பாகிஸ்தான் நடிகரை லவ்வும் சோனாக்ஷி... அதிர்ச்சியில் தந்தை

ரஜினியின் ஜோடியாக லிங்காவில் நடித்துள்ள சோனாக்ஷி சின்மாவின் காதல் விவகாரம்தான் இப்போது பாலிவுட்டின் ஹைலைட் பேச்சு.

காரணம் அம்மணி காதலிப்பது இந்தியாவைச் சேர்ந்தவரை அல்ல.... பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகரை.

பாகிஸ்தான் நடிகரை லவ்வும் சோனாக்ஷி... அதிர்ச்சியில் தந்தை

சோனாக்ஷியுடன் அந்த நடிகர் ஒரு இந்திப் படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாம்.

இப்போது தீவிரமாகக் காதலித்து வருகிறாராம்.

விஷயம் தெரிந்து ஏக அப்செட்டாகியுள்ளார் சோனாக்ஷியின் தந்தை நடிகர் சத்ருகன் சின்ஹா. இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதே இந்த அதிருப்திக்குக் காரணம்!

 

நடிகைகளுக்கு காதல், திருமண ஆசை வரக்கூடாதா என்ன? - த்ரிஷா

நடிகைகளை ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்... எங்களுக்கும் காதல், திருமண ஆசை எல்லாம் இருக்கும்தானே, என்று நடிகைகளுக்கு காதல், திருமண ஆசை வரக்கூடாதா என்ன? - த்ரிஷா  

இதில் கடுப்பாகிவிட்டார் த்ரிஷா. சமீபத்தில் அவரிடம் அவரது திருமணம் குறித்துக் கேட்டபோது, "கதாநாயகிகளை மக்கள் ஸ்பெஷலாக பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது.

மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். விருப்பு, வெறுப்புகள் எங்களுக்கும் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு எங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

 

லிங்கா கவுன்ட் டவுன் தொடங்கியது.... இன்னும் 140 மணி நேரம் மட்டுமே!

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை உலகளவில் செய்து வருகின்றனர்.

முதல் முறையாக 5000 அரங்குகளுக்கு மேல் வெளியாகும் இந்தியப் படம் என்ற பெருமையோடு வெளியாகிறது லிங்கா.

லிங்கா கவுன்ட் டவுன் தொடங்கியது.... இன்னும் 140 மணி நேரம் மட்டுமே!

இதுவரை இந்தியப் படங்கள் வெளியாகாத கானா போன்ற நாடுகளிலெல்லாம் லிங்கா வெளியாகிறது. கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலுமே இந்தப் படம் வெளியாகிறது.

படத்தின் சென்னை உரிமையைப் பெற பெரிய போட்டியே நடந்து வருகிறது. அபிராமி ராமநாதன் லிங்கா வெளியீட்டு உரிமை பெறுவதில் தீவிரமாக உள்ளார்,

மதுரை பகுதியை அன்புச் செழியன் விலை பேசி வருகிறார்.

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 அல்லது 1 மணிக்கு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் காசி, ராக்கி, ஏஜிஎஸ் போன்ற அரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

தமிழகத்தில் லிங்கா முதல் ஷோவுக்கு இன்னும் 140 மணி நேரங்களே உள்ளன.

 

என்னை அறிந்தால் டீசரின் புதிய சாதனை!

அஜீத்தின் என்னை அறிந்தால் டீசரின் புதிய சாதனை!  

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் டீசர் நேற்று வெளியானது.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘என்னை அறிந்தால்' டீசர் பற்றிய கருத்துகள் குவிந்து வருகின்றன. இந்திய அளவிலும், உலக அளவிலும் ட்விட்டர் டிரென்டிலும் இது இடம்பிடித்துள்ளது.

யூடியுபில் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த படங்களில் ஐ, தலைவா, கோச்சடையான் ஆகியவற்றோடு ‘என்னை அறிந்தால்' படமும் இணைந்திருக்கிறது. ஆனால், ‘ஐ' படம் 24 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது இப்போது வரை முறியடிக்க முடியாத சாதனையாகவே இருக்கிறது. என்னை அறிந்தால் டீசருக்கு நேற்று ஒரு நாளில் மட்டும், சுமார் 45000 விருப்புகள் கிடைத்துள்ளன.

ஒரே நாளில் வேறு எந்தப்படத்திற்கும், இப்படிப்பட்ட லைக் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

திகிலும் நகைச்சுவையும் கலந்து கட்டி வரும் சவரிக்காடு!

சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் உருவாகி வரும் படம் ‘திகிலும் நகைச்சுவையும் கலந்து கட்டி வரும் சவரிக்காடு!   

இப்படத்தை அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி வருகிறார்.

படத்தைப் பற்றி எம்.என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, "இந்த படத்தின் ஆரம்பம் சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் கலகலப்பாக செல்லும். பின் பாரஸ்ட் ரேஞ்சராக சண்முகராஜன் வந்தபிறகு படம் திரில்லராக செல்லும். சவரிக்காட்டிற்குள் நடக்கும் கதை தான் இது.

இந்த சவரிக்காட்டோட ரகசியங்களை தெருஞ்சுகிட்ட யாரும் இந்த காட்ட விட்டு உயிரோட வெளிய போக முடியாது என்பது மாதிரியான திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்த சவரிக் காட்டிற்குள் நடக்கும் திரில் சம்பவங்கள், ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருக்கும்.

கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது," என்றார்.

 

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

அதிகாலையில்தான் நாதஸ்வரத்தின் மங்கல இசையை கேட்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் சன்டிவியில் கடந்த 1230 நாட்களாக இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியலை பார்த்த பின்னர்தான் தமிழகத்தில் எண்ணற்ற தாய்மார்களுக்கு இரவு உணவே உள்ளே போகும்.

இரவு 7.30 மணியில் இரவு 8.மணிவரை வீட்டிலோ, காம்பவுண்டிலோ ஏதாவது திருடு போனால் கூட கவலைப்படாமல் சீரியலில் மூழ்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு நாதஸ்வரத்தின் மீதான ஈர்ப்பு அதிகம் நம் இல்லத்தரசிகளுக்கு. அதனால்தான் ஆயிரமாவது எபிசோடில் காரைக்குடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

மெட்டி ஒலி திருமுருகன் இயக்கி வரும் நாதஸ்வரம் தொடர் அண்ணன், தம்பி குடும்பத்தின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான் என்றாலும் பெண்களுக்காக புரட்சிகரமான சிந்தனைகளைப் பற்றி பேசுகிறது. ஆண்களின் இருதார மனத்தைப் பற்றி பல சீரியல்கள் எடுக்கப்பட்டாலும், நாதஸ்வரத்தில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள் பலரும் மறுமணம் செய்து கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

புரட்சி கதாநாயகிகள்

கதாநாயகி மலர், மற்றொரு கதாநாயகி மகா, மலரின் தங்கை ரோகினி, கோபியின் தங்கை ராகினி என பலரும் மறுமணம் செய்து கொண்டவர்கள்தான். இதில் மலர், மகா ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் கூட புரட்சிகரமானதாகவே இருக்கிறது.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

மகாவின் சாட்டையடி

வாழ்க்கை கொடுத்த கணவனே கண் கண்ட தெய்வம் என்ற மாதிரியான வசனங்கள் எல்லாம் இந்த சீரியலில் கிடையாது. அதற்கு பதிலாக வாழ்க்கை சரியில்லையா? தாலியை கழற்றி வீசு என்கிற ரீதியிலான வசனங்கள்தான் வைக்கப்பட்டுள்ளன.

சொக்கு - மயிலு

சொக்கலிங்கம் - மயிலு அண்ணன் தம்பிக்கு இடையேயான பாசம் இதில் மிகைப்படுத்தப்பட்டதாகவே இல்லை. இருவரும் சொந்த அண்ணன் தம்பிகளாகவே வாழ்கின்றனர்.

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

கோபி - பிரசாத்

ஆனால் இன்றைய தலைமுறை சகோதரர்களான கோபி - பிரசாத் இடையே இந்த அந்நியோன்யம் இல்லை. காரணம் சில புல்லுருவிகளின் பேச்சை பிரசாத் கேட்பதால்தான்.

ராகினிக்கு மறுமணம்

ராகினிக்கு கிடைத்த கணவன் சரியில்லை என்பதால் அவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் குகனுக்கு மறுமணம் செய்ய நினைக்கின்றனர். ஆனால் மனவளர்ச்சி சரியில்லாத மகனுக்கு ராகினியை திருமணம் செய்ய அவளை கடத்த நினைக்கிறது ஒரு கும்பல். அந்த திட்டம் நிறைவேறுமா?

மகா - பிரசாத்

சகோதரர்களுக்கு இடையேயான சண்டையில் மகாவை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் பிரசாத். அவளே அழுது புலம்பாமல், தாய்வீட்டுக்கு வந்து தாலி ஒரு பொருட்டே இல்லை என்கிற ரீதியில் வசனம் பேசுகிறாள்.

சகோதரர்கள் சேருவார்களா?

ஜோசியர், சுப்புவின் கலகத்தினால் பிரிந்து கிடக்கின்றனர் கோபியும், பிரசாத்தும். ஒருபோது ராசியாக வாய்ப்பே இல்லை என்கிறான் பிரசாத் அவர்கள் மீண்டும் இணைவார்களா? .

புரட்சிகர வசனம் பேசும் நாதஸ்வரம் சீரியல் நாயகிகள்!

கோபியை கொல்ல திட்டம்

இந்த கதைக்கு இடையே கோபியை கொல்ல திருப்பூரில் இருந்து கும்பலாக வந்து சுற்றிக்கொண்டிருக்கிறான் பழனிச்சாமி அவனது திட்டம் நிறைவேறியதா?

1230வது எபிசோட்

எப்படியோ நான்கு ஆண்டுகளாய் நாதஸ்வரம் தமிழகத்தின் இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1230வது எபிசோடை எட்டியுள்ள நாதஸ்வரம் எப்படியும் 2000 எபிசோடை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் மலருக்கு குழந்தை பிறந்து விடும், ராகினிக்கு திருமணம் நடத்தி முடித்து விடுவீர்கள்தானே திருமுருகன்?

 

ஜெய்ஹிந்த் 2 வெற்றி: திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற அர்ஜூன்

சென்னை: நடிகர் அர்ஜுன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதையாத்திரையாக சென்று சாமி கும்பிட்டார்.

ஜெய்ஹிந்த்-2 படம் ரிலீஸ் ஆவதற்கு முன் அர்ஜுன் திருமலை வந்து பிரார்த்தனை செய்தார். இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து நடிகர் அர்ஜூன் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு மனைவி, மகளுடன் பாதயாத்திரையாக சென்ற அர்ஜூன், நேற்று காலை அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

ஜெய்ஹிந்த் 2 வெற்றி: திருப்பதிக்கு பாதையாத்திரை சென்ற அர்ஜூன்

பின்னர் ஆஞ்சநேயர் சன்னதியில் தியானம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், தனது ‘ஜெய்ஹிந்த்-2' படம் வெற்றி அடைந்ததை முன்னிட்டு அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ததாக அவர் கூறினார்.

படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பு திருப்பதி வந்து சென்றதாக கூறிய அவர், இப்போது படம் வெற்றி அடைந்ததால் வேண்டுதலின் பேரில் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

 

பிப்ரவரியில் களமிறங்குகிறது கமலின் உத்தம வில்லன்!

கமல் ஹாஸனின் உத்தமவில்லன் படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடித்த விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் தயாராகி முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளன.

பிப்ரவரியில் களமிறங்குகிறது கமலின் உத்தம வில்லன்!  

இவற்றில் உத்தமவில்லன்தான் முதலில் வெளியாகும் என கமல்ஹாஸன் கூறியிருந்தார்.

அதன்படி ஜனவரி மாதமே படத்தை வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் விஸ்வரூபம் சமயத்தில் எழுந்த பிரச்சினை காரணமாக, இப்போது உத்தமவில்லனை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சிக்கல்களை முடித்து வரும் பிப்ரரவரி இறுதி வாரத்தில் படத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.

அதற்குள் லிங்கா, ஐ, என்னை அறிந்தால் போன்ற பெரிய படங்கள் ஓடி முடிந்திருக்கும், கணிசமாக அரங்குகளும் கிடைக்கும் என்ற யோசனையால்தான் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

 

உதயநிதி படத்திலிருந்து அனிருத் நீக்கம்... டி இமான் இசையமைக்கிறார்

உதயநிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிருத் நீக்கப்பட்டார்.

மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில் கெத்து என்று தலைப்பிட்டிருந்தனர். ஆனால் அந்தத் தலைப்பை ஏற்கெனவே ஒளிப்பதிவாளர் கேபிநாத் தான் இயக்கும் புதிய படத்துக்கு வைத்துவிட்டதால் வேறு தலைப்பு தேடுகின்றனர்.

உதயநிதி படத்திலிருந்து அனிருத் நீக்கம்... டி இமான் இசையமைக்கிறார்

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிருத்தை நீக்கிவிட்டு, டி இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார்.

இந்தப் படத்தோடு அகமது இயக்கும் இதயம் முரளி என்ற படத்திலும் நடிக்கிறார் உதயநிதி. இதில் அவருக்கு ஜோடி ஹன்சிகா.

 

ரஜினி பிறந்த நாள்... ஒருவார கொண்டாட்டம் ஆரம்பம்!

ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் நாளை தொடங்கி ஒரு வாரத்துக்குக் கொண்டாடுகின்றனர்.

கே.கே. நகர் பகுதி ரஜினி மன்றம் சார்பில் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஓம் சேர்மா திருமண மண்டபத்தில் 200 பேர் ரத்ததானம் செய்கிறார்கள். 250 பேர் கண் தானம் செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ரஜினி பிறந்த நாள்... ஒருவார கொண்டாட்டம் ஆரம்பம்!

சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர். நடிகர் டெல்லி கணேஷ் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைக்கிறார்.

சைதை ரசிகர்கள்

சைதை ரசிகர் மன்றம் சார்பில் ரத்த முகாமுக்கு சைதை ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை இந்த முகாம் நடக்கிறது.

செனாய் நகரில்

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு செனாய் நகரில் ரஜினி டில்லி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு ஏழைகளுக்கு இலவச தையல் எந்திரம், சேலை, பாட புத்தகம், இனிப்புகள் வழங்கப்படுகின்றன. பாரதீய ஜனதா வர்த்தக அணி துணை தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் இதில் பங்கேற்று ஏழை பெண்களுக்கு புடவைகள் வழங்குகிறார்.

அம்பத்தூர்

அம்பத்தூர் ஐ.அப்துல் தலைமையில் அம்பத்தூரில் வருகிற 12-ந்தேதி குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

பொன்னேரி

திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பொன்னேரி சேகர் தலைமையில் மீஞ்சூர் பொன்னேரி ஒன்றியங்கள் சார்பில் 12-ந்தேதி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

திருப்பதியில்...

நியூஸ் பேப்பர் சீனு தலைமையில் தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

வெளிநாடுகளில்

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரசிகர்களும் ரஜினி பிறந்த நாளைக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

 

சர்ச்சை புகழ் சாமி படத்துக்கு யு சான்றிதழ்... வியக்கும் கோலிவுட்

சாமி படம் என்றால் 'ஏ' ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வந்தது.

இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்த சாமி 'நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி' என்று இப்போது பாசவுணர்வை தூக்கிப்பிடித்து ஒரு படம் செய்திருக்கிறார். அதுதான் ‘கங்காரு'

சர்ச்சை புகழ்  சாமி படத்துக்கு யு சான்றிதழ்...  வியக்கும் கோலிவுட்

இதில் நாயகனாக அர்ஜுனா என்பவர் நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

சாமியின் முந்தைய படங்கள் பற்றி அவரது அம்மாவே திட்டியிருக்கிறார். ''இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு", என்று.

சர்ச்சை புகழ்  சாமி படத்துக்கு யு சான்றிதழ்...  வியக்கும் கோலிவுட்

சாமியும் 'கங்காரு என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும்.. இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும்,' என்று முந்தைய பேட்டிகளில் கூறி வந்தார்.

அதனை உறுதி செய்யும் விதமாக படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் கங்காருவுக்கு கிளீன் ''யு'' சான்றிதழ் வழங்கியுள்ளனர். என்னது 'யு' வா என வியக்கிறது கோலிவுட்.

வி ஹவுஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகிறது.