தலைநகரம், மருமதலை, படிக்காதவன், மற்றும் மாப்பிளை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ், அடுத்து கார்த்தி-அனுஷ்கா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். படுவேகமாக ஷூட்டிங் நடத்தி வரும் சுராஜ், அனுஷ்காவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்கு அனுஷ்காவின் அதிகபடியான அழகு மட்டும் காரணம் அல்ல அவரது டெடிகேஷனும் தான். பெரிய ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் ஷுட்டிங் தொடங்கும் முன்பே மேக்கப்புடன் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். கார்த்தி, அனுஷ்கா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலும் முதலில் மேக்கப்புடன் தயாராவது அனுஷ்காதான். படப்பிடிப்புக்கு இவ்வளவு டெடிகேட்டாக எந்த நடிகையும் வருவதில்லை என்று சுராஜ் அனுஷ்காவை புகழ்கிறார்.
மீண்டும் புயல் வேகத்தில் பிரசாந்த்!
மம்பட்டியான் படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிரசாந்த் அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். மம்பட்டியான் படத்துக்குப் பிறகு மூன்றுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதில் முதல் படம் நடனத்தை மையமாகக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது டார்கெட் பதினோரு கிலோ என்கிறார்கள்.
ஹீரோக்களுக்காக மாஸ் படம் பண்ண மாட்டேன் : சற்குணம்
பணத்துக்காக ஹீரோக்களுக்கு மாஸ் படம் பண்ண மாட்டேன் என்று 'களவாணி' மற்றும் 'வாகை சூட வா' படங்களின் இயக்குனர் சற்குணம் கூறியுள்ளார். 'களவாணி', 'வாகை சூட வா' படங்களை தொடர்ந்து சற்குணம் இயக்கும் படம், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்'. இதுகுறித்து அவர் கூறியதாவது: அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் இப்படத்தை உருவாக்குகிறேன். முழுநீள காமெடி மற்றும் காதல் கதையாக உருவாகிறது. நாம் பேச்சுவழக்கில் சொல்வது போல், 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்' என்று பெயரிட்டுள்ளேன். பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது. இதையடுத்து கலைப்புலி எஸ். தாணு தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் படத்தை இயக்குகிறேன். இருமொழிகளைச் சேர்ந்த முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் பணம் கிடைக்கும் என்பதற்காக ஹீரோக்களுக்காக மாஸ் படம் பண்ண மாட்டேன். மக்களின் கதையை படமாக்குவேன் என்றவர் அடுத்து க்ரைம் த்ரில்லர் ஒன்றை இயக்கப் போவதாகவும், தாணு அதனை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக படத்தின் ஹீரோவாக சீயான் விக்ரமின் பெயரை உச்சரிக்கிறது கோடம்பாக்கம்.
பாலிவுட் போகிறார் லிங்குசாமி?
எல்லா தமிழ் இயக்குனர்களுக்கும் இந்தியில் ஒரு படம் இயக்கம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசை லிங்குசாமியையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. படத்துக்கு சரியான வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் இயக்குனர் லிங்குசாமி சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லிங்குசாமி தனது திருப்தியை தெரிவித்துக் கொண்டார். வேட்டை இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, சல்மான்கான் மாதவன் வேடத்திலும், ஆர்யா வேடத்தில் ரன்பீர் கபூரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதனையடுத்து பாலிவுட்டுக்கு லிங்குசாமி போவரா... பாலிவுட்டிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொருதிருந்துதான் பார்க்க வேண்டும்.