ஒரே கல்லில் ரூ.3 கோடி அடித்த நம்பர் நடிகை

சென்னை: நம்பர் நடிகை அழகு மட்டும் அல்ல தான் ஒரு அறிவாளி என்பதையும் நிரூபித்துள்ளார்.

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்ற நம்பர் நடிகை மீண்டும் நடிக்க வந்தார். செகண்ட் ரவுண்ட் எப்படி இருக்கப் போகிறதோ என்று பலர் வியந்தபோது நம்பர் நடிகை சூப்பர் ஹிட்டாகிவிட்டார். முன்னணி ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலர் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். இதை நேரம் கிடைக்கும்போது அவர்களே வாய்விட்டும் கூறி வருகிறார்கள்.

Number actress is the clever one in Kollywood

இந்நிலையில் தான் அவர் தெலுங்கில் உள்ள சீனியர் ஹீரோவுடன் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் கேட்டார். ஹீரோ சீனியர் என்பதால் மிகவும் இளம் ஹீரோயின்களுடன் நடித்தால் அவரது வயது வெளிப்பட்டுவிடும் அதனால் நிச்சயம் நம்மை தான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று மனக்கணக்கு போட்டு தான் நடிகை அந்த தொகையை கேட்டுள்ளார்.

அவர் நினைத்தது போன்றே அவரையே தனது படத்தில் நடிக்க வைக்குமாறு சீனியர் ஹீரோ தெரிவித்துவிட்டார். அம்மணியை பற்றி அவ்வப்போது ஏதாவது செய்தி அல்லது கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது.

இது எல்லாம் மார்க்கெட்டை தொடர்ந்து உச்சத்தில் வைக்க செய்யும் வேலை என்று கூறப்படுகிறது.

 

திருமணம் செய்யாம வாழ்ந்தா தப்பா? சொல்வது நித்யாப்பா!

சென்னை: எல்லாம் ஓ காதல் கண்மணி ஹிட்டான தைரியம் தான் பொண்ண இப்படி பேச வைக்குது.. அப்படி என்ன பேசினாங்க.. யார் பேசினாங்கன்னு கேட்கறீங்களா..

நடிகை நித்யாமேனன்தான் இப்படிப் பேசி இருக்காங்க.

'கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழுறது தப்பு இல்ல', அப்படின்னு நித்யா சொல்லியிருக்காங்க. ஏற்கனவே ஓ காதல் கண்மணி படம் வந்ததுல இருந்து வயசுப்ப சங்க, பொண்ணுங்க இருக்கற வீட்டில பெத்தவங்க மனசு திக்குதிக்குன்னு அடிச்சிட்டு இருக்கு.

Nothing Wrong Living together- Nithya  Menon

நம்ம பசங்களும் இப்படி எல்லாம் இருப்பாங்களோன்னு பெத்தவங்க பதறிட்டு இருக்கறப்ப, எரியற நெருப்புல கொஞ்சம் எண்ணெய் ஊத்துனமாதிரி நித்யாமேனன் இப்படிப் பேசி அவங்களோட கருத்துச் சுதந்திரத்த ஊருக்குள்ள விதைச்சி இருக்காங்க. காலத்திற்கு ஏற்றவாறு இயக்குநர் மணிரத்தினம் ஓ காதல் கண்மணியில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளைப் பற்றி எடுத்து இருந்தார்.

இளம்ஜோடிகளாக நடிகர் துல்கரும் நடிகை நித்யாமேனனும் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்த இந்தப்படம் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒருசேரக் குவித்தது. அதில் நடித்த நித்யாமேனன், 'திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுவது தவறல்ல, காலத்திற்கு ஏற்றவாறு பெற்றோரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்வதால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய நேரலாம், ஆனால் சேர்ந்து வாழும் முறையில் இந்த தவறுகளைத் தவிர்த்திட இயலும். இந்த மாதிரி சேர்ந்து வாழும் போது குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது' என்று கருத்துக் கூறியுள்ளார்.

என்னம்மா இப்படிப் பேசிட்டிங்களேமா..!

 

மாம்பழம் கொடுத்து நட்பு வளர்க்கும் பவன் கல்யாண்!

ஹைதராபாத்: சினிமாவில யாராவது தனக்குப் பிடிச்சவங்களுக்குப் பரிசு கொடுக்கணும்னா வாட்ச், மோதிரம், கார்.. இப்படி எதையாவது தருவார்கள்.

ஆனா நம்ம தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு கூடை நிறைய மாம்பழங்களை இயக்குநர் பாபிக்கு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாம்பழம் எல்லாம் ஒரு பெரிய விஷயமான்னு கேட்காதிங்க.

Pawan Kalyan surprises Bobby

ஏன்னா இது பவர் ஸ்டாரோட தோட்டத்தில இயற்கை முறையில் விளைய வைத்த மாம்பழங்களாம். வருடாவருடம் இந்தப் பழங்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வீட்டிற்க்கு செல்லும். சமீப காலமாக தனக்கு பிடித்தவர்களுக்கும் இந்த மாம்பழங்களை அனுப்பி வைக்கிறாராம் பவன் கல்யாண்.

இந்த வகையில் தெலுங்கின் இளம் ஹீரோ நிதினும் பவனிடம் இருந்து அன்புப் பரிசாக மாம்பழங்களைப் பெற்று இருக்கிறார்.

கப்பார் சிங் 2 படத்தின் இயக்குநர் பாபி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கூடை நிறைய மாம்பழங்கள், பவர் ஸ்டாரிடம் இருந்து எனக்குக் கிடைத்த இன்ப அதிர்ச்சி," என்று உற்சாகமாக ட்வீட்டியுள்ளார்.

 

குவியும் வெற்றிகள்... சொகுசு கார் வாங்கினார் ஸ்ருதி ஹாஸன்!

சென்னை: இந்தியா முழுவதும் பறந்து பறந்து நடித்துக் கொன்டிருக்கும் ஸ்ருதி ஹாஸன் சமீபத்தில் 1 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட ரேஞ்ச் ரோவர் என்ற அதிநவீன சொகுசு கார் ஒன்றை தனது சொந்த உழைப்பில் வாங்கியுள்ளார்.

கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற கப்பர் இஸ் பேக் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படமாக இந்தியில் அமைந்து உள்ளது.

Shruthi Haasan's New Range Rover

படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்த சொகுசுக் காரை வாங்கியிருக்கிறார் ஸ்ருதி. தமிழ், தெலுங்கு மற்று இந்தி ஆகிய மூன்று மொழிகளில், விஜய், அஜித்,சூர்யா மற்றும் மகேஷ் பாபு என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

தமிழ்,தெலுங்கில் முன்னணியில் இருப்பது, மும்பையில் சொந்தமாக வீடு வாங்கியது போன்ற வரிசையில் இந்த சொகுசுக் காரும் சேர்ந்திருக்கிறது.

நடித்த படங்களின் வெற்றி, புதிதாக நடித்து வரும் படங்கள் ஆகியவை தந்த மகிழ்ச்சியால் உற்சாகத்தில் இருக்கிறது பொண்ணு. ஸ்ருதியின் அப்பா கமலிடமும் இதே போன்று ஒரு ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. கமலின் கார் நிறம் வெள்ளை, சுருதி வாங்கியிருக்கும் காரின் நிறம் சிவப்பு.

புது வீடு, புது காரு கலக்கற ஸ்ருதி!

 

சிங்காரவேலனுக்கு படம் தருமுன் கவுன்சிலில் ஆலோசனை பெறவும்! - தயாரிப்பாளர் சங்கம்

சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தருக்கு இனி புதிய பட விநியோகத்தைத் தருவதற்கு முன் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

லிங்கா படம் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். லிங்கா படம் நஷ்டம் என்று நஷ்ட ஈடு கேட்டார். ரஜினிக்கு வயதாகிவிட்டது, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றார். ரஜினியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அவரைப் பற்றித் தவறாகப் பேசுவதுடன், மேலும் ரூ 15 கோடி வேண்டும் என்று கேட்டு வருகிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு மீதும் பல்வேறு புகார்களைக் கூறிவருகிறார்.

Producer Council bans Singaravelan to distribute any movies

லிங்காவுக்குப் பிறகு இவர் வெளியிட்ட கங்காரு படத்தை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கியதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புகார் கூறி வருகிறார். இதற்காக கோடிக்கணக்கில் சிங்கார வேலனிடம் நஷ்ட ஈடும் கோரி வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அதன் பிறகு இவர் வெளியிட்ட புறம்போக்கு, திறந்திடு சீசே படங்களிலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டக் கணக்குதான் காட்டியுள்ளதாக கலைப்புலி தாணு குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் கூறி வருவதாகக் கூறி சிங்காரவேலன் மற்றும் அவருக்குத் துணை போவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்தது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் இதனைத் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ் தாணு, செயலாளர் டி சிவா மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சங்க உறுப்பினர்களுக்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும், தங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களின் விநியோகம் தொடர்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலனுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு முன், அங்கத்தினர்கள் நம் சங்கத்தை அணுகி ஆலோசனை பெற்ற பின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்காரவேலனுக்கு கிட்டத்தட்ட ரெட் எனப்படும் தடை விதிக்கப்பட்ட மாதிரிதான் இந்த சுற்றறிக்கை என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

அடுத்து சிவி குமாருக்காக படம் இயக்கும் சீனு ராமசாமி

பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிக்கும் புதிய படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார்.

கூடல் நகர்', ‘தென்மேற்கு பருவகாற்று', நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.

Seenu Ramasamy to direct a movie for CV Kumar

இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இப்படத்தையடுத்து சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதில் நாயகனாக அதர்வா நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.


 

சர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிலட்சுமி அழைப்பிதழ்

ஹைதராபாத்: காதல் அழிவதில்லை என்று தமிழில் ஒரு படம் வந்ததே ஞாபகம் இருக்கிறதா?

அந்தப் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த சார்மி தற்போது தெலுங்கு உலகின் மிகப் பெரிய நடிகையாக மாறி விட்டார். சிம்புவின் முதல் படஜோடி அல்லவா.. அதனால் சர்ச்சைகளில் சிக்குவதிலும் அவரைப் போலவே இருக்கிறார்.

தெலுங்கு உலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் சார்மி தற்போது ஜோதிலட்சுமி என்ற மங்களகரமான பெயரைக் கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது, அந்த அழைப்பிதழின் வடிவத்தைப் பார்த்தவர்களுக்கு லேசான அதிர்ச்சி. ஒரு பெண்ணின் பின் முதுகு ஜாக்கெட்டைப் போன்று வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அழைப்பிதழில் ஓபன் மீ தமிழில் சொல்வதானால் 'திறந்திடு' என்னை என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இப்படிக் கூடவா ஒரு அழைப்பிதழை வடிவமைப்பார்கள் என்று ஒரு பக்கம் கண்டனங்கள் எழுந்தாலும் மறுபக்கம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது இந்த அழைப்பிதழ்.

சர்ச்சையின் மறுஉருவமான ராம் கோபால் வர்மா படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே அழைப்பிதழ் இருக்கிறது என்று வழக்கம் போல ஒரு திரியைக் கிள்ளிப் போட்டிருக்கிறார் தனது ட்விட்டர் பக்கத்தில். படத்தை இயக்குவது தெலுங்குலகின் மெகா ஹிட் இயக்குநர் பூரி ஜெகன்நாத். இவரின் இயக்கத்தில் கிட்டத் தட்ட டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் டூயட் பாடிவிட்டனர், தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆட்டோ ஜானி படத்தை இயக்குவதும் பூரி ஜெகன்நாத்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

கமல் கையால் "மிளிர்ந்த" திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா, இன்று தனது டிவிட்டரில் ஒரு சூப்பர் படத்தைப் போட்டுள்ளார்.

எத்தனை பேருக்கு இந்த "பாக்கியம்" கிடைத்ததோ நமக்குத் தெரியாது.. ஆனால் திரிஷா தனக்குக் கிடைத்த பாக்கியத்தை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி அறிவித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம்.

அதாவது கமல்ஹாசன், திரிஷாவுக்கு மேக்கப் போடும் படம்தான அது. ஒரு தொழில்முறைக் கலைஞர் போல அவ்வளவு அக்கறையாக மேக்கப் போடுகிறார் திரிஷா. ஆனால் திரிஷாவோ படு ஜாலியாக கேமராவுக்குப் போஸ் கொடுத்தபடி குதூலகச் சிரிப்புடன் அமர்ந்திருக்கிறார்.

திரிஷாவின் முகத்தில் தெரிந்தது வெறும் சிரிப்பு மட்டுமல்ல பெருமிதம் கலந்த பூரிப்பும் கூட என்பதைச் சொல்கிறது அவரது டிவிட்.

அதில், எனக்கு யார் இன்று மேக்கப் போட்டு விட்டது என்று யூகியுங்கள் பார்க்கலாம்.. மாஜிக் ஹேன்ட்ஸ் என்று ஹேஷ்டேக் போட்டு குதூகலித்துள்ளார் திரிஷா.

கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தில் திரிஷா அவருடன் நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம். ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

ஷங்கரை நான் மிஞ்சிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது! - ராஜமவுலியின் தன்னடக்கம்

ஷங்கரை நான் மிஞ்சிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது என இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று கூறப்படும் சங்கரை மிஞ்சி விட்டதாக என்னைப் பாராட்டுகிறார்கள்.

இதை ஏற்க முடியாது. ஷங்கர் புதிய தொழில்நுட்பத்தில் படத்தை இயக்கும்போது, எனக்கு கிரீன் மேட் என்னும் தொழில்நுட்பம் கூட அறியாமல் இருந்தேன்.

Rajamouli rejects comparison with Shankar

அவரிடம் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஷங்கருக்கு அடுத்து ராஜமௌலி என்று சொன்னால் கூட அந்தளவிற்கு உயர்ந்து விட்டேன் என்று சந்தோஷப்படுவேனே தவிர, ராஜமௌலிக்கு அடுத்துதான் ஷங்கர் என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஷங்கர்தான் எனக்கு முன்னோடி," என்றார்.

சர்வதேச அளவில் தன் பாகுபலிக்கு பாராட்டுகள் குவிவது மகிழ்ச்சியளிப்பதாகவும், படமும் அந்த அளவுக்கு இருக்கும் என்றும் கூறினார் ராஜமவுலி.

 

ஜெயம் ரவிக்காக மல்லுக்கட்டும் த்ரிஷா, அஞ்சலி

சென்னை: அப்பாடக்கர் படத்தில் அஞ்சலியும், த்ரிஷாவும் ஜெயம் ரவிக்காக சண்டையிடும் வகையில் ஒரு பாடலை தாய்லாந்தில் படமாக்கி வருகிறார்கள்.

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக் உள்ளிட்டோர் நடித்து வரும் ஆக்ஷன் கலந்த காமெடி படம் அப்பாட்டக்கர். தமண் இசையமைத்துள்ள இந்த படத்தில் வரும் காட்சிகளை எல்லாம் படமாக்கிவிட்டனர். சண்டைக்காரி என்ற ஒரேயொரு பாடல் காட்சியை மட்டும் தான் படமாக்க வேண்டி உள்ளது.

Trisha, Anjali fight for Jayam Ravi

இந்நிலையில் படக்குழுவினர் அந்த பாடல் காட்சிக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். சண்டைக்காரி பாடலை த்ரிஷா மற்றும் அஞ்சலி ஜெயம் ரவிக்காக சண்டை போடுவது போன்று படமாக்கி வருகிறார்கள்.

இந்த பாடல் காட்சியை படமாக்கியதும் படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். சித்தி பிரச்சனைக்கு பிறகு திரும்பி வந்துள்ள அஞ்சலிக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

படத்தில் பூர்ணா கௌரவ தோற்றத்தில் வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நகைக்கடை துபாயில் திறந்தாலும், விளம்பரத்துக்கு நயன்தான் வேணுமாம்!!

சென்னை: நயன்தாரா என்ன செய்தாலும் அது இலவச விளம்பரமாகி விடும் இந்த வேளையில் நிஜமாகவே அவர் ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

சில ஆண்டு இடைவேளைக்குப் பின் அவர் தற்போது ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் துபாயில் திறக்க விருக்கும் புதிய ஷோரூமின் விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Nayanthara endorses GRT Jewellers

விளம்பர உலகின் பிரபல இயக்குநர் பாபு சங்கரின் இயக்கத்தில் இந்த விளம்பரம் உருவாகி உள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் தனது விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் பிரபு, அமிதாப், விக்ரம் பிரபு, நாகர்ஜுன் மற்றும் நடிகைகளில் மஞ்சு வாரியர், ஐஸ்வர்யாராய் என்று மாநிலத்துக்கு ஒருவரை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்திருக்கிறது.

மற்ற நகைக்கடை விளம்பரங்களில், நடிகர் மாதவன் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் நடிகர் விஜய் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். மலபார் கோல்டுக்காக நடிகை காஜல் அகர்வால், ஜுவல் ஒன்னில் நடிகை ஸ்ருதி ஆகிய நடிகைகளுடன் தற்போது நயன்தாராவும் நகைக்கடை விளம்பரத்தில் இணைந்திருக்கிறார். 6500 சதுர அடியில் துபாயில் ஜி.ஆர்.டியின் சர்வதேச ஷோரூம் முதல் முறையாகத் திறக்கப் பட்டுள்ளது.

துபாயில் கடை திறந்தாலும் அதுக்கும் கூட நயன்தாரா தேவைப்படறாங்க பாத்தீங்களா!

 

சூர்யா முன்னிலையில் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது பாகுபலி தமிழ் டிரைலர்!

சென்னை: சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்து வரும் பாகுபலி படத்தின் தமிழ் டிரைலர் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்து கொள்கிறார்.

பாகுபலி தெலுங்கு டிரைலர் மூன்று தினங்களுக்கு முன் வெளியானது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொள்வார் முதலில் கூறப்பட்டது. ஆனால் எந்த சிறப்பு விருந்தினரும் இல்லாமலேயே படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது.

Surya to grace Bahubali Tamil Trailer launch today

இதுவரை இந்த டிரைலரை சுமார் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். செலுங்குப் பட உலகைப் பொருத்தவரை இது புதிய சாதனை. தமிழில் ஏற்கெனவே ஐ, கோச்சடையான், லிங்கா ட்ரைலர்கள் இந்த எண்ணிக்கையைக் கடந்து பார்க்கப்பட்டவை.

பாகுபலி டிரைலரை பார்த்து ரசித்த நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா, இந்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கரன் ஜோஹர் ஆகியோர், வெகுவாகப் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தனர்.

இன்று பாகுபலியின் தமிழ் டிரைலர் வெளியீடு மாலை 6.30 மணியளவில் சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனுஷ்கா, நாசர், சத்யராஜ், தமன்னா மற்றும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சூர்யா முன்னிலையில் ட்ரைலர் வெளியிடப்படுகிறது.

தெலுங்கு டிரைலரின் வெற்றியால் தமிழ் டிரைலரையும் பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்து இந்த விழாவை இன்று நடத்துகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தமிழில் பாகுபலி படத்தை சூர்யாவின் சகோதரர் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நந்திதா நடிக்கும் 'காத்திருப்போர் பட்டியல்'!

வளரும் நடிகை என்ற நிலையிலிருந்து முன்னணி நடிகையாக மாறி வரும் நந்திதா நடிக்கும் புதிய படம் காத்திருப்போர் பட்டியல்.

லேடி ட்ரீம் சினிமாஸ், பைஜா டாம் தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம். ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான யுவன் யுவதி என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.

காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்துக்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தாம். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் பாலையா டி ராஜசேகர்.

Nandhitha in Kaathiruppor Pattiyal

இவர் பரத் பாலாவிடம் மரியான் படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

காத்திருப்போர் பட்டியல் பற்றி கூறும்போது, "இது ஒரு நாளில் ஒரு இடத்தில் பல தரபட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை.

சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இதில் கதாநாயகனாகவும், அட்டகத்தி, எதிர் நீச்சல், முண்டாசுபட்டி போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அருள்தாஸ், அப்புகுட்டி, செண்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்," என்றார்.

மைனா, கும்கி, மான்கராத்தே, காக்கிச் சட்டை போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, லால்குடி இளையராஜா கலையமைப்பை கவனிக்கிறார். விஸ்வரூபம் படத்துக்காக தேசிய விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனந்த விகடன் வழக்கு: த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்கு இடைக்கால தடை

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை வெளியிட உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.75 லட்சம் வரை பாக்கி தர வேண்டியிருக்கிறது. சி.ஜெ.ஜெயக்குமார் தந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.

Interim stay on Trisha Illana Nayanthara

இந்நிலையில், பணம் வேண்டியும், தன் பணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிடவோ, விற்கவோ கூடாது எனவும், ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 4.6.2015-க்குள் கடன் தொகையைச் செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

Interim stay on Trisha Illana Nayanthara

இன்று 4.6.2015 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை. எனவே, இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிட தடைவிதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் என்.ரமேஷ் வாதிட்டார்.

 

மீடியாவின் இரட்டை முகம்... வருத்தத்தில் உச்ச நடிகரும் அவர் ரசிகர்களும்!

என்ன நடந்தாலும் கவலைப்படாமல், எல்லாம் அவன் செயல் என தன் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர் உச்ச நடிகர்.

மீடியாக்கள், அச்சுப் பத்திரிகைகள் அவரது பேட்டிக்கு தவம் கிடந்தாலும், யாரையும் நோகடிக்க வேண்டாமே என்பதற்காக யாருக்குமே பேட்டி தராமல், பொது விழாக்களின் தன் கருத்துகளைக் கூறி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அவர் சும்மா இருந்தாலும், பரபரவென பட வேலைகளைச் செய்தாலும் அட்டைப் பட கட்டுரைகள் அல்லது தலைப்புச் செய்திகளாக்கி தன் பிழைப்பை தக்க வைத்துக் கொள்கிறது மீடியா உலகம். அதுபற்றியெல்லாம் எப்போதும் அவர் அலட்டிக் கொள்வதுமில்லை.

ஆனால் தனது சமீபத்திய பட விவகாரத்தில் மீடியாவின் இன்னொரு முகம் பார்த்து படு அப்செட்டாகிவிட்டாராம். உண்மைக்கு சற்றும் சம்பந்தமில்லாத பல செய்திகளை யாரோ ஒரு முன்பின் அறிமுகமில்லாத நபர் கூறக் கூற அவற்றை தலைப்புச் செய்திகளாக்கி வருவதை வேதனையுடன் நண்பர்களிடம் குறிப்பிட்டாராம்.

கடந்த 40 ஆண்டுகளாக தன்னை, தன் பட வியாபாரத்தைப் பார்த்து வரும் மீடியா உலகம், குறைந்தபட்ச உண்மை என்னவென்பதை விசாரிக்காமல் கூட லிங்கா விவகாரத்தில் செய்தி வெளியிடுகின்றனவே என வருத்தப்பட்டாராம்.

இவரை விட பல மடங்கு வருத்தம் அவரது ரசிகர்களுக்கு. ஏற்கெனவே குறிப்பிட்ட இரு பத்திரிகைகளின் ஆயுள்கால சந்தாவைக் கூட ரத்து செய்துவிட்டு, கார சாரமாக அவற்றின் நிர்வாகங்களுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

தங்கள் தலைவருக்கு எதிராக தொடர்ந்து இந்த பத்திரிகைகள் செய்தி, கிசுகிசு பாணியில் மோசமான செய்திகளை வெளியிட்டால், அவற்றை சாலைகளில் குவித்து எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.