குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான்

Tags:


மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.

எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.
 

மதுர் பண்டர்கரின் 'ஹீரோயின்' பட நாயகியானார் ஐஸ்வர்யா

Tags:


மதுர் பண்டர்கர் அடுத்து இயக்கப் போகும் ஹீரோயின் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் புக் ஆகியுள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். அனேகமாக கேன்ஸ் திரைப்பட விழாவின்போது அது வெளியாகலாம் என்று தெரிகிறது. பண்டகர்கரும், யுடிவியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

ஒரு சினிமா நாயகியின் கதைதான் இப்படத்தின் கதையாகும். இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் முழு விருப்பம் தெரிவித்துள்ளார். மிகவும் ஆர்வமாக உள்ளார் என்று பண்டர்கர் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக கரீனா கபூரை இப்படத்தின் நாயகியாக்க அணுகினர். ஆனால் சில பல டிஸ்கஷன்களுக்குப் பிறகு அந்தத் திட்டம் கைவிடபப்பட்டது. கரீனாதான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டார் என்று தெரிகிறது. இதையடுத்தே ஐஸ்வர்யாவை அணுகி புக் செய்துள்ளார் பண்டர்கர்.
 

எஸ்வி சேகர் மகன் திருமண நிச்சயதார்த்தம்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எஸ்வி சேகர் மகன் திருமண நிச்சயதார்த்தம்

5/10/2011 3:18:54 PM

முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் மகன் அஸ்வின் சேகர் – ஸ்ருதி திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது. மணமகள் ஸ்ருதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகள். சென்னை ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்ததுக்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்ரட்சகன், சோ, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் சீட் தருவதாக கூறி எஸ்.வி.சேகரை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

 

ஜூலையில் நயன்தாரா திருமணம்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜூலையில் நயன்தாரா திருமணம்

5/10/2011 3:03:03 PM

ஜூலையில் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் நடக்க உள்ளது. இதற்கிடையில் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் 'ஸ்ரீராம ராஜ்யம்' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் பத்திரிகையாளர்கள், டி.வி. மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறார். சமீபத்தில் பெங்களூரில் அவர் நடித்த 'சூப்பர்' கன்னட படத்தின் 125 நாள் விழாவில் அம்பரிஷ், சரோஜாதேவி போன்ற பிரபலங்கள் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றார். அப்போது மீடியாவை சந்திப்பதை தவிர்த்தார். அமைதியாக வந்தவர் அதே அமைதியுடன் புறப்பட்டு சென்றார். பின்னர் ஐதராபாத் வந்தவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் 'ஸ்ரீராம ராஜ்யம்' படத்துக்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில் நடந்த ஷூட்டிங்கில் நாகேஸ்வரராவ், பாலகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் புதிய படங்களில் நடிக்க நயனுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுவரை எந்த படமும் ஏற்கவில்லை. மீண்டும் அவர் மற்றொரு படத்தில் நடிப்பாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

 

பார்ட்டி பறவை இல்லை : ஹன்சிகா!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பார்ட்டி பறவை இல்லை : ஹன்சிகா!

5/10/2011 3:05:09 PM

ஹன்சிகா மோத்வானி கூறியது: நான் நடித்த 'எங்கேயும் காதல்' திரைக்கு வந்துவிட்டது. அடுத்து, 'ஜெயம்' ராஜா இயக்கத்தில் 'வேலாயுதம்' படத்தில் நடிக்கிறேன். இதில் கிராமத்து பெண் வைதேகி என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். விஜய்யை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் கதாபாத்திரம். 'இப்படத்தில் ஜெனிலியா நடிப்பதால் பயமா?' என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. இருவருக்கும் வெவ்வேறு விதமான கேரக்டர்கள். அடுத்து ராஜேஷ் இயக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடிக்கிறேன். இதில் ஜாலியான வேடம். பொதுவாக பார்ட்டிகளுக்கு செல்லும் நடிகை அல்ல நான். ஆனால் அப்படி செல்வதாக கிசுகிசு வருகிறது. இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். அதற்கு 10 நிமிடத்துக்கு முன்பே எனது செல்போன், லேப்டாப்பை ஆஃப் செய்துவிடுவேன்.

 

ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

5/10/2011 2:12:58 PM

ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இதற்கிடையில் கடந்த 4ந் தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.
 
காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.  
இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி செய்கிறார். மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.




 

ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

Tags:


நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
 

படத்தை வெளியிட தேதிக்காக சண்டையிடும் அஜய் தேவ்கன், ஷாஹீத்

Tags:


மும்பை: படத்தை வெளியிடும் தேதிக்காக அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் சண்டை போடுகின்றனர்.

பாலிவுட்டில் பெரிய நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்துபோவதே இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சண்டை. சேச்சே சின்னப் புள்ளத் தனமா இருக்கே என்று நினைத்தால், அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் கூட இப்போது சண்டையில் குதித்துள்ளனராம்-ஆனால் இன்னும் சட்டையெல்லாம் கிழியவில்லையாம்.

நம் சூரியாவின் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கமாய் வருவது அஜய் தேவ்கன். இந்த படத்தை கோல்மால் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். சிங்கம் படத்தை வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியிட அஜய் திட்டமிட்டுள்ளார்.

அதே தேதியில் தனது மௌசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் ஷாஹீத் கபூர். அஜய் தேவ்கனிடம் தேதியை மாற்றிக் கொள்ளுமாறு ஷாஹீத் கேட்டுக் கொண்டாராம். ஆனால் படத்தின் இயக்குனர் ரோஹித் மாறுவதாக இல்லை.

ரோஹித் ஷாஹீத் கபூருக்கு முன்பே சிங்கம் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஷாஹீத் தந்தை பங்கஜ் கபூர் ரோஹித்தை சந்தித்து பேசவிருக்கிறார்.
 

'3 சீட்டு' விளையாடிய நடிகர் ரவிதேஜாவின் தந்தை கைது!

Tags:


ஹைதராபாத்: சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக நடிகர் ரவிதேஜாவின் தந்தை பூபதி ராஜு உள்ளிட்ட 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் நகரின் ரானிகஞ்ச் பகுதியில் கோல்டன் பார்க் ஹோட்டலில் இந்தக் கைது நடந்தது.

இதுகுறித்து மஹன்காளி போலீசார் கூறுகையில், "கோல்டன் பார்க் ஹோட்டலில் சூதாட்டம் நடத்த முன்னாக அனுமதி பெறப்பட்டிருந்தது. எனினும் அங்கு சூதாட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஆனாலும் சூதாட்டம் நடத்த ஹோட்டல் நிர்வாகம் அனுமதித்துள்ளது. நாங்கள் நடத்திய சோதனையில் பூபதி ராஜு உள்ளிட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்", என்றனர்.

கைதி செய்யப்பட்ட அனைவர் மீதும் ஆந்திரப் பிரதேச விளையாட்டு சட்டத்தின்கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். முன்னதாக அவர்களிடமிருந்து ரூ 38 ஆயிரம் ரொக்கம் மற்றும் 46 செல்போன்களை பறிமுதல் செய்தனர் போலீசார்.
 

நடிகர் அருண் விஜய்க்கு ஆண் குழந்தை

Tags:


சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அருண் விஜய் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயதில் பூர்வா என்ற மகள் இருக்கிறாள். இரண்டாவது முறையாக கருவுற்ற ஆர்த்திக்கு நேற்று பிற்பகல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

'தடையற தாக்க' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு குழந்தை பிறந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விரைந்து வந்தார். மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்த அவர், மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழந்தார்.
 

எஸ்வி சேகர் மகன் திருமண நிச்சயதார்த்தம்... ஜி கே வாசன் வாழ்த்து!!

Tags:


முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்வி சேகர் மகன் அஸ்வின் சேகர் - ஸ்ருதி திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்தது.

மணமகள் ஸ்ருதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனின் மகள்.

சென்னை ஜிஆர்டி நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்ததுக்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்ரட்சகன், சோ, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, சுந்தர் சி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்துக் கூறினர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வரவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் சீட் தருவதாக கூறி எஸ்.வி.சேகரை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியவர் தங்கபாலு என்பது நினைவிருக்கலாம்.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.

அஸ்வின் சேகர் வேகம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்போது நினைவில் நின்றவள் உள்பட 2 படங்களில் நடித்து வருகிறார்.
 

இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்!!

Tags:


எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.

மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.

இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கிலும் பிரச்சினை...

இதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி!

நிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.

எனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா! தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
 

ரஜினிக்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை... டிஸ்சார்ஜ் எப்போது?

Tags:


சென்னை: சளி, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், இன்னும் மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஒவ்வாமை மற்றும் அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். ஆனால் தொடர்ந்து பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்ததால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நோய்த் தொற்று ஏற்பட்டதால் வைரஸ் காய்ச்சல் மற்றும் நெஞ்சில் சளி கட்டி மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.

எனவே கடந்த 4ந் தேதி மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளித்னர்.

காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.

தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி செய்கிறார். மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளையும் நலம் விசாரித்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம் ரஜினி.

இதற்கிடையே, அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பிரார்த்தனை...

இதற்கிடையே ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்தியா முழுவதும் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனைகள், யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர். மும்பை மற்றும் டெல்லி ரசிகர்கள் கடந்த இரு தினங்களாக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் அங்குள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளை இசபெல்லா மருத்துவமனைக்கே நேரடியாக தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
 

பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!

Tags:



மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது TheCinemanews.Com-தமிழ் இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.

ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆம்… பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.

பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!