ஓய்வுக்காக வெளிநாடு செல்லும் ஆர்யா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஓய்வுக்காக வெளிநாடு செல்லும் ஆர்யா…

2/8/2011 12:11:51 PM

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. இந்நிலையில் 'அவன் இவன்Õ படத்திற்காக தொடர்ந்து 6 மாதங்கள் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் ஓய்வுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராம் ஆர்யா.


Source: Dinakaran
 

கதையின் ஒரு வரியை கேட்டு செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுத்த கமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதையின் ஒரு வரியை கேட்டு செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுத்த கமல்!

2/8/2011 12:27:46 PM

“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து ‘இரண்டாம் உலகம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதில் தீவிரவாதி வேடம் ஏற்கிறார் கமல். படத்தின் பெயர் மற்றும் ஷூட்டிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Source: Dinakaran
 

ஏப்ரல் மாதம் பில்லா 2ஷூட்டிங்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏப்ரல் மாதம் பில்லா 2 ஷூட்டிங்

2/8/2011 12:34:04 PM

அஜீத் நடிக்கும் பில்லா 2க்கான படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
பில்லா 2 குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், “பில்லா 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் இறுதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. எனக்கு எப்போதுமே பிடித்தமான நடிகர் அஜீத். அவருடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தின் கதை தென் தமிழ்நாட்டில் தொடங்கி கோவாவுக்கு பயணமாகும். பில்லா  2 படத்திற்காக அவர் முழுவதுமாக மாற இருக்கிறார். என்னுடைய பில்லா டீம் அனுவர்தன், கேமரா மேன் நிரவ் ஷா அவருடைய புதிய வடிவத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்தில் புதிய வடிவமாக இருக்கும். நடிகர் பிரபு கண்டிப்பாக பில்லா 2விலும் இருப்பார். கதாநாயகி தேர்வு பணி நடைபெற்று வருகிறது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும், Ôபில்லா 2Õ படத்தில் அஜீத் ஜோடியாக இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம்.


Source: Dinakaran
 

பிற மொழியில் நடிப்பது தப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிற மொழியில் நடிப்பது தப்பா?

2/8/2011 12:45:48 PM

‘களவாணி’ ஓவியா கூறியது: கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது 'களவாணி’. அதிலும் நானே நடிக்கிறேன். இயக்குனர் சற்குணம் எனக்கு கொடுத்த வாய்ப்புதான் இது. கன்னட ரீமேக்கில் மற்றொரு பாடல் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் தொடங்கியது. தெலுங்கு பட ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது. எனது நடிப்பை மெருகேற்ற இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 'மன்மதன் அம்புÕ படத்தில் எனது காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ஒன்றிரண்டு சீன் மட்டுமே தியேட்டரில் பார்த்தபோது அப்செட் ஆனேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக என் காட்சிகள் எடிட்டிங் செய்யப்பட்டது பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சொன்னபோதுதான் உண்மை தெரிந்தது. கமல் ஹீரோ. ரவிகுமார் டைரக்ஷன், மாதவனின் முறைப்பெண் என்று சொன்னபோது அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. இதற்கிடையில் ராசு மதுரவன் இயக்கத்தில் 'முத்துக்கு முத்தாகÕ படத்தில் நடிக்கிறேன். இதுவொரு மாறுபட்ட திரைக்கதையை கொண்டது. குழந்தைகள், பெற்றோர்களுக்கு இடைப்பட்ட சம்பவங்கள்தான் முக்கிய கரு. பிறமொழி படங்களில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். அதில் என்ன தவறு? நல்ல வாய்ப்புகள் வரும்போது மொழி ஒரு பிரச்னை இல்லை. கன்னடத்தில் நடிப்பதால் அம்மொழியை கற்று வருகிறேன்.


Source: Dinakaran
 

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் :பானு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் : பானு

2/8/2011 12:47:33 PM

'சட்டப்படி குற்றம்Õ படத்தில் நடிக்கும் பானு கூறியது: ÔதாமிரபரணிÕ படத்துக்கு பிறகு தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் வரவில்லை. இதற்கிடையில் மலையாளத்தில் 12 படங்களில் நடித்துவிட்டேன். தற்போது தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் 'சட்டப்படி குற்றம்Õ படத்தில்  நடிக்கிறேன். வீரப்பன் பதுங்கி இருந்த சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் ஷூட்டிங் நடந்தது. குளிரும், வெயிலும் மாறி மாறி வந்ததுதான் காட்டில் பிரச்னை. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை. வீரப்பன் பதுங்கி இருந்த இடங்களை சிலர் காட்டினர். பொதுவாகவே எனக்கு துணிச்சல் அதிகம். அதனால் காட்டுப்பகுதியில் எந்த பயமும் இல்லை. ரோப் கட்டி, வலைகள் கட்டியும் உயரத்தில் ஏறி நடித்த காட்சிகள் த்ரில். நாட்டுக்காக போராடும் பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அவருக்கு உதவும் வேடம் எனக்கு. ஹீரோ விக்ராந்துடன் காதல் காட்சிகள் இருந்தாலும் டூயட் எதுவும் இல்லை. இயக்குனர் சந்திரசேகர் கோபக்காரர், திட்டுவார் என்றார்கள். ஆனால் ஷூட்டிங்கில் நான் நடித்ததை பாராட்டியவர், இதேபோல் படம் முழுவதும் நடித்தால்போதும் என்றார்.
'தாமிரபரணிÕ படத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடித்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி உடைகள் அணிந்தேன். அதைப் பார்த்த தோழிகள், 'ஏன் கவர்ச்சியாக நடித்தாய்?Õ என்றார்கள். இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சி காட்டாவிட்டால் வாய்ப்பு வராது என்கிறார்கள். அப்படி நடிப்பதைவிட சும்மாவே இருந்து விடுவேன். 'தெலுங்கு படங்களில் நடிப்பீர்களா?Õ என்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் இல்லை.


Source: Dinakaran
 

நாக்பூர் பட விழாவில் மைனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நாக்பூர் பட விழாவில் மைனா

2/7/2011 3:50:09 PM

வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான தமிழ்ப் படங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் தமிழ் சினிமாவிலிருந்து நான் கடவுள், மைனா, சரோஜா, முதல் முதல் முதல் வரை, காதல், இளைஞன் ஆகிய படங்கள் கலந்து கொண்டுள்ளன. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் சிலரும் கூட இதில் பங்கேற்றுள்ளனர். பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் நாயகி குஷ்புவை கூப்பிட்டுள்ளனர். அவர்தான் சிறப்பு விருந்தினராம்.


Source: Dinakaran
 

இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு

2/7/2011 2:42:32 PM

'வித்தகன்’ படத்தில் கோர்ட் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். ஹீரோ பார்த்திபனின் வக்கீலாக சுரேஷ்கோபி நடித்திருக்கிறார். இதுபற்றி பார்த்திபன் கூறுகையில் “ஹவுஸ்புல்”, ‘அழகி’, ‘குடைக்குள் மழை’, ‘அம்முவாகிய நான்’ என மென்மையான கதைகளில் ஈடுபாடு காட்டினேன். அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் பார்த்திபன். “ஆக்ஷன் பாதைக்கு மாறியுள்ளேன். ‘வித்தகன்’ அதற்கான பிள்ளையார் சுழி எனலாம். இனிமேல் என் ரூட்டு இப்படித்தான் இருக்கும். என்னை இயக்கும¢ டைரக்டர்களிடம் ஹீரோ முகம் காட்டும் அதே வேளையில், பிற ஹீரோக்களை வைத்து நான் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார் பார்த்திபன்.


Source: Dinakaran
 

கோவை குண்டுவெடிப்பு கதையில் பிரகாஷ்ராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கோவை குண்டுவெடிப்பு கதையில் பிரகாஷ்ராஜ்

2/7/2011 2:31:02 PM

பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'அன்வர்Õ படம், தமிழில் விரைவில் வருகிறது. இதுபற்றி இயக்குனர் அமல்நீரத் கூறியது: தீவிரவாதத்தால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு, அதை களைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே கதை. கோவை குண்டு வெடிப்பு முதல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் வரை கோர்வையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலின்போது காவல்துறை அதிகாரி கர்காரே வீரமரணம் அடைந்தார். அவரது கதாபாத்திரத்தை மையமாக கொண்ட வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, 'இப்படியொரு கேரக்டரில் நடித்ததை மிகப் பெருமையாக கருதுகிறேன்' என்றார். மதத் தலைவர் ஒருவருடைய கையாளாக பிருத்விராஜ் நடிக்கிறார். ஹீரோயினாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இப்படத்துக்காக குண்டு வெடிப்பு சம்பவங்கள் படமாக்கப்பட்டன. குண்டு வெடிப்பின் கொடூரம் என்ன என்பதை இக்காட்சி தத்ரூபமாக விளக்கும். இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.


Source: Dinakaran
 

கிசு கிசு -போலீசில் புகார் நடிகை முடிவு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

போலீசில் புகார் நடிகை முடிவு

2/7/2011 2:38:11 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

பைட் கோழி நடிகரால மில்க் இயக்குனர் பட ஷூட்டிங்ல பிரச்னை ஏற்பட்டுச்சாம்… ஏற்பட்டுச்சாம்… Ôபோதையில் நடுரோட்ல ஆட்டம் போடுற காட்சியில் நடிக்கணும். அதுக்காக கொஞ்சமா தண்ணி போட்டுக்குங்கÕனு இயக்குனர் பர்மிஷன் கொடுத்தாராம்… கொடுத்தாராம்… கேரக்டரோட ரொம்ப ஒன்றிப்போன நடிகரு, ஓவரா போட்டுக்கிட்டு ஸ்பாட்டுக்கு வந்தாராம்… வந்தாராம்… அவரை பிடிச்சி நிக்க வச்சு காட்சியை படமாக்குறதுக்குள்ள டைரக்டரு படாத பாடு பட்டாராம்… பட்டாராம்…

மோனிகமான நடிகை அப்செட்ல இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… அவர் பேர்ல யாரோ நெட்ல போலியா பேஸ்புக் தொடங்கி இருக்காங்களாம். அதிர்ச்சியான நடிகை, இது பற்றி நடிகர் சங்கத்துலயும் போலீசுலயும் புகார் தரப்போறாராம்… தரப்போறாராம்…

ஷூட்டிங் ஸ்பாட்ல முன்பு மாதிரி செல்வ இயக்குனரும் ஆண்ட நடிகையும் பேசிக்கிறது இல்லையாம்… இல்லையாம்… காட்சி பற்றி நடிகைகிட்ட இயக்குனர் பேசுறதோடு சரியாம். கடலை போடுற காட்சியெல்லாம் இப்போ பார்க்க முடியலேனு பட யூனிட் சொல்லுதாம்… சொல்லுதாம்…


Source: Dinakaran
 

ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கும் சூர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கும் சூர்யா

2/7/2011 2:49:51 PM

கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட இதிலென்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்பவர்கள் காத்திருக்கிறது அதிசயம். இந்த இரட்டை வேடம் வழக்கமாக தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வருகிற சமாச்சாரம் அல்ல. இது வேறு மாதிரி. தலையோ, உடலோ ஒட்டி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் செய்து பிரித்தால் ஆபத்து என்று அஞ்சி அப்படியே வளர்த்து விடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒன்றாக சுற்றி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி… என்று வாழ்க்கை போகும். அப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிக்கப் போகிறாராம் சூர்யா. பெரிய சவால் நிறைந்த கேரக்டர் இது. நடிப்பவருக்கு மட்டுமல்ல, பிசிறில்லாமல் அதை எடுப்பவருக்கும் கூட! இரட்டையர்கள¢ வேடத்தில் நடிக்கும் சூர்யா அதற்கான ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கிறாராம்.


Source: Dinakaran
 

ஜிம் பயிற்சிகள் எடுத்து வரும் அஜீத்...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜிம் பயிற்சிகள் எடுத்து வரும் அஜீத்…

2/7/2011 3:24:42 PM

பரமசிவம் படத்தின் போது மிகவும் சிக்கென தோன்றினார் நம்ம தல அஜீத். தற்போது மங்காத்தா படத்திற்காக காலை,மாலை என்று கடினமான ஜிம் பயிற்சிகள் செய்து வருகிறார் அஜீத். வேறு எந்த ஒரு படத்திலும் இல்லாத ஜாலியாக டென்ஷன் இல்லாமல் நடித்து வருகிறாராம் அஜீத். இதற்கு உதாரணம், அஜீத் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தில் அப்படியென்ன ஸபெஷல் என்கிறீர்களா? பிரியாணி அஜீத்தின் கைப்பக்குவத்தில் உருவானதுதான் ஸ்‌பெஷல்.


Source: Dinakaran