விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. படத்தின் ஷூட்டிங் படுவேகமாக மும்பையில் நடந்து வருகிறது. இதில் இளைய தளபதி விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலுக்கு காரணம் இந்த காட்சியிலே அந்த நடிகர் நடித்திருந்தால் அப்படி நடிச்சிருப்பார் என்று முருகதாஸ் சொல்ல விஜய் கோபித்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டதாக கிசு..கிசுக்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு நாள் முழுக்க ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம் விஜய்! ஏற்கனவே விஜய்க்கும், முருகதாசுக்கும் சம்பள பிரச்சனையில் சண்டை வந்ததாக கூறப்பட்டது.


 

சின்னத்திரைக்கு சென்ற அசின்!

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
கோலிவுட்டில் நம்பர் 1 நடிகை என அந்தஸத்துடன் பாலிவுட் சென்ற அசினுக்கு திடீர் சின்னத்திரை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. கரீனா, கேத்ரீனா, பிரியங்கா, தீபிகா என அசினுக்கு பாலிவுட்டில் கடும் போட்டி நிலவுகிறது. பாலிவுட்டில் கஜினி தவிர எந்த ஒரு படமும் பெயர் சொல்லும் அளவுக்கு ஓடவில்லை. இதனால் சின்னத்திரைக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம் அசின். விரைவில் சூப்பர் ஸ்டார் சாண்டா என்ற நிகழ்ச்சியில் அசின் நடிக்கவுள்ளார். சின்னத்திரைக்கு வந்தது பற்றி அசின் கூறுகையில், யு.டி.வி.யின் சூப்பர் சாண்டா நிகழ்ச்சியில் நடிக்கிறேன். பெரிய திரையை காட்டிலும், சின்னத்திரை மூலமாக நேரடியாக ரசிகர்களை சென்றடையலாம். இது ஒரு அருமையான நிகழ்ச்சி, நட்பை விளக்கும் உண்ணதமான நிகழ்ச்சி என்று கூறியுள்ளார்.


 

அக்னிக் குஞ்சு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஒரு மகன், தன் தந்தைக்கு ஆற்றும் மகத்தான உதவியாக எது இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கான விடையை வெறும் வாய் வார்த்தைகளில் சொல்லாமல் நடைமுறையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கரண் ஜோகர். அதே, 'குச் குச் ஹோத்தா ஹை' இந்திப் பட இயக்குநர்தான். 1990ல் முதன் முதலில் வெளியானது, 'அக்னிபத்' இந்திப் படம். அமிதாப் பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, மாதவி (நம்மூர் நடிகைதான்!), நீலம் கோத்தாரி உட்பட பலர் இந்த க்ரைம் த்ரில்லரில் நடித்திருந்தார்கள். 1983ல் வெளியான அல் பசினோ நடித்த ஹாலிவுட் படமான 'ஸ்கர்ஃபேஸ்'ஸின் தழுவல்தான் 'அக்னிபத்' என்பது ஒரு சாராரின் கருத்து. இல்லை... இல்லை... மும்பை நிழல் உலக தாதாவான மன்யா சர்வ்வின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்பது மறுசாராரின் நம்பிக்கை.

எது எப்படியிருந்தாலும் இந்தப் படம் ஓடவில்லை. பாக்ஸ் ஆபீசில் சுருண்டு விட்டது. ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது மிதுன் சக்கரவர்த்திக்கும் கிடைத்தது. தொடக்கத்தில் டப்பா படமாக அறியப்பட்ட இப்படம், காலப் போக்கில் சிறந்த 'கல்ட்' படங்களில் ஒன்றாக அறியப்பட்டது; இன்றும் கொண்டாடப்படுகிறது. பிரபல கவிஞரும், அமிதாப்பின் தந்தையுமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய புகழ்பெற்ற ஒரு கவிதையின் ஆரம்ப வரிதான், 'அக்னிபத்'. இந்தக் கவிதை படத்தின் ஆரம்பத்திலும், படம் நெடுக தீம் மியூசிக் ஆகவும் வரும்.

'கேப் ஃபியர்' ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'கணூன் க்யா கரீகா' இந்திப் படம் வழியாக அறிமுகமான முகுல் எஸ்.ஆனந்த், 'அக்னிபத்' படத்தை இயக்கியிருந்தார். ஹிட்சாக்கின் புகழ்பெற்ற க்ளாசிக் ஆன, 'டயல் எம் ஃபார் மர்டர்' படத்தை சுட்டு இவர் எடுத்த 'ஏய்ட்பார்', திரையுலகில் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத் தந்தது. ஓஷோவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டு சாமியாராக மாறிய வினோத் கண்ணா, மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தபோது, அவர் டிக் செய்த இயக்குநர், முகுல் எஸ்.ஆனந்த்தான். அந்தப் படம், வசூலை அள்ளிய 'இன்சாஃப்'. இப்படி பெயர் வாங்கிய இயக்குநர் டைரக்ட் செய்தபோதும், சூப்பர் ஸ்டார் நடித்திருந்தபோதும் 'அக்னிபத்', வெகுஜன ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர், யாஷ் ஜோகர்தான். 'அக்னிபத்' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்.

இந்த யாஷ் ஜோகரின் மகன்தான், இன்று புகழ்பெற்ற இயக்குநராக வலம் வரும் கரண் ஜோகர். 'அக்னிபத்' படத்தை எந்தளவுக்கு தன் தந்தை நம்பினார், அந்தக் கதை மீது எப்படியெல்லாம் நம்பிக்கை வைத்தார், படம் தோல்வி அடைந்ததும் மனமுடைந்து எந்தளவுக்கு புலம்பினார், 'கல்ட்' படமாக அங்கீகரிக்கப்பட்ட போதும் கமர்ஷியல் ஆக ஏன் தோல்வி அடைந்தது என இறக்கும் வரை அவர் எங்கெல்லாம் விடை தேடி அலைந்தார் என்பதெல்லாம் இன்ச் பை இன்ச் ஆக அருகிலிருந்து பார்த்திருக்கிறார், கரண் ஜோகர்.

அப்போது அவர் முடிவு செய்திருக்க வேண்டும். என்றேனும் ஒருநாள், 'அக்னிபத்' படத்தை, அதே பெயரில் ரீமேக் செய்வது; அதை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக்கி காட்டுவது என்று. அதன் விளைவுதான் வரும் ஜனவரி 26 அன்று ரிலீசாக இருக்கும் 'அக்னிபத்'. அமிதாப் நடித்த வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருக்கிறார். மிதுன் சக்கரவர்த்தியின் கேரக்டரை இந்தப் படத்தில் தூக்கி விட்டார்கள். பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க, சஞ்சய் தத், வில்லனாக அதகளம் செய்திருக்கிறார். இயக்கம், கரண் ஜோகரிடம் உதவியாளராக இருந்த கரண் மல்ஹோத்ரா. ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் கதை என்ன தெரியுமா? தந்தையை கொன்ற வில்லனை மகன் பழி வாங்குவது!


 

கிசு கிசு - நடிகையிடம் திரும்பி வந்த லவ்வர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சலோனியான நடிகை மும¢பையில இருந்துட்டு மேனேஜருங்க மூலமா தமிழ், தெலுங்குல சான்ஸ் வேட்டையாடினாரு. ஆனா அதுக்கு பலன் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... வந்த சில வாய்ப்புகளை மேனேஜருங்க வேறு நடிகைகளுக்கு மாத்தி கொடுத்துட்டாங்களாம்... கொடுத்துட்டாங்களாம்... இதனால தன்னோட அப்பாகுலத்தையே கோலிவுட்டுக்கும் டோலிவுட்டுக்கும் அனுப்பி நடிகை சான்ஸ் பிடிக்கிற வேலையில இறங்கியிருக்காராம்... இறங்கியிருக்காராம்...

ஆண்ட நடிகையோடு சண்டை போட்டு போன பழைய லவ்வரு திரும்ப வந்துட்டாராம்... வந்துட்டாராம்... செல்வ இயக்கத்தோடு நடிகை பிரிஞ்சது லவ்வருக்கு இப்போதான் தெரிஞ்சுதாம். காரணம், அவர் வெளிநாட்டுல இருந்தாராம். தகவல் கேள்விப்பட்டு சென்னைக்கு பறந்து வந்துட்டாராம்... வந்துட்டாராம்... இப்போ, பழைய லவ்வரு கிடைச்ச சந்தோஷத்துல நடிகை இருக்காராம்... இருக்காராம்...

பிரகாச ஹீரோவோட அடுத்த படத்துல மில்க் நடிகை நடிக்கிறதா இருந்தாரு. அந்த படத்துல அனுஷ நடிகைக்குத்தான் முக்கியத்துவம¢ இருக்காம்... இருக்காம்... இதை கேள்விப்பட்டு மில்க் நடிகை நழுவிட்டாராம்... நழுவிட்டாராம்... இப்போ இயக்கம் வேற ஹீரோயினை தேடுறாராம்... தேடுறாராம்...


 

பிப்ரவ‌ரி-ல் கோச்சடையான்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கோச்சடையான்' படத்தில் அவர் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க அசின், அனுஷ்கா உட்பட பல்வேறு நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது இந்தி நடிகை கேத்ரினா கைஃப் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ர‌ஜினி நடிக்கும் எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு தேதி சிக்கல் வந்ததில்லை. ராணாவில் தொடங்கியது பிரச்சனை. ர‌ஜினியின் உடல்நலக் குறைவால் ராணா படம் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு இரண்டு மூன்றுமுறை படப்பிடிப்பு தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். அத்தனையும் அறிவிப்போடு நின்றது.

இந்நிலையில்தான் கோச்சடையான் அறிவிப்பு வெளியானது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா இயக்க, கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வையை ரவிக்குமார் கவனிக்கிறார். கோச்சடையானின் படப்பிடிப்பு பிப்ரவ‌ரி -15 ஆம் தேதி தொடங்கும் என அவர் அறிவித்துள்ளது ர‌ஜினி ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.


 

ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலருக்கு விலை போன "பில்லா 2" போஸ்டர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் 'பில்லா 2'. அல்டிமேட் ஸ்டார் 'தல' அஜீத் நடிப்பில் 'பில்லா' வசூலில் பட்டையைக் கிளிப்பியதோடு... தல அஜீத்துக்கு ஒரு பிரேக்கை ஏற்படுத்தி தந்தது. இப்போது பில்லா 2 படுவேகத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்காக நம்ம தல அஜீத் பல கிலோ எடைகளை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். அதுமட்டுமின்றி படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என இயக்குனர் சக்ரி தெரிவித்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகும் போது, தல ரசிகர்கள் உட்பட சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி தான் போல...பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அ‌‌ஜீத். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தயா‌ரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

பில்லா 2 படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை? மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள். ர‌ஜினி, கமல் படங்கள்தான் இவ்வளவு பெ‌ரிய தொகைக்கு விலை போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியமானது.