துள்ளார். மாமா தயவில் தமிழில் பெரிய அளவில் நாயகியாக அறிமுகமாக வேண்டும்... அதுவும் மாமா படத்திலேயே நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் என அக்கா மூலம் ஒரு கல் விட்டுப் பார்த்திருக்கிறார்.

ஆனால் நம்ம ஹீரோவோ... அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம். உன் திறமையால்தான் முன்னுக்கு வா என்று கூறி, மச்சினிச்சியின் ஆர்வத்துக்கு அணை போட்டுவிட்டாராம்.

ஆனாலும் நீங்க ரொம்ப நேர்மையா இருக்கீங்க பாஸ்!

 

அசத்தும் "அவந்திகா".. பாகுபாலி போஸ்டரில் கலக்கும் தமன்னா!

ஹைதராபாத்: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமன்னாவின் "அவந்திகா" போஸ்டரை வெளியிட்டுள்ளது பாகுபாலி படக் குழு.

பாகுபாலி படத்தில் நடித்து வரும் அனைவரின் படத்தையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட இயக்குனர் தற்போது தமன்னா பிங்க் கலரில் உடை அணிந்து நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளார்.

First look: Tamannah in Baahubali movie

ஏற்கனவே படத்தின் நாயகி அனுஷ்கா, நாயகன் பிரபாஸ், சத்யராஜ், மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படங்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகிய தமன்னாவின் புகைப்படமும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் ஹாலிவுட் படங்களின் காப்பி என்று நெட்டிசென்கள் ஒரு புறம் வறுத்தெடுத்தாலும் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் உள்ளது. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்க கேகே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த போஸ்டர் எந்த படத்தோட காப்பின்னு கொளுத்திப் போடப் போறாங்களோ..!

 

இந்திய வம்சாவளி திரைப்பட இயக்குநர் அமெரிக்க சாலை விபத்தில் மரணம்

லாஸ் ஏஞ்செல்ஸ்: விஜய் மோகன் என்ற இளம் அமெரிக்க இயக்குனர் பைக்கில் சென்றபோது நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

மே 1௦ ம் தேதி தனது பைக்கில் சொந்த ஊரை (பிலடெல்பியா) நோக்கி இவர் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் மோதியது. இதில் விஜய் மோகன் பலத் காயமடைந்து உயிரிழந்தார்.

26 வயதான விஜய் மோகன் சிகாகோவில் பிறந்தவர். தனது உயர்நிலைக் கல்வியை இந்தியாவில் பயின்றவர்.

India- American Film maker Dies After Accident in US

திரைப்படம் மற்றும் ஊடகக் கலைகள் தொடர்பாக டெம்பில் யூனிவர்சிட்டியில் படித்த இவரைப் பற்றி அங்குள்ள தொலைக்காட்சி நிலையம் மிக கண்ணியமாகவும், நேர்மையாகவும் வேலை செய்யக் கூடிய ஒரு இளைஞனை இழந்து விட்டோம் என்று கூறியுள்ளது.

பிலடெல்பியா நகரத்தின் சுற்றுப் புறங்களில் உள்ளவர்களை திரைப்படம் சம்பந்தமாக இணைக்கும் குழு ஒன்றையும் இவர் நடத்தி வந்துள்ளார்.

 

நான் உயிரோடு நல்லாத்தான் இருக்கேன்...!- ஜாக்கி சானுக்கு வந்த நெலமையப் பாத்தீங்களா!!

சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், மலைக்க வைக்கும் சாகசங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஆக்‌ஷன் பட ரசிகர்கள் மத்தியில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், மாரடைப்பால் இறந்து விட்டதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

ஜக்கி சானின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எனது இழப்பை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த துயரத்தை, என்னுடன் சேர்ந்து நீங்களும் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன் என ஜாக்கி சானின் மனைவி லின் பெங் ஜியாவ் குறிப்பிட்டிருந்ததாக ஒரு உபரி தகவலும் அந்த செய்தியில் வெளியாகியிருந்தது.

இந்த செய்தியை உண்மை என்று நம்பிய பல்லாயிரக்கணக்கானோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தனர். அதை லட்சக்கணக்கானவர்கள் ‘ஷேர்' செய்ததில் காட்டுத்தீ போல் இந்த செய்தி படுவேகமாக பரவியது.

இந்நிலையில், தனது அதிகாரபூர்வ 'வெய்போ' (ட்விட்டர் போல சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளம்) மூலம் இந்த வதந்திக்கு ஜாக்கி சான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நான் நல்ல உடல்நலத்துடன் உயிருடன் இருக்கிறேன். மாரடைப்பால் நான் மரணமடைந்து விட்டதாக வந்துள்ள தகவல்கள் வெறும் புரளி என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

'ரொம்பவே சொதப்பிட்டேன்ல.. ஸாரிங்க!' - டிடி

ஆர்வம் இருக்கலாம்.. அதுவே ஆர்வக் கோளாறாக இருந்ததால்... டிடி எனும் திவ்யதர்ஷினி மாதிரி மன்னிப்பு கேட்க வேண்டியதுதான்.

சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை டிடி என்கிற திவ்யதர்ஷினியும் நீயா நானா கோபிநாத்தும் தொகுத்து வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது இந்த நிகழ்ச்சியில் டிடி லொடலொடவென ஓவராகவும், சுவாரசியம் இல்லாமலும் பேசியதாக சமூகவலைத் தளங்களில் பலரும் விமரிசனம் செய்தார்கள்.

DD regrets for her immature anchoring

இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் டிடி.

அவர் கூறுகையில், "அன்பா சொன்னவங்களுக்கும் மோசமா சொன்னவங்களுக்கும் நன்றி. உங்களுடைய கருத்துகளை எடுத்துக்கொள்கிறேன். அடுத்தமுறை நிச்சயம் இன்னும் சிறப்பாக செய்வேன். என் குடும்பத்தினருக்கும் தொலைக்காட்சிக்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

 

நான்கு இளைஞர்களை நிஜமாகவே விளக்குமாறால் வெளுத்துக் கட்டிய ப்ரியங்கா!

'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!'

உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை.

இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர்.

Kangaru Priyanka in Vandha Mala

கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

Kangaru Priyanka in Vandha Mala

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இகோர் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறுகையில், "சென்னையில் நான்கு இளைஞர்கள் வேலையின்றி வெட்டியாய் சுற்றித் திரிகின்றனர். சிறு சிறு குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நிகழும் குழப்பங்களை காமெடியாக சித்தரிப்பதே இப்படத்தின் கதை.

எல்லோரும் முட்டாளாக இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பது படம் பார்க்கும்போது புரியும். பாட்டு, கூத்து, கும்மாளம் என முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது. கடைசி வரை சிரித்துக் கொண்டே இருக்கும்படி திரைக்கதை இருக்கும். ஆக்ஷன், காதலும் உண்டு," என்றார்.

Kangaru Priyanka in Vandha Mala

படத்தின் ட்ரைலரைக் காட்டினார்கள். அதில் நாயகி ப்ரியங்கா நான்கு இளைஞர்களை விளக்குமாறால் வெளுத்துக் கட்டும் காட்சி ஒன்று வருகிறது. இந்தக் காட்சியை எடுக்கும்போது முதலில் வெறுமனே நடிப்புதானே என அசால்டாக போயிருக்கிறார்கள் அந்த நான்குபேரும். ஆனால் டேக் போனபோது நிஜமாகவே விளக்குமாறால் பின்னிவிட்டாராம் ப்ரியங்கா. அம்மணிக்கு அப்படி என்ன கோபமோ!

படத்துக்கு இசை சாம் டி ராஜ். விரைவில் வெளியாகிறது இந்தப் படம்.

 

அன்பார்ந்த தனுஷ் ரசிகர்களே... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "மாரி".....!

சென்னை: பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாரி படத்தின் இசை வெளியீடு மே 25ம் தேதி என்றும் படத்தின் டீசர் நாளை முதல் (மே 2௦) என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் காஜல் அகர்வால் இவர்களுடன் ரோபோ சங்கர் நடிக்கும் இப்படத்தில் தனுஷ் டைலராக வருகிறார். வேலை இல்லாத இளைஞன் போன்று நிறைய படங்களில் நடித்து விட்டதால் இதில் சற்று வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் இதில் நூல் விற்பவராக வருகிறார். காஜலின் கடைக்கு செல்லும் தனுஷிற்கு காஜல் மேல் காதல் வருகிறது. அதைச் சுற்றிய கதைக் களமே "மாரி" படமாம்.

இசை வழக்கம் போல அனிருத் தான். இதில் வருகின்ற பாடல் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்து இருக்கிறார் தனுஷ்.

Dhanush Maari Audio Release Date Confirmed…

"மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா... மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா"

"மாரி... கொஞ்சம் நல்ல மாறி...ரொம்ப வேற மாறி மாரி... தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி"...

இப்படி அமைந்துள்ளன அந்த வரிகள்.