காவியத் தலைவன் விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, அனைகா சோதி

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

கலை: சந்தானம்

எடிட்டிங்: பிரவீண்

பிஆர்ஓ: நிகில்

கதை வசனம்: ஜெயமோகன்

இயக்கம் : ஜி வசந்த பாலன்

சினிமாவில் இலக்கியம் படைக்க முயலும் வசந்த பாலனும், இலக்கியவாதி ஜெயமோகனும் இந்த காவியத் தலைவனைப் படைக்க கைகோர்த்திருக்கிறார்கள். அங்காடித் தெருவில் மக்களைக் கவர்ந்த இந்தக் கூட்டணி, காவியத் தலைவனில் அதே வெற்றியைப் பெற்றிருக்கிறதா... பார்க்கலாம்!

ஒரு நாடகக் குழுவில் காளியப்பா (சித்தார்த்), கோமதி நாயகம் (பிருத்விராஜ்) இரு நாயகர்கள்... காளியின் வளர்ச்சி, முக்கியத்துவம் பார்த்து கோமதிக்கும் பெரும் பொறாமை.. அது பெரும் பகையாக மாறுகிறது.. அந்தப் பகையின் முடிவு என்ன? இந்த ஒன்லைனோடு நிறுத்திக் கொள்வது நலம். அதை மீறினால் படத்தின் முழுக் கதையையும் வரிக்கு வரி சொல்ல வேண்டி வரும். சொன்னாலும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா தெரியாது!

காவியத் தலைவன் விமர்சனம்

முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக ஒன்றை எடுத்தால், அதை நம்ப வைக்க எந்த சிரமமும் தேவையில்லை. காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்தால் போதும். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள், எஸ் ஜி கிட்டப்பா, கேபி சுந்தராம்பாள் போன்ற நிஜ நாயகர்களையும், சுதந்திரப் போராட்டம் என்ற சமீபத்திய வரலாற்றையும் ஒட்டி ஒரு படம் எடுக்கும்போது, ரொம்பவே பிரத்யேக கவனம் தேவை. வசந்த பாலன் இங்குதான் சறுக்கியிருக்கிறார், காவியத் தலைவனில்.

சுதந்திரப் போராட்டத்தின் முதல் தீ பற்றிய இடமே தமிழகத்தின் வேலூர் என்ற அடிப்படை உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட உணர்வே இல்லை என்று வசனம் வேறு வைத்திருக்கிறார் இந்தப் படத்தில்.

காவியத் தலைவன் விமர்சனம்

பிரதான நாயகன் காளியப்பாவுக்கு திடீரென சுதந்திரப் போராட்ட உணர்வு பொங்குவதுதான் ஆச்சர்யம் (குறைந்தபட்சம் இதற்கு ஒரு முன்குறிப்பாவது வைத்திருக்கலாம்). அதைவிட ஆச்சர்யம், ஒரு பிராந்தியத்தின் மன்னருக்கு நிகரான ஒருவரின் மகளை அவர் சர்வசாதாரணமாக, அதுவும் அரண்மனைக்கே போய் காதலிப்பதும் சல்லாபிப்பதும்!

படத்தில் ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன், காளியாக வரும் சித்தார்த், கோமதியாக வரும் பிருத்வி ராஜ், வடிவாக வரும் வேதிகா... இவர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு காட்சியில் பிரமாதமாக நடித்துவிட்டதாக ஒருவரையொருவர் புகழ்ந்து கொண்டோ, அல்லது பொறாமை கொண்டோ பேசுகிறார்கள். பார்வையாளர்களுக்கு அப்படி ஒரு உணர்வே இல்லை என்ற உண்மை புரியாமலே!

காவியத் தலைவன் விமர்சனம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் அல்லது முப்பதுகளின் இறுதியில், எந்த நாடகக் குழுவையும் போலீஸ் துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றதாக பதிவுகளே இல்லை. நாடகக் கலைஞர்களுக்கு சுதந்திர வேட்கை இருந்தாலும், அது இந்தப் படத்தில் காட்டப்பட்ட அளவு மிகையாக இருந்ததில்லை என்கிறது வரலாறு!

எண்பது - தொன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டும்போது, அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்க, அக்காலத்து மொழிப் பழக்க வழக்கத்தை -முழுவதும் இல்லாவிட்டாலும்- ஓரிரு இடங்களிலாவது பதிவு செய்திருக்கலாம். ஐம்பதுகளில் வந்த படங்களில் கூட 'ப்ராண நாதா', 'சகியே' என்று வசனங்கள் பேசிக் கொண்டிருக்க, இந்த முப்பதுகள் நாடகத்திலோ சாதாரண பேச்சுத் தமிழையே பயன்படுத்தியிருக்கிறார் வசந்த பாலன்.

காவியத் தலைவன் விமர்சனம்

இந்த மாதிரிப் படங்களுக்கு முக்கிய பலம் வசனம். காவியத் தலைவனுக்கு அந்த பலம் இம்மி கூட கிடைக்கவில்லை.

இசை... கதை வலுவாக இல்லாமல் போனாலும், இப்படியொரு பலமான களம் அமைந்ததை ஏஆர் ரஹ்மான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால்... இல்லை என்பதே உண்மை. வேதிகா அறிமுகமாகும் அந்த குறும்பாடலும், யாருமில்லா தனியரங்கில் பாடலும் தவிர வேறெதுவும் மனதின் ஓரத்தைக் கூடத் தொடவில்லை. பின்னணி இசையில் தெரியும் நவீனத்துவம் கதை நிகழும் காலகட்டத்தை மறக்கடித்துவிடுகிறது.

காவியத் தலைவன் விமர்சனம்

கலை இயக்குநருக்கு ஏக வேலை இந்தப் படத்தில். மேடைகள், திரைச் சீலைகள், ஓவியங்கள் அத்தனையும் புத்தம் புதிதாக ஜொலிக்கின்றன. ஆனால் அன்றைய பாய்ஸ் கம்பெனி நாடகக்காரர்களுக்கு வாய்க்காத வசதியல்லவா இது!

நடிப்பில் நாசருக்குத்தான் முதலிடம். அலட்டிக் கொள்ளாமல், தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆவேசம் காட்டி, தன் தவறு உணர்ந்து ஒடுங்கி வீழும் காட்சிகளில் அசத்துகிறார் மனிதர்.

காவியத் தலைவன் விமர்சனம்

பிருத்விராஜுக்குதான் படத்தில் அதிக காட்சிகள். அவரும் மலையாள வாடையில் தமிழைப் பேசி கவரப் பார்க்கிறார். பேசும் முறையில் அந்த வாடை இருந்தாலும், சுத்தமாகவே பேசியிருக்கிறார். அந்த சிரத்தைக்கு பாராட்டுகள். இறுதிக் காட்சியில் மட்டும் மனதைத் தொடுகிறது அவர் நடிப்பு.

காளியப்ப பாகவதர் சித்தார்த்துக்கு இது ஓவர் டோஸ். சூரபத்மனாக வரும் அந்தக் காட்சியும், குருவுக்கே சாபம் விடும் இன்னொரு காட்சியும் அவரது சிரத்தையான நடிப்புக்கு சாட்சி. ஆனால் 'தீயா வேலை செய்யும் இந்த குமாரை' ஒரு காவியத் தலைவனாக ஏற்க முடியாமல் போனதற்கான காரணங்கள் நிறைய!

வேதிகா... சிவதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவின் செட் ப்ராபர்ட்டி மாதிரிதான் வருகிறார். ஒரு காட்சியில் தன் நடிப்பு எப்படி இருக்கிறது என சித்தார்த்தை அவர் கேட்பார். 'நீ அழகா இருந்தே.. அவ்வளவுதான்' என்று கூறி நடிப்பை சகட்டு மேனிக்கு திட்டுவார். அடுத்த சில காட்சிகளுக்குப் பிறகு, ஒரு சுதேசி நாடகத்தில் வேதிகா தேசியக் கொடி பிடித்தபடி கும்பலோடு வந்து கோஷமிட்டுப் போவார். அடுத்த காட்சியில் மீண்டும் 'தன் நடிப்பு எப்படி' என்பார். இந்த முறை, 'அழகா, அற்புதமா நடிச்சே' என்பார் சித்தார்த். அந்த 'அழகா அற்புதமா நடிச்ச' காட்சியைக் காண சித்தார்த்துக்குக் கொடுத்து வைத்த அளவுக்கு, ரசிகர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை!!

ஒரே மாதிரி நடிப்பது தம்பி ராமையாவுக்கு வேண்டுமானால் திகட்டாமல் இருக்கலாம்... ரசிகர்களையும் கொஞ்சம் மனசுல நினைச்சிக்கிட்டு ரூட்டை மாத்தலாமே ராமையா!

குறைந்தபட்சம் சிங்கம்புலியையாவது முழுமையாக காமெடி செய்ய விட்டிருக்கலாம். பொன்வண்ணன் வெளியேறும் காட்சி அப்படியே நாசரின் அவதாரத்தை நினைவூட்டுகிறது.

காவியத் தலைவன் விமர்சனம்

இன்னொரு நாயகியாக வரும் அனைகா, ஏதோ ஸ்கூல் பிள்ளை மாதிரிதான் தெரிகிறார். அந்தப் பிள்ளைக்கே ஒரு 'பிள்ளை கொடுக்கும்' சித்தார்த் மீது எப்படி பரிதாபம் வரும்?

மேடைக் காட்சிகளிலும், யாருமில்லா தனியரங்கில் பாடல் காட்சியிலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கிறங்கடிக்கிறது. ஆனால் அந்த சுதந்திரப் போராட்ட காட்சிகளில் நூறு சதவீத நாடகத்தனத்தை துல்லியமாகக் காட்டிவிடுகிறது.

நல்ல சினிமா, ஆபாசமில்லாத சினிமா என்ற வசந்த பாலனின் பிடிவாதம் நல்லதுதான். அதுவும் சினிமாவின் ஆதியான நாடகக் கலையின் வரலாற்றை, இரு நாயகர்களின் வழி நின்று சொல்லும் இந்த முயற்சி கூடப் பாராட்டத்தக்கதே. ஒரு வரலாற்று பதிவு மாதிரி. ஆனால் பிழைகளற்ற, நம்பகத்தன்மை மற்றும் சுவாரஸ்யமான காட்சி நகர்வுகளில்தான் அந்த சினிமாவின் வெற்றி இருக்கிறது. அப்படியொரு வெற்றிக்கான வாய்ப்பு மடியில் வந்து விழுந்தும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே. இன்னொரு முறை இப்படியொரு வாய்ப்புதான் கிட்டுமா?

அரவானில் உணராத இந்த உண்மைகளை, காவியத் தலைவனிலாவது உணர்வாரா வசந்த பாலன்!

 

நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர் அவான் குமார் கைது

திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக டிவி நடிகர் அவான் குமார் மீது போலீசில் புகார் செய்துள்ளார் நடிகை ஒருவர்.

அந்த நடிகையின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர் அவான் குமார் கைது

இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர்தான் இந்த அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கற்பழித்து விட்டார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவானால் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவான் குமாரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவான் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

 

ஹெல்மெட் போடுங்க... விஜய்க்கு அட்வைஸ் பண்ண அஜீத்!

இப்போதெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளில் வரும் வழக்கம் முன்னணி நடிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆர்யா சைக்கிளில்தான் தினமும் படப்பிடிப்புக்கு வருகிறாராம். வேலை நடந்த மாதிரி, உடற்பயிற்சியும் செய்த மாதிரி...

ஹெல்மெட் போடுங்க... விஜய்க்கு அட்வைஸ் பண்ண அஜீத்!

அஜீத் பற்றி கேட்கவே வேண்டாம். நினைத்தால் தனது டுகாட்டியை எடுத்துக் கொண்டு அச்சரப்பாக்கம் ஹெலிபேட் பக்கமோ, பெங்களூர் நெடுஞ்சாலையிலோ விரைவது அவர் வழக்கம்.

இப்படி பலரும் தங்கள் இரு சக்கர வாகன ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்க, விஜய் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?

அவர் புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம், ஹார்லி டேவிட்சன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கும் தனது படப்பிடிப்புக்கு இந்த புத்தம் புதிய பைக்கில்தான் சில தினங்களாகப் போய் வந்தாராம். முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி விருட்டென்று தங்களைக் கடக்கும் விஜய்யை பலரும் பார்த்து, 'டே.. நம்ம விஜய்டா..' என்று வாய் பிளந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த தகவல் அஜீத்துக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே தன் நண்பனை போனில் அழைத்த அஜீத், 'பைக்ல போறது ஜாலியாதான் இருக்கும். கொஞ்சம் ஹெல்மட் போட்டுக்கிட்டு ஓட்டுனீங்கன்னா சேஃப்...' என்றாராம்.

 

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

விமல் - அஞ்சலி மூன்றாம் முறையாக இணையும் மாப்ள சிங்கம் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்து வரும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி. மதன் தயாரிக்கும் புதிய படம் - மாப்ள சிங்கம்.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

தூங்கா நகரம், கலகலப்பு படங்களுக்குப் பிறகு விமல், அஞ்சலி இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் இது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனத்துடன் விமல் இணையும் மூன்றாவது படம் இது.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

மாப்ள சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

ராதாரவி, மனோபாலா, மயில்சாமி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், காளி வெங்கட், சிங்கமுத்து, சுவாமிநாதன், விஷ்ணு, மதுமிலா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூஸிக் ஸ்கூலின் வைஸ் பிரின்ஸிபால் ஆடம் க்ரீக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விமல் - அஞ்சலி நடிக்கும் மாப்ள சிங்கம்.. படப்பிடிப்பு ஆரம்பம்!

ரகுநந்தன் இசையமைக்கிறார். டான் அசோக் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இணை தயாரிப்பு : ஜேம்ஸ்

அனகாபுத்தூர் முருகன் கோவிலில் பூஜையுடன் மாப்ள சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

 

"எனது வாழ்க்கையிலேயே ஒரே ஒருவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்"- ரஜினிகாந்த் வெளியிட்ட ரகசியம்

பெங்களூரு: கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம், சிலை திறப்பு விழாக்கள், பெங்களூரு, நந்தினி லே-அவுட் பகுதியிலுள்ள அவரது நினைவிடத்தில் இன்று நடந்தன. ராஜ்குமார் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், செய்தி விளம்பர துறை அமைச்சர் ரோஷன் பெய்க், எம்.எல்.ஏக்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை சரோஜாதேவி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் சிறப்புரையாற்றிய ரஜினி கூறியதாவது: 1927ல் பிரம்மா தேன் ஒன்றை உருவாக்கி அதை மேகத்தில் தூவினார். அந்த தேனுக்கு கலைகளின் தலைவி சரஸ்வதி ஆசிர்வாதம் செய்தார். அந்த மேகத்தில் இருந்து தேன் மழை எங்கு பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தபோது, கர்நாடகாவுக்கு அந்த புண்ணியம் கிடைத்தது. கன்னட மண்ணில் தேன் மழை விழுந்தது. ரங்கமந்திராவில் நடிப்பு பயிற்சி பெற்று, ஒரு மனிதனாக உருவாகி 1954ல் சினிமா உலகில் குதித்தது அந்த மழை. அந்த தேன் மழையின் பெயர்தான் ராஜ்குமார்

பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. 54 வருஷம் திரையுலகில் அவர் இருந்தார். புரந்தரதாசர், கனகதாசர் உள்ளிட்ட பல ஞானிகள் (கதாப்பாத்திரங்கள்) அந்த குதிரையின் முதுகில் ஏறி பயணித்தனர்.

ராவணன், இரண்யன், மகிஷாசூரன் போன்ற கொடும் அரக்கர்களும் அந்த குதிரையின் முதுகில் பயணித்தனர். ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கூட ராஜ்குமார் நடித்துள்ளார். கர்நாடகாவில் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த குதிரைக்கு அபார வரவேற்பு கிடைத்தது.

ராஜ்குமார் மறைவுக்கு பிறகு இந்த அசுரர்களும், ஞானிகளும் எந்த ஒரு குதிரை மீதும் ஏறவில்லை. ஏனெனில் அதுபோன்ற கனமான பாத்திரங்களை சுமக்கும் சக்தி ரஜினிகாந்த் உட்பட வேறு எந்த குதிரைக்கும் (நடிகர்களுக்கும்) இல்லை. ஓடி, ஓடி களைப்படைந்த அந்த குதிரை, தனது தாய் மண்ணில் ஓய்வெடுக்கலாம் என்று சென்றது.

ஆனால், அந்த குதிரையை வனதேவதையும் பார்க்க ஆசைப்பட்டாள். எனவேதான் 108 நாள் வனதேவதையுடன் (வீரப்பன் கடத்தல் சம்பவம்) அவர் இருந்தார்.

எனக்கு 11 வயதாக இருக்கும்போது நான் பள்ளிக்கூடம் சென்ற காலகட்டத்தில் ராஜ்குமாரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதன்பிறகு வாழ்க்கையிலேயே இதுவரை வேறு யாரிடமும் நான், ஆட்டோகிராப் வாங்கியதில்லை.

பெங்களூரு டாடா இன்ஸ்டிடியூட்டிற்கு ஒருமுறை ராஜ்குமாருடன் சென்றிருந்தேன். அப்போது ராஜ்குமாரை பார்த்த மக்கள் அவரிடம் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்து சென்றனர். அப்போது என்னை பார்த்து ராஜ்குமார் ஒருவார்த்தை கேட்டார். ஏன் எனக்கு அவர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள் தெரியுமா என்றார்? நான் அதற்கு, உங்களுக்கு மரியாதை கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பார்கள் என்று பதிலுக்கு கேட்டேன்.

அதற்கு ராஜ்குமார் சிரித்துக் கொண்டே, "மக்கள் எனக்கு மரியாதை தருகிறார்கள் என்றா நினைத்தாய். எனக்குள் உள்ள சரஸ்வதிக்குதான் அவர்கள் மரியாதை தருகின்றனர். அந்த கலைவாணியால்தான் நடிப்பு நமக்கு சாத்தியப்பட்டுள்ளது. ரசிகர்களை நம்மை பார்த்து கை தட்டுவதை நமக்கு கிடைக்கும் மரியாதை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் நமக்கு அகங்காரம் வந்துவிடும். கலாதேவிக்கே அனைத்து புகழும் சென்றடைய வேண்டும்" என்றார்.

எந்த ஒரு கட்சியிலும் சேராமல், அரசியலில் குதிக்காமல் மக்களுக்கு நன்மை செய்யமுடியும் என்று நிரூபித்தவர் ராஜ்குமார். ராஜ்குமார் இறந்ததும் உடனே என்னால் வர முடியவில்லை. ராஜ்குமார் மறைவின்போது அனைத்து ரசிகர்களும் தங்கள் கையால் அவரது சமாதியில் மண்போட வேண்டும் என்று கலாட்டா செய்தனர். இனியாவது ரசிகர்கள் அமைதியாக இருங்கள்.

ராஜ்குமார் நினைவிடத்தில் ஒரு ரிஷி படுத்துள்ளார் என்று நினையுங்கள். மவுனமாக வாருங்கள். போய் அவரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஆசி வழங்குவார். வருங்காலத்தில் இது ஒரு கோயிலாக மாறி உங்களுக்கு ஆசி வழங்கும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

 

ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!

பாலம் கல்யாணசுந்தரம்... இவரைத் தெரியாதவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருப்பார்கள்.

பணியில் இருந்து சம்பாதித்த சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டார்.

ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!

இவரது உயரிய சமூக சேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்... அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார். அதையெல்லாம் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்டவர் முதல் முறையாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான் என்பதை வலியுறுத்தும் பெருமாள் கோயில் உண்டசோறு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலம் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு இசையை வெளியிடுகிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்ஆர் தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா என படத்தின் அத்தனை நடிகர் நடிகர்களும் புதுமுகங்களே.

டிஜே ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஆர் கார்த்திக் - பாலபாரதி இசை அமைக்கின்றனர். எழுதி இயக்குகிறார் விடி ராஜா.

படம் குறித்து இயக்குநர் விடி ராஜா கூறுகையில், "படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும். நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான்.

சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக்தான். இந்த கருத்தைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்கிறோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். படம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டதும் வரச் சம்மதித்தார்.

டிசம்பர் 1-ம் தேதி காலை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்," என்றார்.

 

யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!

திருவனந்தபுரம்: 26 யானைத் தந்தங்களை வீட்டுக்குள் வைத்திருந்த மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது தரலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு.

நடிகர் மோகன் லாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க கேரள அரசு பரிந்துரை செய்துள்ளது.

யானைத் தந்தங்கள் பதுக்கிய மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதா...? வலுக்கும் எதிர்ப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யானை தந்தங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்ததாக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி 13 ஜோடி யானை தந்தங்களையும் கைப்பற்றினார்கள். இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் பேட்டி அளித்த மோகன் லால், யானை தந்தங்கள் கடந்த 26 வருடங்களாக எனது வீட்டில் உள்ளன. இது குறித்து பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்துள்ளன. இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ள்ன. இது சட்டவிரோதமானதும் அல்ல," என்றார்.

தற்போது பேட்டி அளித்த மோகன்லால் இது வன சட்டப்படி எனது நண்பர்கள் இதை எனக்கு பரிசாக அளித்தனர், என்றார்.

இந்த நிலையில் மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்த்துள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் பி.கே. வெங்கடாசலம் இதுகுறித்துக் கூறுகையில், "மோகன்லால் 13 ஜோடி யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்தார். கொச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வனத் துறையினர் இவற்றைக் கைப்பற்றினார்கள். யானை தந்தங்கள் வைத்துக் கொள் வதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான லைசென்ஸ் அவர் வாங்கவில்லை.

இந்த வழக்கில் மோகன் லால் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அவருக்கு உயரிய பத்மபூஷன் விருதை கொடுக்க கூடாது," என்றார்.

 

லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!

ரஜினியின் லிங்கா படத்துக்கு சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசை அமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள லிங்கா படம் சென்சார் முடிந்து யு சான்று பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு படத்தை உருவாக்கியுள்ளனர்.

லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஆடியோ சிடி விற்பனை என்பதே இல்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில், லிங்கா சிடிக்கள் விறுவிறுப்பாக விற்று வருகின்றன.

டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை.

இந்தப் படத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மாசிடோனியன் ரேடியோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு, சிம்பொனி இசை தந்திருக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான்.

கமலின் ஹே ராமுக்காக இளையராஜா முன்பு ஹங்கேரிக்குப் போய் சிம்பொனி இசை அமைத்தார். அவருக்குப் பிறகு, ஏ ஆர் ரஹ்மான் இப்போது ரஜினி படத்துக்கு சிம்பொனி இசையை பின்னணியாகத் தருகிறார்.

 

பாகிஸ்தான் நடிகருடன் ஜோடியாகப்போகும் லிங்கா நாயகி

மும்பை: பாகிஸ்தான் நடிகர் பவாத் கான், ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள சோனாக்ஷி சின்காவுடன் ஜோடி சேர போகிறாராம்.

பாகிஸ்தான் நடிகருடன் ஜோடியாகப்போகும் லிங்கா நாயகி

பாலிவுட்டில் வெளியான ஹுப்சூரத் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் வரவேற்பை பெற்றவர் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத்கான். இப்போது பாலிவுட்டில் கவிஞர் அம்பிரித்தா பிரீதம் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட உள்ள திரைப்படத்தில் நடிக்க உல்ளார். அப்படத்தில் பெண் கவிஞர் அம்பிரித்தாவாக நடிக்க உள்ளவர் சோனாக்ஷி சின்கா.

சோனாக்ஷி அடுத்த மாதம் வெளியாக உள்ள லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். எனவே ரஜினிகாந்த் ஜோடி நடிகை பாகிஸ்தான் நடிகரின் ஜோடியாக போவதால் இரட்டிப்பு எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.

 

மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு

மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு   

ஆனால் இப்போது படம் மீண்டும் தள்ளிப் போய்விட்டது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி சிம்பு பிறந்த நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சிம்பு நடித்த மூன்று படங்கள் வெளிவராமல் உள்ளன. வாலு தவிர, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு படங்கள் எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலை உள்ளது.

விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.

 

எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனமாடும் சரோஜா தேவி

சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனம் ஆடுகிறார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்துள்ள, இப்படத்தை எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

எம்ஜிஆர் கெட்டப்பில் சிம்புவுடன் நடனமாடும் சரோஜா தேவி

'தாறு மாறு' பாட்டு

தற்போது இப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிந்திருக்கிறது. இன்னும் 'தாறுமாறு' என்ற பாடல் மட்டுமே எடுக்க வேண்டுமாம்.

எம்ஜிஆர், ரஜினி, அஜீத்

இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் ஆகியோரது கெட்டப்களில் தோன்றி நடனமாட இருக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒவ்வொரு நடிகை நடனமாடுகிறார்கள்.

சரோஜா தேவி

இதில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் நடனமாடுவதற்கு பழம்பெரும் நடிகை சரோஜாதேவி சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்பாடலின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

குஷ்பு, அஜீத்

ரஜினி கெட்டப்பிற்கு குஷ்பு, அஜித் கெட்டப்பிற்கு சிம்ரனை ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம். இந்தப் பாடலில் நயன்தாராவும் சிறப்புத் தோற்றம் தருகிறாராம்.

 

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

பெங்களூரு: நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ரஜினிகாந்த் தனது சிறப்புரையின்போது ராஜ்குமார் இறந்த வருடத்தையே மாற்றி பேசியது ராஜ்குமார் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம் ரூ.7 கோடி செலவில் பெங்களூரு நந்தினி லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அந்த விழாவில் ராஜ்குமார் குடும்பத்தார் மட்டுமின்றி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நடிகைகள் சரோஜாதேவி, தாரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான ராஜ்குமார் ரசிகர்களும் கூடியிருந்தனர்.

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

அந்த கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் "பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. அதாவது, அவர் சினிமா பயணத்தை தொடங்கிய ஆண்டில் 54ம் எண் வருகிறது. அவரது கேரியரும் 54 வருடம் தொடர்ந்தது" என்றார்.

ஆனால் நடிகர் ராஜ்குமார் இறந்தது, 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியாகும். ராஜ்குமாரின் சினிமா அனுபவத்தையும், அவர் நடிக்க ஆரம்பித்த வருடத்தையும் 54ம் எண்ணுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விவரங்களை சேகரித்து தயாராக வந்திருந்த ரஜினிகாந்த், எப்படி ராஜ்குமார் இறந்த ஆண்டை தவறாக கணக்கிட்டார் என்பது புரியவில்லை.

ராஜ்குமார் இறந்த ஆண்டை மாற்றி பேசிய ரஜினிகாந்த்! நினைவு மண்டப திறப்பு விழாவில் பரபரப்பு

வெறுமனே, 2008 என்று கூறியிருந்தால் கூட வாய் தவறி அப்படி ரஜினிகாந்த் சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் 54 என்ற எண்ணை ஒப்பிட்டு பேசிய ரஜினி எப்படி தவறிழைக்கலாம் என்று பொறுமுகின்றனர் ராஜ்குமார் ரசிகர்கள். ஏனெனில் பேடர கண்ணப்பா திரைப்படம் வெளியானது ரஜினிகூறியபடியே 1954ம் ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை

வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ரஜினியின் கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை  

தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் உள்ள 950 அரங்குகளில் 700 அரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சாதனையாக, ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மொத்த தியேட்டர்களுமே லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் - திருப்பூர் ஏரியாவில் மட்டும் மொத்தம் 93 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 85 அரங்குகளில் லிங்காதான் ரிலீசாகப் போகிறது. இதற்கு முன் எந்த ரஜினி படத்துக்கும் இத்தனை அரங்குகள் கோவை ஏரியாவில் ஒதுக்கப்பட்டதில்லை. வேறு எந்தப் படத்துக்கும் இவ்வளவு அரங்குகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

லிங்காவின் கோவை பகுதி உரிமை மட்டும் தனியாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.