வில்லனாகும் மைக் மோகன்!


Mohan Play Villain New Film
எண்பதுகளின் வெள்ளிவிழா ஹீரோ மைக் புகழ் மோகன், தனது அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கிறார்... வில்லனாக!

இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள் அமைந்தன மோகனுக்கு. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார்.

இதனால் அவருக்கு 'மைக்' மோகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், கேரக்டர் ரோல்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை. ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மணிரத்னம் பட வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மோகன். ஆனால் இந்தமுறை வில்லனாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.

மோகன் ஏற்கெனவே வில்லனாக நடித்தவர்தான். நூறாவது நாள் படத்தில் அவர் வில்லத்தனம் கலந்த ஹீரோதான். அதில் விஜயகாந்த்தான் கிட்டத்தட்ட ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
 

நளிளியின் ஈமு கோழி ஈஸ்வரி: நகைச்சுவை நிகழ்ச்சி


Vinayagar Chathurthi Special Emu Kozhi Eswari
மோசடிகள் பலவிதம் அதில் ஈமு கோழி மோசடி புதுவிதம். இதனை மையமாகவைத்து நகைச்சுவை நாடகம் ஒன்றை தயாரித்துள்ளது வசந்த் டிவி. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ள இந்த நாடகத்தின் பெயர் ‘ஈமு கோழி ஈஸ்வரி'.

இதில் ஈஸ்வரியாக நடித்திருப்பவர் நடிகை நளினி. மோசடி செய்து சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட அடாவடி பெண்ணொருத்தி, ஈமு கோழி வியாபாரத்தையும் தொடங்கி அதிலும் பலரை ஏமாற்றுகிறாள். கடைசியில் கோழி வடிவில் வரும் விநாயகர் அவளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வசந்த் தொலைக் காட்சியில் ஒளி பரப்பாகும் இந்த நகைச்சுவை நாடகத்தில் நளினியுடன் அம்ரிதா, போண்டாமணி, ரவி நடித்துள்ளனர். இதனை எழுதி இயக்கி இருப்பவர் ஜெயமணி.
 

ஜெயா டிவியில் நாளை நீதானே என் பொன்வசந்தம் இசைவெளியீடு நிகழ்ச்சி!

Jaya Tv Telecasts Nep Audio Launch
இந்த ஆண்டின் மெகா இசை வெளியீட்டு நிகழ்வான நீதானே என் பொன்வசந்தம் நாளை பிற்பகல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடந்தது இந்த நிகழ்ச்சி. ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களை வரவழைத்து நேரடியாக கச்சேரி நடத்தி கலக்கினார் இளையராஜா.

மாலை 6.30 மணிக்குத் தொடங்கி 11 மணிக்குப் பிறகும் நீடித்த இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் படைப்பாளிகள் பங்கேற்று, இளையராஜாவுடனான தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் எட்டுப் பாடல்களையும் லைவாக இசைத்து ரசிகர்களை மயக்கிவிட்டார் இளையராஜா. இதை நேரில் பார்க்க முடியாதவர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக காத்திருந்தனர். ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் 2.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி்பரப்பாகிறது என இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். முன்னதாக 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, ஒரு மணிநேரம் முன்னதாகவே ஒளிபரப்பாக உள்ளது.
 

சிங்கம் 2 - சூர்யாவுன் ஒற்றைப் பாடலுக்கு ஆடுகிறார் நயன்தாரா?


Nayanthara Shake Legs With Surya
வயது ஏறினாலும், ஏகப்பட்ட கிசுகிசுக்கள், காதல் தோல்விகளில் அடிபட்டாலும் நயன்தாராவுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது.

தமிழில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. அதுவும் முதல்நிலை நடிகர்களின் படங்களில்.

அப்படி சமீபத்தில் அவரைத் தேடி வந்துள்ளது சூர்யாவின் சிங்கம் 2 பட வாய்ப்பு.

ஹரி இயக்கும் இந்தப் படத்தில் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ஹன்ஸிகா நடிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யாவுடன் குத்துப் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் ஆட நயன்தாராவை அழைத்துள்ளனர்.

ஆனால் இன்னும் தன் முடிவைச் சொல்லவில்லையாம் நயன்தாரா. சூர்யாவுடன் ஏற்கெனவே அவர் நடித்தவர் என்பதால், இந்த வாய்ப்பை மறுக்கமாட்டார் என்று நம்பி்ககையுடன் காத்திருக்கிறார் இயக்குநர்.

நயன்தாரா ஏற்கெனவே சிவாஜி படத்தில் ரஜினியுடன் பல்லேலக்கா பாட்டுக்கு ஆடினார். அதற்கு முன் விஜய்யுடனும் ஆடியுள்ளார்.
 

85 பேருக்கு மது விருந்து கொடுத்ததாக அனுஷ்கா மீது குற்றச்சாட்டு!


Local Political Party Condemns Anushka Alcohol Party   
நடிகை அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து கொடுத்து, கலாச்சாரத்துக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்று உள்ளூர் அரசியல் கட்சி ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

நடிகை அனுஷ்கா இரண்டாம் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் பட ஷூட்டிங்குக்காக ஜார்ஜியா போயிருந்தார் அனுஷ்கா அவருடன் யூனிட்டைச் சேர்ந்த 85 ஆண்கள் இருந்தனர்.

படப்பிடிப்பு முடிந்ததும், இவர்கள் அனைவருக்கும் மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஜார்ஜியாவிலேயே இந்த விருந்து நடந்துள்ளது.

படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிரபலமானவையாகும். 80 பேருக்கும் பெட்டி பெட்டியாக ஒயினை வரவழைத்துக் கொடுத்தாராம்.

அனுஷ்காவின் இந்த செயலை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

அக்கட்சியின் நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் வேறு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து இருக்கலாம். மது விருந்து என்பது பண்பாட்டுக்கு விரோதமானது.

இதன் மூலம் அன்னிய கலாச்சாரத்தோடு ஒன்றி இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அனுஷ்கா யோகா ஆசிரியை என்கின்றனர். யோகாவில் இதைத்தான் கற்றாரா? என்று புரியவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மனைவி கையால் அடி... ஜோம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!

Violent Ex Wives Threw Teapot At Me Roger Moore
என் பொண்டாட்டி என்னை பூரி கட்டையால் அடிச்சிட்டாப்பா, என்று ஒருவர் கூறினால், அது பரவாயில்லை நான் தினமும் தோசை கரண்டியால அடி வாங்குறேனே என்று பதில் கூறுவார் மற்றவர். இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில் மனைவியின் கையால் அடி வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரோஜர் மூர்.

ஜேம்ஸ்பாண்ட் நாயகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது. அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிர்க்கு பேட்டியளித்தார் மூர்.

அப்போது சினிமாவில் தான் துப்பறியும் வீரதீர வேடம் ஏற்று நடித்தாலும் நிஜ வாழ்வில் மனைவிகளிடம் அடி- உதை வாங்கி இருக்கிறேன் என்று கூறினார். முதல் மனைவி டூர்ன்வான் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையால் தாக்கியதில் காயம் கூட ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

1946 ல் இந்த மணவாழ்க்கை கசந்த பின்னர் பாடகியான டாரோதி ஸ்குரீஸ் சினை இரண்டாவதாக திருமணம் செய்தார் ரோஜர் மூர். ஆனால் அவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார். டாரோதி தனது தலையில் கித்தார் இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார் என்று அப்பாவியாக கூறியுள்ளார் இந்த முன்னாள் ஜேம்ஸ்பாண்ட்.

கல்யாணம்னு ஆனபிறகு மனைவி கையால அடிவாங்கிறது சாதாரணமப்ப. இதுல ஜேம்ஸ்பாண்ட் மட்டும் விதிவிலக்கா என்ன?.
 

கோச்சடையான் இசை - அக்டோபரில் வெளியாகிறது!


Kochadaiyaan Audio Release October
ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வரும் அக்டோபர் மாதம் ஜப்பானில் வெளியிடப்படுகிறது. ஆனால் இன்னும் தேதியை மட்டும் குறிப்பிடவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். மிக உயர்ந்த மோஷன் கேப்சரிங் மற்றும் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.

இசை வெளியீட்டுத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியாகக் கூடும் என்று முதலில் கூறியிருந்தனர். இப்போது வரும் அக்டோபர் மாதம் நிச்சயம் இசை வெளியாகிவிடும் என அறிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இசைவெளியீட்டு விழா நடக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நாயகி தீபிகா படுகோன், சரத்குமார் உள்பட நட்சத்திரப் பட்டாளமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை கவர் செய்கிறது.

படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கியுள்ளார்.
 

சுந்தரபாண்டியன் - சினிமா விமர்சனம்

Rating:
4.0/5
-எஸ் ஷங்கர்
நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா
இசை: என் ஆர் ரகுநந்தன்
ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
தயாரிப்பு: எம் சசிகுமார்
எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்

தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார். அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.
sundarapandiyan movie review
நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

இந்தப் படத்தின் Show stealer என்றால் அது சசிகுமாரின் தந்தை ரகுபதி தேவராக வரும் நரேன். லட்சுமியை பெண் கேட்கும் காட்சியில் அப்படி ஒரு கம்பீரம்.. காட்சிப்படுத்திய விதம், இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு என எல்லா வகையிலும் அந்த 4 நிமிடக் காட்சி.. .A pure manly show!

தென்னவன் இன்னொரு மிகச் சிறந்த நடிகர். ஒரு பெண்ணைப் பெற்றவனின் ஆத்திரம், அக்கறை, வேதனை, பாசம் அனைத்தையும் நிஜமாகக் காட்டியிருக்கிறார்.

பரோட்டா சூரியின் ராஜ்ஜியம்தான் முதல் பாதியில். அவரது ஒன்லைனர்கள் நிச்சயம் நண்பர்களின் உதடுகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கும்.

இனிகோ பிரபாரகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜன், அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என அத்தனை பேரும் நடிகர்களாகத் தெரியாமல், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

அப்புக்குட்டி கிட்டத்தட்ட வில்லன். கொஞ்சம் வெறுப்பைச் சம்பாதிக்கும் ரோல்தான். நன்றாகவே செய்திருக்கிறார்.

http://tamil.oneindia.in/img/2012/09/15-sundarapandiyan35-300.jpg

ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். பாடல் காட்சிகளில் பாலுமகேந்திரா சொன்னதைத்தான் திரும்ப சொல்ல வேண்டும்! அந்த முள்காட்டு பயங்கரத்தை முதுகு தண்டு சில்லிடும் அளவுக்கு சொன்னதில் இயக்குநருக்கு இணையான பங்கு, காமிராக்காரருக்கும்!

படத்தின் ஆகப் பெரிய மைனஸ் இசை. இசையமைப்பாளர் ராஜாவின் ரசிகரோ அல்லது ராஜா இசையால் பெரிதாக பாதிக்கப்பட்டவரோ தெரியவில்லை. காதல் வந்து பொய்யாக, ரெக்கை முளைத்தேன், நெஞ்சுக்குள்ளே... என அவர் போட்ட பாடல்கள் திரையில் வரும்போது, நமக்கு ராஜாவின் ஏதோ மோகம், ஒருகிளி உருகுது, அம்மம்மா (தாலாட்டுப் பாடவா...), பாடல்கள்தான் காதுகளில் கேட்கின்றன!!

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டாவது படத்திலேயே காணாமல் போகும் இசையமைப்பாளராக ரகுநந்தன் மாறாமலிருக்கக் கடவது!

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!
 

ரூ 85 லட்சம் மோசடி... பவர் ஸ்டார் சீனிவாசன் கைது... புழல் சிறையில் அடைப்பு!

Power Star Dr Srinivasan Arrested Cheating Case

சென்னை: பவர் ஸ்டார் எனும் நடிகர் சீனிவாசன், ரூ 65 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் புழலில் அடைக்கப்பட்டார்.

பவர் ஸ்டார் சீனிவாசன், லத்திகா பிலிம்ஸ் (பி) லிட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர் பவர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 மாதத்திற்கு முன் குரோம்பேட்டை கணபதிபுரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். இவர் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

ரூ.65 லட்சம் கமிஷன்

பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார்.

அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பி கொடுக்க வில்லை. பின்னர் 2 தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.

இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது.

மேலும் 2 புகார்கள்

அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் மேலும் 2 புகார்கள் நடிகர் சீனிவாசன் மீது தெரிவிக்கப்பட்டன.

நடிகர் சீனிவாசன் கைது

இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோ.சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் நடிகர் சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரது காரை போலீசார் அமைந்தகரை பகுதியில் மடக்கி பிடித்து நடிகர் சீனிவாசனை கைது செய்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

15 நாள் நீதிமன்ற காவல்

விசாரணையின் போது மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் நடிகர் சீனிவாசன் கூறினார். ஆனால் புகார் கொடுத்தவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை எழும்பூரில் உள்ள 13-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி நடிகர் சீனிவாசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கு

ரூ.85 லட்சம் மோசடி வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சீனிவாசன் மீது, 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி போன்ற சட்டப்பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் விசாரணையில் தன்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று நடிகர் சீனிவாசன் மறுத்தார்.

 

நெட்டில் லீக் ஆனது சூர்யாவின் மாற்றான்?

Surya S Maattrraan Leaked Online   

அக்டோபர் 12-ம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மாற்றான் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.

இது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழில் தயாராகும் முக்கிய படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள் படம் வருவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு கிளப்புவதுண்டு. சில நேரங்களில் விளம்பரத்துக்காக சம்பந்தப்பட்ட படங்களைச் சேர்ந்தவர்களே இந்த வேலையைச் செய்வதுண்டு.

படக்குழுவைச் சேர்ந்த யாரோ சிலர் திருட்டுத்தனமாக இந்த வேலையைச் செய்வதும் உண்டு.

ஆனால் மாற்றான் விஷயத்தில், படத்தின் முக்கிய காட்சிகள், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது நிஜமாக இருந்தால், உண்மையிலேயே இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு இது பெரும் இழப்பாகும். இந்தப் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து சீரியஸான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் மாற்றான் குழுவினர். ஆனால் வெளியில் இதுபற்றிய செய்தி பரவாமல் இருப்பதற்காக அமைதி காக்கின்றனர்.

மாற்றான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடி. கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். அக்டோபர் 12-ம் தேதி படம் வெளியாகிறது.

 

‘அய்யா’வில் கமலின் பாடலுக்கு நடனமாடும் ப்ருத்விராஜ் – ராணிமுகர்ஜி ஜோடி

Rani Mukherjee S Aiyya Takes An Inspiration Kamal Song

அய்யா படத்தில் தென்னிந்திய நடிகர்களின் காதில் புகை வரும் அளவிற்கு இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் ப்ரித்விராஜ்.

தமிழ் இளைஞன் ஒருவருக்கும், மராத்திய பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை பற்றிய படம் தான் "அய்யா". படத்தில் தமிழ் இளைஞனாக ப்ருத்விராஜூம், மராட்டிய பெண்ணாக ராணி முகர்ஜியும் நடிக்கின்றனர்.

இதில் மூன்று குத்தாட்டம் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் 'Dreamum Wakeupm' இது 80 களில் வெளியான கமலின் சூப்பர் ஹிட் பாடலின் டியூன். அதை அப்படியே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். ராணி முகர்ஜியின் கிளாமர் உடையில் ப்ரிதிவிராஜூம் கமலைப் போல பாடல் முழுவதும் சட்டை போடாமல் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டுள்ள இந்த பாடலின் இடையில் 1,2,3,4 என்று தமிழும் வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு நாட்கள் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற மராத்திய இயக்குநர் சச்சின் குந்தல்கர், இந்தியில் இயக்கும் "அய்யா" படத்தின் கதை ரொம்பவே பிடித்து போக, உடனே ஓ.கே.‌ சொல்லியிருக்கிறார் ப்ருத்விராஜ்.

பாலிவுட் படங்களில் ஏற்கனவே ‘அப்படிப்போடு' பாடலும், ‘ரிங்கா ரிங்கா' பாடலும் ரீமேக் ஆகியுள்ளன. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

 

பைரவி தொடரில் ராதாவிற்கு பதில் சுஜிதா

Sujitha Replace Sundhara Travels Radha

சீரியல்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை மாற்றிய கதைபோய் இப்பொழுதெல்லாம் கதாநாயகியை கூட மாற்றிவிடுகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொடரான பைரவியில் நடித்து வந்த சுந்தரா டிராவல்ஸ் ராதாவிற்குப் பதிலாக தற்போது இரண்டு வாரங்களாக சுஜிதா நடித்து வருகிறார்.

ஆவிகள் தொடர்பான கதைதான் பைரவி. இதில் பைரவியாக நடிக்கும் கதாநாயாகியின் கண்களுக்கு மட்டுமே ஆவிகள் தெரியும். திடீரென மரணித்தவர்கள் தங்களி இறப்பிற்கான காரணத்தை கூறி அதற்கு பைரவியின் மூலம் தீர்வு காண்பார்கள். இரவு நேரம் என்றாலும் சிறுவர்கள் கூட இந்த சீரியலை விடாமல் பார்த்து வந்தனர். தற்போது இந்த தொடரில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்த ராதாவிற்குப் பதிலாக சுஜிதா நடித்து வருகிறார். என்ன ஆச்சு ராதாவிற்கு என்ற சீரியல் தயாரிப்பாளர்கள்தான் விளக்கம் தரவேண்டும். ஒருவேளை ஆவி சீரியலில் நடித்தது அலர்ஜி ஆகிவிட்டதோ என்னவோ.

ஆவிகளைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு சின்னப் பெண்ணாக இருக்கும் சுஜிதா ஆவிகளுடன் பேசுவது கொஞ்சம் சிரிப்ப வரவழைத்தாலும் ஆவியாக நடிக்கும் ராகவியின் கண்கள் கொஞ்சம் பயத்தைதான் வரவழைக்கிறது.

இதே போலத்தான் ஜெயா டிவியில் காதம்பரி தொடரில் முன்பு நடித்து வந்த மிதுனாவிற்கு பதிலாக இப்பொழுது ஹர்ஷா நடித்து வருகிறார். சின்னத்திரையில் இப்பொழுது ஆளை மாற்றுவதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் இயக்குநர்கள்.

 

சிவகார்த்திகேயனைப் போல இல்லைதான்... இருந்தாலும்.....!

Sivakarthikeyan Quits Athu Ithu Ethu Vijay Tv

விஜய் டிவியில் ‘அது இது எது' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இனி அவருக்குப் பதிலாக அந்த நிகழ்ச்சியை சூப்பர் சிங்கர் தொகுப்பாளர் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.

சனிக்கிழமை இரவு 7 மணி ஆகிவிட்டாலே போதும் பெரும்பாலோனோர் விஜய் டிவியின் பக்கம் சேனலை திருப்ப ஆரம்பித்துவிடுவார்கள். "அது இது எது " என்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களை பங்கேற்க வைத்து அவர்களை கலாய்த்து கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்லும் சிவகார்த்திக்கேயனுக்காகத்தான்.

சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதமே அலாதியானது. டைமிங் ஜோக், சின்னச் சின்ன சுவாரஸ்யங்களோடு கொண்டு செல்வார். மெரினா படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு வரவே அதனைத் தொடர்ந்து ‘மனம் கொத்திப் பறவைகள்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். சினிமாவில் நடித்த போதும் நிகழ்ச்சி தொப்பாளராகவே தொடர்ந்து வந்தார். தற்பொழுது சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கவே ‘அது, இது எது' என்ற நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியை மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்குகிறார். சீரியல்களில் திடீரென்று அவருக்கு பதில் இவர் என்று காட்டுவார்கள். விஜய் டிவி இதிலும் வித்தியாசமாக சிவகார்த்திகேயனே நிகழ்ச்சியில் பங்கேற்று வந்து ஒரு சுற்றையும் நடத்திவிட்டு அனைவருக்கும் பை சொல்லிவிட்டு சென்றார். சினிமாவில் நடிப்பதால் தன்னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையை விளக்கினார் சிவா.

நிகழ்ச்சியில் மூன்று பங்கேற்பாளர்களும், மூன்று சுற்றுகள் உள்ளன. குரூப்ல டூப், சிரிச்சா போச்சி, மாத்தி யோசி. கடைசி சுற்றான மாத்தியோசி சுற்றில் போட்டியை நடத்துபவர் கேக்கும் கேள்விகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேச வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை தாக்கு பிடிக்க வேண்டும் .சிவா கார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சால் 1 நிமிடங்கள் கூட யாரும் தாக்கு பிடிக்க மாட்டார்கள் தனது இயல்பான நகைச்சுவை திறனால் சிவகார்த்திகேயன் ஒரு கலக்கு கலக்குவார். ஆனால் மா.கா.பா. ஆனந்திற்கு இன்னமும் அந்த கலை கைவரவில்லை என்றே கூறவேண்டும். சில எபிசோடுகள்தானே முடிந்திருக்கிறது போகப் போக பார்க்கலாம்.

 

நாயுடன் வாக்கிங் போனபோது கவர்ச்சியை சமாளிக்க முடியாமல் தடுமாறிய கோகோ!

நியூயார்க்: ராப் பாடகர் ஐஸ் டியின் மனைவியும், நடிகையும், மாடல் அழகியும், பெரும் மார்பகங்களைக் கொண்டவருமான கோகோ ஆஸ்டின், நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது அவரது கவர்ச்சியான உடை அவருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்து விட்டது. அவரது மார்பகங்கள் இரண்டையும் அப்பட்டமாக காட்டும் வகையில் உடை அமைந்ததால் நாயைப் பிடிப்பதா, உடையைச் சரி செய்வதா என்று பெரும் குழப்பத்தில் மூழ்கிப் போனாராம் கோகோ.

coco struggles contain her cleavage
Close
 
அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி. இவரது மனைவிதான் கோகோ. இவர் ஒரு மாடல் அழகி, நடிகை. நியூயார்க்கில், இவர் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது பெரும் சிரமத்தை சந்தித்து விட்டாராம். எல்லாத்துக்கும் காரணம் இவர் போட்டிருந்த கவர்ச்சிகரமான மேக்ஸிதான்.

தனது பெருத்த மார்புகளுக்காக பிரபலமானவர் இந்த கோகோ. தனது மார்புகளை கவர்ச்சிகரமான முறையில் வெளிக்காட்டுவதற்கு சற்றும் தயங்காதவரும் கூட. அடிக்கடி கவர்ச்சிகரமான முறையில் வெளியில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் அவர் வாக்கிங் கிளம்பினார். சாதாரணமாக போனாலே அவரை பலரும் பார்ப்பார்கள். இந்த நிலையில் படு கவர்ச்சிகரமான மேக்ஸி டிரஸ்ஸில் அவர் நாய்களுடன் போனதைப் பார்த்து சாலையே ஸ்தம்பித்துப் போனது. காரணம், அவரது இரு மார்புகளும் டிரஸ்ஸை விட்டு எந்த நொடியிலும் வெளியே வந்து விடுவது போல இருந்ததுதான்.

இதை கோகோவும் உணர்ந்தார். ஆனால் இரு நாய்களும் அவரது கையை விட்டு திமிறிக் கொண்டு ஓடுவது போல போனதால், அவரால் நாயையும் விட முடியவில்லை, அதேசமயம், தனது உடையையும் சரி செய்ய முடியாத நிலை. நாய் ஒருபக்கம் இழுக்கிறது, உடை பக்கம் முறுக்குகிறது.. இதனால் ரொம்பவே தவித்துத்தான் போய் விட்டார் கோகோ. இருந்தாலும் தனது கவர்ச்சியை அவர் கடைசி வரை தடுக்கவே இல்லை.

 

இனி, கிம்முக்குப் போட்டியாக நீங்களும் 'எடுப்பாக' மாறலாம்... !

Cheat Your Way Kim Kardashian Curve New Bottom

நியூயார்க்: கிம் கர்தஷியாவின் பின்னழகைப் பார்த்து பெருமூச்சு விடும் பெண்களா நீங்கள்.. கவலையை விடுங்க, கிம்மை விட படு க்யூட்டாக உங்களது பின்னழகை மாற்ற ஒரு உள்ளாடையை அறிமுகப்படுத்தியுள்ளது புகழ் பெற்ற ஆன் சம்மர்ஸ் நிறுவனம். ஆன் சம்மர்ஸ் நிறுவனம் உள்ளாடைகளுக்குப் பெயர் போனது. கவர்ச்சிகரமான உள்ளாடைகள் மூலம் பெண்களின் உள்ளம் கவர்ந்தவர்கள் ஆன் சம்மர்ஸ் குழுமத்தார். தற்போது பெண்களின் பின்னழகை எடுப்பாக காட்டும் புதிய உள்ளாடையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தப் புதிய உள்ளாடையை அணிந்தால் கிம் கர்தஷியானுக்கு மட்டுமல்ல, கெல்லி ப்ரூக்ஸ், பியான்ஸ் ஆகியோருக்கும் கூட கடும் போட்டியாக நீங்களும் எடுப்பாக மாறலாம் என்று விளம்பரப்படுத்துகிறது ஆன் சம்மர்ஸ்.

இந்த உள்ளாடையானது சிறிய பின்னழகைக் கொண்ட பெண்களுக்கு அதை அழகு மிளிரும் எடுப்புடன் கூடியதாக மாற்றிக் காட்ட உதவுகிறதாம். அதேபோல சிறிய மார்பகஙக்ளைக் கொண்டவர்களுக்காக ஸ்பெஷல் பிராவையும் இவர்கள் களத்தில் இறக்கியுள்ளனர். இதை அணிந்தால் பெரிதாக இருப்பது போல தோற்றம் தருமாம்.

விலையும் பெரிதாக இல்லை, ரொம்ப சகாயமாகத்தான் சொல்கிறார்கள். அதாவது 22 பவுண்டு முதல் 50 பவுண்டு வரைதான்.

பிறகென்ன சட்டுப்புட்டென்று ஷாப்பிங் போய் வாங்கிக் குவிக்க வேண்டியதுதானே மேடம்ஸ்... !

 

மகளிருக்கு வழிகாட்டும் மகளிர் மட்டும்!

Makkal Tv Show Magalir Mattum

சமையலறை மட்டுமே மகளிரின் உலகம் என்பதையும் தாண்டி இன்றைக்கு பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். மகளிரின் சாதனையை உலகறியச்செய்ய வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அந்த வகையில்

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சி பெண்களுக்காக, சிறப்பு வாய்ந்த பகுதிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ‘அவளும் தமிழும்', புதுமைப் பெண்', `தெரியுமா', `நீ ஒரு வழிகாட்டி' என நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.

முதல் பகுதியான அவரும் தமிழும் அனைவருக்கும் எளிய தமிழினை கற்றுக் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. விளையாட்டு, கலந்துரையாடல் என வாரந்தோறும் மாறி வந்தாலும் தமிழில் பேசுவதை மட்டும் கருவாக கொண்டுள்ள நிகழ்ச்சி, `அவளும் தமிழும்.'

`புதுமைப் பெண்' பகுதியில் பல்துறையில் சாதனை படைத்த பெண்களை அறிமுகம் செய்கின்றனர். இதில் சாதனை படைத்த பெண்கள் கடந்து வந்த பாதையை அறிந்து, மற்றவர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது.

அடுத்து `தெரியுமா?' நிகழ்ச்சியில் உலகிற்கு அறிமுகமாகி பல நாட்கள் கடந்தும் நமக்கு தெரிய வராத பல தகவல் குறித்த ஓர் அரிய தொகுப்பு இடம் பிடிக்கிறது.

இறுதியாக `நீ ஒரு வழிகாட்டி' பகுதியில் வேலைக்கு போகாத பெண்கள் வீட்டிலேயே முடங்கிப் போகாமல், அவர்களும் தங்களது ஓய்வு நேரத்தினை பயனுள்ளதாக்கும் வகையில் எளிதான கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. இதன் மூலம் சுயமாக பணம் ஈட்டும் முறையினை பெண்கள் தெரிந்து கொள்வர்.

ஞாயிறு தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகளிர் மட்டும் நிகழ்ச்சியை பிரியா தொகுத்து வழங்குகிறார்.

 

லிப் டூ லிப் கொடுக்க மாட்டேன்: கன்டிஷன் போடும் ஷாருக்கான்

Shahrukh Khan Says No Lip Lock

மும்பை: படங்களில் ஹீரோயின்களுடன் லிப் டூ லிப் காட்சிகளில் நடிக்க ஷாருக்கான் மறுக்கிறாராம்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் முதல் விஷயமாக இரண்டு கன்டிஷன்கள் போடுகிறார். முதல் கன்டிஷன் என்னவென்றால் படத்தில் யாருக்கும் லிப் டூ லிப் கொடுக்க மாட்டேன். இரண்டாவது கன்டிஷன், குதிரை சவாரி செய்யும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

ஷாருக்கிற்கு குதிரை என்றால் அவ்வளவு பயமா என்று நினைத்துவிட வேண்டாம். முதுகு வலி காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து தான் குதிரை சவாரி காட்சிக்கு நோ சொல்கிறார்.

பாலிவுட்டில் லிப் டூ லிப்பெல்லாம் சகஜமாச்சே ஷாருக் ஏன் மறுக்கிறார் என்று நீங்கள் யோசி்க்கலாம். அவருக்கு மனைவி கௌரி என்றால் பயந்து வருமாம். எதுக்கு வம்பு படத்தில் முத்தம் கொடுப்பானேன் வீட்டில் வந்து வசை வாங்குவானேன் என்று தான் லிப் டூ லிப்புக்கு நோ சொல்கிறார்.

அது மட்டுமல்ல கௌரி யாராவது நடிகையுடன் நடிக்கக் கூடாது என்று கூறினாலும் அவரது பேச்சைத் தட்டமாட்டாராம் பாலிவுட் பாதுஷா.