4/20/2011 2:55:28 PM
காஜல் அகர்வால் கூறியது: தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பு தொழிலில் இருக்கிறேன். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'சிங்கம்Õ படம் இந்தியில் தயாராகிறது. இதில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கிறேன். ஆனால் என்னை இங்கு பாலிவுட்டில் புதுமுகம் என்று சொல்கிறார்கள். நடிகையாக வேண்டும், அதையே என்னுடைய பணியாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பித்தான் வந்திருக்கிறேன். அதை நிறைவுடன் செய்து வருகிறேன். திரையுலகில் இவ்வளவு அனுபவம் பெற்றிருந்தும் என்னை தொழில் ரீதியாக நடிகை என்று குறிப்பிடாமல் புதுமுகம் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. இந்தியிலும் என்னுடைய வேடத்துக்கு எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமோ அப்படி உழைக்கிறேன். அதை படம் பார்க்கும்போது எல்லோருமே சொல்வார்கள். வெறும் கிளாமர் பதுமையாக மட்டுமே நான் வந்து செல்வதில்லை.