ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா

சென்னை: அஜீத் குமார் படங்களில் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் தயங்காதவர் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் படம் கல்லா கட்டுகிறது. படத்தை சூர்யா தன் தோளில் தாங்குகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர் அஜீத்: சூர்யா

சூர்யாவுக்கும், அஜீத்துக்கும் இடையே எப்பொழுதும் நல்ல உறவு உண்டு. ஒருவரையொருவர் பாராட்ட தயங்கியதே இல்லை.

இந்நிலையில் மங்காத்தாவில் அஜீத் ரிஸ்க் எடுத்தது பற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் ரிஸ்க் எடுக்கத் தயங்காத ஒரு நடிகர். மங்காத்தா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அந்த படத்தில் நரை முடியுடன் அஜீத் வந்தது அழகாக இருந்தது. மங்காத்தா ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் மங்காத்தாவுக்கு இடம் உண்டு என்றார்.

 

பேய்க்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா

பேய்க்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா

கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களை பயமுறுத்தியுள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.

திரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை. இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா. இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளாராம்.

ஆண்ட்ரியா பாடிய பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி. அஸ்வத்தின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளது என்றார் நந்தினி.

கொலை நோக்குப் பார்வை படத்தில் பின்னணிப் பாடகி சுசியின் கணவர் கார்த்திக் குமார், கன்னட பட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.